Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>விழுப்புரம் மாவட்டம்>விழுப்புரம் அம்மன் கோயில்
 
விழுப்புரம் அம்மன் கோயில் (489)
 
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில்
அவலூர்பேட்டை செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
அருள்மிகு கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்
தியாகதுருகம், கள்ளக்குறிச்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில்
மேல்மலையனூர், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
அருள்மிகு கன்னிகாபரமேஸ்வரி திருக்கோயில்
கள்ளக்குறிச்சி நகர் மற்றும் வட்டம், விழுப்புரம் வட்டம்
அருள்மிகு சாமுண்டீஸ்வரி திருக்கோயில்
அவலூர்பேட்டை செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
அருள்மிகு சோலையம்மன் திருக்கோயில்
தோட்டப்பாடி, கள்ளக்குறிச்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
அருள்மிகு முத்தாலம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு முத்தாலம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், கருவம்பாக்கம், வழி திண்டிவனம், திண்டிவனம் போஸ்ட், ஒலக்கூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் 604207.
+91 9943318216.
திண்டிவனம் வந்தவாசி பாதையில் வரும் கோவிந்தாபுரத்திலிருந்து 2 கிமீ. வந்தவாசியிலிருந்து வரும்போது 45 கிமீ.
முற்றிலும் வெள்ளத்தில் அழிந்த ஏகாம்பரேஸ்வரர் சிவாலயம் பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. அம்மன் அலங்காரம் முடிந்தது கோயிலில் உள்ள நாகமயம் மீது எலுமிச்சம் பழம் வைத்து குறி கேட்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் நம் பக்கம் விழுந்தால் ஜெயம் என்றும் பின் பக்கம் விழுந்தால் உத்தரவு இல்லை என்றும் நம்புகின்றனர். சில சமயம் நம் மடியிலும் விழுந்து ஆசி கிடைக்கும். திண்டிவன கிராமத்து மக்களுக்கு உகந்த அம்மனாக வணங்கப்படுபவள் வேண்டுவன தருபவளாக உள்ளாள். கணபதி சந்நிதியும் உள்ளது.
பூஜை நேரம்: -
அருள்மிகு நீர்வாழ்பிடாரி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு நீர்வாழ்பிடாரி அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், சிற்றரசூர், வழி விழுப்புரம் 605602, விழுப்புரம் மாவட்டம்.
விழுப்புரம் நகரிலேயே மிக அருகில் உள்ள தலம்.
விழுப்புரத்திற்கு வெளியே உள்ள சிற்றாசூரில் கிணற்றில் எழுந்தருளியுள்ள இந்த அம்மனை 3 கிராமத்தினர் மக்கள் புடைசூழு சென்று கிணற்றில் இறங்கி வெளியில் எடுத்து வந்து 9 நாட்கள் திருவிழா நடத்துகின்றனர். அம்மன் உலோகத்தால் ஆனவள். மையத்தில் திரிசூலப் பகுதியில் எழுந்தருளியுள்ளாள். அவளை எலுமிச்சம் பழம் கொண்டு நீராட்டி வழிபடுகின்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு வழிபடவோ காணவோ அனுமதி இல்லை. இன்றும் இந்த விழா நடக்கும் போது கர்ப்பிணிப் பெண்கள் அப்புறப்படுத்தப்பட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விடுகின்றனர். பின்னர் கிணற்றில் இடப்படுகிறாள். இந்த நவீன யுகத்திலும் அம்மனின் சூலத்தின் முனைப் பகுதி தெரிந்தால் மழை பெய்யும் என்கிற ஐதீகம் பொய்க்காமல் நிகழ்கிறது என்பது நிதர்சனம்.
பூஜை நேரம்: -
அருள்மிகு அஷ்டபுஜ துர்க்கை திருக்கோயில்
அருள்மிகு அஷ்டபுஜ துர்க்கை திருக்கோயில், மடுகரை, விழுப்புரம்.
விழுப்புரத்திலிருந்து மடுகரை வழியாக பாண்டிச்சேரி செல்லும் பேருந்துகளில் இங்கே வரலாம். நெடுஞ்சாலையை ஒட்டியே கோயில் அமைந்துள்ளது.
அம்பிகை துர்க்கை வடிவில் தனிக்கோயில் கொண்டருளும் தலங்கள் வெகு சில மட்டுமே. அப்படி அமைந்த சிறப்பான கோயில்களுள் ஒன்றாகத் திகழ்வது, மடுகரை. இத்தலத்தில் அஷ்டபுஜ துர்க்கையாக எட்டுக்கரங்கள் கொண்டு சிம்மத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள் தேவி. இவள், இங்கு கோயில் கொண்டு எழுந்த நாள் முதல் பக்தர்களது கனவில் காட்சி தந்து, அவர்களிடம் பேசுவதும், அவர்கள் குறைகளைக் களைவதும் வழக்கம். ஒரு சமயம் தனது கோயில் அருளில் வசித்து வந்த பக்தனை இரவில் தட்டி எழுப்பி, தனது சூலாயுதத்தை ஒருவன் திருடிக்கொண்டு ஏரிக்கரை மீது செல்வதாக சேதி சொன்னாள். உடன் விழித்து எழுந்த பக்தன், ஊரார் துணையோடு சூலத்தை மீட்டு வந்தான். இப்போதும் அந்த சூலாயுதம் சுதை வடிவ துர்க்கையின் கரத்தில் தவழ்கிறது. இதுபோன்ற அற்புதச் சம்பவங்கள் இவளால் இங்கு நித்தமும் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வன்னைக்கு விளக்கேற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்தால், குறைகளைக் களைந்து அன்பர் வாழ்வில் குதூகலத்தை ஏற்படுத்துவாள். தனிச் சன்னிதியில் உள்ள சனீஸ்வர பகவான் அனுகிரக சனி எனப் போற்றப்படுகிறார். நவகிரகங்கள் இங்கே வட்டவடிவில் காட்சியளிப்பது வித்தியாசமான அமைப்பு. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் துர்க்கைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், அன்னதானமும் நடைபெறுகின்றன. நவராத்திரியின்போது நிவேதன பிரசாதத்தோடு குங்குமமும், வளையலும் சுமங்கலிப் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் இந்த அஷ்ட புஜ துர்க்கையை வணங்குவதால் வாழ்வின் இன்னல்கள் யாவும் களைகின்றன. தரிசனநேரம் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கிறது.
<< Previous  47  48  49 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar