Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காரிய ஐய்யனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு காரிய ஐய்யனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காரிய ஐய்யனார்
  அம்மன்/தாயார்: ஸ்ரீ தேவி, பூதேவி
  தல விருட்சம்: சரக்கொன்றை, மருதம்
  தீர்த்தம்: அரசல்மாநதி தீர்த்தம்
  ஊர்: கொத்தவாசல்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, சித்திரை மாதம், பவுர்ணமி, அமாவாசை  
     
 தல சிறப்பு:
     
  பொதுவாக ஐய்யனார் கோயில்களில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆனால் இங்கு புது தானியத்தில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காரிய ஐய்யனார் திருக்கோயில் கொத்தவாசல் மேலத்தெரு, ஒன்பதுபுள்ளி வழி, பூந்தோட்டம் அஞ்சல், நன்னிலம் தாலுகா, திருவாரூர்- 609503.  
   
போன்:
   
  +91 9659253386 
    
 பொது தகவல்:
     
  காரிய ஐய்யனாரின் இடது பக்கம் சீதேவியும், வலது பக்கம் பூதேவியுடன் கிழக்குப் பக்கம் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். பலி பீடம் உள்ளது. நுழைவு வாயில் வலப்பக்கம் சப்த கன்னிகள் தனி சன்னதியிலும், எதிரில் குதிரையுடன் காவளாளி முன்னடியான் நிற்பதுடன், அவர் அருகில் தல விருட்சத்துடன் வீரன் அருள்பாலிக்கிறார்கள்.
 
     
 
பிரார்த்தனை
    
  நினைத்த காரியம் கை கூடவும், விவசாயம் செழிக்கவும், வேலை வாய்ப்பு வெற்றி பெறவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது தானியத்தில் பொங்கலிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  அரசலாற்று பாசன வயல் சூழ்ந்த நடுவில் கோயில் கிழக்குப்பக்கம் ஒரு கலசத்துடன் கற்பகிரகம் அமைந்துள்ளது. நினைத்த காரியம் கை கூடும் என்பதால் காரிய ஐய்யனார் என அழைக்கப்படுகிறார்கள். பழங்காலத்தில் அதிகளவில் கொத்தர் என்ற சமூகத்தினர்கள் வாழ்ந்ததால் அதன் காரணமாக பின்னாளில் கொத்தவாசல் என மறுவியுள்ளது.  
     
  தல வரலாறு:
     
  300 ஆண்டுள் பழமையானது. 2013ல் புது கட்டடங்கள் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கற்பகிரகத்தில் ஒரு கலசம் அமைக்கப்பட்டுள்ளது.  இப்பகுதியில் வயல் சூழ்ந்தப்பகுதியானதால் இரவு நேரத்தில் திருட்டு நடந்துள்ளது. அதனால் காவல்தெய்வமாக  அய்யனார் இருந்துள்ளார். திருட்டு பயம் போக்கிய பகுதியாக இருந்துள்ளது. விவசாயம் செழிக்க அப்பகுதியினர் வேண்டுதல் செய்கிறார்கள்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக ஐய்யனார் கோயில்களில் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆனால் இங்கு புது தானியத்தில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar