Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 தனுசு : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 தனுசு : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
03:04

விசாகம்: நன்மை அதிகரிக்கும்

தனகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதங்களில் (துலாம்) பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு (விருச்சிகம்) செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.
தமிழ்ப் புத்தாண்டான குரோதி ஆண்டில் விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சங்கடம் நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்மை அதிகரிக்கும். குடும்பம், தொழில், பணியில் இருந்த நெருக்கடி விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். புது வீடு கட்டி குடியேறுவர். வருமானம் பலவழியிலும் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 1 முதல் குருபார்வை உண்டாவதால் உடல், மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து சேரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, ஜூன் 19 - நவ. 4 வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன நிலையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களையும் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். பணவரவில் இருந்த தடைகளை அகற்றுவார். யோக பலன்கள் வழங்கி முன்னேற்றம் தருவார். 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்கள் பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் தங்களின் உடல்நலம், தாயாரின் உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 6ம் இட ராகு நன்மைகளை அதிகரிப்பார். வழக்கில் வெற்றி தருவார். உடல் நிலையில் இருந்த சங்கடம் தீரும். எதிர்ப்பு விலகும். 4 ம் பாதத்தினருக்கு 11ம் இட கேது, தொட்டதில் எல்லாம் வெற்றி. முயற்சியில் லாபம். பட்டம், பதவி, செல்வாக்கு என அதிகரிப்பார். பணம் பலவழியிலும் வரும். அந்தஸ்து உயரும். சொத்து சேர்க்கை உண்டாகும்.

குரு சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை 7ம் இடத்திலும், மே1 முதல் அஷ்டமத்தில்  குரு சஞ்சரிப்பார். ஏப். 30 வரை குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். எதிர்பாராத நெருக்கடி, சங்கடங்களை ஏற்படுத்தி சோதனைக்கு ஆளாக்குவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை நெருக்கடி இருந்தாலும், மே 1 முதல் நினைத்ததில் வெற்றியும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும்,  வேலை தேடுவோருக்கு தகுதியான வேலையும், திருமண வயதினருக்கு திருமண யோகத்தையும் உண்டாக்குவார். பணவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்ட நிலையை உருவாக்குவார்.

சூரிய சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 - செப். 16, டிச. 16 - 2025, ஜன. 13, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு  ஏப்.14 - மே 13, ஆக. 17 - அக் .17, 2025, ஜன. 14 - பிப். 12 காலங்களிலும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். செல்வாக்கு உயரும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு நீங்கும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாகும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். இக்காலகட்டம் யோகமானதாக இருக்கும்.


பொதுப்பலன்
ஆண்டு முழுவதும் ராகு, கேது சஞ்சாரங்களும், குருவின் சஞ்சாரம், பார்வைகளும், 120 நாட்கள் சூரியன், 45 நாட்கள் செவ்வாயால் உண்டாகும் நன்மைகளும் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும். முன்னேற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகளை நடத்தி வைக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்தும். வழக்குகளில் சாதகத்தை வழங்கும். பொன், பொருள், பூமி, வாகனச் சேர்க்கை தரும். முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியை ஏற்படுத்தும்.

தொழில்
தொழிலில் போட்டி, பிரச்னை என்றிருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் தொழிலில் நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். உங்கள் முயற்சிகள் லாபமாகும். இக்காலத்தில் உங்களை மட்டுமே நம்பி செயல்படுவது நல்லது.

பணியாளர்கள்
அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக செல்வாக்கும் உயரும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் இக்காலத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் உடன் பணிபுரிவர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும்.

பெண்கள்
அரசு பணியாளர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். கணவர் ஆதரவாக இருப்பார். சேமிப்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.  நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.

கல்வி
பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவு, கல்லுாரிக்காக முயற்சி செய்வீர்கள். சுயஜாதகத்தில் தொழில்காரகன், லாப காரகனின் நிலையறிந்து மேற்படிப்பை தேர்வு செய்வது நல்லது.

உடல்நிலை
நோய்களால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். நீண்ட கால நோய்களும் இக்காலத்தில் மருத்துவத்திற்கு கட்டுப்படும். பரம்பரை நோய்களுக்கு நவீன மருத்துவத்தால் தீர்வு கிடைக்கும். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவதும், சிகிச்சைப் பெறுவதும் நல்லது.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகி முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி  தொடரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானுக்கு முல்லை மலர் சாத்தி வழிபட வாழ்வு வளமாகும்.


அனுஷம்: சுபநிகழ்ச்சி நடக்கும்

ஆயுள்காரகனான சனியை நட்சத்திர நாதனாகவும், சகோதர காரகனான செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்டு பிறந்த உங்களுக்கு, பிறக்கப்போகும் குரோதி வருடத்தில் மே 1 முதல் 7ல் சஞ்சரிக்கும் குருவாலும், லாப ஸ்தான கேதுவாலும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப பிரச்னைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சொத்து, வீடு, வாகனச் சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேரும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். சுபநிகழ்ச்சி நடக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

சனி சஞ்சாரம்
ஏப். 14 - ஜூன் 19, நவ. 4 - 2025 ஜன. 31 காலங்களில் தாரா பலனினாலும், ஜூன் 19 - நவ. 4 வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன காலத்திலும் அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை உண்டாகும். முயற்சிகள் தடையின்றி  நிறைவேறும். திட்டமிட்டு செய்யும் செயல்களில் லாபம் ஏற்படும். நீங்களே எதிர்பார்க்காத அதிர்ஷ்ட பலன் உண்டாகும்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு 5 லும், கேது 11லும் சஞ்சரிக்கும் நிலையில், லாப ஸ்தான கேதுவால் சங்கடம், நெருக்கடி மறையும். முயற்சி யாவும் வெற்றியாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வசதிகள் கிடைக்கும். வீடு, வாகனம், பொன், பொருள், அந்தஸ்து அடைவீர்கள். இருந்தாலும் ராகுவால் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி தோன்றும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 6 ல் சஞ்சரிக்கும் குருவால், உங்கள் நிலையில் சங்கடம் ஏற்படும். மே 1 முதல் உங்கள் ராசியைப் பார்க்கும் குருவால் செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். அலுவலகத்தில்  பிரச்னைகள் விலகி எதிர்பார்த்த பதவிஉயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களின் செயல் வெற்றி பெறும்.

சூரிய சஞ்சாரம்
ஏப். 14 - மே 13, ஆக. 17 - அக். 17, 2025, ஜன. 14 - பிப். 12 காலங்களில் சூரிய பகவானின் 6,10,11, 3 ம் இட சஞ்சாரத்தால் செல்வாக்கு உயரும். துணிச்சல் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். லாபம் அதிகரிக்கும். முயற்சி யாவும் வெற்றி பெறும். பொன், பொருள் சேரும். அரசு பணியாளர்கள்,  அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். புதிய பொறுப்பு வந்து சேரும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும்.

பொதுப்பலன்
குரோதி ஆண்டில் குறை யாவும் தீரும். முயற்சிகள் லாபமாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். குலதெய்வ அருள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசுவழி முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்டநாள் பிரச்னையில் இருந்து விடுபடுவதுடன், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள், கலைஞர்களுக்கு இது யோக காலமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். கடன் அடைபடும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும்.

தொழில்
தொழில் முன்னேற்றம் அடையும். புதிய கிளை தொடங்கி வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் இருந்த சங்கடம் விலகி வருமானம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், ஓட்டல், விவசாயம், பில்டர்ஸ், கமிஷன் வியாபாரம், இயந்திர தொழிற்சாலைகள், ஆன்லைன் தொழில்களில் ஆதாயம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில்  செல்வாக்கு உயரும். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ஊதியம் அதிகரிக்கும். முதலாளி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். அரசு பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலருக்கு விரும்பிய பணி மாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும்.

பெண்கள்
மே 1 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவாலும், அவரது பார்வைகளாலும்  முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வேலைத் தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம், சலுகை கிடைக்கும். பொன், பொருள் சேரும். திருமண வயதினருக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். கணவரை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும்.

கல்வி
தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்து விரும்பிய கல்லுாரியில் மேற்படிப்பிற்கு இடம் கிடைக்கும். ஆனாலும் உங்கள் திறமைக்கேற்ற பாடப்பிரிவை தேர்வு செய்வது நல்லது.

உடல்நிலை
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பு உங்களை சங்கடப்படுத்தாது. ஆனாலும் சிலருக்கு தொற்றுநோய், பரம்பரைநோயால் பாதிப்பு ஏற்படலாம்.

குடும்பம்
குருவின் ஸ்தான, பார்வையால் முயற்சிகள் வெற்றி பெறும். அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பில் இருந்து கவசம் போல் உங்களைப் பாதுகாக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். எதிரி  தொல்லை விலகும். தொழில் விருத்தியாகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம், நகை என விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்வு நடந்தேறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.

பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.


கேட்டை: குருபார்வையால் நன்மை

வித்யா காரகன் புதனை நட்சத்திர நாதனாகவும், தைரிய காரகன் செவ்வாயை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புத்தாண்டில் குருபகவானின் சஞ்சாரம், பார்வைகளும், லாப ஸ்தான கேதுவின் அருளும் சங்கடங்களை போக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.  தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபம் காணும் நிலை உருவாகும். அரசு ஊழியர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சங்கடங்கள் நீங்கும். வருமானம் பலவழியிலும் வரும். எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமாளிக்கும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பிலிருந்து குரு பகவானின் பார்வை கவசம் போல பாதுகாக்கும்.

சனி சஞ்சாரம்
அர்த்தாஷ்டம சனியாக சனிபகவான் 4 ம் இடத்தில் இருக்கும் நிலையில் ஜூன் 19 - நவ. 4 க்குரிய வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 க்குரிய அஸ்தமன நிலையிலும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாளாக இருந்த சங்கடங்கள் முடிவிற்கு வரும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.  புதிய பொறுப்பு, பதவிகள் சிலருக்கு ஏற்படும். அரசியல்வாதிகளின் நிலை உயரும்.

ராகு, கேது சஞ்சாரம்
5ல் ராகுவும், 11ல் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் லாப கேதுவால், வாழ்வில் இருந்த சங்கடம் போகும். கடன்களை அடைப்பீர்கள். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய பொறுப்பு, பதவி, அந்தஸ்து என எதிர்பார்ப்பு நிறைவேறும்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 6ல் சஞ்சரிக்கும் குருவால் எதிர்ப்பு அதிகரிக்கும். உடல் நிலையில் சங்கடம் உண்டாகும் என்றாலும், மே 1 முதல் 7ல் சஞ்சரிக்கும் குருவால் எதிர்பார்ப்பு நிறைவேறும். கனவு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபநிகழ்வு நடக்கும். முயற்சி யாவும் வெற்றியாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரம் உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம், செல்வாக்கு உயரும்.

சூரிய சஞ்சாரம்
ஏப். 14 - மே 13, ஆக. 17 - அக். 17, 2025, ஜன. 14 - பிப். 12 காலங்களில் சூரியனின் சஞ்சார நிலைகளால் வாழ்வில் பிரகாசமான நிலை உண்டாகும். பிரச்னை யாவும் விலகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். அரசுவழி முயற்சியில் ஆதாயம் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். லாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய முயற்சியும், விரிவு செய்யும் முயற்சியும் வெற்றி பெறும்.

பொதுப்பலன்
குரோதி ஆண்டில் குறைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் தடைகள் விலகி லாபம் உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகி ஒற்றுமை ஏற்படும். புதிய சொத்து சேரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் எதிர்பார்த்த நன்மைகளைப் பெறுவர். புதிய பொறுப்புகள், ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

தொழில்
சுய தொழில் செய்வோரின் முயற்சி வெற்றி பெறும்.  அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வருமானம் உயரும். பங்கு வர்த்தகத்தில் அதிகளவு ஆதாயம் உண்டாகும். பப்ளிகேஷன், பத்திரப் பதிவு, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், குடிநீர், விவசாயம், இயந்திர நிறுவனம், ஆன்லைன் வியாபாரங்களில் ஆதாயம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
தனியார் நிறுவன பணியாளர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த ஊதியம், சலுகைகள் கிடைக்கும். . அரசுப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்.

பெண்கள்
கல்வி, வேலை, திருமணம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். சுயதொழில் செய்வோருக்கு  லாபம் அதிகரிக்கும். கணவரை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் குறையும். முதல் திருமணத்தில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவர்.

கல்வி
மேற்படிப்பில் கவனம் செல்லும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவீர்கள். உங்களின் ஜீவனாதிபதி, லாபாதிபதி நிலையறிந்து அவர்களுக்குரிய படிப்பில் சேர்வது நன்மை தரும்.

உடல்நிலை
4 ம் இட சனியால் உடல் பாதிப்புண்டாகும். என்றாலும் குருவின் பார்வையால் அவற்றிலிருந்து விரைவில் விடுபடுவீர்கள். இக்காலத்தில் பரம்பரைநோய், ரகசியநோய் கண்டவர்கள் உரிய சிகிச்சையால் குணம் பெறுவர்.

குடும்பம்
கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர் வழியில் இருந்த பிரச்னைகள் தீரும். பொருளாதாரம் உயரும். வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல் போன்றவற்றில் தடைபட்ட முயற்சிகள் இனி தொடரும். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.  சுபநிகழ்வுகள் நடக்கும்.

பரிகாரம்: தினமும் முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar