| அருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில் |
| முடுக்கன்குளம், அருப்புக்கோட்டை வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
| கம்பைக்குடியிலிருந்து கிழக்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| சூரனூர், அருப்புக்கோட்டை வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
| கம்பைக்குடியிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ. |
| இக்கோயில் 96 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| பலவநத்தம், அருப்புக்கோட்டை வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
| அருப்புக்கோட்டையிலிருந்து வடமேற்கே 9 கி.மீ. |
| இக்கோயில் 53 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விக்கிரமபாண்டீஸ்வரர் திருக்கோயில் |
| சோழபுரம், ராஜபாளையம் வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
| ராஜபாளையத்திலிருந்து தெற்கே 10 கி.மீ. |
| சீவல்பேரியாற்றின் வடகரையில் இக்கோயில் 3-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார். அம்மன் குழல்வாய்மொழியம்மன். |
| அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் |
| இலந்திரைக்கொண்டான், ராஜபாளையம் வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
| சோழபுரத்திலிருந்து மேற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் லஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயிலும் உள்ளது. |
| அருள்மிகு நாசடைத்த விருத்தலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
| தெற்கு தேவதானம், ராஜபாளையம் வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
| சைத்தூரிலிருந்து தெற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 1-54 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார். |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| நத்தம்பட்டி, ராஜபாளையம் வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
| ராஜபாளையத்திலிருந்து தெற்கே 13 கி.மீ. |
| சீவலப்பேரியாற்றின் கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் வரதராஜப் பெருமாள் கோயிலும் உள்ளது. |
| அருள்மிகு கருநெல்லநாதர் திருக்கோயில் |
| திருத்தங்கல், சாத்தூர் வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
| சிவகாசியிலிருந்து வடக்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இக்கோயில் கி.மு. 5000 வருட முற்பட்ட கோயிலாகும். அருகில் சிறிய குன்றின் மீது அமைந்த தண்டாயுதபாணிக் கோலத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். அருகில் 5-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ள நின்ற நாராயணப்பெருமாள் காட்சியளிக்கிறார். |
| அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
| குல்லாபட்டி, சாத்தூர் வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
| சாத்தூரிலிருந்து கிழக்கே 3 கி.மீ. |
| வைப்பாற்றின் கரையில் இக்கோயில் 57 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
| செவ்வல்பட்டி, சாத்தூர் வட்டம்
விருதுநகர் மாவட்டம் |
| வெம்பக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 6 கி.மீ. |
| வைப்பாற்றின் தென்பகுதியில் இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|