Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திரவுபதியம்மன்
  உற்சவர்: திரவுபதியம்மன், அர்ச்சுனன்
  அம்மன்/தாயார்: திரவுபதியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: அம்மன் குளத்து தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: பெருமளவில் வயல் சூழ்ந்தப்பகுதி, மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வடிகால் இல்லாத நிலையால் கீழப்படுகை என வந்தது.
  ஊர்: கீழப்படுகை
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனியில் தீ மிதி உற்சவம், ஆடி, தை வெள்ளி, பவுர்ணமி வழிபாடு போன்ற விழாக்கள் சிறப்புமிக்கதாக கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள விக்கிரகங்களுக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுவது மிகச் சிறப்புமிக்கதாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9.00 மணி முதல் காலை 12.30 மணி வரை மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில், கீழப்படுகை அஞ்சல், கீழப்படுகை, திருவாரூர்- 610109  
   
போன்:
   
  +91 97862 04428 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப்பக்கம் நுழைவு வாயிலில், எதிரில் மிகப் பெரிய அரசமரம், மகாமண்டபத்தில் 200 பேர் அமர்ந்து தரிசனம் செய்யும் வசதி, வழுவழுப்பான தரை தலம், பலி பீடம் மற்றும் கொடி மரம் உள்ளது. சனி மூலையில் 23 கிலோ எடையில் கோயில் மணி, இடது பக்கம் செல்வ விநாயகர், வலது பக்கம் வீரபத்திரன் விக்கிரங்களும், உள்ளே மூலவரான திரவுபதியம்மன் கிழக்குப்பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கிறார். 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில். 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடந்தது. திரவுபதியம்மன், அர்ச்சுனன் ஆகிய உற்சவ சிலைகள் பாதுகாப்பு கருதி தியாகராஜர் கோயிலில்  வைக்கப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, புத்திரபாக்கியம், கடன் தீரவும், நோய் நிவர்த்திக்கும், விவசாயம் செழிப்படைய பிரார்த்தனை செய்யப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பால் அபிஷேகம், செய்தும், தாணிங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இந்த கோயிலுக்கு வடக்கில் தியாகராஜர் கோயிலும், தெற்கில் பெருமாள் கோயிலும் உள்ளதால் பெருமை சேர்க்கிறது.  
     
  தல வரலாறு:
     
  பெருங்குடி கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயில் துவங்கிய காலத்தில் இக்கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. எல்லை காவல் தெய்வாக அமைத்துள்ளனர். மன்னர் காலத்தில் மரத்தூண்கள் அமைத்து மேற்கூரையாக ஓடு வேய்ந்தனர். அப்பகுதியினர் செல்வ செழிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் வணங்கினர். அதனைத்தொடர்ந்து குலதெய்வவழிபாடும் நடத்தி வந்தனர். மன்னர் காலத்தில் ஐம்பொன் விக்கிரங்கள் உற்சவர்கள் காணிக்கையாக செலுத்தினர். காலப்போக்கில் கட்டடம் பழுதடைந்து கிடந்தது. அப்பகுதி இளைஞர்கள் முன் வந்து வசூல் செய்து கோயில் கட்டியுள்ளனர். கோயில் இருக்கும் இடத்தில் அப்பகுதியினர்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள விக்கிரகங்களுக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுவது மிகச் சிறப்புமிக்கதாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar