Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சத்தியவாசகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சத்தியவாசகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சத்தியவாசகர்
  அம்மன்/தாயார்: சவுந்தர்ய நாயகி
  தீர்த்தம்: மகாலட்சுமி தீர்த்தம்
  ஊர்: மாத்தூர்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்  
     
 தல சிறப்பு:
     
  கண்வ மகரிஷி ஆகியோருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சத்தியவாசகர் திருக்கோயில், மாத்தூர், நாகப்பட்டினம்.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கு விநாயகர், முருகப்பெருமான், பைரவர், தட்சிணாமூர்த்தி, கண்வ மகரிஷி ஆகியோருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  தோல் வியாதி குணமடைய, வேண்டிய வரம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  கன்வ மகரிஷி உருகி உருகி வழிபட்ட அந்தத் தலம். மாட்டூர் எனப்படும் மாத்தூர். நாகை மாவட்டம். திருக்கடையூருக்கு அருகில் உள்ளது இந்தத் தலம். திக்குத் திசை தெரியாமல் மார்க்கண்டேயன் வந்தபோது, திருக்கடையூருக்கு வழிகாட்டி சிவனார் அருளிய அற்புதமான இடம் இது. அசரீரி போல். சத்தியவாக்கு போல் மார்க்கண்டேயனுக்கு அருளிய இந்தத் தலத்து இறைவனுக்கு சத்தியவாசகர் எனத் திருநாமம் சூட்டி வழிபட்டனர் மக்கள்.

சோழ மன்னன் ஒருவன் தோல், வியாதியால் பெரிதும் அவதிப்பட்டு வந்தானாம். அவன் நீராடுவதற்காகக் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தினமும் தண்ணீர் எடுத்து வந்து தந்தானாம். வண்டிக்காரன் ஒருவன். ஆனாலும் மன்னனின் நோய் நீங்கியபாடில்லை. ஒருநாள் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்துகொண்டு வந்த தண்ணீரெல்லாம் கொட்டிவிட, அருகில் இருந்த வில்வவனத்தின் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்றான் வண்டிக்காரன்.

அந்தத் தண்ணீரில் குளித்து முடித்ததும், ஆச்சரியப்பட்டுப் போனான் மன்னன். அவன் தோல் வியாதி முழுவதும் நீங்கியிருந்தது. வண்டிக்காரனை அழைத்து விசாரித்ததும், அவன் விவரத்தைச் சொல்லி, வில்வவனக் குளத்தில் நீர் எடுத்து வந்ததைத் தெரிவித்தான். உடனே அங்கு வந்த மன்னன், தலத்தின் பெருமைகளை அறிந்து அங்கே சிவனாருக்கு அழகிய ஆலயம் அமைத்தான். அந்தத் திருக்குளம் இன்றைக்கும் உள்ளது. அதனை லட்சுமி தீர்த்தம் என்று அழைக்கின்றனர்.

ஆயுள் பலம் தந்து, வாழ்க்கைக்கு வழிகாட்டிய திருத்தலம், இறைவன் சத்தியவாக்கு சொல்லி அருளிய பூமி, மன்னனின் வியாதியைத் தீர்த்தருளிய இடம் எனப் பல பெருமைகள் கொண்ட மாத்தூர் தலம், திருஞானசம்பந்தராலும் சுந்தரராலும் வைப்புத் தலமாகப் பாடப்பெற்ற தலம் என்பது குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தர் அருளிய திரு÷க்ஷத்திரக்கோவை ஆகியவற்றில் அந்தப் பாடல்கள் உள்ளன. இங்கே அம்பாளின் திருநாமம் சவுந்தர்ய நாயகி. அழகே உருவெனக் கொண்டு ஜொலித்த முகத்துடன் அமைந்துள்ளது.
 
     
  தல வரலாறு:
     
  மாயூரத்தில், காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு, அப்படியே தில்லையம்பதி நோக்கிப் பயணமானார் கண்வ மகரிஷி. அப்படிச் சென்றுகொண்டிருந்தபோது, காவிரி நதி கடலில் சேரும் காவிரிப்பூம்பட்டினத்தில் நீராடினால் என்ன என்று தோன்றியது. உடனே, மாயூரத்தில் இருந்து காவிரிப்பூம்பட்டினம் நோக்கி நடந்தார். வழியில், சிவபூஜை செய்யும் வேளை நெருங்கியது. அங்கே இருந்த வனத்தில் வில்வ மரங்கள் அடர்ந்திருந்தன. அந்த மரங்களுக்கு நடுவே அமர்ந்துகொண்டு, சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி, வணங்கி வழிபட்டார். கொத்துக் கொத்தாக வில்வ இலைகளை இரண்டு கைகளாலும் எடுத்து, சிவலிங்கத்தின் உச்சியில் வைத்து வணங்கினார். என் சிவமே! உன் உச்சி குளிர்ந்து போயிருக்குமே! அதுபோல் இந்த ÷க்ஷத்திரத்துக்கு வருவோரின் மனமும் குளிர்ந்துபோகட்டும். நீ அருள்வாயாக! என்று மனதாரப் பிரார்த்தனை செய்தார். தியானத்தில் மூழ்கினார்.

அங்கே மொத்த இடமும் குளிர்ந்து போனது. எல்லா இடங்களிலும் வில்வத்தின் நறுமணம் சூழ்ந்துகொண்டது அடடா.... எப்பேர்ப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து சிலிர்த்துப் போனார் கண்வ மகரிஷி. தனது வாக்கு சத்தியவாக்காகும் என்கிற நம்பிக்கை தந்த ஆனந்தத்தில், அவரது கண்களில் இருந்து கரகரவென நீர் வழியத் தொடங்கியது. மார்க்கண்டேயன் கதை ஞாபகம் இருக்கிறதுதானே! அவனுக்கு அல்பாயுசு என்று நாள் குளித்து, பதினாறாம் வயதுடன் அவன் வாழ்க்கை முடிந்துபோகும் என்று சொல்லப்பட்ட வேளையில், திருக்கடையூர் திருத்தலத்துக்கு வந்து, அமிர்தகடேஸ்ரரிடம் அவன் அடைக்கலம் புகுந்தானே!

தன் அடியவனான அந்தச் சிறுவனை சிவனார் காத்தருளிய அந்தத் திருக்கடையூர் தலத்தை மறக்கமுடியுமா என்ன? அபிராமிபட்டர் வாழ்ந்த அற்புதமான பூமி. திருக்கடையூர் இன்றைக்கும் ஆயுள் பலம் தரும் தலமாகப் போற்றப்படுகிறது. இந்தத் திருக்கோயில், இங்கு வந்து சஷ்டியப்த பூர்த்தியோ சதாபிஷேகமோ செய்து இறைவனை வணங்கினால், மார்கண்டேயனுக்கு அருளியதுபோல் நமக்கும் அருள்வார்; ஆயுள் பலம் கூட்டுவார் என்பது ஐதீகம்!

இதோ, நான் அமர்ந்திருக்கிற இடத்தில்தான் மார்க்கண்டேயன் நின்றிருந்தானா? அருகில் இருக்கிற திருக்கடவூர் என்கிற தலத்துக்குப் போ! அங்கே எமன் உன்னிடம் நெருங்கக் கூட முடியாது. தைரியமாகப் போ! என்று அவனை சிவனார் வழிநடத்தினாரே, அது இந்த இடம்தானா?எது சிவனே... என் சிவனே.... என்று பித்துப் பிடித்தவர்போல் எழுந்து அங்குமிங்கும் ஓடினார் கண்வ மகரிஷி. சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். இரண்டு கைகளாலும் மண்ணை அள்ளியெடுத்து சிரசில் வைத்துக்கொண்டு, கண்களில் ஒற்றிக்கொண்டார். இந்தத் தலம் உன்னத வாழ்க்கைக்கு வழிகாட்டும் தலமாக மலரப் போகிறது. வாழ்வில் எந்தச் சிக்கல் வந்தாலும் இங்கு வந்து பாதம் பதித்தால் போதும்.... அத்தனைச் சிக்கல்களும் கவலைகளும் பறந்தோடிவிடும்! என்று நெஞ்சம் நெகிழ நின்றவர். மீண்டும் வில்வங்களைப் பறித்து, சிவலிங்கத் திருமேனியில் சொரிந்து மகிழ்ந்தார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கண்வ மகரிஷி ஆகியோருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar