Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு குமாரசாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு குமாரசாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: குமாரசாமி
  உற்சவர்: முருகன்
  அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
  தல விருட்சம்: வன்னி
  தீர்த்தம்: கிணறு
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: தேவர்களை கண்ட ஊர்
  ஊர்: தேவர் கண்ட நல்லூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்றவை மிகச்சிறப்புமிக்கதாக கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள விக்ரகங்கள் கருங்கல்லாக இருப்பதால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.00 மணி முதல் காலை 11.00 மணி வரை மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு குமாரசாமி திருக்கோயில், தேவர்கண்ட நல்லூர் , குடவாசல் தாலுகா, திருவாரூர் - 613704  
   
போன்:
   
  +91 94424 67891 
    
 பொது தகவல்:
     
  தேவர்கள் இருப்பதை முனிவர்கள் கண்டு வணங்கியதால் தேவர்களை கண்ட ஊர் என்பதே பின்னாளில் தேவர் கண்ட நல்லூர் என மருவியது. கிழக்கு பக்கம் வாயிலில், கோயில் நுழைவு வாயிலில் 5 கலசங்கள் உள்ளது. மகா மண்டபத்தில் 400 பேர் அமர்ந்து தரிசனம் செய்யலாம். விமானத்தில் ஒரு கலசம் உள்ளது. விநாயகர், மூலவரான குமரசாமி, வள்ளி, தெய்வானையுடன் கிழக்குப் பக்கம் பார்த்த வகையில் அருள் பாலிக்கிறார். இடது பக்கம் திருமண மண்டபம் உள்ளது. கோயில் எதிரில் பரந்தவெளியாகவும், பெரிய வேப்பமரம் உள்ளது. 1000 ஆண்டுகள் முற்பட்ட கோயில். கடந்த 2011 அக்டோபர் மாதம்  கும்பாபிஷேகம் நடந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கு சிறந்த பரிகார ஸ்தலமாவதால் ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் புது தானியங்களை காணிக்கையாக செலுத்துதல், காவடி, பால்குடம் எடுத்தல் போன்றவையாகும். 
    
 தலபெருமை:
     
  திருவாரூர் தியாகராஜர்கோயில், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில் இக்கோயிலுக்குபெருமை சேர்க்கிறது.
 
     
  தல வரலாறு:
     
  வல்லால மகாராஜன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்போது அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை மண்ணில் பிறந்து விழுந்தால் நாட்டிற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் குழந்தை கீழே விழாமல் குறிப்பாக உயிருடன் பிறக்காமல் இருக்க வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் பார்வதியிடம் வரம் கேட்டனர். அப்போது அந்த குழந்தை உயிருடன் பிறக்காமல்  அழிக்க மருத்துவச்சி வேடம் பூண்டு பார்வதி தேவி நடந்து வருகிறார். அப்போது வல்லால மகாராஜன் அவரை அழைத்து வந்து தன்மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்கிறான். இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பார்வதி தாயார் காத்தார்.  

தன் பிள்ளையை மருத்துவச்சி கொன்று விட்டார் என்ற தகவலறிந்த வல்லால மகாராஜன் வாளால் வெட்ட முயன்ற நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய தேவியார் அந்த மகாராஜா தலையை வெட்டி விடுகிறார். தேவியாரின் ஆக் ரோஷத்தை போக்க  பெருமாள் பெத்தரான்ய ஈசனாகவும், ஈசன் உத்தராண்ட ராயராகவும், பல்வேறு தேவதைகள் உருமாற்றம் கொண்டு தேவியரின் ஆக்ரோஷத்தை தீர்த்தார்கள். இருப்பினும் தேவியார் ஆக்ரோஷம் அடங்காத நிலையில் முருகன் நேரில் சென்று தாயாரிடம் ஆக்ரோஷம் தீர்த்ததால் பின்நாளில் குமரன் கோயில் அமைத்துள்ளனர். அதன் பின் அப்பகுதியினர் கோயில் கட்டி முடமுழுக்கு செய்துள்ளனர். தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள விக்ரகங்கள் கருங்கல்லாக இருப்பதால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar