Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திருநாவுக்கரசர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு திருநாவுக்கரசர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திருநாவுக்கரசர்
  உற்சவர்: திருநாவுக்கரசர்
  தல விருட்சம்: களர் உகாதி
  ஊர்: திருவாமூர்
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை மாதம் சதயம் நட்சத்திரம் மூன்று நாள் ( திருவாடுதுறை, தருமபுரம், திருப்பனந்தல் (காசிமடம்) மடாதிபதிகள் பங்கேற்கும் மூன்று நாட்கள் பங்கேற்கும் சொற்பொறிவு, பட்டிமன்றம், தேவாரம், இசைக்கச்சேரி உள்ளிட்ட விழா. மூன்றாம் நாள் அப்பர் உற்சவர் வீதியுலா.  
     
 தல சிறப்பு:
     
  கோவிலுக்கு தென்மேற்கு மூலையில் 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘களர்உகாய்’ மரம் தலவிருட்சமாக உள்ளன.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை. 
   
முகவரி:
   
  அருள்மிகு திருநாவுக்கரசர் (அப்பர்) திருக்கோயில், திருவாமூர் 607 106 பண்ருட்டி தாலுகா, கடலுார் மாவட்டம்,  
   
போன்:
   
  +91 8610593617 
    
 பொது தகவல்:
     
  கோவிலில் இடது புறம் விநாயகர் சன்னதி, வலதுபுறம் விநாயகர் சிலையும்; தாயார் மாதினியார், அக்கா திலகவதியார் சன்னதி உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  அப்பர் தீராத வயிற்றுவலி(சூள) திருவதிகை வீராட்டனேஸ்வரரால் குணமாகி, மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார். இதனால், வயிற்று வலி குணமாவதாக கூறுகின்றனர். சூலை நோய்க்காக பிரார்த்திக் கொள்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  மூலவரருக்ககு அபிஷேகம் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  6ம் நுாற்றாண்டில் களர் உகாதி மரத்தடியிலிருந்த கூரைவீட்டில் அப்பர்  பிறந்தார். அந்த மரத்தையொட்டியே அப்பருக்கு கோவில் கட்டப்பட்டு, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பராமரிக்கப்படுகிறது.

இக்கோவிலில் மூலவராக அப்பர் தீராத வயிற்று வலி என வருவோர்க்கு அருள்பாலிக்கிறார்.

 
     
  தல வரலாறு:
     
   7ம் நுாற்றாண்டில் பண்ருட்டி – உளுந்துார் பேட்டை சாலையிலுள்ள திருவாமூரில் புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு பிறந்தார். இவரது அக்கா திலகவதியாருக்கு நிச்சயத்த மணமகன் போரில் வீரமரணமடைய, திருவதிகை வீராட்டானம் (பண்ருட்டி நகராட்சி) சென்று சிவதொண்டு செய்தார்.  ஆனால், திருநாவுக்கரசர் சமண சமயத்தை தழுவி, தருமசேனர் எனும் தலைமை பதவி பெற்றார். பின்னர், சூலைநோய் எனும் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட, திருவதிகை சென்று அக்கா திலகவதியிடம் வீராட்டானேஸ்வரர் திருநீற்றை வாங்கி அணிந்ததும் வயிற்றுவலி நீங்கப்பெற்றார். அது முதல் மீண்டும் சைவ  சமயத்திற்கு மாறினார். தனது 82 வது  வயதில் திருவாரூர் மாவட்டம் திருப்புகலல் எனுமிடத்தில் சிவ ஜோதியில் கலந்தார். அவர், பிறந்த இடமான திருவாமூரில் கோவில் கட்டி 1963 முதல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காலையும், மாலையும் பூஜை செய்யப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கோவிலுக்கு தென்மேற்கு மூலையில் 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த களர் உகாய் மரம் தலவிருட்சமாக உள்ளன.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar