Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 மீனம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 மீனம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
கும்பம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
எழுத்தின் அளவு:
கும்பம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
03:04

அவிட்டம்:விடாமுயற்சி தேவை

தைரிய காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1,2 ம் பாதங்களில் (மகரம்) பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களில் (கும்பம்) பிறந்தவர்களுக்கும் கர்மக் காரகனான சனி பகவானே ராசிநாதனாக உள்ளார். பிறக்கும் புத்தாண்டில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ம் இட ராகுவும், மே 1 முதல் 5ல் சஞ்சரிக்கும் குருவும் முயற்சியை வெற்றியாக்குவர். தொழில், வேலையில் முன்னேற்றம் தோன்றும்.  விருப்பம் நிறைவேறும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்நலனில் பாதிப்பு, உறவினரால் சங்கடம், வெளியூர் செல்லும் நிலை,  நெருக்கடி உண்டாகும்.

சனி சஞ்சாரம்
ஏப். 14  - ஜூன் 19,  நவ. 4 - ஜன. 31 காலங்களில் தாரா பலன்களாலும்,  ஜூன். 19 - நவ. 4 வரையிலான காலத்தில் வக்கிர நிலையாலும், 2025, பிப். 27 - மார்ச். 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் பாத சனி, ஜென்ம சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். இக்காலத்தில் நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். குடும்பம், தொழில், பணியில் நன்மை அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். உடல்நிலை சீராகும்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இருப்பதால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் சக்தியுண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு ராகு 2 ம் இடத்திலும், கேது 8 ம் இடத்திலும் இருக்கும் நிலையில் வீண் பிரச்னை அதிகரிக்கும். தொழிலில் சங்கடங்கள் உண்டாகும்.

குரு சஞ்சாரம்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை சுக ஸ்தானத்திலும், மே 1 முதல் பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருவால் குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம்,  வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பொன், பொருள் சேரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குருவால் நன்மை தர இயலாது என்றாலும் பார்வை வழியே வரவை ஏற்படுத்துவார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். உடல்நிலையில் பாதிப்புகளை விலக்கி வைப்பார்.

சூரிய சஞ்சாரம்
ஜூன் 15 - ஜூலை 16, அக். 18 - டிச. 15, 2025, மார்ச். 15 - ஏப். 13 காலங்களில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், ஏப். 14 - மே. 13, ஜூலை 17 - ஆக. 16, நவ. 16 - 2025, ஜன. 13 காலங்களில் 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடியை நீக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் சலுகைகள் வழங்குவார். வழக்குகளில் இருந்து விடுவிப்பார். எதிரி தொல்லை மறையும். உடல்நிலை சீர்படும்.

பொதுப்பலன்
அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது, குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். வாழ்வுக்கான அடிப்படை வசதிகளை அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச் சனியும், ராகு கேது சஞ்சாரமும் எதிர்மறை பலன்களை ஏற்படுத்தும். செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சியில் கவனமுடன் ஈடுபட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி எந்தவொரு செயலிலும் இறங்க வேண்டாம்.

தொழில்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிலில் முழுகவனம் செலுத்துவதால் நன்மையுண்டாகும்.

பணியாளர்கள்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வேலையில் நெருக்கடி தோன்றும். எதிர்பாராத சங்கடம் உண்டாகும் என்பதால் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்கள்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கை, தொழில், பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பதவி உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செயல்களில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் அவசியம். சிலருக்கு கருப்பை சம்பந்தப்பட்ட நோய் தோன்றலாம். அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளால் நெருக்கடி தோன்றும் என்பதால் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும்.

கல்வி
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தேர்வில் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கல்வியில் அக்கறை தேவை. விரும்பிய   பாடப்பிரிவில், கல்லுாரியில் சேர கடும் முயற்சி தேவைப்படும்.

உடல்நிலை
1,2 ம் பாதத்தினருக்கு உடலில் இருந்த சங்கடங்கள் மருத்துவத்தால் விலக ஆரம்பிக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை, தொற்று நோய் ஏற்படலாம். வாகன பயணத்தில் கவனம் தேவை. விஷ ஜந்துக்களால் பயம் ஏற்படும்.

குடும்பம்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும் வேலையில் உயர்வு ஏற்படும். பொருளாதாரம் உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பணவரவில் தடை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்றாலும் 120 நாட்கள் சூரியனாலும், 90 நாட்கள் செவ்வாயாலும் உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். சங்கடம் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்: சனிக்கிழமையன்று அனுமன் வழிபாடு செய்தால் சங்கடம் நீங்கும்.


சதயம்: கவனம் தேவை

யோகக்காரகனான ராகுவை நட்சத்திர நாதனாகவும், ஆயுள் காரகனான சனியை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புத்தாண்டில் ஜென்ம ராசிக்குள் சனி, குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டமத்தில் கேது, மே 1 முதல் சுக ஸ்தானத்தில் குரு என பிரதான கிரகங்கள் எல்லாம் எதிர்மறையாக சஞ்சரிக்கின்றனர். இந்நிலையில் உடல்நிலையில் சங்கடம், கவுரவத்திற்கு பங்கம் ஏற்படும். வருமானத்தில் தடை உண்டாகும். இனம் புரியாத பயம் தோன்றும். குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிலும் கவனம் தேவை. செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளும், பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையும், நடக்கும் திசை, புத்தி பொறுத்து நன்மை உண்டாகும் என்பதுதான் உண்மை.

சனி சஞ்சாரம்
ஜூன் 19 - நவ. 4 வரையிலான காலத்தில் வக்கிரம் அடைவதாலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான காலத்தில் அஸ்தமன நிலையாலும் ஜென்மச் சனியால் உண்டாகும் பலன்கள் மாறுபடும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும். செயல்களில் ஆதாயம் ஏற்படும். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.

ராகு, கேது சஞ்சாரம்
தன, குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் குடும்பம், செல்வாக்கு, அந்தஸ்து, பணவரவுகளில் பிரச்னை, நெருக்கடி அதிகரிக்கும். அந்நியர்களால் சில சிக்கலுக்கு ஆளாவீர்கள். சிலருக்கு வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். பணியாளர்கள் நெருக்கடிகளை  சந்திக்க நேரலாம். வழக்குகளில் எதிர்மறை பலன் ஏற்படும். மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்தால் சட்ட சிக்கலுக்கு ஆளாக நேரிடும்.  

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 3ம் இடத்திலும், மே 1 முதல் 4 ம் இடத்திலும்  சஞ்சரிக்கும் குரு பகவான்,  எதிர்மறை பலன்களை வழங்குவார். சங்கடங்கள் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். மற்றவர்களுக்கு பதில் சொல்லும் நிலையுண்டாகும். இவை ஸ்தான பலன் என்றாலும் குருவின் பார்வையால் இவற்றை சமாளிக்கும் அளவிற்கு பொருளாதார நிலை உயரும், பெரியோரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள், வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும். தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
ஏப். 14 - மே 13, ஜூலை 17 - ஆக 16, 2025,  நவ 16 -  2025, ஜன.13 ஆகிய காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். எதையும் சமாளிக்கும்  சக்தி உண்டாகும். முயற்சிகள் நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உடல் நிலை சீராகும். எதிரி தொல்லை விலகும்.

பொதுப்பலன்
ஜென்ம சனியும், ராகு கேதுக்களின் சஞ்சார நிலையும்,  குருவின் சஞ்சாரமும் எதிர்மறையாக இருப்பதால் செயலில் கவனம் தேவை. எதிலும் யோசித்து முடிவிற்கு வருவது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் இக்காலத்தில் வேண்டாம். அறிமுகமில்லாத நபர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். குடும்பத்தினரை முடிந்தவரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

தொழில்
தொழிலில் எதிர்பாராத தடை, முயற்சியில் தாமதம் உண்டாகும். புதிய முயற்சியில் உங்கள் விருப்பம் நிறைவேறாமல் போகும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம்.

பணியாளர்கள்
உழைப்பு அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பணியில் முழு கவனம் இருந்தால் மட்டுமே வேலையை உங்களால் தக்க வைக்க முடியும். அதிகாரிகள் கண்டிப்பாக நடப்பர் என்பதால் பொறுமை அவசியம்.

பெண்கள்
குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். வயிறு, கருப்பையில் பிரச்னை ஏற்படலாம் கவனம். பயணத்திலும் எச்சரிக்கை அவசியம். முடிந்தவரை இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. சுயதொழில் புரிபவர்கள் வரவு செலவில் கவனமுடன் இருக்கவும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.

கல்வி
பொதுத்தேர்வு, போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியாமல் போகலாம். சுய ஜாதகத்தை ஆராய்ந்து மேற்படிப்பை தேர்வு செய்வது நல்லது.

உடல்நிலை
பரம்பரை நோய்கள் மீண்டும் தலைதுாக்கும். தொற்று நோய்களும் சங்கடத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத விபத்தால் மருத்துவச் செலவு உண்டாகும். உடல்நலனில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

குடும்பம்
ஜென்ம சனி, 2 ம் இட ராகு, 8 ம் இட கேது, 3,4 ம் இடங்களில் குரு சஞ்சார நிலையால் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் சங்கடம் தோன்றும். உறவினரிடம் பகை உண்டாகும். தம்பதியரிடம் பிரச்னை தலைதுாக்கும். சிலர் வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். தொழில், வேலையில் சங்கடங்கள் ஏற்படும் என்றாலும், இந்த ஆண்டில் 4 மாதம் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் சாதகமாக இருப்பதுடன் சனியின் வக்ர, அஸ்மதன காலங்களில் நன்மை உண்டாகும்.

பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வழிபட்டால் பிரச்னைகள் விலகும்.


பூரட்டாதி: நிதானம் அவசியம்

தனக்காரகனான குருவை நட்சத்திர நாதனாகவும், 1,2,3 ம் பாதங்களில் (கும்பம்) பிறந்தவர்களுக்கு ஆயுள் காரகனான சனி ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் (மீனம்) பிறந்தவர்களுக்கு உங்கள் நட்சத்திர நாதனே ராசி நாதனாகவும் உள்ளனர்.
குரோதி ஆண்டில் பூரட்டாதி 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம ராசியிலும், ராகு 2 ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும், குரு 3, 4 ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி, தொழிலில் பிரச்னை, குழப்பம், வாழ்க்கைத்துணையுடன் சங்கடம் ஏற்படும். எந்த செயலிலும் நிதானம் அவசியம்.  
4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனி 12ம் இடத்திலும், ராகு ஜென்ம ராசியிலும், கேது 7ம் இடத்திலும், குரு தன ஸ்தானத்தில் ஏப்.30 வரையிலும், மே 1 முதல் 4 ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர் என்பதால் எதிர்பாராத செலவு தோன்றும். அவசரப்பட்டு முதலீடு செய்து நஷ்டப்படும் நிலை ஏற்படும். பண ஆசையால் தவறான வழியில் செல்லும் நிலை சிலருக்கு உருவாகும். உங்களால் வளர்ந்தவர்கள் உங்களுக்கெதிராக செயல்படும் நிலை உருவாகும்

சனி சஞ்சாரம்
ஏப்.14 - ஜூன் 19, நவ. 4 - டிச. 31 காலங்களில் தாரா பலன்களாலும், ஜூன் 19 - நவ. 4 காலத்தில் வக்கிர நிலையாலும், 2025, பிப். 27 - மார்ச் 29 காலத்தில் அஸ்தமனம் அடைவதாலும் சங்கடங்களில் இருந்து சனி உங்களை விடுவிப்பார். நீங்கள் எதிர்பார்த்த நன்மையை பெற முடியும். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.

ராகு, கேது பெயர்ச்சி
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ல் ராகு, 8ல் கேது இருப்பதால் குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பாதிப்பு, வருமானத்தில் தடை, வீண் அலைச்சல், பொருளாதார நெருக்கடி, உடலில் சங்கடம், எதிர்பாராத விபத்து உண்டாகலாம். 4 ம் பாதத்தினருக்கு தொழிலில் தடுமாற்றம், பணியில் பிரச்னை, வீண் அலைச்சல், செயலில் நெருக்கடி, வீண் பழி, செய்யாத தப்புக்கு அபராதம், பணஇழப்பு, நோய், நண்பர்களால் சங்கடம் ஏற்படலாம்.

குரு சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை தைரிய ஸ்தானத்திலும், மே 1 முதல் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குரு எதிர்மறை பலன்கள் தருவார். முயற்சிகள் இழுபறியாகும். வருமானத்தில் தடையுண்டாகும் என்றாலும் பார்வைகளின் வழியே வளம் தருவார். நலத்தை உண்டாக்குவார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2 ம் இட குருவால் ஏப்.30 வரை நன்மை அதிகரிக்கும். வருமானம் உயரும். மே1 முதல் 3ல் சஞ்சரிக்கும் குருவால் நன்மை தர முடியாமல் போகும். நெருக்கடி உண்டாகும் என்றாலும் பார்வைகளால் வாழ்வு வளமாகும்.

சூரிய சஞ்சாரம்
1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 - மே 13, ஜூலை 17 - ஆக. 16, நவ. 16 - 2025, ஜன.13, காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூன் 14, ஆக. 17 - செப். 16, டிச.16 - 2025, பிப்.12 காலங்களிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் மற்ற கிரகங்களால் ஏற்படும் சங்கடத்தில் இருந்து காப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பணவரவில் இருந்த தடை விலகும்.  உடல்நிலை சிறக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். பணியில் ஏற்பட்ட பிரச்னையில் இருந்து விடுவிப்பார். வழக்கில் சாதக நிலையை உண்டாக்குவார். லாபம் அதிகரிப்பார்.

பொதுப்பலன்
பிரதான கிரகங்கள் சாதகமாக இல்லை. இக்காலத்தில் நிதானம் அவசியம்.  ஆரோக்கியக செலவு அதிகரிக்கும். குடும்பத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். வரவேண்டிய பணம் வருவதற்கு தாமதமாகும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் மனம் குழப்பமடையும். வீண் செலவு அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பிரச்னை ஏற்படும். இந்த ஆண்டில் 4 மாதம் சூரியனும், 90 நாள் செவ்வாயும் உங்களைப் பாதுகாப்பார்கள். சங்கடத்தில் இருந்து விடுவிப்பார்கள். பணம், புகழ், செல்வாக்கை உயர்த்துவர். வம்பு வழக்குகளில் இருந்து, நோயில் இருந்தும் பாதுகாப்பார்கள்.

தொழில்
தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு மேற்கொள்ளும் செயல்கள் லாபமாகும். விற்பனையில் கூடுதல் கவனம் தேவை. ஊழியர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். புதிய தொழில் தொடங்கும் முடிவை யோசித்து செயல்படுத்துவது நல்லது.

பணியாளர்கள்
தனியார் நிறுவன பணியாளர்களுக்கு அலைச்சலும் வேலைபளுவும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகும். அரசு துறையில் பணியாற்றுபவர்கள் மற்றவர்கள்
கூறுவதுபோல் செயல்படாமல் விதிகளின்படி செயல்படுவது நன்மையாகும். இல்லையெனில் சட்ட சிக்கலுக்கு ஆளாகலாம்.

பெண்கள்
வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்ப நிம்மதி உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் யோசிக்கலாம்/ அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வேலை பளுவிற்கு ஆளாக நேரும். இருந்தாலும் எதிர்பார்த்த உயர்வு இருக்கும். பொன் பொருள் சேரும். உடல்நிலையில் அவ்வப்போது சிறு சங்கடம் தோன்றும். சிலர் படிப்பு, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். நுழைவுத் தேர்வுகளிலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். மேற்படிப்பிற்காக வெளி மாநிலம், வெளிநாடு என்று ஒரு சிலர் செல்வீர்கள்.

உடல்நிலை
திடீர் திடீரென உடலில் சங்கடம் தோன்றும். ஒவ்வாமை, அல்சர், கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் தலைகாட்டும். சிலர் விபத்தில் சிக்க நேரும் என்பதால் பயணத்தில்  நிதானம் அவசியம்.

குடும்பம்
குடும்பநிலை ஒருநேரம் இருப்பது போல் மறுநேரம் இருக்காது. எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். அந்நியரால் தம்பதிக்குள் சண்டை  ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் நிம்மதி உண்டாகும். ஆடம்பர செலவு, வீண் பயணத்தை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். உறவினர் உங்களுக்கு எதிராகலாம். புதிய முயற்சியில் யோசித்து ஈடுபடுவது நல்லது.


பரிகாரம்: மாதந்தோறும் குல தெய்வத்தை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar