Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026 சிம்மம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026 சிம்மம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை)
கடகம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026
எழுத்தின் அளவு:
கடகம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023 - 2026

பதிவு செய்த நாள்

11 டிச
2023
11:12

புனர்பூசம்;தொழிலில் முன்னேற்றம்

தன, புத்திர, ஞானகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசி நாதனாகவும் உள்ளனர். உங்கள் நட்சத்திர நாதனுக்கு சனி நட்பானவர் என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப வழங்கக் கூடியவராகிறார்.

புனர்பூசம் 1,2,3 ம்  பாதத்தினருக்கு சனி பாக்கிய ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி 9 ம் வீட்டிற்குரிய நற்பலன்களை வழங்குவார். இதுவரை இருந்த பாதிப்புகள் எல்லாம் விலகும். விரும்பிய யாவும் இனி கைக்கு வந்து சேரும். உங்கள் தகுதிக்கேற்ற பொறுப்புகள், பணியில் பதவி உயர்வு போன்றவை ஏற்படும். மற்றவர்களால் முடியாதவற்றை எல்லாம் முடித்துக்காட்டும் வல்லமை உண்டாகும். தெய்வ சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிக்கேற்ற பலன்களை வழங்குவார். வாகனப் பயணத்தில் சங்கடத்தை ஏற்படுத்துவார். பணியாளர்களுக்கு விரும்பாத இடமாற்றத்தை ஏற்படுத்துவார். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வைத்து அதனால் பிரச்னைகளை உருவாக்குவார். இதுவரை இருந்த பெயர், புகழ், செல்வாக்கில் இறங்கு முகத்தை உண்டாக்குவார்.

அதிர்ஷ்ட காலம்
அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலமான டிச 20, 2023 - பிப் 15, 2024 வரையிலும், சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 மற்றும் நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன்களை வழங்குவார். தொட்டதெல்லாம் வெற்றி, முயற்சியில் லாபம் உண்டாகும். விருப்பங்கள் நிறைவேறும். 4 ம் பாதத்தினருக்கு அஸ்தமனம், வக்கிரம காலங்களில் நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பார். வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3 ம் பாதத்தினருக்கு விருப்பங்கள் நிறைவேறும். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். சகோதரர்கள், பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வெற்றி காண்பீர்கள்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 1,2,3 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 1,2,3 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானத்திலும், 4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் 1,2,3 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 4 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானத்திலும் குருபகவான் சஞ்சரிக்கிறார். 1,2,3 ம் பாதத்தினருக்கு ஏப் 30, 2024 வரை பணவரவை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். 4 ம் பாதத்தினருக்கு மே 1, 2024 - மே 13, 2025 காலத்தில் அபரிமிதமான யோகத்தை உண்டாக்குவார். தொழில், குடும்பம், உத்தியோகம் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் தருவார்.  மே 13, 2025 முதல் 1,2,3 ம் பாதத்தினருக்கு தன் பார்வை மூலம் குடும்பத்தில் சுபிட்சத்தையும், நட்புகளால் நன்மைகளையும், திருமண வயதினருக்கு திருமண யோகத்தை உண்டாக்குவார்.

பொதுப்பலன்
இந்த சனிப் பெயர்ச்சியால் இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சிகள் வெற்றியாகும். கடன்களால் ஏற்பட்ட அவமானம் மறையும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். அரசு ஊழியர்களின் செல்வாக்கு உயரும். செயல்கள் வெற்றியாகும். துணிச்சலுடன் செயல்பட்டு இலக்கை அடைவீர்கள்.

தொழில்
மருத்துவம், கல்வி, ஏற்றுமதி, இறக்குமதி, சினிமா, சின்னத்திரை, இயந்திரத் தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் தொழில்கள் வளர்ச்சி பெறும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் பெறும் காலமாக அமையும்.

பணியாளர்கள்
திறமைக்கு மதிப்பில்லை, என்னதான் உழைத்தாலும் உயர்வில்லை என்று வருத்தப்பட்ட நிலை மாறும். இனி உங்கள் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். கலைஞர்கள், ஆன்மிகப் பேச்சாளர்கள், கல்வியாளர்களின் நிலை உயரும்.

பெண்கள்
சுய தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் விலகும். கணவர் மற்றும் குடும்பத்தினரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை அமையும்.

கல்வி
கல்வியில் அக்கறை கொண்ட உங்களுக்கு இக்காலத்தில் ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும். உயர்கல்வி கனவு நிறைவேறும். போட்டித் தேர்வில் பங்கேற்பவர்கள் மற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

உடல்நிலை
இதற்கு முன்பிருந்த பாதிப்பு விலகும். விபத்து, பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை காரணமாக எழுந்து நடமாடத் தொடங்குவர். சிலருக்கு மூச்சுத் திணறல், நரம்பு பிரச்னை ஏற்பட்டு சரியாகும்.

குடும்பம்
குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள். புதிய வாகனம், வீடு என நீண்டநாள் கனவு நிறைவேறும். தந்தையின் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உறவினர் வருகை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்

நரசிம்மரை வணங்க வாழ்வு செழிக்கும். சங்கடங்கள் விலகும்.


பூசம்; விழிப்புணர்வு அவசியம்

ஆயுள்காரகன், தொழில்காரகன் என்று கூறப்படும் சனிபகவான் மற்றும் மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு டிச.20, 2023 முதல் ஆயுள், அஷ்டம ஸ்தானமான 8ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கப் போகிறார் சனிபகவான்.

 உங்கள் நட்சத்திர நாதன், ராசி நாதன் சந்திரனுக்குப் பகையானவர் என்றாலும் தான் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப வழங்குபவர் சனிபகவான். 8 ம்  ஸ்தானத்தில் அவர் சஞ்சரிக்கும் காலத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கவுரவ குறைவு ஏற்படும். தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். வருமானத்தில் தடைகள் ஏற்படும். பணத்தேவை அதிகரிக்கும். அனைத்திலும் தடைகள், தாமதம் என்ற நிலை உருவாகும். சிலருக்கு  வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். வீண் அலைச்சல், பண விரயம் ஏற்படும். தம்பதியரிடையே கருத்து வேறுபாடு, உறவில் விரிசல் தோன்றும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். முயற்சிகளில் இழுபறி உண்டாகும் என்பது பொதுவிதி. ஆனாலும் உங்கள் நட்சத்திர நாதனின் சொந்த வீடான கும்பத்தில் சஞ்சரிக்க இருப்பதால் இத்தகைய நிலைகளை அப்படியே உங்களுக்கு உண்டாக்க மாட்டார்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 வரையிலும், நவ, 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும்,  பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 - ஜூலை 2, 2025 வரையிலும், நவ 17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும், மற்றும் அஸ்தமனம் வக்கிர காலங்களிலும் அஷ்டம சனியின் பாதிப்பு இருக்காது. திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும். பிரச்னைகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபட முயல்வீர்கள். மேற்சொன்ன காலங்களில் எதிர்பார்க்காத அதிர்ஷ்டப் பலன்களை அடைவீர்கள்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில், இதுநாள் வரை இருந்த துன்பங்கள் காணாமல் போகும். தேவையான பணம் வரும். உடல் உபாதைகள் விலகும். தொழிலில் இருந்த தடைகள் மறையும். வேலைத் தேடியவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் போது உடல் பாதிப்பு ஏற்படும். வேலையில் சங்கடம் தோன்றும். பணவரவில் தடையுண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் குழப்பம், பிரச்னை அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் பணியில் நெருக்கடி தோன்றும். விரும்பாத இடமாற்றம், வழக்கு என சங்கடங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் தடைகளும், பொருளாதார நெருக்கடி தோன்றும். மே 1, 2024 - மே 13, 2025 காலத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கை மீண்டும் அடைவீர்கள். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம். எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். மே 14, 2025 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் என்றாலும் அவருடைய பார்வைகளால் நிம்மதியான நிலையும், எதிர்ப்பு இல்லாத வாழ்க்கையும், உடல்நிலையில் முன்னேற்றமும் உண்டாகும்.

பொதுப்பலன்
அஷ்டம சனி என்றாலும் ஏப் 26, 2025 வரை கேதுவின் அனுக்கிரகம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கும். நெருக்கடிகள் மறையும். மே 1, 2024 - மே 13, 2025 வரையிலும் லாப ஸ்தான குருவால் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை உயரும். அனைத்திலும் வெற்றி உண்டாகும். மே13, 2025 க்குப் பின் செயல்களில் நெருக்கடி, வழக்கு, வீண் செலவுகள், தொழிலில் வருமானமின்மை, வரவை விட செலவு அதிகம் என்ற நிலை உண்டாகும். சிலருக்கு வாகனப்பயணத்தில் சங்கடம் ஏற்படலாம்.  இக்காலத்தில் பிறருக்கு ஜாமின் கையெழுத்திடுவதாலும், பத்திரங்களை முழுமையாக படித்துப் பார்க்காமல் கையெழுத்திடுவதாலும் சட்ட சிக்கல்களுக்கு ஆளாக வேண்டி வரும்.

தொழில்
தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். புதிய முதலீடு லாபம் தரும். போட்டியாளர்கள் உங்கள் பாதையிலிருந்து விலகுவர். இயந்திரத் தொழிலில் லாபம் உண்டாகும்.  விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆதாயம் தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் நெருக்கடிகள் தோன்றும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். செய்யாத தவறுக்கு பொறுப்பாக வேண்டிய நிலை ஏற்படும். மேலதிகாரியை அனுசரித்துச் செல்வதும் உடன் பணிபுரிபவர்களின் ஆலோசனையை ஏற்பதும் நன்மையளிக்கும்.

பெண்கள்
குடும்பத்தில் சிறு பிரச்னைகள் வந்து செல்லும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் நன்மையுண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  உறவினர்களை விட்டு விலகி இருந்தால் பிரச்னைகள் மறையும். பணியிடங்களில் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும், விழிப்புணர்வுடன் செயல்படுவதும் நன்மை தரும்.

கல்வி
ஆசிரியர்களின் ஆலோசனையால் வளர்ச்சி காணலாம்.  கல்வியும், வேலையும் வாழ்வின் அடிப்படை என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பொதுத் தேர்வு, போட்டித் தேர்வில் உங்கள் கடின முயற்சி வெற்றி தரும்.

உடல்நிலை
பரம்பரை நோய்கள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு உஷ்ணம், தோல் தொடர்பான நோய்கள், மூட்டுவலி, இடுப்புவலி ஏற்படலாம். சிலருக்கு சிறுசிறு விபத்துகள் உண்டாகி சிகிக்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

குடும்பம்
பணி, தொழில் போன்றவற்றில் நெருக்கடிகளை சந்தித்தாலும் குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். புதிய இடம் வாங்குதல், வீடு கட்டி குடியேறுதல் என்ற உங்கள் கனவு நிறைவேறும். சிலர் விரும்பிய வாகனத்தை வாங்குவர். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம்; சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட நன்மை அதிகரிக்கும்.


ஆயில்யம்; வித்யாகாரகன் எனக் கூறப்படும் புதன் பகவான், மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு டிச.20, 2023 முதல் 8ம் இடமான ஆயுள், அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கப் போகிறார் சனிபகவான்.

இவர் உங்கள் ராசிநாதனுக்குப் பகையானவர் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப வழங்கக் கூடியவர். 8ம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உழைப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றையும் அலசி ஆராய்ந்து அதன் பிறகே ஒரு முடிவிற்கு வருவீர்கள். உங்கள் சாதுரியத்தால் நினைத்ததை சாதிக்கக்கூடிய நிலை உண்டாகும். சில சங்கடங்கள் வந்தாலும் அவற்றிலிருந்து மீண்டு வரக்கூடிய வல்லமை ஏற்படும். பண முதலீட்டை விட உங்கள் உழைப்பை நம்பி செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட காலம்
அவிட்டம் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலமான டிச.20, 2023 -  பிப்.15, 2024 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 -  ஜூலை 2, 2025 வரையிலும்,  நவ.17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும் மற்றும் அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் அஷ்டம சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். சிலர் வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். சொத்து சேர்க்கையும், பொறுப்புகளும் உண்டாகும்.

ராகு - கேது சஞ்சாரம்  
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழந்த பொருட்கள், செல்வாக்கை மீட்டெடுப்பீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். ஏப்.26, 2025 முதல் ராகு 8ம் இடத்திலும் கேது 2ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் எதிர்பாராத சங்கடம், நெருக்கடி தோன்றும். தொழில், வியாபாரத்தில் லாபம் என்பது கேள்விக்குறியாகும். குடும்பத்திலும் நிம்மதி இல்லாமல் போகும். உடல் நிலையில் சங்கடம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் உத்தியோகத்தில் சங்கடம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வருமானத்தில் நெருக்கடி தோன்றும். சிலருக்கு வேலையில் மெமோ வாங்க வேண்டிய நிலை ஏற்படும். மே 1, 2024  - மே 13, 2025 வரையிலும் 11ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் எல்லாவித சங்கடங்களும் விலக ஆரம்பிக்கும். செல்வாக்கை மீண்டும் அடைவீர்கள். அந்தஸ்து உயரும். பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் விசேஷங்கள், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், பணவரவு உண்டாகும். மே 14, 2025 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் பலவழியிலும் செலவு அதிகரிக்கும். என்றாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும்.

பொதுப்பலன்
அஷ்டம சனியின் காலம் என்றாலும் கேது பகவானின் சஞ்சாரமும், குரு பகவானின் அருளும் இக்காலத்தில் பெருமளவில் பாதுகாக்கும். அஷ்டம சனியின் தாக்கத்திலிருந்து உங்களுக்கு விடுதலை உண்டாகும். அரசுப் பணியாளர்களுக்கு உயர்பதவிக்குரிய வாய்ப்பு உண்டாகும். திட்டமிட்ட முயற்சிகள் வெற்றியாகும். வாழ்வில் இதுவரை இல்லாத அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். வழக்குகளில் சாதக நிலை ஏற்படும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

தொழில்
தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். இயந்திரம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், பப்ளிகேஷன்ஸ், ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, சினிமா, சின்னத்திரை போன்ற தொழில்கள் வளர்ச்சியடையும்.  

பணியாளர்கள்
கடந்த கால அனுபவத்தைக் கொண்டு சாதுர்யமாக செயல்படுவீர்கள். உங்கள் பிரச்னைகளை மேலிடத்தில் பக்குவமாக சொல்லி தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த பொறுப்பு, ஊதிய உயர்வு உண்டாகும். மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்பு அதிகரிக்கும்.

பெண்கள்
உயர்கல்விக்காக முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். சிலர் வெளிமாநிலம், வெளிநாடு என மேற்கல்விக்காக செல்வீர்கள். பணிபுரியும் பெண்கள் எதிர்பார்த்த சலுகைகளை அடைவீர்கள். சிலர் சுயதொழில் தொடங்குவர். அதில் உழைப்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

கல்வி
வித்யாகாரகனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களான நீங்கள் இயல்பாகவே கல்வியில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பீர்கள் என்றாலும், ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட்டால்  தேர்வில் வெற்றி உண்டாகும். எதிர்ப்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்புண்டாகும்.

உடல்நிலை
உடல் நிலையில் சின்னச் சின்ன சங்கடங்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் ஏற்படும்.  நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு, இதய பாதிப்பு சிலருக்கு ஏற்படலாம். பித்தம், மயக்கம், ஜலதோஷம்  சங்கடப்படுத்தும். அவற்றிலிருந்து சிகிச்சையால் நிவாரணம் கிடைக்கும்.

குடும்பம்
திட்டமிட்டு செயல்பட்டு குடும்பத்திலுள்ள சங்கடங்களை அகற்றுவீர்கள். தம்பதிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வசதியான வீட்டிற்கு குடிபுகும் நிலை சிலருக்கு ஏற்படும். நீண்ட நாளாக தடைப்பட்ட  சுபநிகழ்ச்சி நடந்தேறும். நவீன பொருட்கள், வாகனம் வாங்கும் நிலை உண்டாகும்.  சிலருக்கு வேலைக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

பரிகாரம்; திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரரை தரிசிக்க தடை விலகும். விருப்பம் நிறைவேறும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (20.12.2023 முதல் 6.3.2026 வரை) »
temple news
அசுவினி; அதிர்ஷ்ட நேரம் வந்தாச்சுஉங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில் இதுவரை சஞ்சரித்த சனி ... மேலும்
 
temple news
கார்த்திகை; முயற்சி வெற்றியாகும்ஆன்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்; தொட்டதெல்லாம் வெற்றிசகோதர, தைரியகாரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், ... மேலும்
 
temple news
மகம்; உடல்நலனில் கவனம் ஞான மோட்சக் காரகனான கேது பகவான், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
உத்திரம்; நல்ல நேரம் வந்தாச்சுஆத்மகாரகன் என்று கூறப்படும் சூரியபகவான் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar