Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு யமுனாம்பாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு யமுனாம்பாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: யமுனாம்பாள்
  தல விருட்சம்: மாமரம்
  தீர்த்தம்: வெண்ணாறு, கிணறு
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  ஊர்: நீடாமங்கலம்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தை கடைசி வெள்ளி பால்குடம் எடுத்தல், மாதம்தோறும் பவுர்னமி, மற்றும் பஞ்சமியில் சிறப்பு வழிபாடு மற்றும் அறுசுவையுடன் அன்னதானம் போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக் கொண்டாடப்படுகின்றன. மேலும் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஏன தின உற்சவமாக மிக பிரம்மாண்டமாக திருவிழா நடத்தி வருகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  கிழக்கு பக்கம் பார்த்த வகையில் மூலவர் யமுனாம்பாள் (விக்கரம்) ஒரு கலசத்துடன் கூடிய சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9 மணி முதல் காலை 1 மணி வரை மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை. 
   
முகவரி:
   
  அருள்மிகு யமுனாம்பாள் திருக்கோயில், நீடாமங்கலம் 614404, திருவாரூர்.  
   
போன்:
   
  +91 94441-39199 
    
 பொது தகவல்:
     
  நீராடுமங்கலம் என்றதே பின்னாளில் நீடாமங்கலம் என மருவியுள்ளது.(1705ம் ஆண்டு சரபோஜி மன்னன் யமுனாம்பாளுடன் சகேத தீர்த்தில் நீராடியதால் இப்பெயர் பெற்றுள்ளது)ஊருக்கும் தெற்கு பக்கம் கோயில். கோயிலின் மூன்றுப் பக்கமும் நீரோட்டம் நிறைந்துள்ளது. வெண்ணாறு, கோரையாறு மற்றும் பாமணி என மூன்று ஆறுகள் ஓடுகிறது. கிழக்கு பக்கம் பார்த்த வகையில் மூலவர் யமுனாம்பாள் (விக்கரம்) ஒரு கலசத்துடன் கூடிய சன்னிதியில் அருள்பாலிக்கிறார். பின்பக்கம் மாமரம் செப்பு தகட்டால் மூடப்பட்டுள்ளது. மகா மண்டபத்தில் 500 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம்.

மேல் சீலிங் தரையில் வரலாற்று ஓவியங்கள் இடம் பெற்றுள்ளது. முகப்பில் மேல் பக்கம் அம்மன் துவார சக்திகளுடன் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குப்பகம் பார்த்த வகையில் விநாயகர், பலி பீடம் மற்றும் எலி வாகனம் அதன் எதிரில் யமுனாம்பாள் நீராடிய குளம் தெற்கு பக்கம் பார்த்த வகையில் மிகப்பெரிய அரண்மனை (யமுனாள்பாள் வாழ்ந்தது) உள்ளது. ஒருபக்கம் சத்திரமாகவும், மறு பக்கம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் மேற்பட்டது. 2014 பிப்ரவரி 6 -ஆம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
 
     
 
பிரார்த்தனை
    
  புத்திரபாக்கியம், திருமணத்தடை, தீர்க்கசுமங்கலி, சுகப்பிரசவம், சகல ஐஸ்வர்யங்கள் கல்வி மேம்பாடு, அரசு, அரசியல் பதவி உயர்வு போன்றவை பிரச்சனைகளுக்காக பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  திருகாவிரி பாயும் சோழவளநாடு. இதற்கு வளநாடு, சென்னி நாடு, அபயநாடு, செம்பியநாடு, பொன்னிநாடு என்று வழங்கும் சோளணு தேசமாகும். இந்த தேசத்தில் கோயில்கள் பல உள்ளன. அவைகளில் புராணங்கள் நிறைந்தவை, தனிப்பாடல், ஆழ்வார்கள் மற்றும்  ஆன்றோர்களால் பாடல் பெற்ற கோயில்கள் பல அடங்கியுள்ளன.  இருப்பினும் அரசன் மனைவி மாமரத்தில் இரண்டர கலந்து தெய்வமாக காட்சியளிப்பது பெருமை சேர்கிறது. விக்கிரகமாக உள்ளதால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்பாள் எப்போது அலங்கார கோலத்தில் அருள்பாலிக்கிறார்.  
     
  தல வரலாறு:
     
  தஞ்சையை 17-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராட்டிய மன்னர் சரபோஜி தன் மனைவி யமுனாம்பாயுடன் திருவிசை நல்லூரில் வாழ்ந்த மகான் ஸ்ரீஸ்ரீதரவேங்கடேச ஐய்யாவால் சுவாமியிடம் ராமநாம ஜப தீட்சை பெற்று சதாசர்வ காலமும் ராம நாமத்தை ஜபித்து வந்தார். ராம நாமத்தை ஜபித்து வந்த மகாராணி யமுனாபாய் என்கிற யமுனாம்பாள் நிறைமாத கர்ப்பினியாக இருக்கும்போது அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த மாமரத்தில் மெய்பொருளாம் இறைவனை தனக்கு உறுது ணையாக எண்ணி அம்மெய்பொருளோடு, மரத்தில் இரண்டரக் கலந்து விட்டார். அவர்களின் வழியில் வந்த மராட்டிய மன்னர்கள் அந்த மரத்தையே இறைவனாக நினைத்து வழிபட்டு தங்கள் வம்சத்தின் புத்திரதோஷம் நீங்கப்பெற்றனர்.

மராட்டிய மன்னர்களில் ஒருவரான பிரதாபசிம்ம மகாராஜா காலத்தில் அன்னை யமுனாம்மாள் பெயரில் சத்திரம் ஒன்று நிறுவி அனைவருக்கும் அனைத்து வித தர்மங்களும் செய்து வந்தனர். மேலும் இவ்வூருக்கு அன்னை யமுனாம்மாள் பெயரை வைத்து யமுனாள்பாள்புரம் என்று அழைத்தனர். புத்திர பாக்கியம் அருளும் சந்தான ராமர் கோயிலை நிறுவியும் சதுர்வேத பிராமனர்களுக்கு குடியிருப்பு வசதியும்  செய்து கொடுத்து சர்வ மானியம் அக்ரஹாரம் என பெயரிட்டு அவர்களுக்கு அருகில் உள்ள கிராமத்தில் விளை நிலங்களை கொடுத்தும் அவ்வூருக்கு சர்வமான்யம் என்றும் பெயரிடப்பட்டது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சந்தானராமரை   யமுனாம்புரி நீ வசந்தம் என்றுபாடியுள்ளார்.

காலப்போக்கில் இவ்வூர் நீடாமங்கலமாக மருவியுள்ளது.அதன் பின் நகர வாசிகள் மாமரத்திற்கு முன்பாக ஒரு கோயில் அமைத்து ஒரு கையில் படியுடன் கூடிய அம்பாள் விக்ரகத்தை அமைத்து வழிபட்டு வந்தனர். 1972 ஆம் ஆண்டு இயற்கை சீற்றத்தில் அந்த மாமரம் முறிந்தது. அதனை அப்பகுதி மக்கள் அன்னை யமுனாம்பாள் இறைநிலையோடு மீதம் இருந்த மாமரத்தை செப்பு கவசம் இட்டு இன்றும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இங்கு திருமணம்,  தீர்க்கசுமங்கலி, புத்திரர், சுகப்பிரசவம், கல்வி மேம்பாடு, அரசு, அரசியல் பதவி உயர்வு உள்ளிட்ட 16 வகையான  பாக்கியங்களை வேண்டி அம்பாளை வணங்கி உயர்வு பெற்றவர்கள் அதிகம் உள்ளனர். பட்டத்து அரசியாக இருந்து தனதுபக்தி பெருக்கத்தால் இறைவனுடன் ஐக்கியமான தெய்வ மங்கை ஞான சித்தருமான அன்னை யமுனாம்பாள் கோயில் பழுதடைந்திருந்தது. தற்போது ரூ.30 லட்சம் செலவில் புதிதாக கட்டி பிப்ரவரி 6 ஆம்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கிழக்கு பக்கம் பார்த்த வகையில் மூலவர் யமுனாம்பாள் (விக்கரம்) ஒரு கலசத்துடன் கூடிய சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar