Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>விழுப்புரம் மாவட்டம்>விழுப்புரம் முருகன் கோயில்
 
விழுப்புரம் முருகன் கோயில் (91)
 
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அம்மையகரம், கள்ளக்குறிச்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
திண்டிவனம் நகர் மற்றும் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
அருள்மிகு முருகன் திருக்கோயில்
இந்திலி, கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
விஜயங்குப்பம், உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி சஞ்சிவிராயர் திருக்கோயில்
தியாகதுருகம், கள்ளக்குறிச்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
அருள்மிகு செல்வமுருகன் திருக்கோயில்
(விஜயபுரம்)சின்னசேலம், கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம்
அருள்மிகு மயிலம் முருகன் திருக்கோயில்
அருள்மிகு மயிலம் முருகன் திருக்கோயில் மயிலம் விழுப்புரம்
+91 4147-237223
விழுப்புரம் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
-
அருள்மிகு மயிலம் முருகன் திருக்கோயில்
அருள்மிகு மயிலம் முருகன் திருக்கோயில், மயிலம், விழுப்புரம் -604 304, போன்:04147-237223
இக்கோயில் விழுப்புரத்திலிருந்து (35கி.மீ) சென்னை செல்லு<ம் வழியில் கூட்டேரிப்பட்டு சென்று அங்கிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மிகப் பிரபலமான முருகன் கோயில்.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தேவஸ்தானம் திருக்கோயில், கோகிரி பசுமலை, வழி மேல ஒலக்கூர், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் 604203
+91 9962344722
திண்டிவனம் செஞ்சி பாதையில் நாட்டார்மங்கலத்திலிருந்து வடக்கே 15 கிமீ தொலைவில் மேல ஒலக்கூர் அருகே உள்ள தலம். 412 படிகள் ஏறினால் கோயில். செஞ்சிக்கு வடகிழக்கே 15 கிமீ.
தெற்கு நோக்கிய பால தண்டாயுதபாணி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஆவுடையார் மேல் உள்ளதால் வள்ளி தெய்வயானையுடன் முருகனும் இருக்கிறார். கோகிரி என்பது புராதனப் பெயர். இறைவனை இந்திராதி தேவர்கள் பசு வடிவில் கிரிவலம் வந்ததால் இப்பெயர். கோகுலாஷ்டமியும் விசேஷம். சித்ரா பவுர்ணமியன்று இந்திர விழா உற்சவமும் நடைபெறுகிறது. கோயிலின் பின்புறம் இந்திரன் வடிவம் உள்ளது. திருப்புகழில் 1058ல் குறிப்பிடப்படும் கோகிரி இதுவாக இருக்கலாம் என்கிற கருத்து நிலவுகிறது. இதற்கான குறிப்பு கதிர்காமத்தில் உள்ளதாகவும் தகவல். ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம் விசேஷம். பங்குனியில் 10 நாள் பிரம்மோற்சவம். அருகில் பல்லவர் கால நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இதிலிருந்து மகனைப் பார்க்க தைப்பூசத்தன்று சிவன் எழுந்தருளுகிறார். சிவனும் முருகனும் ஒன்றே என்கிற தத்துவத்தைக் காண்பிக்கிறார். 250 ஆண்டுகளுக்கு முன் முருகன் வள்ளி தெய்வானையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் முற்காலத்தில் வேல் கொண்டு வழிபாடு நடத்தப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
பூஜை நேரம்: காலை 7 மணியிலிருந்து மாலை 9 மணி வரை. (விசேஷ நாட்களில் முழுநேரமும்.)
அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில், பாக்கம் வழி கடுவனூர் 605801, கள்ளக்குறிச்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
+91 44-24611244, 9976296012
கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை பாதையில் உள்ள ஊர் கடுவனூர். அதிலிருந்து 4 கிமீ கிழக்கே உள்ள தலம் பாக்கம். 18வது கிமீல் தேவ பாண்டலம். பவழக் குன்றின் மீது உள்ள கோயில். 3 கிமீ மேற்கே மூக்கனூரில் தாண்டவனேஸ்வரர் சிவகாமசுந்தரி கோயில் உள்ளது. இது மூக்கனூர் சங்கராபுரம் வட்டத்தில் உள்ளது. தேவ பாண்டலம் திருவண்ணாமலையிலிருந்து 40 கிமீலும் திருக்கோயிலிருந்து 30கிமீ மேற்கேயும் உள்ளது.
சென்னையினை அடுத்த திருநின்றவூர் அருகே உள்ள மேலக் குண்டையூர் அருகேயும் ஓர் பாக்கம் உள்ளது. மற்றொரு சாரார் இந்த கோயிலனையும் திருப்புகழ்த் தலமாகக் கொள்கின்றனர். 1000 ஆண்டுகள் பழமையான கோயில். சோளீஸ்வரர் சுகந்த குந்தளாம்பிகை உடன் அருளும் இவ்வூரில் சிறிய குன்றில் 15 படிகளுக்கு மேல் முருகன் அருள் பாலிக்கிறார். முருகன் கோயில் பட்டக்கல்லில் உள்ளது. பாண்டவர் காலக் கோயில். 75 ஆண்டுகள் பூட்டிக் கிடந்தது. தற்போது தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடிக்கிருத்திகை சிறப்பு நாட்கள். பங்குனி பூரத்தன்று அலகு போடுதல், மிளகாய் மற்றும் மஞ்சள் இடித்தல் போன்ற விசேஷ பிரார்த்தனைகள் செலுத்தப்படுகின்றன. 1928ல் மகா பெரியவர் தங்கிய தலம். பாக்கம் அருகேயும் பஞ்ச பூதத் தலங்கள் உள்ளன. அவற்றில் தேவ பாண்டலம் பிருத்வி தலமாகவும், மூக்கனூர் (முக்கண்ணூர்) தாண்டவனேஸ்வரர் கோயில், ஆகாயத் தலமாகவும், பாக்கம் அக்னித் தலமாகவும், கடுவனூர்பட்டி என்னும் கடுவனூர் வாயுத் தலமாகவும், இராவுத்தநல்லூர் (இரவற்ற நல்லூர்) நீர்த்தலமாகவும் திகழ்கின்றன. இவையாவும் 15 கிமீ சுற்றளவில் உள்ளது. அனைத்தும் கற்றளி திரவுபதி மூக்கனூரில் தாண்டவனேஸ்வரரிடம் இருந்து வனவாசத்தின் போது அக்ஷய பாத்திரத்தைப் பெற்றதாக வரலாறு. பாண்டவர்கள் வழிபட்ட பார்த்தசாரதி கோயிலும் தேவ பாண்டலத்தில் உள்ளது. அதோடு ஒட்டிய வரலாறு இது. துரியோதனின் தூண்டுதலால் பாண்டவர்களைக் காண துர்வாசர் சீடர்களுடன் நீராடிவிட்டு <உணவு உ<ண்ண வருவதாகக் கூறினார். அலம்பி கவிழ்க்கும் வரை உணவு தரும் அக்ஷய பாத்திரத்தில் மதிய உணவை முடித்தனர். அலம்பிக் கவிழ்த்த பின் துர்வாசர் வந்தார் பாண்டவர்கள் துர்வாசருக்கு எவ்வாறு உணவு தரப்போகிறோம் என்று பயந்து கண்ணனை வேண்ட அந்த அக்ஷய பாத்திரத்தில் இருந்த ஒரு சோற்றுப் பருக்கையை அவர் உண்டார். துர்வாசர் மற்றும் அவரது சீடர்களின் வயிறு நிறைந்தது. மணிமுத்தா நதிக்கரையில் அமைந்த ஊர் தேவபாண்டலம். தேவ பாண்டலத்தைச் சுற்றி 5 குளங்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற 96 மகா நாட்டு மாரியம்மன் கோயிலும் இந்த ஊரில் உள்ளது. மணிமுத்தம் என்கிற பெயரில் தேவார வைப்புத் தலமும் ஊர் தெரியாமல் உள்ளது என்கிற செய்தியும் இந்தத் தலம் அதுவாக இருக்குமோ என்கிற சந்தேகமும் எழுகிறது. மேலும் மூக்கனூர் தலத்தில் கும்பாபிஷேக சமயத்தில் பல அதிசயங்கள் நிகழ்ந்ததாகத் தகவல். மூக்கனூரிலும் அழகிய ஆறுமுகன் உள்ளார்.
பூஜை நேரம்: -
<< Previous  7  8  9  10  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar