Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026 கடகம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026 கடகம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை)
மிதுனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026
எழுத்தின் அளவு:
மிதுனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026

பதிவு செய்த நாள்

11 டிச
2023
11:12

மிருகசீரிடம்; தொட்டதெல்லாம் வெற்றி

சகோதர, தைரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மனக்காரகனான சந்திரன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திர நாதனுக்கு சனி பகைவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை கர்ம வினைக்கேற்ப வழங்கிடக் கூடியவராகிறார்.

மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு சனி ஜீவன ஸ்தானத்திலும் 3,4 ம் பாதத்தினருக்கு பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி 10ம் வீட்டிற்குரிய தொழில், உத்தியோகம் போன்றவற்றில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். உழைப்பினையும், முயற்சிகளையும் அதிகரிப்பார். உங்களை வேகமாக செயல்பட வைப்பார். உழைப்பிற்கேற்ற லாபத்தை வழங்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அனைத்திலும் யோகத்தை அளிப்பார். செல்வாக்கை அதிகரிப்பார். எதிர்பார்த்த அனுகூலங்களை உண்டாக்குவார். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு அடைய வைப்பார். சங்கடங்களிலிருந்து முழுமையாக உங்களை விடுபட வைத்து முன்னேற்றம் அடைய வைப்பார். சமூகத்தில் உங்கள் நிலையை உயர வைப்பார். தொட்டதெல்லாம் வெற்றியென்ற நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16,2024 -  ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4,2024 - பிப் 27, 2025 வரையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன்களை அள்ளி வழங்குவார். யோகத்தையும் போகத்தையும் அதிகரிப்பார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் தருவார். வருவாயை அதிகரிப்பார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் அதற்கு முன்பிருந்த சங்கடங்களை அகற்றி வைப்பார். நினைத்ததை நினைத்தபடி முடிக்கும் நிலையை உருவாக்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில்  பிறந்தவர்களுக்கு ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். திரைத் துறையினருக்கு எதிர்ப்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். பணம் பல வழிகளிலும் வரும். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும் கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலாக செயல்பட்டு இழந்த சொத்து, செல்வாக்கை அடையும் நிலை உண்டாகும். நீண்டநாள் கனவு நிறைவேறும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய குருவாகவும், மே 14, 2025 முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தன குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும் சஞ்சரிப்பார்.  3,4 ம் பாதத்தினருக்கு ஏப் 30, 2024 வரை அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்குவார். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 1,2 ம் பாதத்தினருக்கு மே 14, 2025 முதல் பண வரவை அதிகரிப்பார். உத்தியோகத்தில் உயர்வு, தொழிலில் முன்னேற்றம் தருவார். அந்தஸ்தையும் செல்வாக்கையும் அதிகரிப்பார்.

பொதுப்பலன்
திட்டமிட்டு செயல்பட்டு அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். வியாபாரம் விருத்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் இனி லாபத்தில் செல்லும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சிலர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நிதியுதவி செய்வீர்கள். ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தையின் ஆலோசனையை ஏற்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். கலைத்துறையினர் செல்வாக்குடன் திகழ்வர்.

தொழில்
மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ராகுவாலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்கிய சனியாலும் உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்பும் விரும்பிய இடத்திற்கு இட மாற்றமும் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோரின் விருப்பம் நிறைவேறும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். தொழிற்சாலை, ஸ்பேர் பார்ட்ஸ், ஆசிரியர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்வோர் வளர்ச்சி அடைவார்கள்.

பணியாளர்கள்
உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வுடன் பொறுப்பும் அதிகரிக்கும். மேலதிகாரிகள், முதலாளிகள் ஆதரவு கிடைக்கும்.

பெண்கள்
குடும்பத்தினரை அனுசரித்து விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு நல்ல முடிவு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு திறமைக்கேற்ப வேலை அமையும்.

கல்வி
பொதுத் தேர்வில் பங்கேற்போர் ஆசிரியர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது அவசியம். விளையாட்டு போக்கை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு.

உடல்நிலை
உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். விபத்தால் நீண்டநாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் தோன்றும். பரம்பரை நோய், தொற்று நோய் இருந்து விடுதலை பெறுவீர்கள்.

குடும்பம்
வருமானம் அதிகரிக்கும் என்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். பழைய கடன் அடைபடும். நினைத்ததை முடித்து ஆதாயம் அடைவீர்கள். காரியத்தடை நீங்கும். தொட்டது பொன்னாகும்.  சிலருக்கு புதிய வீடு, வாகனம் அமையும்.

பரிகாரம்

துர்க்கை, விநாயகர் வழிபாடு உங்கள் வாழ்வை வளமாக்கும்.


திருவாதிரை; யோகமான காலம்


வித்யாகாரகன் என போற்றப்படும் புதன் மற்றும் போககாரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு டிச.20, 2023 முதல் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கப் போகிறார் சனி பகவான்.

உங்கள் ராசிநாதன் புதனுக்கு சனி நட்பிற்குரியவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவரான சனி 9ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகம், தொழிலில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். அரசியலில் மதிப்பு உயரும். ஆன்மிக சேவைக்கு நிதியுதவி செய்வதுடன் அதில் பங்கேற்கவும் செய்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வேலை தேடும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் விருப்பம் நிறைவேறும். சிலர் தங்கள் ரசனைக்கேற்ப புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். களவு போன பொருட்கள் கிடைக்கும். செல்வாக்கு உயரும். எதிர்ப்பார்த்த வருமானம் உண்டாகும். இக்காலம் உங்களுக்கு யோமான காலமாக இருக்கும்.


அதிர்ஷ்ட காலம்
அவிட்டம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலமான டிச.20, 2023 - பிப் 15, 2024 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 -  ஜூலை 2, 2025 வரையிலும், நவ 17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும் தொழிலில் இருந்த தடைகள் அகலும். பணவரவு அதிகரிக்கும். பகைவர் தொல்லை மறையும். உறவினர், நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். சிலர் தந்தையின் தொழிலை மேற்கொண்டு லாபம் காண்பர்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில், வேலைப்பளு அதிகரிக்கும். குழப்பம் மேலோங்கும். தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி தோன்றும். உடல் நிலையிலும், வசதி வாய்ப்பிலும் பின்னடைவு ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும்.
ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும் கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் முன்னேற்றம்  உண்டாகும். கேட்ட இடத்திலிருந்து உதவி தேடி வரும். தொழிலில் முயற்சியும் ஆர்வமும் அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகள் நீங்கும். வணிகத்தில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் நிலை சிலருக்கு ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு தகுந்த வேலை அமையும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்வு வளமடையும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். மே 1, 2024 - மே 13, 2025 காலத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், உடல்நிலையில் சங்கடம் விலகும். மனதில் இருந்த பயம் விலகும். அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த சந்தோஷத்தை அடைவீர்கள். மே 14, 2025 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் எண்ணங்கள் நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும்.  சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உயர்கல்வி எண்ணம் நிறைவேறும். இறையருளும் தந்தையின் வழிகாட்டுதலும் உங்களை உயர்த்தும்.

பொதுப்பலன்
சனி பகவான் உங்கள் பாக்கியாதிபதி என்பதால் மேற்கொள்ளும் முயற்சி யாவும் வெற்றியாகும். செயல்கள் திட்டமிட்டபடி நடந்தேறும். வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்பார்த்த வருமானம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். நவீன உபகரணம், புதிய வாகனம் வாங்கும் நிலை ஏற்படும்.

தொழில்
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வாகனம், இயந்திரம், பதிப்பகம், தொலைக்காட்சி, சினிமா, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் வளர்ச்சி பெறும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் குறையும்.  ஊதிய உயர்வு, பதவி உயர்வு என எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசுப் பணியாளர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவதுடன் விரும்பிய இடமாற்றத்தை அடைவீர்கள். புதிய பொறுப்பு உண்டாகும்.

பெண்கள்
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். கணவருடன் இருந்த சங்கடம் நீங்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் எண்ணம் நிறைவேறும். அரசுப்பணிக்கு முயற்சித்தவர்களுக்கு வெற்றி உண்டாகும். சுயதொழிலில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.

கல்வி
பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர் படிப்பில் அக்கறை செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பதால் உங்கள் கனவு நிறைவேறும். விரும்பிய கல்லுாரியில் மேற்கல்விக்கு இடம் கிடைக்கும்.

உடல்நிலை
முன்பிருந்த பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். இனம்புரியாத நோய்களால் அவதிப்பட்ட நிலை மாறும்.  சிகிச்சையால் குணம் பெறுவதுடன் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

குடும்பம்
எதிர்பார்த்த வருமானத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது என பலவித முன்னேற்றம் தோன்றும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் விலகி சொத்து உங்கள் கைக்கு வந்து சேரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.


பரிகாரம்; பிரத்தியங்கிராவை வழிபடுவதால் வாழ்வில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.


புனர்பூசம்; தன, புத்திர, ஞானகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திர நாதனுக்கு சனி நட்பானவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப வழங்கக் கூடியவராகிறார்.

புனர்பூசம் 1,2,3 ம்  பாதத்தினருக்கு சனி பாக்கிய ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி 9 ம் வீட்டிற்குரிய நற்பலன்களை வழங்குவார். இதுவரை இருந்த பாதிப்புகள் எல்லாம் விலகும். விரும்பிய யாவும் இனி கைக்கு வந்து சேரும். உங்கள் தகுதிக்கேற்ற பொறுப்புகள், பணியில் பதவி உயர்வு போன்றவை ஏற்படும். மற்றவர்களால் முடியாதவற்றை எல்லாம் முடித்துக்காட்டும் வல்லமை உண்டாகும். தெய்வ சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிக்கேற்ற பலன்களை வழங்குவார். வாகனப் பயணத்தில் சங்கடத்தை ஏற்படுத்துவார். பணியாளர்களுக்கு விரும்பாத இடமாற்றத்தை ஏற்படுத்துவார். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வைத்து அதனால் பிரச்னைகளை உருவாக்குவார். இதுவரை இருந்த பெயர், புகழ், செல்வாக்கில் இறங்கு முகத்தை உண்டாக்குவார்.

அதிர்ஷ்ட காலம்
அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலமான டிச 20, 2023 - பிப் 15, 2024 வரையிலும், சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 மற்றும் நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன்களை வழங்குவார். தொட்டதெல்லாம் வெற்றி, முயற்சியில் லாபம் உண்டாகும். விருப்பங்கள் நிறைவேறும். 4 ம் பாதத்தினருக்கு அஸ்தமனம், வக்கிரம காலங்களில் நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பார். வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3 ம் பாதத்தினருக்கு விருப்பங்கள் நிறைவேறும். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். சகோதரர்கள், பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வெற்றி காண்பீர்கள்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 1,2,3 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 1,2,3 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் 1,2,3 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 4 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானத்திலும் குருபகவான் சஞ்சரிக்கிறார். 1,2,3 ம் பாதத்தினருக்கு ஏப் 30, 2024 வரை பணவரவை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். 4 ம் பாதத்தினருக்கு மே 1, 2024 - மே 13, 2025 காலத்தில் அபரிமிதமான யோகத்தை உண்டாக்குவார். தொழில், குடும்பம், உத்தியோகம் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் தருவார்.  மே 13, 2025 முதல் 1,2,3 ம் பாதத்தினருக்கு தன் பார்வை மூலம் குடும்பத்தில் சுபிட்சத்தையும், நட்புகளால் நன்மைகளையும், திருமண வயதினருக்கு திருமண யோகத்தை உண்டாக்குவார்.

பொதுப்பலன்
இந்த சனிப் பெயர்ச்சியால் இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சிகள் வெற்றியாகும். கடன்களால் ஏற்பட்ட அவமானம் மறையும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். அரசு ஊழியர்களின் செல்வாக்கு உயரும். செயல்கள் வெற்றியாகும். துணிச்சலுடன் செயல்பட்டு இலக்கை அடைவீர்கள்.

தொழில்
மருத்துவம், கல்வி, ஏற்றுமதி, இறக்குமதி, சினிமா, சின்னத்திரை, இயந்திரத் தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் தொழில்கள் வளர்ச்சி பெறும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் பெறும் காலமாக அமையும்.

பணியாளர்கள்
திறமைக்கு மதிப்பில்லை, என்னதான் உழைத்தாலும் உயர்வில்லை என்று வருத்தப்பட்ட நிலை மாறும். இனி உங்கள் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். கலைஞர்கள், ஆன்மிகப் பேச்சாளர்கள், கல்வியாளர்களின் நிலை உயரும்.

பெண்கள்
சுய தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் விலகும். கணவர் மற்றும் குடும்பத்தினரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை அமையும்.

கல்வி
கல்வியில் அக்கறை கொண்ட உங்களுக்கு இக்காலத்தில் ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும். உயர்கல்வி கனவு நிறைவேறும். போட்டித் தேர்வில் பங்கேற்பவர்கள் மற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

உடல்நிலை
இதற்கு முன்பிருந்த பாதிப்பு விலகும். விபத்து, பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை காரணமாக எழுந்து நடமாடத் தொடங்குவர். சிலருக்கு மூச்சுத் திணறல், நரம்பு பிரச்னை ஏற்பட்டு சரியாகும்.

குடும்பம்
குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள். புதிய வாகனம், வீடு என நீண்டநாள் கனவு நிறைவேறும். தந்தையின் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உறவினர் வருகை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்; நரசிம்மரை வணங்க வாழ்வு செழிக்கும். சங்கடங்கள் விலகும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை) »
temple news
அசுவினி; அதிர்ஷ்ட நேரம் வந்தாச்சுஉங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் இதுவரை சஞ்சரித்த சனி ... மேலும்
 
temple news
கார்த்திகை; முயற்சி வெற்றியாகும்ஆன்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்;தொழிலில் முன்னேற்றம்தன, புத்திர, ஞானகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
மகம்; உடல்நலனில் கவனம் ஞான மோட்சக் காரகனான கேது பகவான், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
உத்திரம்; நல்ல நேரம் வந்தாச்சுஆத்மகாரகன் என்று கூறப்படும் சூரியபகவான் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar