Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சங்கு நாராயணர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சங்கு நாராயணர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சங்கு நாராயணர்
  உற்சவர்: சங்கு நாராயணர்
  ஊர்: காத்மாண்டு
  மாவட்டம்: நேபாளம்
  மாநிலம்: மற்றவை
 
 திருவிழா:
     
  ஏகாதசி, அஷ்டமி, நவமியின் போது கோயில் சார்பாகப் பூஜை நடக்கும்  
     
 தல சிறப்பு:
     
  கி.மு.325ம் ஆண்டிலேயே இங்கு சிறிய அளவில் கோயில் இருந்துள்ளது. 1708 ல் பாஸ்கர மல்லர் என்ற மன்னர் கோயிலின் கதவு, ஜன்னல், கூரையில் தங்க முலாம் பூசிய செப்புத்தகடுகளால் கோயிலை அலங்கரித்தார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7:00 – இரவு 9:00 மணி 
   
முகவரி:
   
  சங்கு நாராயணர் கோயில், பக்தபூர் , காத்மாண்டு  
   
போன்:
   
  +91 977 – 1425 6909 
    
 பொது தகவல்:
     
  கருங்கற்கள் மூலம் இரண்டடுக்குகளாக, பண்டைய நேபாள மரபுப்படி கோயில் கட்டப்பட்டுள்ளது. மரமும், கல்லும் கூடிய வேலைப்பாடுகளுடன் யாளி, சிங்கம், யானை என பல சிற்பங்கள் உள்ளன. இங்கு நான்கு வாயில்கள் இருந்தாலும், மேற்கு வாயில்தான் முக்கியமானது. அதில் நாராயணரின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரையை அழகு சிற்பங்களாக காணலாம். கோயிலின் உள்ளே கருட வாகனத்தில் விஷ்ணு, உலகளந்த பெருமாள் என போற்றப்படும் வாமனர், மகாபலி சக்கரவர்த்தி என சிற்பக்களஞ்சியத்தையே பார்க்கலாம். இதைக் கடந்து சென்றால் நாராயணரை கண் குளிர தரிசிக்கலாம்.
 
     
 
 தலபெருமை:
     
  ஆடும் கோலத்தில் நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஏந்தி தரிசனம் தருகிறார். இவரைத் தவிர கிருஷ்ணர், சிவபெருமான், சின்னமஸ்தா தேவியை (தன் தலையைத் தானே கொய்து கையிலேந்தி, மறு கையில் வாள் ஏந்திக் காட்சி தருபவள்) காணலாம். ஆனால் இங்கு தினசரி வழிபாடு கிடையாது. ஏகாதசி, அஷ்டமி, நவமியின் போது கோயில் சார்பாகப் பூஜை நடக்கும். மற்ற சமயத்தில் தனிப்பட்டவர்களின் குடும்பச் சடங்குகள், பிறந்தநாள் போன்ற வைபவம் கட்டணம் பெற்று பூஜை செய்யப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  முற்காலத்தில் பிராமணர் ஒருவரிடம் பசுவை வாங்கி, அதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்தார் இங்கு இருந்த நபர். நாளடைவில் எதிர்பார்த்ததை விட குறைவான பால் கறக்க ஆரம்பித்தது பசு. இதனால் இவர் பிராமணரிடம் புகார் கொடுத்தார். அவரும் இதற்கு ஒரு திட்டத்தை தீட்டினார். அதன்படி ஒருநாள் இருவரும் பசுவை பின்தொடர்ந்தபோது, அது மரத்தின் அருகில் நின்றது. அந்த சமயத்தில் சிறுவன் ஒருவன் பாலை குடித்தான். அவனை பிடிக்க முயன்றபோது, அந்த மரத்தின் உள்ளேயே சென்று மறைந்துவிட்டான். கோபம் அடைந்த பிராமணர் மரத்தை வெட்ட, அங்கு அதிசயம் நிகழ்ந்தது. ஆம். அதில் இருந்து நாராயணர் தோன்றி, பிராமணரிடம் பேச ஆரம்பித்தார். ‘ஒருமுறை இந்த பகுதிக்கு வேட்டையாட வந்தேன். அப்போது குறி தவறி அம்பு உங்களது தந்தையை தாக்கியது. அவர் இறந்து போனதால், பிரம்மஹத்தி தோஷம் என்னை பிடித்தது. அன்று முதல் மரமாக இருந்து வந்த நான், உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன்’ என்றார். பின் அவர்களது விருப்பப்படி நாராயணர் இங்கேயே தங்கிவிட்டார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கி.மு.325ம் ஆண்டிலேயே இங்கு சிறிய அளவில் கோயில் இருந்துள்ளது. 1708 ல் பாஸ்கர மல்லர் என்ற மன்னர் கோயிலின் கதவு, ஜன்னல், கூரையில் தங்க முலாம் பூசிய செப்புத்தகடுகளால் கோயிலை அலங்கரித்தார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar