Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>விருதுநகர் மாவட்டம்>விருதுநகர் பிற ஆலயங்கள்
 
விருதுநகர் பிற ஆலயங்கள் (34)
 
அருள்மிகு சொக்கலிங்கசாமி திருக்கோயில்
வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்
அருள்மிகு சிங்கமுடைய அய்யனார் திருக்கோயில்
நள்ளி, சாத்துõர் வட்டம், விருதுநகர் மாவட்டம்
அருள்மிகு சோலைமலை (எ)கிருஷ்ணசாமி திருக்கோயில்
சேத்துõர், ராசபாளையம் (வ),விருதுநகர் மாவட்டம்
அருள்மிகு நந்திதேவர் திருக்கோயில்
அருள்மிகு நந்திதேவர் திருக்கோயில், சொக்கநாதன் புத்தூர், விருதுநகர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்தி<லுள்ள சொக்கநாதன் புத்தூரிலுள்ள நந்தியை பிரதோஷ வேளையில் வழிபட நன்மைகள் பெருகுமென்பது ஐதிகம்.
செவி அறுந்த நந்திதேவர் எனப்படும் இந்த நந்தியின் இடப்பக்க காது உடைந்தே காணப்படுகிறது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு வெளியே ஒரு வயலில் இந்த நந்தி கண்டெடுக்கப்பட்டபோதே அதன் காது உடைந்திருந்ததாம். பின்னர் இந்த நந்திக்கு எதிரே லிங்கம் ஒன்றும் நிறுவப்பட்டு கோயில், கட்டப்பட்டதாம். அழகுடன் ஆற்றலும் நிறைந்த நந்தி இது. நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் நதியின் தென்கரையில் அமைந்துள்ள சாத்தங்குடி விசுவநாதசுவாமி கோயிலில் இறைவன் சன்னதிக்கு முன் உள்ள நந்திதேவர் முழுமையான வெள்ளைக்கல்லில் செதுக்கப்பட்ட அற்புத உருவ அமைப்புடன் விளங்குகிறார். இவரை வழிபட்டால் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்றும், கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். குடந்தை நாகேஸ்வரர் கோயிலுக்கு ஒரு கி.மீ. தொலைவிலுள்ள தேப்பெருமா நல்லூர் விஸ்வநாத சுவாமி கோயிலிலுள்ள நந்திக்கு வலது காது இருக்காது. பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி ஓடி வந்ததில் ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது அறுந்து போனதாம். எனவே வலது காது இல்லாமல் காட்சி தருகிறார். திருநெல்வேலி டவுனிலுள்ள நெல்லையப்பர் திருக்கோயிலில் மாக்கல் நந்தியுள்ளது. வருடம் தோறும் மாக்கல் நந்தி வளர்வதாகவும், நந்தியின் வளர்த்தி கூரையைத் தொடும்போது பிரளயம் ஏற்படும் என்றும் ஒரு பரம்பரைக் கதை உண்டு. இந்த நந்தி, நாக்கை மூக்கிற்குள் துழாவியபடி கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறது. முன்பு இது கருப்பு, வெள்ளையாக இருந்தது. இப்போது அதன் ஆபரணங்கள் அனைத்தும் பொன்னும் வண்ணமுமாக மெருகூட்டப்பட்டுள்ளது. திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள நேமம் எனும் ஊரிலுள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் நந்திபகவான் பள்ளத்தில் அமர்ந்துள்ளார். அர்த்த மண்டபத்திலிருந்து நந்தி பகவானைப் பார்த்தால் நந்திபகவான் தலையை நீட்டி,காதுகளைத் தூக்கிக் கொண்டு இருப்பது போலத் தெரியும். வழுவூர் தலத்தில் நந்தீசர் சிவாம்சம் பொருந்தியவராகக் காணப்படுகிறார். முழு மனித ரூபமாக தன் துணைவியாருடன் நந்தி தேவர் காணப்படுவது அபூர்வமான தரிசனம்.
<< Previous  2  3  4 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar