Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – ... கடகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025 கடகம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை)
மிதுனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025
எழுத்தின் அளவு:
மிதுனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025

பதிவு செய்த நாள்

03 அக்
2023
03:10

மிருக சீரிடம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மிருகசீரிடம் 1 2 ம் பாதத்தினருக்கு விரய ராகுவாகவும், 3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவாகவும் சஞ்சரித்து வந்தார். கேது பகவான் 1, 2 ம் பாதத்தினருக்கு சத்ரு ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரித்து வந்தார். இதனால் 1, 2 ம் பாதத்தினர் கேதுவால் நன்மையும், 3,4 ம் பாதத்தினர் ராகுவால் நன்மையும் பெற்று வந்தீர்கள். இந் நிலையில் அக்.8, 2023 ராகு கேது பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது?

நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் பகைவர்கள் என்றாலும் அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிட வேண்டியவராகிறார்கள்.

1, 2 ம் பாதத்தினருக்கு ராகு லாப ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது 1, 2 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2 ம் பாதத்தினருக்கு ராகுவாக வருவாயை வழங்க இருக்கிறார், செல்வாக்கை உயர்த்துவார். 2,3 ம் பாதத்தினருக்கு தொழிலின் மீது அக்கறையை உண்டாக்குவார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு முயற்சியில் வெற்றி தருவார்.  

இந்த நேரத்தில் கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கு எதிர்மறை பலனைத் தரும் நிலையில் உள்ளது. 1, 2 ம் பாதத்தினர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்படலாம். அண்டை வீட்டார், உறவினருடன் பிரச்னை, மனக்கசப்பு வரலாம். வீண் அலைச்சல், பணச்செலவு, பிள்ளைகள் வழியில் சங்கடம் உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு மருத்துவ செலவால் கையிருப்பு கரையும். தொழிலில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும், பணியாளர்களுக்கு வேலையில் முழுகவனம் செலுத்த முடியாமல் போகும். தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். உடலில் கோளாறுகள் அடிக்கடி தோன்றும். மனதில் குழப்பம் அதிகமாகும். வீடு, வாகனத்தில் மராமத்து செலவு ஏற்படும்.

சனி சஞ்சாரம்: ராகு கேது பெயர்ச்சியின் போது அக்.23, 2023 வரை மகரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிக்கும் சனி அதன்பின் வக்கிர நிவர்த்தியாகி டிச.20, 2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். 1,2 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் 1,2 ம் பாதத்தினருக்கு தொழிலில் கூடுதல் கவனம் தேவை. 3,4 ம் பாதத்தினருக்கு லாபம் அதிகரிக்கும். வாழ்வில் உயர்வு உண்டாகும்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 2024 வரை மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குரு, ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு செலவு, அலைச்சலை ஏற்படுத்துவார். மிதுன ராசியினருக்கு லாப குருவாகி வருமானத்தை பெருக்குவார். செல்வாக்கு உயரும். ஆனாலும் அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை வக்கிரமடைவதால் இதில் மாற்றம் உண்டாகும். மே1, 2023 முதல் ரிஷப ராசியினருக்கு ஜென்ம குருவாகவும் மிதுன ராசியினருக்கு விரய குருவாகவும் சஞ்சரிக்க இருப்பதால் ரிஷப ராசியினருக்கு அலைச்சல் மூலம் ஆதாயத்தையும், மிதுன ராசியினருக்கு செலவால் நெருக்கடியையும் ஏற்படுத்துவார்.

பொதுப்பலன்: நினைத்ததை சாதிப்பதற்காக துணிச்சலுடன் செயல்படும் உங்களுக்கு இக்காலத்தில் இரண்டு விதமான பலன்கள் உண்டாகும், ரிஷப ராசியினருக்கு ராகு நன்மைகளை வழங்குவார், கேதுவால் குழப்பம், சங்கடங்கள் அதிகரிக்கும், மிதுன ராசியினருக்கு தொழில் ரீதியாக ராகு சங்கடங்களையும், கேது நெருக்கடிகளையும் உண்டாக்குவார். சனி, குரு சஞ்சாரத்தால் முயற்சிகள் வெற்றியாகும். திட்டமிட்டு செயல்பட லாபம் அதிகரிக்கும்.

தொழில்: ராகு ஒரு பக்கம் சனி மறு பக்கம் என்று உங்களுக்கு நன்மைகளை வழங்க இருப்பதால் தொழிலில் தடைகள் விலகும், விவசாயம், பெட்ரோலியம், ரியல் எஸ்டேட், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளர்கள்,  பில்டர்ஸ் ஆகியோர் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு புதிய தொழில் உண்டாகும்.

பணியாளர்கள்: வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ப வருமானம் வரும். அலுவலகம் சார்ந்த ரகசியங்கள், மேலதிகாரிகள் பற்றிய குறைபாடுகளை உங்களுடன் பணிபுரிபவர்களிடம் கூறுவதால் சங்கடங்களுக்கு ஆளாக நேரும்.

பெண்கள்: பணியில் ஈடுபடுபவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். சிலருக்கு உடல் நிலையில் சங்கடம், பிள்ளைகளால் பிரச்னைகள் தோன்றக்கூடும். ஆனாலும் விரைந்து கு தீர்வு காண முடியும். நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

கல்வி: ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் உயர்கல்வியில் சேர்வீர்கள். மருத்துவம், பொறியியல் துறையில் சேரும் கனவு நிறைவேறும். சிலர் அரசு தேர்வில் வெற்றி பெற்று உயர்வை எட்டுவர்.

உடல்நிலை:  ரிஷப ராசியினருக்கு ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும். மிதுன ராசியினருக்கு சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதுடன், ஆயுள் ஸ்தானத்தின் மீது ராகுவின் பார்வை பதிவதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. சரியான உணவும் உறக்கமும் இக்காலத்தில் அவசியம், வாகன பயணத்தில் நிதானம் தேவை.

குடும்பம்: திட்டமிட்டு செயல்பட்டால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்,  பிள்ளைகள் மீது பெற்றோரின் கண்காணிப்பு தேவை, வருமானம் தேவையான அளவிற்கு வரும். கடந்த கால பிரச்னைகள் இல்லாமல் போகும், சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் நிலை உண்டாகும். புதிய வாகனம், வீடு என்ற நிலையும் சிலருக்கு ஏற்படும்.

பரிகாரம்: காளஹஸ்தியில் ராகு, கேது பரிகாரம் செய்வதுடன் சனிதோறும் சனீஸ்வரருக்கு தீபமேற்றுவது நல்லது.


திருவாதிரை: தடைகள் விலகும்

ராகுவை நட்சத்திர நாதனாகவும் புதனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு இதுவரை 11ல் சஞ்சரித்து பலன்களை அளித்த ராகு அக்.8.10, 2023 அன்று 10 ம் இடமான ஜீவன ஸ்தானத்திலும், 5 ம் வீட்டில் சஞ்சரித்து வந்த கேது பகவான் சுக ஸ்தானமான 4 ம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளனர்.

இதுவரை 11ல் சஞ்சரித்த ராகு நன்மையை வழங்கி வந்தார். பொருளாதார முன்னேற்றம், செல்வாக்கை ஏற்படுத்தி வந்தார். எதிர்பாராத லாபங்களை அதிர்ஷ்டவசமாக   உண்டாக்கினார். இப்போது 10ம் இடமான மீனத்தில் சஞ்சரிக்கும் நிலையில் வேலைப் பளு அதிகரிக்கும், குழப்பம் மேலோங்கும். தொழில், பணியில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். எளிதாக முடியக் கூடிய வேலையில் தடை, தாமதம் ஏற்படும், வேலைத்தேடுவோருக்கு அலைச்சல் அதிகரிக்கும், மனதில் தடுமாற்றம், செயலில் குழப்பம் உண்டாகும். ராகு உங்கள் நட்சத்திர நாதன் என்பதாலும் கேந்திரத்தில் பாப கிரகம் சஞ்சரிக்கும் போது நன்மை தரும் என்பதால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. 4 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் உடல் நிலையிலும் வசதி வாய்ப்பிலும் பின்னடைவை ஏற்படுத்துவார். உழைப்பு அதிகரிக்கும் அதனால் நேரத்திற்கு உண்ண முடியாமலும் உறங்க முடியாமலும் போகும். இருக்கும் இடத்தில் இடையூறு, வாகன வகையில் நெருக்கடி, விவசாயத்தில் பாதிப்பு, தாயாரின் உடல்நிலையில் சங்கடம், உறவுகளிடம் பகை என்ற நிலைகளை ஏற்படுத்துவார் என்றாலும் இந்த இடமும் கேந்திர ஸ்தானம் என்பதால் நீங்கள் அச்சமடைய தேவையில்லை.

சனி சஞ்சாரம்: ராசிக்கு 10ல் ராகுவும் 4ல் கேதுவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் 8ம் இடமான ஆயுள் ஸ்தானத்தில் அக்.23, 2023 வரை வக்கிர நிலையில் சஞ்சரிக்கிறார் அதன்பின் வக்கிர நிவர்த்தியாகி அங்கே ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் டிச.20, 20023 முதல் 9 ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார் என்பதால் அதன் பின் உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும், தடைபட்ட வருமானம் வர ஆரம்பிக்கும், பெரியோரால் நன்மை அதிகரிக்கும், செல்வாக்கு உயரும், நினைத்தது நடக்கும். தொழிலில் லாபம் உயரும். முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலம் மேம்படும்.

குரு சஞ்சாரம்: ஏப்.30, 4.2024 வரை குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். பணப்புழக்கம் கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்கிரம் அடையும் காலத்தில் இப்பலன்கள் மாறுபடும். மே 1,2024 முதல் 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகரிக்கும், கையிருப்பு கரையும், கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

பொதுப்பலன்: டிச.20, 2023 வரை அனைத்திலும் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். உடல்நிலை, மனநிலையில் சங்கடம் அதிகரிக்கும், பண நெருக்கடியால் அவதிக்குள்ளாவீர்கள். அதன்பின் உங்கள் நிலை மாறும், பணி, தொழில், குடும்பம் ஆகியவற்றில் மகிழ்ச்சி உண்டாகும், விவசாயத்தில் லாபம், கலைத்துறையினருக்கு முன்னேற்றம், வியாபாரத்தில் வருமான உயர்வு, திருமண வயதினருக்கு மண யோகம், குழந்தை பாக்கியம், சொத்து சேர்க்கை, உடல்நிலையில் முன்னேற்றம் என்ற நிலை உண்டாகும்.

தொழில்: டிச.20, 2023ல் நடக்கவிருக்கும் சனிப்பெயர்ச்சி,  குரு வக்கிர நிவர்த்திக்கு பிறகு தடைகள் விலகும், உற்பத்தி உயர்வால் வியாபாரம் அதிகரிக்கும், பணியில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும், அலைச்சல் நிலை மாறும், உத்தியோகம், தொழில், விவசாயம், வியாபாரம், கலைத்துறை, கல்வித்துறை, படைப்பாளர்கள் நிலை உயரும்.

பணியாளர்கள்: டிச.20, 2023 வரை பணிச்சுமை அதிகரிக்கும், உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்காமல் போகும், முதலாளியுடன் மோதல் வரலாம். சிலருக்கு பணியிடத்தில் பிரச்னைகளும் உண்டாகும். ஆனால் டிச.20, 2023 க்குப்பின் நிலைமை மாறும், உங்கள் ஆற்றல் வெளிப்படும். சிலருக்கு புதிய வேலை அமையும், பணியிடத்தில் செல்வாக்கு உயரும், உழைப்பிற்கேற்ப வருமானம் கிடைக்கும்,

பெண்கள்: குடும்பத்தினருடன் அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். சிலருக்கு ஆரோக்கிய குறைவு உண்டாகலாம். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். சிலர் தாயாரின் கோபத்திற்கு ஆளாகலாம், உறவுகளிடையே கருத்து வேறுபாடு, மனக்கசப்பு என்ற நிலையும், பணியாளர்களுக்கு வேலைப்பளு, அலைச்சல் வரலாம். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். டிச.20, 2023 க்கு பிறகு நிலை மாறும், பொன் பொருள் சேர்க்கை,  சொந்த வீடு அமையும் யோகம் சிலருக்கு உண்டாகும். உடல்நிலை மேம்படும்.

கல்வி: ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பதால் தேர்வில் வெற்றி காண முடியும்,  மதிப்பெண் கூடுதலாக பெற வேண்டுமென்றால் படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.

உடல்நிலை: டிச.20. 2023 வரை ஆயுள் காரகனின் சஞ்சார நிலையும், 4ல் சஞ்சரிக்கும் கேதுவும் உடல்நலக்குறைவை உண்டாக்குவர். ஒன்று போனால் மற்றொன்று என்று ஏதேனும் ஒரு பாதிப்பு உண்டாகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை. நோய் ஏற்பட்டதும் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதும் அவசியம்.

குடும்பம்: 4ல் சஞ்சரிக்கும் கேதுவின் பின்னோக்கிய 3ம் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் குடும்பத்தினரிடம் இணக்கம் இல்லாமல் போகும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பில்லாமல் போகும். மே1, 2024க்கு பிறகு 4 ம் இட கேதுவின் மீது குருவின் பார்வை உண்டாவதால் இந்த நிலையில் மாற்றம் உண்டாகும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும், பொன் பொருள் சேர்க்கையுடன் புதிய இடம் வாங்குவீர்கள், எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பரிகாரம்: உலகளந்த பெருமாள். சக்கரத்தாழ்வரை வழிபட சங்கடம் தீரும். விநாயகருக்கு எமகண்ட நேரத்தில் அருகம்புல் சார்த்த நெருக்கடி விலகும்.

புனர்பூசம்: குருபகவானின் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களில் 1,2,3 ம் பாதத்தினருக்கு புதன் ராசி நாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசி நாதனும் உள்ளனர். முதல் மூன்று பாதத்தினருக்கு இதுவரை ராகு, லாப ஸ்தானத்திலும், கேது 5ம் இடத்தில் சஞ்சரித்து எதிர்மறை பலன்களையும் வழங்கி வந்தனர். 4 ம் பாதத்தினருக்கு ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரித்து பல வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் அக்.8, 2023 முதல் மூன்று பாதத்தினருக்கு ராகு 10 ம் இடத்திலும், கேது  4 ம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். 4 ம் பாதத்தினருக்கு ராகு 9 ம் இடத்திலும், கேது  3 ம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். இதன்  காரணமாக முதல் மூன்று பாதத்தினருக்கு நெருக்கடி, அலைக்கழிப்பு அதிகரிக்கும். உடல், மனதளவில் சோர்வு உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு பாக்கிய ஸ்தான ராகுவால் நெருக்கடி நீங்குவதுடன் அவரது பின்னோக்கிய 3ம் பார்வை ராசிக்கு 11ல் பதிவதால் நன்மை அதிகரிக்கும், 3 மிட கேதுவால் தைரியம், துணிச்சல் ஏற்படும்.

பொதுவாக பாப கிரகங்கள் கேந்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது யோகப் பலன்களாக வழங்குவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம். எனவே 10ம் இட ராகு புதிய தொழில் முயற்சிகளுக்கு கை கொடுப்பார்,  மருத்துவர்களின் முயற்சிகளை வெற்றியாக்குவார். மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும். 4ம் இட கேது சொந்த இடம், வீடு, வாகன யோகத்தை உண்டாக்குவார்.

சனி சஞ்சாரம்: மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் இருந்து முதல் மூன்று பாதத்தினருக்கு அக்.23, 2023 வரை அஷ்டம ஸ்தானத்தில் வக்கிர கதியிலும் அதன் பின் வக்கிர நிவர்த்தியாகி அங்கே ஆட்சியாக சஞ்சரிக்கிறார். டிச.20,
2023 முதல் 9 ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். செயல்களில் முன்னேற்றம் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். 4ம் பாதத்தினருக்கு தடை, முயற்சியில் பின்னடைவு, எதிர்பாராத சங்கடம் ஏற்படும். புதிய முயற்சியில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். உடல்நலக்குறைவு, வாகனப் பயணத்தால் பாதிப்பும் ஏற்படும்.

குரு சஞ்சாரம்: மேஷ ராசியில் ஏப்.30. 2024 வரை சஞ்சரிக்கும் குரு முதல் மூன்று பாதத்தினருக்கு லாப குருவாக அதிக நன்மைகளையும்,  4ம் பாதத்தினருக்கு ஜீவன குருவாகவும் தொழில், பணியில் வருமானத்தில் தடைகளை உண்டாக்கும். அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்கிரம் அடைவதால் இப்பலன்களில் மாற்றம் உண்டாகும். மே1, 2024 முதல் குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதால் 1,2,3 ம் பாதத்தினருக்கு விரய குருவாகி செலவுகளை ஏற்படுத்துவார். அலைச்சல் அதிகரிக்கும். 4 ம் பாதத்தினருக்கு தொழில், பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். லாபம் கூடும்.  முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கை உயரும்.

பொதுப்பலன்: கவனமாக செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி அடையக்கூடிய உங்களுக்கு இக்காலத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்மை உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். உழைப்புக்கேற்ப லாபம் வந்து சேரும். நெருக்கடி விலகும்.  திசா புத்திக்கு தகுந்தாற்போல சிலருக்கு கூடுதல் நன்மை உண்டாகும்.

தொழில்: வெளிநாட்டுத் தொடர்பு, ஏற்றுமதி இறக்குமதி, டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், மருத்துவம், கல்வி, பேக்டரி, கம்பெனி, ஹார்ட்வேர்ஸ், மெஷினரி தொழில்களில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.

பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். பணிச்சுமை அதிகரிக்கும். சிலர் மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாகலாம். சிலர் பார்க்கும் வேலையை விட்டு  வேறு வேலைக்கு முயற்சிக்க வேண்டியிருக்கும்.

பெண்கள்: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும், திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு திருமணம் நடந்தேறும். பணிபுரியும் இடத்தில் உற்சாகமாக செயல்படுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

கல்வி: இயல்பாகவே கல்வியில் திறமை கொண்டவர்களாக  இருந்தாலும் இக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு விரும்பிய பாடப்பிரிவிலும், கல்லுாரியிலும் இடம் கிடைக்கும். மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

உடல்நிலை:  ஒன்று போய் ஒன்று என்று உங்கள் உடல் நிலையில் சங்கடம் உண்டாகும், மருத்துவச் செலவு அதிகரிக்கும் என்றாலும் டிச.20, 2023 க்கு பிறகு பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள்,  மருத்துவச்செலவு குறையும். உடல்நிலை சீராகும்.  உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

குடும்பம்: திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள், புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் சிறப்பாக நடந்தேறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கடந்த கால சங்கடம் காணாமல் போகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பரிகாரம்:  துர்கை, விநாயகரை வழிபட சங்கடம் நீங்கும். ஆலங்குடி குருபகவானை வழிபட்டு வர நன்மை கூடும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை) »
temple news
அசுவினி: முயற்சி வெற்றி பெறும்உங்கள் ஜென்ம ராசியில் இதுவரை சஞ்சரித்த ராகு 12ம் இடமான மீன ராசியிலும், ... மேலும்
 
temple news
கார்த்திகை;  கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ராகு கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவாகவும், 2,3,4 ம் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: புதிய தொழில் தொடங்குவீர்கள்குருபகவானின் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களில் 1,2,3 ம் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேது பகவானை நட்சத்திர நாதனாகவும் சூரியனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு ... மேலும்
 
temple news
உத்திரம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முதல் பாதத்தினருக்கு பாக்கிய ராகுவாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar