Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>விருதுநகர் மாவட்டம்>விருதுநகர் அம்மன் கோயில்
 
விருதுநகர் அம்மன் கோயில் (25)
 
அருள்மிகு பெரியசாமி, காளைச்சாமி மற்றும் ஈசுவரியம்மன் திருக்கோயில்
பெரியவள்ளிக்குளம், விருதுநகர் மாவட்டம்
அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர் - 626 125, விருதுநகர் மாவட்டம்.
+91 4563 - 264259
விருதுநகரிலிருந்து 30. கி.மீ.
நடைதிறப்பு: காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை திருவிழா : பங்குனி பூக்குழி திருவிழா 13 - நாட்கள் உற்சவம். சிறப்பு : ஒவ்வொரு தமிழ் மாதமும் இரண்டாவது வெள்ளியன்று 108 திருவிளக்கு பூஜை பக்தர்களால் நடத்தப்படுகிறது.
அருள்மிகு ஓடை சவுடேஸ்வரி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு ஓடை சவுடேஸ்வரி தேவஸ்தானம் திருக்கோயில், அருப்புக்கோட்டை 626101, விருதுநகர் மாவட்டம்.
திருச்சுழி பாடல் பெற்ற தலத்திற்கு அருகே உள்ள ஊர். 12 கிமீ தூரம். மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை 51 கிமீ.
ஸ்ரீ ஓடை சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்ரியில் பூப்பல்லக்கு நகர்வலம் நடைபெறுகிறது. இந்த நகரின் தேவாங்கர் 3 மிராசுகள் உள்ளிட்ட உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட கோயில் 105 ஆண்டுகளாக நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.
பூஜை நேரம்: எப்பொழுதும் தரிசிக்கலாம்.
அருள்மிகு நல்லதாங்கள் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு நல்லதங்காள் தேவஸ்தானம் திருக்கோயில், வத்தராயிருப்பு 626123, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்
+91 4562-243445, 9443774299.
ஸ்ரீவில்லிபுத்தூர் வத்தராயிருப்புப் பகுதியில் நல்ல தங்காள் ஆலயம் உள்ளது. மதுரை சிவகாசி பாதையில் 72கிமீ தூரத்தில் கடைத் தெருவில் நாடார் உறவின் முறை கடைக்கோயில் அம்மன் ஆலயம் உள்ளது. சிவகாசி காரணேசன் காலனி கூட்டு சாலைக்கு அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. முருகன் மற்றும் பஞ்சமுக விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.
நல்ல தங்காளுக்கு தமிழகத்தில் அமைந்த ஒரே கோயில். இப்பகுதியில் நல்ல தங்காள் மற்றும் நல்ல தம்பி சகோதரர்கள் வாழ்ந்தனர். மதுரையில் காசி ராஜனை மணந்த நல்லதங்காள் அங்கு கொடிய பஞ்சம் நிலவிய போது வத்தராயிப்பிற்கு அண்ணன் வீட்டிற்கு வந்தாள். ஓர் மண் சட்டி, ஈர விறகுகள் மட்டும் கொண்டு வந்த அவளை அவளது அண்ணன் மனைவி ஏளனம் செய்து கவனிக்காமல் போனாள். இருப்பினும் தன் கற்பின் வலிமையால் ஈர விறகுகள் கொண்டு சமைத்தாள் பின்னர் தன் அவல நிலை குறித்து வருந்தி கிணற்றில் விழுந்து குழந்தைகளுடன் தானும் இறந்தாள். அவள் அண்ணன் அவன் மனைவியினைக் கொன்று தானும் கத்தியால் குத்திக்கொண்டு இறந்தான். பின்னர் அம்மையப்பராய் இறைவன் அவர்கள் முன் தோன்றி உயிர்த்தெழுப்பினார். பூலோகம் செல்ல விருப்பமில்லாத அவர்களை இறைவன் தடுத்தாட்கொண்டு காலம் வரும் வரை பூவுலகில் மக்களுக்கு காக்கும் தெய்வமாய்த் திகழ ஆணையிட்டார். இப்போதும் குழந்தைகள் உருவம் ஆலயத்தில் உள்ளது.
பூஜை நேரம்: காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை.
அருள்மிகு முத்துமாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு முத்துமாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், விருதுநகர் 626001, விருதுநகர் வட்டம் மற்றும் மாவட்டம்.
+91 4562-243445, 9443774299.
மதுரையிலிருந்து விருதுநகர் 53கிமீ தூரம். மதுரை திருமங்கலம் சாத்தூர் கோவில்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள ஊர். மாந்தோப்புப் பகுதியில் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது.
விருதுப்பட்டி என்கிற தொன்மை வாய்ந்த பெயர் கொண்டது. 400 ஆண்டுகள் பழமைப் வாய்ந்த இவ்வாலய பங்குனிப் பொங்கல் விசேஷ விழாக்காலம். அச்சமயம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் பல்லாயிரக் கணக்கானோர் வலம் வருகின்றனர்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை.
<< Previous  1  2  3 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar