Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 கும்பம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 கும்பம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
மகரம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
எழுத்தின் அளவு:
மகரம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
03:04

உத்திராடம்: சொத்து சேரும்

ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1ம் பாதத்தில் (மீனம்) பிறந்தவர்களுக்கு தனக்காரகனான குரு ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் (மகரம்) பிறந்தவர்களுக்கு ஆயுள்காரகனான சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் இட சனியால் முயற்சி வெற்றியாகும் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். இழந்தவற்றை மீட்கும் ஆற்றல், சொத்து சேர்க்கை என ஆதாயம் உண்டாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3 ம் இட ராகு, மே 1 முதல் 5 ம் இட குருவால் அதிர்ஷ்டம் உண்டாகும் வெளிநாட்டு தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஆதாயத்தை உண்டாக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் விலகும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.

சனி சஞ்சாரம்
கும்பத்தில் இருக்கும் சனியால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட நிலை உண்டாகும். முயற்சி யாவும் லாபமாகும். கடந்த கால நெருக்கடி விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடம்  நீங்கும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  ஜூன் 19 -  நவ. 4 வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன நிலையிலும் சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். நினைத்தது நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாகனம் வாங்கும், தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இருக்கும் நிலையில் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் இட ராகுவும் 10 ம் இட கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். உடல் நிலையில் சங்கடம் ஏற்படுத்துவர். தொழிலில் தடையும், வருமானத்தில் இழுபறியும் உண்டாக்குவர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ல் இருக்கும் ராகுவும், 9ல் இருக்கும் கேதுவும் தொழிலில் முன்னேற்றம், பணியில் உயர்வு, வருமானத்தில் நிறைவு, தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் ஆற்றலை ஏற்படுத்துவர். முயற்சிகளில் வெற்றியை உண்டாக்குவர்.

குரு சஞ்சாரம்
உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை 5ல் இருக்கும் குரு வாழ்வில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கை, சமூக அந்தஸ்தை வழங்குவார். அதன்பிறகு இந்நிலை மாறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 1 முதல் நன்மைகளை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். சமூகஅந்தஸ்தை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளை ஏற்படுத்துவார். சுபநிகழ்வுகளை நடத்தி வைப்பார். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு நல்ல மணவாழ்க்கை அமையும்.

சூரிய சஞ்சாரம்
1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூன். 14, செப். 17 - நவ. 15, 2025, பிப்.13 - மார்ச். 15 காலங்களிலும்,  2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஜூலை 16, அக். 18 - டிச. 15, 2025, மார்ச்15 - ஏப். 13 காலங்களிலும் சூரியனால் நன்மை அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னைகள் விலகும். வழக்குகள் சாதகமாகும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு நீங்கும். ஆற்றல் வெளிப்படும்.

பொதுப்பலன்
குரோதி ஆண்டில் 1ம் பாதத்தினருக்கு  சனி பகவான் சாதகமான நிலையிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு  ராகுவும், மே. 1 முதல் குருவும், 4 பாதத்தினருக்கு ஆண்டில் 120 நாட்கள் சூரியனும், 45 நாட்கள் செவ்வாயும் அதிர்ஷ்ட நிலையை வழங்குவர். வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமை ஏற்படும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பணவரவில் தடைகள் விலகும். பணியில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வேலைத் தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் அமையும். பொன், பொருள், பூமி, வாகனச்சேர்க்கை உண்டாகும்.

தொழில்
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், இயந்திரத் தொழில், பத்திரிகை, பதிப்பகம், கம்ப்யூட்டர் தொழில்கள், ஸ்டேஷனரி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் நல்ல வளர்ச்சி பெறும்.

பணியாளர்கள்
திறமை வெளிப்படும். வேலையில் முழுகவனம் செலுத்துவீர்கள். அதன் காரணமாக முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். ஊதியம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு மதிப்பு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும்.

பெண்கள்
கடந்தகால பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மேற்கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என்ற கனவோடு இருப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பிற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.

உடல்நிலை
உடல் நிலையில் பிரச்னை தோன்றி மறையும். வேலையின் காரணமாக டென்ஷன் அதிகரிக்கும். உறக்கம் இல்லாத நிலை உருவாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. சிலர் அல்சர், வாயு, பரம்பரை நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. சிகிச்சையாலும் சரியான உணவு முறையாலும் நிவாரணம் உண்டாகும்.

குடும்பம்
சங்கடங்கள் விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், புதிய வீட்டிற்கு குடிபோகுதல் போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். வம்பு, வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்

பரிகாரம்: செவ்வாய், வெள்ளியன்று காளிகாம்பாளை வழிபட வாழ்க்கை சிறக்கும்.


திருவோணம்: சந்தோஷ சாரல்

மனக்காரகனான சந்திரனை நட்சத்திர நாதனாகவும், ஆயுள்காரகனான சனியை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு குரோதி ஆண்டு அதிர்ஷ்டங்களை வழங்கப் போகிறது. இதற்கு முன்பிருந்த சங்கடமான நிலை விலகப் போகிறது. 3ல் சஞ்சரிக்கும் ராகு முயற்சிகளை லாபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மே 1 முதல் குருவும் 5ம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 9ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற நிலையால் பிரச்னைகள் மறையும். தொழிலில் இருந்த சங்கடம் விலகும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாழ்வில் சந்தோஷ சாரல் வீசும்.  சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் பாத சனியாக சஞ்சரித்து வருவதால் கடந்தகால நெருக்கடி இந்த ஆண்டு மறையும். ஜூன் 19 - நவ. 4 வரையிலான காலத்தில் வக்கிரம் அடைவதாலும், 2025, பிப். 27 - மார்ச். 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் 2 ம் இட சனியால் உண்டாகும் சங்கடமான பலன்களில் இருந்து விடுதலை உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்ப பிரச்னைகள் தீரும்.

ராகு, கேது சஞ்சாரம்
தைரிய, வீரிய ஸ்தானமான 3ல் ராகுவும், பாக்ய ஸ்தானமான 9ல் கேதுவும் இருப்பதால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பொருளாதாரம் உயரும். முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். தொழில் சிறப்படையும். ஆரோக்கியம் சீராகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். கோயில் திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். தெய்வ அருள் கிடைக்கும். வேலை, தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வீர்கள்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை சுக ஸ்தான குருவால் சிலர் வாகனம் வாங்குவர். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். மே 1 முதல் 5ல் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். சுப நிகழ்வுகள் நடந்தேறும். குடும்பம், தொழில், பணியில் ஏற்பட்ட சங்கடம் விலகி நன்மை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பட்டம், பதவி பெறுவீர்கள். அந்தஸ்து  உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்
ஜூன் 15 - ஜூலை 16, அக்.18 - டிச. 15, 2025, மார்ச் 15 - ஏப்.13 காலங்களில் சூரியனின் 6,10,11,3 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றம் உண்டாகும். திறமை வெளிப்படும். சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகள் விலகுவர். உடல்நிலை சீராகும். வெளிநாட்டிற்கு செல்ல அரசின் அனுமதி கிடைக்கும்.

பொதுப்பலன்
முயற்சி ஸ்தானத்தில் ராகு, 4 மாதங்கள் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரம், ஏப். 22 - மே 30, ஆக. 26 - அக். 22 வரை செவ்வாயின் 3,6 ம் இட சஞ்சாரம், பாக்ய ஸ்தானத்தில் கேது, மே 1 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதுடன் அவரது பார்வைகள் உங்கள் ராசிக்கும், பாக்ய, லாப ஸ்தானங்களுக்கும் உண்டாவதால் புத்தாண்டு யோக ஆண்டாக இருக்கும். விருப்பம் யாவும் நிறைவேறும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். தொழில், பணியில் கவனமாக செயல்படுவீர்கள். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். அதிகாரம் அந்தஸ்து என்ற நிலை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கி லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஆன்மிகவாதிகளுக்கு நல்ல வளர்ச்சி, யோகம் உண்டாகும்.

தொழில்
தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், டிராவல்ஸ், கம்ப்யூட்டர், சினிமா, இன்ஜினியரிங், விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், குடிநீர், பேன்சி ஸ்டோர்ஸ், நகை, ஜவுளி வியாபாரம் ஆகியவை முன்னேற்றம் அடையும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். திறமை வெளிப்படும். புதிய பொறுப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். அரசு பணியாளர்கள் பிரச்னை, வழக்குகளில் இருந்து விடுபடுவர். சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.

பெண்கள்
குறைகள் தீரும். தனித்திறன் வெளிப்படும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சியில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் விலகும். தடைபட்ட திருமண முயற்சி கைகூடும். சிலருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். உறவினரின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வீடு கட்டுவீர்கள்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உங்கள் சுய ஜாதகத்தில் தொழில் காரகன், ஸ்தானாதிபதி, லாபக் காரகன், ஸ்தானாதிபதி நிலையறிந்து மேற்கல்வியைத் தொடர எதிர்காலம் யோக காலமாகும்.

உடல்நிலை
ஜென்ம ராசிக்கு குருபார்வை உண்டாவதால் உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். உணவு செரிமானம், அல்சர், வீசிங் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சனியின் பார்வை ஆயுள் ஸ்தானத்தின் மீது பதிவதால் வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணிகளிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

குடும்பம்
குடும்பத்தில் சந்தோஷத்தை உண்டாக்கும் ஆண்டு இது. விருப்பம் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். புதிய இடம், வாகனம், பொன் பொருள் வாங்குவது என குடும்ப நலனுக்காக ஒவ்வொன்றாக வாங்குவீர்கள். லாப ஸ்தானத்திற்கு குரு, சனியின் பார்வை உண்டாவதால் எதிர்பார்த்த பணம் வரும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் நிலை உண்டாகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பரிகாரம் : ஜென்ம நட்சத்திரத்தன்று மகாலிங்கேஸ்வரரை(சிவன்) வழிபட சந்தோஷம் பெருகும்.


அவிட்டம்: விடாமுயற்சி தேவை

தைரிய காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1,2 ம் பாதங்களில் (மகரம்) பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களில் (கும்பம்) பிறந்தவர்களுக்கும் கர்மக் காரகனான சனி பகவானே ராசிநாதனாக உள்ளார். பிறக்கும் புத்தாண்டில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ம் இட ராகுவும், மே 1 முதல் 5ல் சஞ்சரிக்கும் குருவும் முயற்சியை வெற்றியாக்குவர். தொழில், வேலையில் முன்னேற்றம் தோன்றும்.  விருப்பம் நிறைவேறும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்நலனில் பாதிப்பு, உறவினரால் சங்கடம், வெளியூர் செல்லும் நிலை,  நெருக்கடி உண்டாகும்.

சனி சஞ்சாரம்
ஏப். 14  - ஜூன் 19,  நவ. 4 - ஜன. 31 காலங்களில் தாரா பலன்களாலும்,  ஜூன். 19 - நவ. 4 வரையிலான காலத்தில் வக்கிர நிலையாலும், 2025, பிப். 27 - மார்ச். 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் பாத சனி, ஜென்ம சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். இக்காலத்தில் நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். குடும்பம், தொழில், பணியில் நன்மை அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். உடல்நிலை சீராகும்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இருப்பதால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் சக்தியுண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு ராகு 2 ம் இடத்திலும், கேது 8 ம் இடத்திலும் இருக்கும் நிலையில் வீண் பிரச்னை அதிகரிக்கும். தொழிலில் சங்கடங்கள் உண்டாகும்.

குரு சஞ்சாரம்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை சுக ஸ்தானத்திலும், மே 1 முதல் பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருவால் குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம்,  வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பொன், பொருள் சேரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருவால் நன்மை தர இயலாது என்றாலும் பார்வை வழியே வரவை ஏற்படுத்துவார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். உடல்நிலையில் பாதிப்புகளை விலக்கி வைப்பார்.

சூரிய சஞ்சாரம்
ஜூன் 15 - ஜூலை 16, அக். 18 - டிச. 15, 2025, மார்ச். 15 - ஏப். 13 காலங்களில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், ஏப். 14 - மே. 13, ஜூலை 17 - ஆக. 16, நவ. 16 - 2025, ஜன. 13 காலங்களில் 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடியை நீக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் சலுகைகள் வழங்குவார். வழக்குகளில் இருந்து விடுவிப்பார். எதிரி தொல்லை மறையும். உடல்நிலை சீர்படும்.

பொதுப்பலன்
அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது, குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். வாழ்வுக்கான அடிப்படை வசதிகளை அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச் சனியும், ராகு கேது சஞ்சாரமும் எதிர்மறை பலன்களை ஏற்படுத்தும். செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சியில் கவனமுடன் ஈடுபட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி எந்தவொரு செயலிலும் இறங்க வேண்டாம்.

தொழில்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிலில் முழுகவனம் செலுத்துவதால் நன்மையுண்டாகும்.

பணியாளர்கள்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வேலையில் நெருக்கடி தோன்றும். எதிர்பாராத சங்கடம் உண்டாகும் என்பதால் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்கள்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கை, தொழில், பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பதவி உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செயல்களில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் அவசியம். சிலருக்கு கருப்பை சம்பந்தப்பட்ட நோய் தோன்றலாம். அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளால் நெருக்கடி தோன்றும் என்பதால் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும்.

கல்வி
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தேர்வில் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கல்வியில் அக்கறை தேவை. விரும்பிய   பாடப்பிரிவில், கல்லுாரியில் சேர கடும் முயற்சி தேவைப்படும்.

உடல்நிலை
1,2 ம் பாதத்தினருக்கு உடலில் இருந்த சங்கடங்கள் மருத்துவத்தால் விலக ஆரம்பிக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை, தொற்று நோய் ஏற்படலாம். வாகன பயணத்தில் கவனம் தேவை. விஷ ஜந்துக்களால் பயம் ஏற்படும்.

குடும்பம்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும் வேலையில் உயர்வு ஏற்படும். பொருளாதாரம் உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பணவரவில் தடை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்றாலும் 120 நாட்கள் சூரியனாலும், 90 நாட்கள் செவ்வாயாலும் உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். சங்கடம் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்: சனிக்கிழமையன்று அனுமன் வழிபாடு செய்தால் சங்கடம் நீங்கும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar