Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திருவெண்காட்டீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு திருவெண்காட்டீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திருவெண்காட்டீஸ்வரர்
  உற்சவர்: திருவெண்காட்டீஸ்வரர்
  அம்மன்/தாயார்: மீனாட்சி அம்மன்
  தல விருட்சம்: திருவெண்காட்டீஸ்வரர்
  ஊர்: மதுராந்தகம்
  மாவட்டம்: செங்கல்பட்டு
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலம் அமர்ந்த பெருமானே' என இத்தலத்து முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.
 
     
 திருவிழா:
     
  சித்ரா பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, பிரதோஷம்  
     
 தல சிறப்பு:
     
  கொஞ்சி விளையாடும் நகரம். சோறுடைத்த சொர்க்க பூமி. புலிக் கொடியை சின்னமாக கொண்ட தேசம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7:30 – 11:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி 
   
முகவரி:
   
  திருவெண்காட்டீஸ்வரர் கோயில். மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம்  
   
போன்:
   
  +91 411 – 525 3887, 98429 09880, 93814 82008 
    
 பொது தகவல்:
     
  கல்லிலே கலைவண்ணம் கண்ட குலம். இப்படி சோழத்தின் பெருமை கூற சொற்கள் எல்லாம் பூத்து நிற்கும். அப்படிப்பட்ட சோழ நாகரிகத்தில் உருவானதுதான் திருவெண்காட்டீஸ்வரர் கோயில். இது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ளது  
     
 
பிரார்த்தனை
    
  தோல் நோயினால் அவதிப்படுவோர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்கும்.

இங்கு கால பைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரும் உள்ளனர். வழக்கில் வெற்றி பெறவும், சொத்து பிரச்னையால் கஷ்டப்படுவோருக்கும் கண் கண்ட தெய்வமாக இவர்கள் திகழ்கின்றனர்.

 
    
 தலபெருமை:
     
  இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் சிறந்தவர்கள். அறத்தில் எப்படியோ அதைவிட தெய்வபக்தியில் திளைத்தவர்கள். அத்தகைய சோழ குலத்தில் உதித்தவர்தான் கண்டராத்தித்தர். இவர் பெரிய சிவபக்தர். இவரால் உருவானதுதான் இக்கோயில்.
இவருக்கு திருவெண்காடுடைய மகாதேவர், வேதாரண்யேஸ்வரர், ஸ்வேதாரண்யேஸ்வரர், திருவெண்காடுடைய நாயனார் என்ற பெயர்களும் உள்ளன.
இங்கு கால பைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரும் உள்ளனர். வழக்கில் வெற்றி பெறவும், சொத்து பிரச்னையால் கஷ்டப்படுவோருக்கும் கண் கண்ட தெய்வமாக இவர்கள் திகழ்கின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  முன்பொரு காலத்தில் இப்பகுதி மந்தாரை மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் அமர்ந்து இளைப்பாறிய வெண்மைக் கொக்குகளால் இப்பகுதி வெண்மயமான காடாக தோற்றமளித்தது. எனவே இப்பகுதியை வெண்காடு என்றும், இங்குள்ள மூலவருக்கு 'வெண்காட்டு ஈஸ்வரர்' என்ற பெயரும் வந்தது.ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரத்தை நெருங்கும் போதே நமது மனம் நெகிழ்ந்துவிடும். பின் உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி தேவர் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து வெளிச்சுற்றில் மீனாட்சி அம்மன், பாண்டீஸ்வரர் நம்மை வரவேற்பர். பாண்டிய மன்னர் ஒருவர், தன் தோல் நோய் குணமானதற்கு நன்றிக் கடனாக இவரை பிரதிஷ்டை செய்துள்ளார். இவர்களை கடந்து உள்ளே சென்றால் கருங்கல் கொண்டு செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள், திருமேனிகள் உள்ளன. பிறகு திருவெண்காட்ஸ்வரர் தரிசனம் கிடைத்துவிடும்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: 'மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலம் அமர்ந்த பெருமானே' என இத்தலத்து முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar