Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுந்தரேஸ்வரர்
  அம்மன்/தாயார்: ஞானாம்பிகை, சவுந்தரநாயகி
  தீர்த்தம்: கல்யாண தீர்த்தம்
  ஊர்: மணக்குடி
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இக்கோயிலிற்கு நாலுகால பூசைகள் நடைபெறுகின்றன. மார்கழித்திருவாதிரையில் ஒருநாள் திருவிழாவாக நடராஜப்பெருமான் மட்டும் எழுந்தருளி வீதியுலாவருவார்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. இக்கோயில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை தாலுக்கா, மணக்குடி- 609118, நாகை மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  மிகச்சிறிய அழகான கோயில். சுவாமி, அம்மன் கருப்பக்கிருகமும், ஏனையபரிவார மூர்த்திகளுக்குத் தனியறைகளும் இருக்கின்றன. நாற்புறமும் திருமதில் சூழ ஒரே பிராகாரத்துடன் விளங்குகிறது. சுந்தரேசர், அம்மைபெயர் ஞானாம்பிகை, நடராஜர், கணபதி, சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர் முதலிய எழுந்தருள் உருவங்கள் இருந்து காட்சி வழங்குகின்றன.  இக்கோயிலில் பழைமையான கல்வெட்டுக்களும் வரலாறுகளும் ஒன்றும் இல்லை. 15ஆவது குருமூர்த்திகளாக இருந்த ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களால் இக்கோயில் திருப்பணி செய்விக்கப்பெற்றது. இக்கல்வெட்டு மெருகேற்றிய கல்லில் எழுதிப் பதிக்கப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் தென்பாகத்தில் பூம்புகார் சாலையில் பொறையான் கோயில் உள்ளது. சுவாமி திருப்பெயர் பொறையான்; அம்பாள் திருப்பெயர் நல்ல நாயகி, இங்குச் சப்தமாதர்கள் உள்ளனர். அம்மன் திருவுருவங்கள் உள்ளன. இத்திருக்கோயிலைச் சுற்றிச் சின்ன பொறையான் ஐயர் பொறையான் கோயில்கள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமணத்தடையுள்ளவர்கள் பெரும்பாலானோர் வந்து பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  திருமணமாகாதவர்கள் இத்தலத்தில் உள்ள சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி வழிபட்டால் திருமணம் நடைபெறும். 
    
 தலபெருமை:
     
  இங்குள்ள கல்யாணதீர்த்தத்தில் மணக்காலத்துப் பிரமன் இதில் நீராடி இறைவருக்கு மணஞ்செய்விக்கும் பேறுபெற்றான்.  
     
  தல வரலாறு:
     
  உமாதேவிமலைமகளாக அவதரித்து மணப்பருவத்தையடைந்தபோது இமவானாகிய தந்தை தன்னருமைமகளின் அழகையும், தெளிவையும் பார்த்து இவளுக்குத் தக்க கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே எனக் கவன்றனர். பிராட்டியார் தந்தையார் மனக்கருத்து அறிந்து எமக்கு மணவாளன் எல்லாவல்லபமுள்ள முழுமுதற்கடவுளே; அவரே ஏன் கணவராவர். என்தோள் அவரையன்றிச் சேராது என்றனர். தந்தை கவன்று ஐயோ இறைவனா உன்னை மணப்பார். ஒன்றுக்கும் பற்றாத அடியேனுக்கு அவரா மருமகனாவார்? முடியாத காரியத்து முனையலாமா? எனக் கவன்றனர். அம்மை தாயிடம் சென்று, தாயே, நான் தவம் செய்யப் போவேன். தடுக்காது உத்தரவளிக்க வேண்டும் என்றனர். தந்தை கவன்று ஐயோ இறைவனா உன்னை மணப்பார்.

ஒன்றுக்கும் பற்றாத அடியேனுக்கு அவரா மருமகனாவார்? முடியாத காரியத்து முனையலாமா? எனக் கவன்றனர். அம்மை தாயிடம் சென்று, தாயே, நான் தவம் செய்யப் போவேன். தடுக்காது உத்தரவளிக்க வேண்டும் என்றனர். இவ்வார்த்தை கேட்ட மேனை அப்படியாயின் உனது இனிமையழகு எங்கே உனது மெல்லிய பூங்கொம்பு போன்ற உடலமைப்பு எங்கே தவம் எங்கே இந்த வயதிற்கும் தவத்திற்கும் பொருந்தவே பொருந்தாது; வேண்டா வேண்டா எனத் தடுத்தனள். அம்மை அதனையும் கேளாது மீண்டும் தாயிடஞ்சென்று உத்தரவுபெற்று இமையத்துச்சியில் சென்று சிருங்கம் என்னும் இடத்தில் தவஞ்செய்தனர். பல்லாண்டுகளாயின. தரித்திடும் தாழ் சடைப்பொருமான் மணந்துக்கொள்வதாக வரம் அளித்தார்.

தாயும் தந்தையுமில்லாத் தனிப்பரமன் நெருங்கிய அன்புறவு கொண்ட அடியார்களை- முனிபுங்கவர்களை மணம்பேச அனுப்பினார். மண முடித்துக்கொண்டார். அங்ஙனம் மணந்துகொள்ள கவுரி மாயூரத்திற்கு எழுந்தருளி வந்தபோது பெருமான் தங்கிய இடம் மணக்குடியாயிற்று இத்தலத்தில் இறைவர் சவுந்தரநாயகி சமேத சுந்தரேசராக எழுந்தருளி மணக்கோலங் காட்டியருளுகின்றார். இது மாயூரம் துலாக்கட்டத்தின் காவிரியின் வடகரையில் கருங்குயில் நாதன் பேட்டைக்குக் கிழக்கே சற்றேறக் குறைய ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்கிறது. இத்தலம் பொலிழ்சூழ்ந்த அழகிய இடம். மணற்பாங்கான நிலப்பரப்பில் இருப்பதால் மணற்குடியென்று பெயர் வந்ததுபோலும், தருமபுரத்திற்கு அண்மையில் வடகிழக்கு மூலையில் காவிரியின் வடகரையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் விளங்குவது இத்தலம்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar