Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : குருப்பெயர்ச்சி பலன் .. ... ரிஷபம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025 ரிஷபம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
மேஷம்: குருபெயர்ச்சி பலன் 2024 – 2025
எழுத்தின் அளவு:
மேஷம்: குருபெயர்ச்சி பலன் 2024 – 2025

பதிவு செய்த நாள்

22 ஏப்
2024
04:04

அசுவினி: வருமானம் அதிகரிக்கும்


செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு 2025, மே1 முதல்  2ல் சஞ்சரிக்க இருக்கிறார். பணவரவு தாராளமாகும். நினைப்பதை செய்து முடிப்பீர்கள். சுபநிகழ்ச்சி நடக்கும். பாக்யாதிபதியான குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது முன்னேற்றம் தருவார். உயர்பதவி தருவார். மகிழ்ச்சியை அதிகரிப்பார். வருமானம் அதிகரிக்கும்.


பார்வைகளின் பலன்: குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். முன்னேற்றம் தருவார். சத்ரு ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அஷ்டம ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் செல்வாக்கு உயரும். ஜீவன ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் தொழில், வேலையில் தடை விலகும். தொழில் முயற்சி வெற்றியாகும்.


சனி சஞ்சாரம்: லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால், வருமானம் பலவழியிலும் வரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும்.


ராகு, கேது சஞ்சாரம்: ராகு விரய ஸ்தானத்திலும், கேது சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் நட்சத்திரநாதன் கேதுவால் செல்வாக்கு உயரும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். மறைமுக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். படிப்பை முடித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும்


சூரிய சஞ்சாரம்: சூரியன் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது நன்மை அதிகரிக்கும் என்பதால்  ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக். 17, ஜன. 14 – மார்ச் 14 காலங்களில் உங்கள் முயற்சி யாவும் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.  எதிர்பார்த்த வருமானம் வரும்.


பொதுப்பலன்: சங்கடம் யாவும் விலகும். 2ம் இடத்திலுள்ள குருவின் காலம் வசந்த காலமாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உயரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும்.


தொழில்: தொழிலில் தடைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். உற்பத்தியில் இருந்த தடை விலகும். தொழிலை விரிவு செய்வீர்கள். விற்பனை அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வரும்.


பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திறமைக்கேற்ப பொறுப்பு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாளாக தடைபட்ட பதவி உயர்வு இக்காலத்தில் வரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.


பெண்கள்: குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். உடலில் இருந்த சங்கடம் விலகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். மாங்கல்ய ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் கணவரின் உடல்நிலை சீராகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.


கல்வி: வாக்கு ஸ்தானமான 2ல் குரு சஞ்சரிப்பதால் கல்வி முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.


உடல்நிலை: ராசி, அஷ்டம ஸ்தானத்தை சனி பார்ப்பதால் உடல்நலக்குறைவுக்கு ஆளாகி இருப்பீர்கள். இந்நிலையில் குருபார்வை ரோக, ஆயுள் ஸ்தானத்திற்கு உண்டாவதால் அவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


குடும்பம்: குடும்பத்தில் சங்கடம் விலகும். எதிர்பார்த்த வரவால் புதிய சொத்து சேரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.


பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.


பரணி: செல்வாக்கு உயரும்

செவ்வாயை ராசி அதிபதியாகவும், சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம குருவாக அலைச்சலை உண்டாக்கிய குருபகவான் 2025, மே 1 முதல் 2ல் நட்சத்திராதிபதி சுக்கிரன் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வருமானம் உயரும். நினைப்பதை செய்து முடிப்பீர்கள். சொல்வதை செய்து காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சி நடைபெறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பொருளாதாரம் உயரும். செல்வாக்கு உயரும்.
பார்வை பலன்
6 ம் இடத்திற்கு குருபார்வை உண்டாவதால் சங்கடம் விலகும். உடல்நலக்குறைவு விலகும். பணியாளர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஊர், இட மாற்றம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜீவன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில், வேலையில் தடை விலகும். வருமானம் உயரும்.  பட்டம், பதவி வந்து சேரும்.
சனி சஞ்சாரம்
குரு பகவான் 2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். பண வரவில் தடைகள் விலகும். வருமானம் பல வழியிலும் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நவீன மாற்றம் செய்வீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வரும்.
ராகு, கேது சஞ்சாரம்
2 ம் இட குரு காலம் முழுவதும், ராகு  12லும், கேது 6லும் சஞ்சரிக்கும் நிலையில் உடல்  பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிரிகள் விலகிச் செல்வர். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியில்லாத நிலையை அடைவீர்கள்.
சூரிய சஞ்சாரம்
சூரிய பகவான் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது நன்மை அதிகரிக்கும் என்பதால் ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக் 17, 2025 ஜன. 14 – மாரச் 14 காலங்களில் உங்கள் சக்தி மற்றவர்களுக்கு தெரிய வரும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும்.
பொதுப்பலன்
குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், லாபச்சனியும், 6 ம் இட கேதுவும் முன்னேற்றம் தரும். பணம் பல வழியிலும் வரும். குடும்பம் ஓரிடம் நீங்கள் ஓரிடமாக இருந்த நிலை மாறும். சொத்து சேர்க்கை ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி வந்து சேரும்.
தொழில்
ஜீவன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் லாபம் அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபம் தரும். திரைப்படம், தொலைக்காட்சி, யூடியூப் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும்.
பணியாளர்கள்
உழைப்பிற்கு மதிப்பு அதிகரிக்கும். ஊதியம் உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட பதவி உயர்வு, விரும்பிய  இடமாற்றம் கிடைக்கும்.
பெண்கள்
உடல் பாதிப்பு விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். பொன், பொருள் சேரும். 8ம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண யோகம் உண்டாகும்.
கல்வி
குருவின் சஞ்சாரம், பார்வை படிப்பில் முன்னேற்றத்தை உண்டாக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் கல்வி பெறும் முயற்சி வெற்றியாகும்.
உடல்நிலை
பரம்பரை நோய், தொற்று நோய், அலர்ஜி, சிறுநீரகப் பிரச்னை என சங்கடத்திற்கு ஆளாகிய நீங்கள் ரோக, ஆயுள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் அவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
குடும்பம்
குடும்பத்தில் சங்கடம் விலகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.


கார்த்திகை: நண்பரால் நன்மை

ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் (மேஷம்) பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (ரிஷபம்) சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு மே1 முதல் 2ம் வீட்டில் சஞ்சரித்து அதிர்ஷ்ட வாழ்க்கைக்கு வழிகாட்ட இருக்கிறார். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம குருவாகி அலைச்சலை அதிகரித்தாலும் அதற்கேற்ப வரவை வழங்குவார். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என அனைத்தையும் அருள்வார்.
பார்வைகளின் பலன்
1 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வை 6,8,10 ம் இடங்களில் பதிவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்பாதிப்பு விலகும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில், பணியில் வருமானம் உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களின் மீது குருவின் பார்வை உண்டாவதால் பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். குலதெய்வ அருள் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பரால் நன்மை உண்டாகும்.
சனி சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு லாப சனியால் வருமானம் பலவழியிலும் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். 2,3,4 ம் பாதத்தினருக்கு தொழில், வியாபாரத்தில் வேலைப்பளுவால் நெருக்கடி உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்
6ம் இட கேதுவால்  செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவுக்கு வரும். எதிரிகள் விலகிச் செல்வர். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவால் வருமானம் உயரும். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், வாழ்வில் போட்டியில்லாத நிலை ஏற்படும்.
சூரிய சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக் 17, ஜன. 14 – மாரச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, அக். 18 – நவ. 15, 2025, பிப் 13 – ஏப். 13 காலங்களிலும் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றத்தை வழங்குவார். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.
பொதுப்பலன்
குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், லாப, ஜீவன சனியும், 6 ம் இட கேதுவும், 11 ம் இட ராகுவும், 120 நாட்கள் சூரியனும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். குடும்பத்தில் சங்கடம் விலகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும்.
தொழில்
லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வருமானத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழிலை விரிவு செய்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, இயந்திர உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ஹார்டுவேர்ஸ் தொழில்கள் முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள்
நெருக்கடி மறையும். எதிர்பார்த்த ஊதியம் உண்டாகும். திறமைக்கேற்ற பொறுப்பு கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும்.
பெண்கள்
குழப்பம் தீரும்.  உடல் பாதிப்பு விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். பொன், பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.
கல்வி
படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விரும்பிய பாடம், கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
விபத்து, சுவாசப் பிரச்னை, ரத்த அழுத்தம், சர்க்கரை என ஏதாவது பாதிப்பால் சங்கடத்திற்கு ஆளாகி வந்த உங்களுக்கு அவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
குடும்பம்
ரிஷப குருவால் சங்கடம் விலகும். பணவரவு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.
பரிகாரம்: சூரியபகவானை வழிபட்டு வர வாழ்வு இனிமையாகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 
temple news
உத்திரம்: நினைத்தது நிறைவேறும்சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1 ம் பாதத்தில் (சிம்மம்) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar