Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அந்திரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு அந்திரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அந்திரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: சிவக்குளத்து தீர்த்தம்
  ஊர்: பெரியக்குருவடி
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கார்த்திகை கடைசி செவ்வாய்க்கிழமை கதிர்பொலி, புதுநெல் படையல், நவராத்திரி, ஆடி வெள்ளி  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள மூலவர் வாஸ்து தேவதையாக அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 10 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அந்திரியம்மன் திருக்கோயில் பெரிய குருவடி மற்றும் அஞ்சல், வடபாதிமங்கலம் வழி, மன்னார்குடி தாலுகா, திருவாரூர்-610206  
   
போன்:
   
  +91 9585 374125 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் முன் வாஸ்து தேவதைகள் அருள்பாலிப்பது சிறப்பு. கோயில் முன் காளியம்மன் கிராமதேவதையாக காட்சி தருகிறார். அசுமன், சிம்மனை வதம் செய்த அம்பாள் சிம்ம சூசனி இங்கு அந்தரியம்மனாக அருள்பாலிக்கிறார். (அந்தரி என்றால் மந்தம், மந்தமாக அருள் பாலிப்பது) வாஸ்து தேவதையாக மூலவர் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
 
பிரார்த்தனை
    
  போட்டியில் பங்கேற்பவர்கள், அரசு உத்தியோகம் பெறவும், ஏவல் பில்லி சூனியம் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  மூலவருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும் முதல் சம்பளத்தில் பொங்கலிட்டும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  ஆகாய,கங்கையை இறைவன் ஜடா முடியில் இருந்து எடுத்து விட்டதால் இவ்வூர் பெரிய குடை என்றாகி பின்ன õளில் பெரிய குருவடி என மறுவியுள்ளது.மாமான்னன் முதலாம் ராஜராஜசோழன் போருக்கு செல்லும் முன் வெற்றியை வேண்டி இக்கோயிலில் கிடா வெட்டி பூஜைசெய்து சென்றுள்ளான்.
 
     
  தல வரலாறு:
     
  வீரராஜேந்திர சோழன் கி.பி.1063 ம் ஆண்டு மணிமுடிசூடி 1070ம் ஆண்டு வரை சோழ பேரரசனாக விளங்கினான். வீரராஜேந்திரசோழனின் ஆணை ஒன்று கருவூரில் உள்ள பசுபதீஸ்வரர் திருக்கோயில் எனும் திருவாநிலை மகாதேவர் கோயிலில் கருவறையில் கல்வெட்டுள்ளது. இதில் பயிர்த்தொழில் சிறக்கவும், செல்வவளம் சேர்கவும் இப்பகுதியில் கோயில் கொள்ள வேண்டும் என எழுதியிருந்தான். தற்போது பெரிய குருவாடியில் உள்ள அகஸ்தீஸ்வரர் எனும் சிவத்தலம் கற்றளியாக விளங்குகிறது. மாமான்னன் முதலாம் ராஜராஜசோழன் போருக்கு செல்லும் முன் வெற்றியை வேண்டி இக்கோயிலில் கிடா வெட்டிவழிபாடு செய்து சென்றுள்ளான். அதனால் தற்போதும் போட்டிக்கு செல்பவர்கள்  இங்கு பிரார்த்தனை செய்து செல்கின்றனர். அரசு பணிக்கும் செல்வர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் வாஸ்து தேவதையாக அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar