Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வலம்புரி விநாயகர்
  உற்சவர்: வலம்புரி விநாயகர்
  தல விருட்சம்: அரசு, வேம்பு
  ஆகமம்/பூஜை : காரண ஆகமப்படி பூஜை
  புராண பெயர்: முசுகுந்த சக்கரவர்த்தி இங்குள்ள விநாயகரை வழிபட்டதால் முசுகுந்தபுரம் என்றாகி பின்னாளில் முகுந்தனூர் என மறுவியுள்ளது.
  ஊர்: முகுந்தனூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப்பிறப்பு, பிரதி மாதம் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட விநாயகர் கோயில் என்பதால் சுற்றுபகுதியினர் பயபக்தியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது சிறப்புக்குரியவையாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.00 மணி முதல் மதியம் 10.00 மணி வரையும் மாலை 6.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயில், முகுந்தனூர் மற்றும் அஞ்சல், குடவாசல் தாலுகா, திருவாரூர்- 613701.  
   
போன்:
   
  +91 94884 15137, 94439 46137 
    
 பொது தகவல்:
     
  ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டதாக கூறப்படுகிறது. 1990- ஆம் ஆண்டிற்குப் பின் 2013 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கிழக்குபக்கம் நுழைவு வாயிலில், எதிரில் தல விருட்சமான வேம்பும், அரசும் உள்ளது. நந்திமண்டபத்தில் பலி பீடம் மற்றும் முடிகரும், மகாமண்டபத்தில் 300 பேர் அமரும் இடவசதியில் நுழைவு வாயில் இடபக்கம் பிரம்மா மற்றும் பாலமுருகனும், வலப்பக்கம் சோமாஸ்கந்தர் மற்றும் நந்தியும் அருள்பாலிக் கின்றனர். அர்த்த மண்டபத்தில் சித்திவிநாயகர் கருவறையில் மூலவர் பிள்ளையார்பட்டியை போல், சிவன் அமைப்பில் வரையப்பட்ட ஓவியம் போன்று  ஒரு கலசம் கூடிய தனி சன்னிதியில் மூலவரான வலம்புரி விநாயகர் அருள்பாலிக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  ஆயுள் விருத்திக்கும், சங்கடஹர சதுர்த்தியில் சகல விதமான தோஷம் நீங்கவும் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் வேண்டுகின்றனர். வேண்டியது கிட்டவும், புத்திரபாக்கியத்திற்கும் சிறப்பு பரிகாரஸ்தலமாக விளங்குகின்றன.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர் 
    
 தலபெருமை:
     
  மூலவர் பிள்ளையார் பட்டி போன்று சிவன் வடிவில் வரையப்பட்ட ஓவியம் போன்று காட்சி அளிப்பதுடன், இத்தலத்திற்கும் கிழக்கே தியாகராஜர், மேற்கே அபிராமி சமேத கயிலாசநாதர் வடக்கே எண்கண் முருகன், தெற்கே  பூர்ணா புஷ்கலா சமேத சாஸ்தா கோயில் இருப்பது இத்தலத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கிறது.  
     
  தல வரலாறு:
     
  திருவாரூரில் கோயில் அமைத்து  தியாகராஜரை இந்திரலோகத்தில் இருந்து முசுகுந்த சக்கரவர்த்தி எடுத்து வர முற்பட்டுள்ளார். அதற்கு முன்பாக இப்பகுதியில் விநாயகரை கோயில் கொண்டு வழிபாடு நடத்தியுள்ளார். அதன்பின் முசுகுந்த சக்கரவர்த்தி, இந்திரலோகம் சென்றபோது, இந்திரன் தியாக ராஜரை தர மறுத்துள்ளார். மேலும் தியாகராஜர்போன்று ஏழு உருவம் அமைத்துள்ளார். அப்போது முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட வலம்புரி விநாயகர் வண்டு உருவம் பெற்று உண்மையான தியாகராஜர் அருகே சென்று வட்டமிட்டுள்ளார். அதன் பின் முசுகுந்த சக்கரவர்த்தி உண்மையான தியாகராஜரை அடையாளம் கண்டு எடுத்து வந்தார் என்பது வரலாறு.

அதன் மையமாக வலம்புரி விநாயகருக்கு கோயில் அமைத்துள்ளனர். அதன் பின் வேண்டுதல் நிறைவேறி வந்துள்ளது. மேலும் இக்கோயில் பிள் ளையார்பட்டி போன்று மூலவரான வலம்புரி விநாயகர் (ஈசன்) சிவலிங்கம் வடிவில் வரையப்பட்ட ஓவியம் போன்று உள்ளார். இப்பகுதியில் விநாயகருக்கு கோயில் கட்ட முற்பட்டபோது பூமிக்கடியில் இருந்து லிங்கம், நந்தி, பாலமுருகன், பிரம்ம உள்ளிட்ட விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டு கோயிலில் பிரதிஷட்டை செய்துள்ளனர். இக்கோயில் சோழவளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவா ரூருக்கும் மேற்கே 13  கி.மீ.,தொலைவில்  அமைந்துள்ளது. இப்பகுதியில் சோழ மன்னர்கள் கட்டிய சிவத்தலம் அழிந்துள்ளதும் இங்குள்ள விக்கிரகங்களில் இருந்து தெரிய வருகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட விநாயகர் கோயில் என்பதால் சுற்றுபகுதியினர் பயபக்தியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது சிறப்புக்குரியவையாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar