Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஹொய்சாளேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஹொய்சாளேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஹொய்சாளேஸ்வரர்
  ஊர்: ஹளபேடு
  மாவட்டம்: ஹசன்
  மாநிலம்: கர்நாடகா
 
 திருவிழா:
     
  மகாசிவராத்திரி, திருக்கார்த்திகையன்று தேர்பவனி  
     
 தல சிறப்பு:
     
  ஹொய்சாளேஸ்வரர், சாந்தளேஸ்வரர் என இரண்டு மூலவர் சன்னதிகள் உள்ளன.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஹொய்சாளேஸ்வரர் திருக்கோயில் ஹளபேடு, ஹசன், கர்நாடகா.  
   
போன்:
   
  +91 98803 19949 
    
 பொது தகவல்:
     
  இரண்யனை வதம் செய்யும் உக்ர நரசிம்மர், கோவர்த்தனகிரியைக் குடையாகத் தாங்கும் கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், அர்ஜுனனுக்கு தேரோட்டும் கிருஷ்ணர் என்று ராமாயண மகாபாரத கதை தொடர்பான சிற்பங்களும் உள்ளன. இக்கோயில் தொல்லியல் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. அன்னியப் படையெடுப்பின் போது சிதைந்த சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிற்பக்கலையில் ஆர்வமுள்ளவர்களை மிக மிக ரசிக்க வைக்கும் கோயில் இது. ஆதிநாதர், சாந்திநாதர், பார்சவநாதர் ஆகிய சமணக் கோயில்களும் இக்கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேற அபிஷேக, ஆராதனை செய்து வேண்டிக் கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  வரவேற்கும் விநாயகர்: கோயில் வாசலில் விநாயகப்பெருமான் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மேலே உள்ள இருகைகளில் பாச அங்குசம் உள்ளது. வலதுகரம் இஸ்லாமியப் படையெடுப்பில் (மாலிக்காபூர் படையெடுப்பு) உடைக்கப்பட்டு விட்டது. இடக்கரம் மோதகத்தை தாங்குகிறது. துதிக்கையால் மோதகத்தைச் சுவைத்தபடி காட்சி தருகிறார். விநாயகரின் கிரீடமும், யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடு மிக்கவை. கால்கள் இரண்டையும் மடித்து அமர்ந்திருக்கிறார். கழுத்தில் அணிந்திருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே தரையில் கிடக்கிறது. வெயிலும் மழையும் பாராமல் வெட்டவெளியில் வெயிலுகந்த விநாயகராக காட்சியளிக்கிறார்.

ராஜா சிவன் ராணி சிவன்:
கோயிலில் இரண்டு பிரதான சன்னதிகள் அமைந்துள்ளன. முதல் சன்னதியில் ஹொய்சாளேஸ்வரர் என்னும் திருநாமத்தோடு சிவபெருமான் வீற்றிருக்கிறார். எளிமையாக காட்சி தரும் சிவலிங்க பாணத்தின் மேல் நாகாபரணம் குடைபிடிக்கிறது. பாணத்தின் மீது இரு கண்கள் அழகு செய்கின்றன. இச்சன்னதி முன்னுள்ள நவரங்க மண்டபம் மிகுந்த வேலைப்பாடு மிக்கதாகும். விஷ்ணுவர்த்தனன் என்னும் ஹொய்சாள மன்னனின் மனைவி சாந்தளாதேவி. ராணியின் பெயரால் இவர் சாந்தளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். வடநாட்டு பாணியில் சாந்தளேஸ்வரர் மீது தாராபாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. இரு சன்னதிக்கும் நேரே கிழக்கு வாசல்கள் உள்ளன. வடக்கு தெற்கு வாசல்களும் உண்டு. மன்னரின் அரண்மனை தெற்குப்பகுதியில் இருந்ததாகவும், அவ்வாசலை மன்னர் பயன்படுத்தியதாகவும் கூறுகின்றனர். வெளியில் எவ்வளவு வெயில் இருந்தாலும் கோயிலுக்குள் நுழைந்ததும் குளிர்ச்சி நம்மைத் தீண்டும். சுவாமி தரிசனத்தின் போது, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சாந்தளேஸ்வரர் சன்னதியில் உற்சவர் சிலைகள் உள்ளன.

ஒய்யார துவாரபாலகர்: சிவாம்சத்துடன் நந்தி, மகாகாளர் என்னும் துவாரபாலகர்கள் சன்னதிகளில் காவலாக நிற்கின்றனர். இதில் சாந்தளேஸ்வரர் முன்புள்ள துவாரபாலகர்கள், கையில் திரிசூலமும், டமருகம் என்னும் உடுக்கையும் ஏந்தி சிவாம்சத்துடன் உள்ளனர். கைகளை லாவகமாக வளைத்தும், கால்கள் சற்று சாய்ந்தும் ஒய்யார பாவனையில் இந்த சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. சிவனைச் சரணடைந்தால் நாமும் இவர்களைப் போல ராஜாவீட்டு கன்றுக்குட்டியாக வாழலாம் என்பது ஐதீகம். அவர்களின் அருகில் சாமரம் வீசும் சேடிப்பெண்களின் சிலைகள் கண்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. துவார பாலகர்களின் பாதத்தில் காவல்வீரர்கள் நிற்கின்றனர்.

நந்தி மண்டபம்: ஹோய்சாளேஸ்வரருக்கும், சாந்தளேஸ்வரருக்கும் நேராக நந்தி மண்டபங்கள் உள்ளன. நந்தியும், மண்டபத் தூண்களும் கலைநயம் மிக்கவை. நந்தி மண்டபத்தைச் சுற்றி மரச்செப்பு கடசல் போல கல்லில் வடித்த கலைநயம் மிக்க தூண்கள் உள்ளன. ஒற்றைக் கருங்கல்லினால் நந்தி வடிக்கப்பட்டுள்ளது. இரு நந்திகளும் ஒன்று போலவே உள்ளன. கழுத்து சிறிது வளைந்திருக்கிறது. தமிழ்நாட்டுப் பாணியில் நாக்கை வெளியில் நீட்டாமல் இருப்பது மாறுபட்டது. சித்திர வேலைப்பாடு: பிரகார சுவர் முழுவதும் சித்திர வேலைப்பாடுகள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. யானை, சிங்கம், குதிரைவீரர்கள், பூவிதழ் என்று அடுக்கடுக்காக சிற்பங்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றின்மேல் ஒன்றாக உள்ளன. கோயில் ஒரு தேர் போலவும், அதை இழுத்துச் செல்வது போல சிற்ப வரிசைகளும் உள்ளன. யானைகள் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்ளும் சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
 
     
  தல வரலாறு:
     
  ஹொய்சாள மன்னர்கள், தங்களை துவாரகாபுரியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இருப்பினும், இவர்கள் கிருஷ்ணனை வணங்கியதில்லை. சமண சமயத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு. இவர்கள் மீண்டும் தங்கள் வேதசமயத்தைப் பின்பற்ற தொடங்கினர். அதன்பின், சிறியதும், பெரியதுமாக சிவபெருமான், மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நூற்றாண்டில் ஹளபேடு ஹொய்சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. அப்போது, இங்கு ஒரு சிவாலயம் கட்டி, மூலவருக்கு தங்கள் இனத்தின் பெயரால் ஹோய்சாளேஸ்வரர் என்று பெயரிட்டனர். 1127ல் தொடங்கிய கோயில் கட்டும்பணி 1207ல் நிறைவு பெற்றது. விஷ்ணுவர்த்தனின் அமைச்சரில் ஒருவரான கெட்டுமல்லா இக்கோயிலைக் கட்டினார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஹொய்சாளேஸ்வரர், சாந்தளேஸ்வரர் என இரண்டு மூலவர் சன்னதிகள் உள்ளன.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar