பிரதி வருடம் சித்திரை மாதம் பதினொரு நாள் உற்சவமாக அக்னி சட்டி எடுத்து தீக்குழி இறங்குதல் இத்தலத்தின் தனிப்பெரும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நித்திய பூஜைகள் மற்றும் விசேஷ பூஜைகளான சதுர்த்தி, சஷ்டி, பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி மற்றும் பிரதோஷம் நடைபெற்று வருகிறது.
தல சிறப்பு:
வருடாந்திர பூஜைகளான சிவராத்திரி, நவராத்திரி, 108 சங்காபிஷேகம், அன்னாபிஷேகம், குரு, சனி, ராகு,கேது பெயர்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 6.30 - 12.00 மணி. மாலை 5.00 - 9.00 மணி வரை
முகவரி:
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், க்யாலா, தில்லி
போன்:
+91 1128336146, 9871305767, 9818873438
பொது தகவல்:
ஆலயத்தில் பாலாலய பூஜை நடைபெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் செவ்வனே நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகம் ஜனவரி 2026ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிவன், விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், கால பைரவர், தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை, நவகிரகம் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளது. இத்துடன் நூதன ஸ்ரீ கோதண்ட ராமர், ஸ்ரீ தன்வந்திரி மற்றும் சப்த கன்னியர்களுக்கு சன்னதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பிரார்த்தனை
இத்தலத்தில் கொலுவிருக்கும் ஸ்ரீதேவி கருமாரியம்மன் அவளை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து, அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றித் தருகிறாள்.
தலபெருமை:
ஆலய பிரகாரத்தில் நாகபுற்று உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் பிரதி வாரம் திங்கள் கிழமைகளில் புற்றுக்கு பால் ஊற்றி வருவதாலும் நாக பஞ்சமி அன்று விசேஷ ஆராதனை செய்வதாலும் நாக தோஷம் நிவர்த்தி ஆகிறது என்பது இங்கு நிதர்சனம். ராகு தோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் தடைப்பட்டோர் மூன்றாவது வார முடிவில் வரன் தேட ஆரம்பித்தால் ஒன்பது வாரத்திற்குள்ளாக வரன் அமைந்து திருமணம் நடந்து வருவது இங்கு கண்கூடாக தெரிகிறது.
தல வரலாறு:
புனித பாரத பூமியின் தலைநகரமான டெல்லி மாநகரத்தில் வடமேற்கு பகுதி க்யாலாவில் அமைந்துள்ளது ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில். சுமார் அறுபது வருடங்களுக்கு முன்பு சுயம்புவாக தோன்றிய ஆதி சக்தியே முழுமுதற் கருமாரியாக இங்கு விளங்கி வருகிறாள். தெய்வீக சித்தர் காக பூசண்டி, இந்த பூஜா ஸ்தலத்திற்கு "உத்திர வேத பூமி" என்று பெயரிட்டார். அகஸ்திய முனிவரால் தேவியின் திருவிளக்கு தரிசனம் பெற்ற தலமே தற்போது ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் பூஜை ஸ்தலமாக (க்யாலா) இன்று திகழ்கிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சித்திரை மாதத்தின் குறிப்பிட்ட தினத்தில் விநாயகர், சிவன் மற்றும் கருவறை மூலவர் அம்மன் மீது சூரிய ஒளி காலை 6.45 மணி முதல் 7.30 மணி வரை விழுகிறது.