Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : அமோக லாபம் ரிஷபம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026 ரிஷபம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை)
மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026
எழுத்தின் அளவு:
மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026

பதிவு செய்த நாள்

11 டிச
2023
11:12

அசுவினி; அதிர்ஷ்ட நேரம் வந்தாச்சு


உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் இதுவரை சஞ்சரித்த சனி பகவான் டிச.20, 2023 அன்று லாப ஸ்தானமான 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்ப்பார்ப்பு எல்லாம் நிறைவேறும் காலமாக இந்த லாபச்சனியின் காலம் இருக்கப் போகிறது.
ரத்தக்காரகர், யுத்தக்காரகர் என்று கூறப்படும் செவ்வாய் பகவான், ஞான மோட்சக்காரகன் கேது பகவான் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு பொருளாதார நிலையில் இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் விலகப் போகிறது. அரசு வகையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் இனி அனைத்திலும் லாபம் என்ற நிலையை அடைய இருக்கிறீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறுவதுடன் சுயதொழில் செய்து வருபவர்கள் லாபம் காணும் காலமாக இக்காலம் அமையும். பொன் பொருள் சேர்க்கையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு என முன்னேற்றமான காலமாக இருக்கும்.
20.12.2023 - 6.3.2026  சனி சஞ்சாரத்தில்  
அதிர்ஷ்ட காலம்
சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 –  ஜூன் 19, 2024 வரையிலும் மற்றும் நவ 4, 2024 - பிப். 27, 2025 வரையிலும் மிகப்பெரிய யோகபலனை பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். அபரிமிதமான வருமானம் உண்டாகும். புதிய வாகனம், சொத்து சேர்க்கை ஏற்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்பார்த்த பொறுப்பு, பதவி வந்து சேரும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் கேதுவால் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்ப்புகள் அகலும். ஆரோக்கியம் சீராகும், வழக்குகள் வெற்றியாகும்.
ஏப்.26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் போது உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்தவை வெற்றியாகும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை உங்கள் ஜென்ம ராசியிலும், மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை ரிஷபத்திலும், மே 14, 2025 முதல் மிதுனத்திலும் குருபகவான் சஞ்சரிப்பார். இதில் அவர் ரிஷபத்தில் சஞ்சரிக்கும் ஓராண்டு காலம் முழுவதும் குடும்பத்தில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கை, செல்வாக்கை உண்டாக்குவார்.

பொதுப்பலன்
கும்ப சனி சஞ்சார காலத்தில் பொருளாதார நிலை மேம்படும். சேமிப்பு உயரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கியம் மேம்படும்.

தொழில்
தொழிலில் இருந்த தடைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். லாபம் அதிகரிக்கும். இயந்திரம், எலெக்ட்ரானிக் தொழில்கள் முன்னேற்றம் அடையும்.

பணியாளர்கள்
உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும். ஊதியம் உயரும். பதவி உயர்வு உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும்.

பெண்கள்
வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பளிப்பர். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமண வாழ்வு அமையும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு உண்டாகும்.

கல்வி
கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை உங்களை உயர்வடையச் செய்யும்.

உடல்நிலை
உங்களை அச்சுறுத்தி வந்த நோய்கள் மருத்துவத்தால் விலகும். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் கட்டுக்குள் வரும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். புதிய பொருட்களின் சேர்க்கையுடன் வாகன, சொத்து சேர்க்கையும் உண்டாகும்.

பரிகாரம்

சனிதோறும் சனீஸ்வரரை வழிபட்டால் வாழ்வு வளமாகும்.


பரணி; பணமழை கொட்டும்

உங்கள் ராசிக்கு தொழில், லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான் இதுவரை தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்த நிலையில் டிச 20, 2023 முதல் லாப ஸ்தானமான 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நன்மை அதிகரிக்கும். பணவரவு உண்டாகும். உயர்ந்த பதவிகள் இனி உங்களைத் தேடி வரப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கி உங்கள் நிலையை உயர்த்தப் போகிறது.

களத்திரம், கலை, அதிர்ஷ்டக்காரகன் என கூறப்படும் சுக்கிரன்,  பராக்கிரமக்காரகன் எனப்படும் செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பணமழை கொட்டும். பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். செல்வம், செல்வாக்கு, புதிய பொறுப்பு என நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். புதிய வாகனம், வெளிநாடு செல்லும் யோகம், திருமணம், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை, தகுதிக்கேற்ற வேலை, திரைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள், தொழிலில் முன்னேற்றம், புதிய தொழில் தொடங்கி லாபம் காணும் நிலை, எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றி என அதிர்ஷ்டமான காலமாக அமையும்.

அதிர்ஷ்ட காலம்
அவிட்டம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலமான டிச 20, 2023 -  பிப்.15, 2024 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான  மார்ச் 29, 2025 -  ஜூலை 2, 2025 வரையிலும்,  நவம்பர் 17, 2025 - மார்ச் 6. 2026 வரையிலும் உங்களுக்கு அதிர்ஷ்டங்களை உண்டாக்குவார். வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை, வாகன யோகம் என விரும்பியவற்றை எல்லாம் அடைவீர்கள்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் கேதுவால் உங்கள் வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். ஏப். 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட வருவாய் வந்து சேரும். வெளிநாட்டுத் தொடர்புகள், முயற்சிகள்  வெற்றியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். பொன் பொருள் சேர்க்கையுடன் புதிய வாகனச் சேர்க்கையும் உண்டாகும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30, 2024 வரை உங்கள் ஜென்ம ராசியிலும், மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை 2 ம் வீட்டிலும், மே 14, 2025 முதல் 3 ம் வீட்டிலும் குருபகவான் சஞ்சரிப்பார். இதில் 2 ம் வீட்டில் சஞ்சரிக்கும் ஓராண்டு காலம் முழுவதும்  யோகபலன்களை வாரி வழங்குவார். பொருளாதாரத் தடைகள் விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். வருமானம் பலவழியிலும் உண்டாகும். புதிய முயற்சி வெற்றியாகும்.

பொதுப் பலன்
வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் திறம்பட செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். வெளிநாடு செல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். ஆன்மிகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். பணப்பற்றாக்குறை விலகும். கடன் அடைபடும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும்.  வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும்.

தொழில்
செய்யும் தொழில் லாபத்தை நோக்கிச் செல்லும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதியும் சலுகைகளும் கிடைக்கும். வாகனத் தொழில், ஸ்பேர் பார்ட்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் தொழில்களில் லாபம் அதிகரிக்கும். திரையுலகினர், சின்னத்திரையினர், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் முன்னேற்றம் காண்பர்.

பணியாளர்கள்
உழைப்பாளர்களின் நிலை உயரும். பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு ஏற்படும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதிக்குரிய பணி கிடைக்கும். உங்கள் ஆலோசனையை நிர்வாகத்தினர் ஏற்பர்.

பெண்கள்
கல்வியில் உயர்வு உண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். சிலர் சுயதொழில் தொடங்கி வெற்றி பெறுவர். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் மீதான அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில்  மதிப்பு உயரும்.

கல்வி
மாணவர்களுக்கு கல்வியின் மீதான அக்கறை அதிகரிக்கும். சிலர் மேற் படிப்பிற்காக வெளிநாடு செல்வீர்கள். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பமான பாடத்தில் இடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையால் கூடுதல் நன்மை காண்பீர்கள்.

உடல்நிலை
தொற்று நோய்கள், பரம்பரை நோய்கள் என்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் உண்டாகும். சரியான மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்று குணமடைவீர்கள். படுக்கையில் இருந்து மருத்துவம் பெற்று வந்தவர்களும் இனி எழுந்து நடந்திடக் கூடிய நிலை உண்டாகும்.

குடும்பம்
குடும்ப உறவுகளிடம் இருந்த சங்கடம் விலகும். மூத்த சகோதரர்களால் உங்கள் எண்ணம் நிறைவேறும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவர். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடப்பர்.  சிலர் புதிய வீட்டில் குடியேற வாய்ப்புண்டு.

பரிகாரம்
துர்கை வழிபாடு நன்மையளிக்கும். வாழ்க்கையை வளமாக்கும்.


கார்த்திகை; முயற்சி வெற்றியாகும்

ஆன்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பூமிக்காரகனான செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு மனக்காரகனான சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திர நாதனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை முழுமையாக வழங்கிடக் கூடியவராகிறார்.

கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு சனி லாப ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி 11ம் வீட்டில் லாபம், யோகத்தை வழங்குபவராகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 10ம் வீட்டில் தொழில், உத்தியோகத்தில் உழைப்பை அதிகரித்திடக்கூடிய நிலையை உண்டாக்குபவராகவும் இருக்கிறார்.


அதிர்ஷ்ட காலம்
சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 -  ஜூன் 19, 2024 வரையிலும் மற்றும்  நவ.4, 2024 - பிப். 27, 2025 வரையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் யோகப்பலன் வழங்கிடுவார். தொழில், உத்தியோகத்தில் விருப்பம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். 2,3,4ம் பாதத்தினருக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பார். வழக்கமான செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். 2,3,4ம் பாதத்தினருக்கு ராகுவால் வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். ஏப்.26, 2025 முதல் ராகு கும்பத்திலும் கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் 1ம் பாதத்தினருக்கு ராகுவால் வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். முயற்சி வெற்றி பெறும்.  

குரு சஞ்சாரம்
ஏப்.30, 2024 வரை 1ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 12ம் இடத்திலும்,  மே1, 2024 - மே 13, 2025 வரை முதல் பாதத்தினருக்கு 2ம் வீட்டிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், மே 14, 2025 முதல் 1ம் பாதத்தினருக்கு 3ம் வீட்டிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டிலும் குருபகவான் சஞ்சரிக்கிறார்.  1ம் பாதத்தினருக்கு 2024 மே முதல் ஓராண்டுக்கு பொருளாதார முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். முயற்சிகளில் வெற்றி வழங்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 2025 முதல் யோகத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை வழங்குவார். சமூகத்தில் செல்வாக்கை உயர்த்துவார்.

பொதுப்பலன்
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அறிவாற்றல் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வரும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்றத்தை அடைவீர்கள். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் முயற்சி வெற்றியாகும். பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

தொழில்
கார்த்திகை முதல் பாதத்தினருக்கு லாபச் சனியாலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவாலும்  எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். புதிய முயற்சிகள்  வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும். இண்டஸ்ட்ரியல், ஹார்டுவேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் வணிகம், சினிமாத்துறையினர் வளர்ச்சி காண்பர். என்றாலும் முயற்சி அதிகமாக தேவைப்படும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

பணியாளர்கள்
கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு உண்டாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு  மறைமுக எதிர்ப்பு உண்டாகும். வழக்கு, விசாரணை என்ற நிலையும் சிலருக்கு உண்டாகும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் சிரமம் குறையும்.

பெண்கள்
சுயதொழில் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு உயரும். சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

கல்வி
ஆசிரியர்களின் ஆலோசனை வெற்றிக்கு வழிவகுக்கும். பொதுத்தேர்வு எழுதுபவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும்.

உடல்நிலை
நீண்ட நாளாக இருந்த நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடக்கூடிய அளவிற்கு உங்கள் உடல்நிலை அமைந்திருக்கும்.

குடும்பம்
திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.

பரிகாரம்
அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வு வளமாகும்.
..................

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை) »
temple news
கார்த்திகை; முயற்சி வெற்றியாகும்ஆன்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்; தொட்டதெல்லாம் வெற்றிசகோதர, தைரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
புனர்பூசம்;தொழிலில் முன்னேற்றம்தன, புத்திர, ஞானகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
மகம்; உடல்நலனில் கவனம் ஞான மோட்சக் காரகனான கேது பகவான், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
உத்திரம்; நல்ல நேரம் வந்தாச்சுஆத்மகாரகன் என்று கூறப்படும் சூரியபகவான் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar