பதிவு செய்த நாள்
22
ஏப்
2024
04:04
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்
குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் (மிதுனம்) பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு (கடகம்) சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் விரயகுருவாக சஞ்சரித்து வீண்செலவை அதிகரிப்பார். அலைச்சல் அதிகரிக்கும். சுலபமாக முடிய வேண்டிய வேலைகளிலும் சிரத்தை எடுக்க வேண்டியதாக இருக்கும். 4ம் பாதத்தினருக்கு லாப குருவாக சஞ்சரித்து யோகத்தை தரப் போகிறார். நீங்கள் விரும்பிய நிலையை வழங்குவார்.
பார்வைகளின் பலன்: 1,2,3 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் வரவை விட செலவு அதிகரிக்கும். அடுத்தவருக்கு உதவி செய்வதற்காக மற்றவரிடம் கடன் வாங்கி அதன் காரணமாக சிக்கலுக்கு ஆளாக நேரிடும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். 4ம் பாதத்தினருக்கு 3,5,7ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிரிந்தவர் ஒன்று சேர்வர்.
சனி சஞ்சாரம்: சனி 1,2,3 ம் பாதத்தினருக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். 4ம் பாதத்தினருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு கவுரவக் குறைச்சல் ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 10ம் இட ராகுவால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பணியிடத்தில் நெருக்கடி தோன்றும். வேலையை விட்டு விடும் எண்ணம் உருவாகும். 4 ம் இட கேதுவால் உடல்நிலை ஒரு நேரம் போல் மறுநேரம் இருக்காது. 4ம் பாதத்தினருக்கு 3ம் இட கேதுவால் முன்னேற்றம் தோன்றும். உடல்நிலை சீராகும்.
சூரிய சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – மே 13, ஆக.17 – செப்.16, நவ.16 – டிச.15, 2025, மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும், 4 பாதத்தினருக்கு ஏப்.14 - ஜூன் 14, செப்.17 - அக்.17, டிச.16 - 2025, ஜன.13 காலங்களிலும் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தொழிலில் தடைகளை நீக்குவார். உடல்பாதிப்பை நீக்குவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பை வழங்குவார். பணியாளர்களுக்கு பதவி உயர்வு தருவார்.
பொதுப்பலன்: குருவின் சஞ்சார நிலை, பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் சங்கடங்களில் இருந்து விடுவிப்பர். நினைப்பதை நினைத்தபடி செய்து ஆதாயம் பெற வைப்பர். குடும்பத்தில் நெருக்கடி தீரும்.
தொழில்: தொழிலில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முதலீடு, கடன் வாங்குவது இக்காலத்தில் வேண்டாம். அதனால் சங்கடங்களே ஏற்படும். வழக்கமான செயல்களில் கவனம் செலுத்துங்கள்.
பணியாளர்கள் : பணியிடத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் உங்கள் திறமையை முதலாளி உணருவார். உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும். ஆனால் விரும்பாத இடமாற்றம் ஏற்படும். சலுகை பறி போகும்.
பெண்கள்: குருவின் சஞ்சாரம், பார்வைகளால் உங்கள் நிலை உயரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பணியில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பொன், பொருள் சேரும்.
கல்வி: கல்வியின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வு முடிவுகள் உங்கள் கனவை நனவாக்கும். விரும்பிய கல்லுாரி, பாடப்பிரிவில் சேர்வீர்கள்.
உடல்நிலை : வாகனப் பயணத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடுப்புவலி, மூட்டுவலி, தொற்றுநோய், சுவாசப் பிரச்னை என ஏதாவது சங்கடம் தோன்றும். சிகிச்சையால் குணமடைவீர்கள்.
குடும்பம்: கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். பிள்ளைகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம்: சனிதோறும் சனீஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.
பூசம்: அதிர்ஷ்ட காலம்
சனியை நட்சத்திராதிபதியாகவும், சந்திரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் தர்ம, நியாயத்திற்கு கட்டுப்பட்டவராக இருப்பீர்கள். இதுவரை 10ல் இருந்து நெருக்கடி உண்டாக்கிய குரு, மே1 முதல் லாபகுருவாக அதிர்ஷ்ட பலன் தர இருக்கிறார். நினைப்பது நிறைவேறும். மதிப்பு உயரும். இழந்ததை மீட்பீர்கள். தடைபட்ட முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். சொத்து சேரும்.
பார்வைகளின் பலன்: 11ல் உள்ள குரு 5,7,9 ம் பார்வைகளை 3,5,7 ம் இடங்களை செலுத்துவதால் வாழ்வு வளமாகும். முயற்சி லாபமாகும். பூர்வீக சொத்து பிரச்னை முடிவிற்கு வரும். அதிர்ஷ்டம் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பிரிந்த தம்பதி சேருவர். தொழிலில் வருமானம் உயரும்.
சனி சஞ்சாரம்: சனி ராசிக்கு 8ல் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு ஏற்படும். பணியாளர்கள், அரசியல்வாதிகளுக்கு கவுரவக்குறைச்சல் ஏற்படும். விரும்பாத மாற்றம், செயல்களில் தடை ஏற்படும். சிலருக்கு வெளியூரில் வாழும் நிலை உருவாகும். விபத்து ஏற்படலாம்.
ராகு, கேது சஞ்சாரம்: 3ம் இட கேதுவால் முன்னேற்றம் தோன்றும். துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். உடல்நிலை சீராகும். 9 ம் இட ராகுவால் வருவாய் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும்.
சூரிய சஞ்சாரம்: சூரியன், ஏப்.14 – ஜூன் 14, செப்.17 – அக். 17, டிச.16 – 2025, ஜன.13, காலங்களில் 3, 6, 10, 11 ம் இட சஞ்சாரங்களால் முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு செல்வாக்கு உயரும். வேலை தேடியவர்கள் தகுதியான பணியில் அமர்வார். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். வழக்குகளில் வெற்றியளிப்பார். அரசுவழியில் ஆதாயம் கிடைக்கும்.
பொதுப்பலன்: குருவின் சஞ்சாரம், பார்வை பலம், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். தொழில், பணியில் ஆதாயம் அடைவீர்கள். சொத்து சேரும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு கதவைத் தட்டும்.
தொழில் : தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி, டிரான்ஸ்போர்ட், மருத்துவம் செழிப்படையும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள் முன்னேற்றம் அடைவர். தடைபட்ட பணம் வந்து சேரும்.
பணியாளர்கள் : நெருக்கடி, பிரச்னைகள் முடிவிற்கு வரும். திறமைக்கு மதிப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்பும் ஊதிய உயர்வும் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகை கிடைக்கும்.
பெண்கள்: எதிர்பார்ப்பு நிறைவேற்றும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். குழந்தைப்பேறு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பணியில் எதிர்பார்த்த உயர்வு, சலுகை கிடைக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொன், பொருள் சேரும்.
கல்வி: கல்வியின் மீது ஆர்வம் கூடும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும். விரும்பிய பாடப்பிரிவு, விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு செல்வர்.
உடல்நிலை : இனம் புரியாத நோய்கள், பரம்பரை நோய், தொற்று நோய், விபத்தால் பாதிப்பு என மருத்துவச் செலவுக்கு ஆளான நிலை இனி மறையும். மருத்துவச் செலவு பெருமளவு குறையும்.
குடும்பம்: லாப குருவால் குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். குடும்பம், உறவுகளிடமும் ஒற்றுமை உண்டாகும். தம்பதியர் கருத்துவேறுபாடு முடிவிற்கு வரும். பிரிந்தவர் ஒன்று சேருவர். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை, நிலம், வாகனம் வாங்குவீர்கள்.
பரிகாரம் : தினமும் நந்தீஸ்வரரை வழிபட்டு வர வாழ்வு வளமாகும்.
ஆயில்யம்: நல்லகாலம் வந்தாச்சு
புதனை நட்சத்திராதிபதியாகவும், சந்திரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் அறிவாற்றல், சாதுர்யம், நிர்வாகத் திறமை கொண்டவர்கள். இதுவரை 10ல் சஞ்சரித்து சங்கடம், அவமானத்தை உண்டாக்கிய குரு மே1 முதல் லாப குருவாக சஞ்சரித்து பலன் தர இருக்கிறார். உங்களுக்கு இது யோககாலம். நினைத்தது நடக்கும். வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பு, பணியாளர்களுக்கு புதிய பொறுப்பு, பதவி உயர்வு உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.
பார்வைகளின் பலன்: குரு 5,7,9 ம் பார்வைகளை ராசிக்கு 3,5,7 ம் இடங்களில் செலுத்துவதால் வாழ்வு வளமாகும். புத்திசாலித்தனம் வெளிப்படும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் நீங்கும். பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். தொழிலில் பிரச்னை நீங்கும். வருமானம் உயரும் என்றாலும் குருவின் அஸ்தமனம், வக்கிர காலத்தில் பலன்கள் மாறுபடும்.
சனி சஞ்சாரம்: சனி ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். அவ்வப்போது எதிர்பாராத சங்கடம் தோன்றும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பணியாளர்களுக்கு கவுரவக் குறைச்சல் ஏற்படும். விரும்பாத மாற்றம், செயல்களில் தடை, தாமதம் உண்டாகும். எளிதாக முடிய வேண்டிய வேலைகள் இழுபறியாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 3ம் இட கேது, 9ம் இட ராகுவால் உங்கள் முயற்சிகள் நிறைவேறி லாபம்தரும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். துணிச்சலுடன் செயல்பட்டு நினைப்பதைச் சாதிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சூரிய சஞ்சாரம்: ஏப்.14 – ஜூன் 14, செப்.17 – அக்.17, டிச.16 – 2025, ஜன.13 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நெருக்கடி நீங்கும். தொழில், வேலையில் ஏற்பட்ட தடைகள் விலகும். முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். வழக்கில் வெற்றி உண்டாகும்.
பொதுப்பலன்: குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். தொழில் முன்னேற்றம் பெறும். பணியில் உயர்வு உண்டாகும். நினைப்பதை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
தொழில் : சுய தொழில் செய்து வருவோர்க்கு இக்காலம் முன்னேற்றமான காலம். உற்பத்தியில் இருந்த தடை விலகும். விற்பனை உயரும். ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். அதற்கான அரசு அனுமதி கிடைக்கும்.
பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற ஊதியமில்லை என வருந்திய நிலை மாறும். பணியிடத்தில் நெருக்கடி, பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டாகும். பணியாளர்களுக்கு கடந்த கால பிரச்னைகள் மறையும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
பெண்கள் : அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். பொருளாதாரம் உயரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஆசை நிறைவேறும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
கல்வி: படிப்பில் அக்கறை இருக்கும். தேர்வு முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்தபடி வரும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும். விரும்பிய பாடப்பிரிவில், விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய், நரம்புக் கோளாறு, வீசிங், ஒவ்வாமை, விபத்து என ஏதாவது ஒரு வகையில் பிரச்னைக்கு ஆளாகிய நிலை மாறும். மருத்துவச் செலவு கட்டுப்படும்.
குடும்பம்: பணவரவு அதிகரிக்கும். குடும்பம், உறவுகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். தம்பதியருக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பிரிந்தவர் மீண்டும் சேருவர். வீடு, மனை, நிலம், வாகனம் வாங்குவீர்கள்.
பரிகாரம்: திருப்பதி ஏழுமலையானை தினமும் வழிபட்டால் அதிர்ஷ்டம் தேடி வரும்.