Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025.. ... கன்னி : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 கன்னி : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
எழுத்தின் அளவு:
சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
01:04

மகம்: நிதானம் அவசியம்

ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு,
பிறக்கும் குரோதி வருடத்தில், குடும்ப ஸ்தானத்தில் கேது, ஆயுள் ஸ்தானத்தில் ராகு, சப்தம ஸ்தானத்தில் சனி, மே 1 முதல் ஜீவன ஸ்தானத்தில் குரு என்ற சஞ்சார நிலைகளால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். வேண்டாத நண்பர்களால் சங்கடம் உருவாகும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்கள் விலகும் நிலை உருவாகும். வாழ்க்கைத்துணையுடன் பிரச்னை, மனதில் குழப்பம் நீடிக்கும். செல்வாக்கிற்கு பாதிப்பு உண்டாகும்.

சனி சஞ்சாரம்
சனி சப்தம ஸ்தானத்தில் கண்டகச் சனியாக சஞ்சரிப்பதால் கூட்டுத் தொழிலில் நெருக்கடி ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற சச்சரவு உண்டாகும். உடல் நிலை பாதிப்பு ஏற்படும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.  ஜூன் 19 - நவ. 4 காலத்தில் வக்கிரம் அடைவதாலும், 2025, பிப். 27 - மார்ச். 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் தடைபட்ட செயல்கள் நடந்தேறும். முயற்சிகள் லாபமாகும். சங்கடம் விலகும். நினைப்பது நிறைவேறும். புதிய வாய்ப்பு உருவாகும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் சேரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வந்து சேரும்.

ராகு, கேது சஞ்சாரம்
அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், தன, குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால், மனதில் குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் சங்கடம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி உண்டாகும். தொழிலில் தடையும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலையும் உருவாகும். உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வேலையில் அலைச்சல், நிம்மதியற்ற நிலை ஏற்படும். செல்வாக்கிற்கு பாதகம் ஏற்படும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் எண்ணங்கள் நிறைவேறும். செல்வாக்கு உயரும். மே 1 முதல் 10 ம் இட குருவால் தொழிலில் நெருக்கடி ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்னைகள் தோன்றும். செல்வாக்கிற்கு பாதகம் உண்டாகும். பொருளாதாரத்தில் தடை ஏற்படும். அரசியல்வாதிகள் பின்னடைவு காண்பர். பதவி, பொறுப்புகளுக்கு சோதனை உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்
ராசிநாதனான சூரியன் மே 14 - ஜூலை 16, அக். 18 - நவ. 15, 2025, ஜன. 14 - பிப் 12 காலங்களில் 10,11,3,6 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி உண்டாகும்.

பொதுப்பலன்
ஏப். 30 வரை குரு சஞ்சாரத்தால் சங்கடங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும். மே 1 முதல் குரு ஜீவன ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதுடன், ராகு, கேது, சனியின் சஞ்சார நிலை சாதகமாக இல்லை என்பதால் மனதில் வீண் குழப்பம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தோன்றும். நட்புக்கிடையே கசப்பு உண்டாகும். செயல்களில் டென்ஷன் அதிகரிக்கும். வார்த்தைகளில் கோபம் வெளிப்படும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் ஏற்படும். உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். புதிய முயற்சிகளில் இழுபறி ஏற்படும் என்றாலும் சூரியன் 3,6,10,11 இடங்களில் சஞ்சரிக்கும் 120 நாட்களும், ஆக. 26 - அக். 22க்கு இடைப்பட்ட காலத்திலும், மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயாலும் இப்பலன்களில் மாறுதல் ஏற்படும். சங்கடம், நெருக்கடி உங்களை விட்டு விலகும்.

தொழில்
10ல் குரு சஞ்சரிப்பதால் தொழிலில் சங்கடம் தோன்றும் என்றாலும், மருத்துவம், கால்நடை, இயந்திரம், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மெடிக்கல், எக்ஸ்போர்ட் இம்போர்ட், ரியல் எஸ்டேட், திரைப்படம், டி.வி, ஜீவல்லரி, பேன்சி ஸ்டோர் போன்ற தொழில்களில் வளர்ச்சி ஏற்படும். உங்கள் முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் உழைப்பிற்குரிய மதிப்பு கிடைக்கும் என்றாலும் பத்தில் குரு பதவியைப் பறிப்பான் என்பதை மனதில் கொண்டு பொறுப்புடன் செயல்படுவது நல்லது. நிர்வாகம், அதிகாரிகள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். சிலருக்கு திசை, புத்தியின் காரணமாக பதவி உயர்வு, விரும்பிய இட மாற்றம் கிடைக்கும்.

பெண்கள்
எந்த செயலிலும் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் போகும். குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு தோன்றும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.  உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். சிலருக்கு சொத்து சேர்க்கை உண்டாகும்.

கல்வி
உங்கள் ராசியை விட்டு குருவின் பார்வை விலகுவதால் மாணவர்கள் தங்களின் பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதல், ஆலோசனையை ஏற்று நடப்பது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும்.

உடல்நிலை
ஆயுள் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும், சப்தம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதும் உடலில் எதிர்பாராத சங்கடத்தை ஏற்படுத்தும். ஆனால் ரோக ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் குணம் விரைவில் கிடைக்கும். வாகன பயணம், விஷ ஜந்து, மருந்து மாத்திரைகளால் பாதிப்பு ஏற்படலாம். சிலர் இனம்புரியாத நோய்க்கும் ஆளாகக் கூடும்.

குடும்பம்
நேரம், காலம், சூழ்நிலைகளை உணர்ந்து செயல்படுவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். வரவு, செலவில் கவனம் தேவை. தம்பதிக்குள் பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனடியாக அது முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் துர்கையை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.


பூரம்: செயலில் கவனம்

அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆத்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, குரோதி வருடத்தில் அஷ்டம ஸ்தான ராகு, தன ஸ்தான கேது, களத்திர ஸ்தான சனி, மே 1 முதல் ஜீவன ஸ்தான குரு இருப்பதால் எதிர்பார்க்கும் பலன்களில் பின்னடைவு ஏற்படும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு, பிரிவு என்ற நிலை சிலருக்கு ஏற்படும். அலைச்சல் அதிகரிப்பு. தீயோர் சேர்க்கை, அவப்பெயர், வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிப்பு, வெளியூரில் வாழும் நிலை, பண விரயம், வேலையில் பாதிப்பு உண்டாகும் என்பது பொது விதி. இருந்தாலும் சுய ஜாதகத்தில் கிரக அமைப்பு, திசை, புத்தி போன்றவற்றால் இதில் மாற்றமும் உண்டாகும்.

சனி சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் கண்டகச் சனி இருந்தாலும் ஜூன் 19 - நவ. 4 காலத்தில் வக்கிரகதி அடையும் போதும், 2025, பிப். 27 - மார்ச் 29 காலத்தில் அஸ்தமனம் அடையும்  நிலையிலும் நன்மையான பலன்கள் உண்டாகும். 7 ம் இட சனியின் பாதகமான பலன்கள் விலகும். நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு உங்கள் செயல்பாடு, முயற்சி யாவும் இருக்கும். விலகிய நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கூட்டுத்தொழிலில் இருந்த நெருக்கடி விலகும்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மறைவு ஸ்தானமான 8 ம் இடத்திலும், கேது குடும்ப ஸ்தானமான 2 ம் இடத்திலும் இருப்பதால் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். உடல் பாதிப்பு ஏற்படும். செல்வாக்கு குறையும்.  குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, மனதில் இனம் புரியாத சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகள் உருவாகும். பொருளாதார ரீதியாக நெருக்கடி அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் எதிர்பார்ப்பு நிறைவேறும். மே. 1 முதல் 10 ல் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி தோன்றும். பணத்தேவை அதிகரிக்கும். குருவின் பார்வைகளால் ஓரளவு நன்மை உண்டாகும். வழக்கு சாதகமாகும். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப நிகழ்வுகள் நடக்கும். புதிய இடம், மனை, பொன், பொருள் வாங்கும் நிலை உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்
மே 14 - ஜூலை 16, அக். 18 - நவ. 15, 2025, ஜன. 14 - பிப். 12 காலங்களில் சூரியன் ராசிக்கு  சுப இடங்களில் சஞ்சரிப்பதால் சங்கடங்கள் யாவும் விலகும், அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு கூடும். செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். அலுவலர்களுக்கு வேலை நீக்கம், விசாரணை என்ற நிலை மாறும். மீண்டும் செல்வாக்குடன் பழைய பணியில் தொடர்வீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். மனதில் தைரியம் கூடும்.

பொதுப்பலன்
குறைகள் தீரும். குலதெய்வ அருள் உண்டாகும். தனித்தன்மை வெளிப்படும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ப வருமானம் வரும். சிலர் குற்றச்சாட்டுக்கு ஆளானாலும் முடிவு சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தம் பெறுவர். உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும்.

தொழில்
பத்தாமிட குருவால் தொழிலில் நெருக்கடி உருவாகும். ஏழாமிட சனியால் கூட்டுத்தொழில் பிரச்னையில் முடியும். புதிய முதலீடு எதிர்பார்த்த லாபத்தை ஏற்படுத்தாமல் போகும். திரைப்படம், சின்னத்திரை, பேன்சி ஸ்டோர்ஸ், ஜவுளி, கவரிங், நகை, வாகனம், ஆடம்பர பொருள் வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும் என்றாலும் கவனமுடன் செயல்படுவது அவசியம். மறைமுக எதிர்ப்பு தோன்றும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். தனியார் நிறுவன பணியாளர்கள் சலுகைகள் பெறுவர்.

பெண்கள்
குடும்பம், தொழில், உத்தியோகத்தில்  இருந்த பிரச்னைகள் விலகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு உடல்நிலையில் ஏதாவது தொந்தரவு உண்டானபடி இருக்கும் என்றாலும் விரைவில் குணமடைவீர்கள். பிள்ளைகள் மீதான அக்கறை அதிகரிக்கும். உறவினர் மத்தியில்  செல்வாக்கு உயரும்.

கல்வி
பொதுத்தேர்வில் வெற்றி காண்பீர்கள். எதிர்கால வளர்ச்சி  குறித்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உங்கள் நிலைக்கேற்ப கல்லுாரி, பாடப்பிரிவை தேர்வு செய்வது நன்மையாகும்.

உடல்நிலை
அஷ்டம ராகுவும், சப்தம சனியும் போட்டி போட்டு உடல்நிலையில் பாதிப்பை  உண்டாக்குவர். மருத்துவச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு மறைமுக நோய், பரம்பரை நோய்கள் தோன்றி சங்கடப்படுத்தும் என்றாலும் சிகிச்சையால் அவை குணமாகும்.

குடும்பம்
பூர்வீக சொத்துகளில் இருந்த சங்கடம் விலகும். புதிய வாகனம், நவீன பொருட்கள் சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புதிய இடம் வாங்கி உங்கள் விருப்பப்படி வீடு கட்டி குடியேறுவீர்கள். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதால் அமைதி நிலைக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியை தினமும் மாலையில் வழிபடுவதால் வாழ்வு வளமாகும்


உத்திரம்: பணப்புழக்கம் கூடும்

ஆற்றல்காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 1 ம் பாதத்தில் (சிம்மம்) பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் (கன்னி) பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும். காரியங்களில் தடைகள், வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத்தில் சிரமம், உடல் நலனில் சங்கடம் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாவதுடன் இக்காலம் யோக காலமாகவும் இருக்கும்.  எதிர்பார்ப்பு நிறைவேறும். பணப்புழக்கம் கூடும். எடுத்த காரியத்தில் வெற்றி ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிர்ப்பு இல்லாமல் போகும். அபார ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், அஸ்தமன, வக்கிர நிலைகளில் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நன்மையான பலன் வழங்குவார். சங்கடம் விலகும். நெருக்கடி இல்லாமல் போகும். முயற்சி வெற்றி பெறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் யோகம் தருவார். நினைத்ததை அடையக் கூடிய நிலையை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். சமூகத்தில் செல்வாக்கை உயர்த்துவார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். எதிர்ப்பு இல்லாத வாழ்வைத் தருவார். அவரவர் கர்ம வினைக்கேற்ப நற்பலன் அளிப்பார்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும்,  கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். வரவு செலவில் திருப்தியற்ற நிலை உண்டாகும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 1 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடங்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். மே 1 முதல் இந்த நிலையில் மாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சங்கடம் அதிகரிக்கும். பணியில் நெருக்கடி தோன்றும்.  குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும் 2,3,4 ம் பாதத்தினருக்கு ஏப். 30 வரை அஷ்டம ஸ்தானத்தில்
சஞ்சரிக்கும் குருபகவான் முயற்சியில் தடையை ஏற்படுத்துவார்.
மே 1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியைப் பார்ப்பதால் சங்கடம் நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு அதிகரிக்கும். பணம், பதவி, பட்டம் என்ற நிலை உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சங்கடம் தீரும். பொன், பொருள், செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்வு வளமாகும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் மகிழ்ச்சி ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூலை 16, அக். 18 - நவ. 15, 2025 ஜன.14 -  பிப்.12 காலங்களிலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஆக. 16, நவ. 16 - டிச. 15, 2025, பிப். 13 - மார்ச் 14 காலங்களிலும் சூரியன் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிப்பார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் பலம் இழப்பர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வருமானம் அதிகரிக்கும்.

பொதுப்பலன்
1 ம் பாதத்தினருக்கு சூரியனால் 4 மாதம், செவ்வாயால் ஆக.26 - அக்.22 க்குரிய காலம் யோக காலமாக இருக்கும். சங்கடம் இல்லாமல் போகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு சனி, குரு  சஞ்சார நிலையால் மிகப் பெரிய யோகம் உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். முயற்சி எல்லாம் வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தொழிலில் இருந்த தடை விலகும். பொருளாதாரம் உயரும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

தொழில்
தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏற்றுமதி, இறக்குமதி, பங்கு வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல், மருத்துவம், பப்ளிகேஷன்ஸ், யூடியூப், விவசாயம், கல்வி நிறுவனங்கள், டிரான்ஸ்போர்ட் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், மருத்துவர், ஆசிரியர்கள், கதாசிரியர்கள் வளர்ச்சி காண்பர்.

பணியாளர்கள்
பணியும் இடத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். உங்கள் திறமை மதிக்கப்படும். எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். வேலையில் புதிய பொறுப்பு ஏற்படும். கூடுதல் மரியாதை உண்டாகும். அரசு ஊழியர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
உடல் பாதிப்பு நீங்கும். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். பகைவர்களும் உங்களைத் தேடி வருவர். முயற்சி யாவும் வெற்றியாகும். பொன், பொருள் சேரும். கணவர் உங்களைப் புரிந்து கொண்டு உங்கள் செயல்களுக்கு ஆதரவு புரிவார். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய மேற்படிப்பில் விரும்பிய கல்லுாரியில் சேர்வீர்கள். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் துறை மாணவர்கள் நன்கு படிப்பர். சிலருக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உடல்நிலை
ஆறாமிட சனி, குருவின் பார்வையால் உடல் பாதிப்புகள் விலகும். தொற்றுநோய், பரம்பரைநோய் போன்றவற்றால் அவதிப்பட்ட நிலை மாறும். நீண்ட நாள் நோயாளிகள் நோயின் தன்மையறிந்து சிகிச்சை பெற்று குணமடைவர்.

குடும்பம்
கடந்த கால நெருக்கடியில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும்.  தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். பணத்தட்டுப்பாடு தீரும். சிலர் வீடு கட்டி குடியேறுவீர்கள். சொந்த தொழில் புரிபவர்கள் லாபம் காண்பர். சிலருக்கு திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை அதிகரிக்கும்

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
உத்திரம்: பணப்புழக்கம் கூடும் ஆற்றல்காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 1 ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar