Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 துலாம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 துலாம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
கன்னி : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
எழுத்தின் அளவு:
கன்னி : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
01:04

உத்திரம்: பணப்புழக்கம் கூடும்

ஆற்றல்காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 1 ம் பாதத்தில் (சிம்மம்) பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் (கன்னி) பிறந்தவர்களுக்கு வித்யா காரகனான புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும். காரியங்களில் தடைகள், வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத்தில் சிரமம், உடல் நலனில் சங்கடம் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாவதுடன் இக்காலம் யோக காலமாகவும் இருக்கும்.  எதிர்பார்ப்பு நிறைவேறும். பணப்புழக்கம் கூடும். எடுத்த காரியத்தில் வெற்றி ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிர்ப்பு இல்லாமல் போகும். அபார ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், அஸ்தமன, வக்கிர நிலைகளில் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் நன்மையான பலன் வழங்குவார். சங்கடம் விலகும். நெருக்கடி இல்லாமல் போகும். முயற்சி வெற்றி பெறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் யோகம் தருவார். நினைத்ததை அடையக் கூடிய நிலையை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். சமூகத்தில் செல்வாக்கை உயர்த்துவார். வழக்குகளில் சாதகமான நிலையை ஏற்படுத்துவார். எதிர்ப்பு இல்லாத வாழ்வைத் தருவார். அவரவர் கர்ம வினைக்கேற்ப நற்பலன் அளிப்பார்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும்,  கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் வாழ்வில் தடுமாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். வரவு செலவில் திருப்தியற்ற நிலை உண்டாகும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 1 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடங்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். மே 1 முதல் இந்த நிலையில் மாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சங்கடம் அதிகரிக்கும். பணியில் நெருக்கடி தோன்றும்.  குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும் 2,3,4 ம் பாதத்தினருக்கு ஏப். 30 வரை அஷ்டம ஸ்தானத்தில்
சஞ்சரிக்கும் குருபகவான் முயற்சியில் தடையை ஏற்படுத்துவார்.
மே 1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியைப் பார்ப்பதால் சங்கடம் நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு அதிகரிக்கும். பணம், பதவி, பட்டம் என்ற நிலை உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சங்கடம் தீரும். பொன், பொருள், செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்வு வளமாகும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் மகிழ்ச்சி ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூலை 16, அக். 18 - நவ. 15, 2025 ஜன.14 -  பிப்.12 காலங்களிலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஆக. 16, நவ. 16 - டிச. 15, 2025, பிப். 13 - மார்ச் 14 காலங்களிலும் சூரியன் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிப்பார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் பலம் இழப்பர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வருமானம் அதிகரிக்கும்.

பொதுப்பலன்
1 ம் பாதத்தினருக்கு சூரியனால் 4 மாதம், செவ்வாயால் ஆக.26 - அக்.22 க்குரிய காலம் யோக காலமாக இருக்கும். சங்கடம் இல்லாமல் போகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு சனி, குரு  சஞ்சார நிலையால் மிகப் பெரிய யோகம் உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். முயற்சி எல்லாம் வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தொழிலில் இருந்த தடை விலகும். பொருளாதாரம் உயரும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

தொழில்
தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏற்றுமதி, இறக்குமதி, பங்கு வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெடிக்கல், மருத்துவம், பப்ளிகேஷன்ஸ், யூடியூப், விவசாயம், கல்வி நிறுவனங்கள், டிரான்ஸ்போர்ட் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், மருத்துவர், ஆசிரியர்கள், கதாசிரியர்கள் வளர்ச்சி காண்பர்.

பணியாளர்கள்
பணியும் இடத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். உங்கள் திறமை மதிக்கப்படும். எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். வேலையில் புதிய பொறுப்பு ஏற்படும். கூடுதல் மரியாதை உண்டாகும். அரசு ஊழியர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
உடல் பாதிப்பு நீங்கும். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். பகைவர்களும் உங்களைத் தேடி வருவர். முயற்சி யாவும் வெற்றியாகும். பொன், பொருள் சேரும். கணவர் உங்களைப் புரிந்து கொண்டு உங்கள் செயல்களுக்கு ஆதரவு புரிவார். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய மேற்படிப்பில் விரும்பிய கல்லுாரியில் சேர்வீர்கள். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் துறை மாணவர்கள் நன்கு படிப்பர். சிலருக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உடல்நிலை
ஆறாமிட சனி, குருவின் பார்வையால் உடல் பாதிப்புகள் விலகும். தொற்றுநோய், பரம்பரைநோய் போன்றவற்றால் அவதிப்பட்ட நிலை மாறும். நீண்ட நாள் நோயாளிகள் நோயின் தன்மையறிந்து சிகிச்சை பெற்று குணமடைவர்.

குடும்பம்
கடந்த கால நெருக்கடியில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும்.  தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். பணத்தட்டுப்பாடு தீரும். சிலர் வீடு கட்டி குடியேறுவீர்கள். சொந்த தொழில் புரிபவர்கள் லாபம் காண்பர். சிலருக்கு திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை அதிகரிக்கும்.


அஸ்தம்: டும் டும் ஒலிக்கும்

மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் குரோதி ஆண்டில் ஜென்ம ராசிக்குள் கேது இருந்தாலும், 6 ல் சனி சஞ்சரிக்கிறார். மே 1 முதல் குருபகவானும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால், சனி கொடுப்பதை எவர் தடுப்பார், குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதற்கேற்ப குரோதி ஆண்டில் சங்கடம் எல்லாம் விலகும். ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த செயல் எல்லாம் வெற்றியாகும். எதிரிகள் விலகுவர். பொருளாதார உயர்வும், காரியத்தில் அனுகூலம், தொழிலில் வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம், வழக்கில் வெற்றி உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

சனி சஞ்சாரம்
சனி 6ல் சஞ்சரிப்பதால், பகைவரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உடல் பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். இருள் மறைந்து வெளிச்சம் பரவியது போல உங்கள் நிலை மாறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கவுரவம், செல்வாக்கு உயரும்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு 7 ம் இடத்திலும், கேது ஜென்ம ராசியிலும் இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். நட்புகளால் சங்கடத்தை சந்திக்க நேரும். சிலருக்கு எதிர்பாலினரால் தடுமாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை உண்டாகும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை அஷ்டம குருவால் சங்கடத்தை சந்தித்தாலும் மே 1 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, ராசியைப் பார்ப்பதால், ராகு - கேதுவால் ஏற்படும் கெடுபலன் மாறும். செல்வாக்கு உயரும். பட்டம், பதவி என்ற கனவு நனவாகும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். குலதெய்வ அருளால்  சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்
ஜூன் 15 - ஆக.16,  நவ.16 - டிச.15, 2025, பிப்.13 - மார்ச் 14 காலங்களில் சூரியனால் உங்கள் நிலை உயரும். செல்வாக்கை அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும். ஜென்ம கேதுவின் பாதிப்பில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். அந்தஸ்து அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும்.

பொதுப்பலன்
குறைகள் தீரும். குன்றின் மீது விளக்காக பிரகாசிப்பீர்கள். செல்வாக்கு உயரும். ஆற்றல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் நிலை மேம்படும். ஆரோக்கியம் சீராகும். பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். புதிய பொறுப்பு வந்து சேரும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். இந்த ஆண்டு யோக ஆண்டாக இருக்கும்.

தொழில்
தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றியடைவீர்கள். லாபம் காண்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பத்திர எழுத்தர்கள், கலைஞர்கள், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், வெள்ளி, ஜவுளி, குடிநீர், டிராவல்ஸ்  வழக்கறிஞர் தொழில், பத்திரிகை, சின்னத்திரை, பங்குச்சந்தை தொழில்களில் ஈடுபட்டிருப்போர் மேன்மை காண்பர்.

பணியாளர்கள்
அரசு பணியாளர்களின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இட மாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களின் விருப்பம் நிறைவேறும். உழைப்பு அங்கீகரிக்கப்படும். ஊதியம் உயரும். புதிய பொறுப்பு உண்டாகும்.

பெண்கள்
வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர்.  குரு பார்வையால் திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைத்தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். புதிய சொத்து சேரும். பிள்ளைகளால் பெருமை சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.

கல்வி
மனக்காரகனும் வித்யா காரகனும் உங்களை வழிநடத்துவதால், பொதுத்தேர்வு, போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை
ரோக ஸ்தான சனி, பாக்ய குருவின் பார்வையால் அச்சுறுத்திய வந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். நரம்பு பிரச்னைகள் தீரும். பரம்பரை நோயிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்
வருமானம் பல வழியிலும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும். சொத்து மீதிருந்த வழக்கின் முடிவு சாதகமாகும். சிலர் புதிய வீடு கட்டுவர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதியர்  ஒற்றுமையுடன் செயல்படுவர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பிள்ளைகளின் நிலை உயரும். சிலர் நவீன சாதனம், வாகனம் வாங்குவர். கோயில் திருப்பணிக்கு நிதியுதவி செயவீர்கள்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபட்டால் நன்மை பெருகும்.


சித்திரை: நினைத்தது நடக்கும்

சகோதர காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் (கன்னி) பிறந்தவர்களுக்கு வித்யாகாரகனான புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு (துலாம்) களத்திரகாரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், முயற்சியில் வெற்றியும், பகைவரை வீழ்த்தும் வலிமையும், பணவரவும், நினைத்ததை நடத்தும் ஆற்றலும் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்பலமும், தொழிலில் முன்னேற்றமும், வழக்கில் சாதகமான நிலையும், எதிரியை வீழ்த்தும் வலிமையும் ஏற்படும்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி 1,2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சியில் வெற்றியை உண்டாக்குவார். சங்கடங்களை விரட்டுவார். யோகத்தையும், செல்வாக்கையும் அதிகரிப்பார். தொழில், பணியில் முன்னேற்றம் தருவார். வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 19 - நவ. 4  வக்கிர காலத்திலும், 2025, பிப். 17 - மார்ச் 29 அஸ்தமன காலத்திலும் சங்கடங்களை அகற்றி வைப்பார். நன்மையை அதிகரிப்பார். போராட்டமான நிலையிலிருந்து விடுதலை வழங்குவார்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வீண் பிரச்னைகள் தோன்றும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். புதிய நட்புகளால் சிலர் சங்கடங்களுக்கு ஆளாக நேரும். பொருள் இழப்பு உண்டாகும். 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்ததை சாதிக்கும் நிலையும், புதிய முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பல வழிகளில் பணம் வரும். செல்வாக்கு உயரும்.

குரு சஞ்சாரம்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 1 முதல் பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான் அபரிமித யோகத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவார். வேலை தேடுவோருக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். திருமண வயதினருக்கு வாழ்க்கைத்துணையை வழங்குவார். வீடு கட்டி குடியேற வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். புதிய பதவி, பொறுப்புகளை வழங்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை தன் பார்வையால் அதிகபட்ச யோகத்தை வழங்குவார். மே1 முதல் 10ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பணியில் சங்கடம், தொழிலில் தடை, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவார்.

சூரிய சஞ்சாரம்
1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஆக. 16, நவ. 16 - டிச. 15, 2025 பிப். 13 - மார்ச் 14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 - செப்.16, டிச.16 - 2025, ஜன.13, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் வாழ்க்கை சிறக்கும்.  எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். அலுவலர்களின் கோரிக்கை நிறைவேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும்.

பொதுப்பலன்
குரோதி வருடத்தில் உங்கள் செயல்களில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதிப்பீர்கள்.  சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். தொழில், உத்தியோகத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும். செயல்களில் விவேகம் இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த வருவாயை அடைவீர்கள். நீண்டநாள் கனவு நிறைவேறும். சொத்து சேர்க்கை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

தொழில்
தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். போட்டியாளர்கள் விலகுவர். புதிய முதலீடு ஆதாயம் தரும். பங்குச் சந்தையில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

பணியாளர்கள்
உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். தனியார் நிறுவன ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்படும். பணியிடத்தில் உங்கள் நிலை உயரும். திறமை மதிக்கப்படும். ஊதியம் அதிகரிக்கும்.

பெண்கள்
தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பணியில் புதிய பொறுப்பு வந்துசேரும். வருமானம் உயரும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடலில் இருந்த சங்கடம் தீரும். வாழ்க்கைத் துணை உங்கள் ஆலோசனைக்கு மதிப்பளிப்பார். குடும்பத்தை வழிநடத்திச் செல்வதில் உங்கள் பங்கு அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமணம், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச் செல்வர்.

கல்வி
தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். சுய ஜாதகத்தில் 10,11 ம் இட அதிபதிகளின் நிலையறிந்து அவரவருக்குரிய படிப்பை தேர்வு செய்வது நன்மையளிக்கும்.

உடல்நிலை
நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பரம்பரை நோய், தொற்று நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். நடைப்பயிற்சி, யோகப் பயிற்சிகளால் நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

குடும்பம்
பொருளாதார நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.  பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். துணிந்து செயல்பட்டு குடும்ப பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். புது வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளை மேற்கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பரிகாரம்: மீனாட்சியம்மனை தினமும் வழிபட்டால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar