Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025 கன்னி : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025 கன்னி : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
சிம்மம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025
எழுத்தின் அளவு:
சிம்மம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025

பதிவு செய்த நாள்

22 ஏப்
2024
04:04

மகம்: எச்சரிக்கை அவசியம்

கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் விடாமுயற்சியால் வெற்றி அடையக் கூடியவர்கள். இதுவரை 9ல் சஞ்சரித்து அதிர்ஷ்டத்தை வழங்கிய குரு, மே 1 முதல் 10ல் சஞ்சரிக்கிறார். வேலையில் சங்கடம், செயலில் அவமானம் ஏற்படலாம். எந்தச் செயலிலும் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் அவசியம். பணியாளர்கள் விரும்பாத இடமாற்றத்தைப் பெறுவர். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் குரு பூர்வ புண்ணியாதிபதி என்பதால் நன்மை செய்வார். அஸ்தமனம், வக்ரம் அடையும் போது நெருக்கடி குறைந்து நன்மை நடக்கும்.


பார்வைகளின் பலன்: குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசிக்கு 2,4,6 ம் இடங்களில் விழுவதால் சங்கடம் விலகும். குடும்ப ஒற்றுமை சிறக்கும். எதிர்பார்த்த வரவு வரும். திருமண வயதினருக்கு யோகம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர்.


சனி சஞ்சாரம்: ராசிக்கு 7ல் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தோன்றும், கணவன், மனைவிக்குள் ஒற்றுமையற்ற நிலையும், எதிர்பாலினரால் தடுமாற்றம் ஏற்படும். நண்பர்களும் விலகும் நிலை உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 2ம் இட கேது, 8ம் இட ராகுவால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவில் தடையேற்படும். வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். நிம்மதியற்ற நிலை உருவாகும். கவுரவம், அந்தஸ்து, செல்வாக்கில் பின்னடைவு ஏற்படும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.

சூரிய சஞ்சாரம்: மே 14 – ஜூலை 16,  அக்.18 – நவ.15, 2025. ஜன.14 – பிப்.12 காலங்களில் சூரியனின் 10,11,3,6 ம் இட சஞ்சாரத்தால் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில், வேலையில் இருந்த பிரச்னை மறையும். வருமானத்தை அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றியை வழங்குவார்.


பொதுப்பலன்: பத்தில் வரும் குருவால் முயற்சி தாமதமாகும். குருவின் பார்வைகளால் பிரச்னை இடம் தெரியாமல் போகும். வரவு அதிகரிக்கும். கடன் அடைபடும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். ஆரோக்கியம் மேம்படும். 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். தொழில் முன்னேற்றமடையும். வேலையில் உயர்வு உண்டாகும். நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உண்டாகும். சொத்து சேரும்.
தொழில்  : தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சி எடுப்பீர்கள்.  உற்பத்தியில் தடைகளும் சரியான நேரத்தில் விநியோகிக்க முடியாத நிலையும் ஏற்படும். ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும்.
பணியாளர்கள் : பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்ற நிலை வரும். சிலர் வேறு வேலை தேடவும் முயற்சிப்பர். விரும்பாத இடமாற்றம், பொறுப்பு மாற்றம் ஏற்படுவதுடன் அதிகாரிகளால் நெருக்கடிக்கு ஆளாகலாம். கவனமும் நிதானமும் அவசியம்.
பெண்கள் : மகத்தில் பிறந்த நீங்கள் ஜெகத்தை ஆளப் பிறந்தவர் என்றாலும் பத்தாமிட குருவால் ஆட்சியும் வீழ்ச்சியாகும். செல்வாக்கும் செல்லாத வாக்காகும் என்ற நிலை ஏற்படக்கூடும். ஆனால், குருவின் பார்வைகளால் குடும்பத்தில் உண்டான நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும்.
கல்வி: வாக்கு ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் பொதுத் தேர்வு, போட்டித்தேர்வுகளின் முடிவு  எதிர்பார்த்தபடி வரும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும்.
உடல்நிலை : ருண, ரோக ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் நோய்கள் காணாமல் போகும். பரம்பரை நோய், தொற்று நோய் பாதிப்பு விலகும். மருத்துவ சிகிச்சையால் கடும்நோய் கூட எளிதாக குணமாகும்.
குடும்பம் : குருவின் பார்வை கேதுவிற்கு உண்டாவதால் குடும்ப நிலை உயரும். தம்பதி ஒற்றுமை ஓங்கும். பணவரவு அதிகரிக்கும். சொத்து சேரும். பிள்ளைகளின் மேற்கல்வி கனவு நனவாகும். பிரிந்தவர் கூடுவர்.


பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அனுமன், சனீஸ்வரரை வழிபட சங்கடம் தீரும்.


பூரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி

சுக்கிரனை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் தனித்து செயல்பட்டு வெற்றி பெறுபவராகவும் இருப்பீர்கள். பூர்வ புண்ணியாதிபதியான குரு மே1 முதல் 10ல் சஞ்சரிப்பதால், ‘பத்தில் குரு பதவிக்கு இடர்’   என்பது நினைவுக்கு வரும். செயல்களில் நெருக்கடி தோன்றும். பணியாளர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். குரு அஸ்தமனம், வக்ரம் அடையும் போது நெருக்கடி விலகும்.


பார்வைகளின் பலன்: குருவின் 5ம் பார்வை 2ம் இடத்தில் பதிவதால் குடும்ப பிரச்னை விலகும். சுபநிகழ்ச்சி நடக்கும். 7ம் பார்வை ராசிக்கு 4ம் இடத்திற்கு உண்டாவதால் தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். 9ம் பார்வை ராசிக்கு 6 ம் இடத்திற்கு உண்டாவதால் எதிர்ப்பு நீங்கும். வேலை தேடுவோரின் விருப்பம் பூர்த்தியாகும்.


சனி சஞ்சாரம்: ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் சனி ராசியைப் பார்ப்பதால் தம்பதிக்குள் சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையின் உடலில் பாதிப்பு ஏற்படும். கூட்டுத்தொழிலில் சங்கடம் தோன்றும். எதிர்பாலினரால் அலைச்சல், பொருளிழப்பு, அவமானம் தோன்றும்.
ராகு, கேது சஞ்சாரம்: 2ல் கேது, 8ல் ராகுவால் வரவு செலவில் சங்கடம் தோன்றும். எதிர்பார்த்தவற்றில் தடை, தாமதம் உண்டாகும். பேச்சால் பிரச்னை உருவாகும். செல்வாக்கில் பின்னடைவு தோன்றும். சிலருக்கு உடல்நிலையில் சங்கடம் உண்டாகும்.
சூரிய சஞ்சாரம்: ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் போது கவசம் போல பாதுகாப்பார். சங்கடங்களில் இருந்து கரையேற்றுவார். மே 14 – ஜூலை 16,  அக்.18 – நவ.15, 2025. ஜன. 14 – பிப். 12 காலங்களில் செல்வாக்கை உயர்த்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வழக்கில் சாதகத்தை தருவார். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி, லாபத்தை தருவார்.


பொதுப்பலன்: குருவின் பார்வைகளால் சங்கடம் விலகும். பணத்தேவை பூர்த்தியாகும். கடன் பிரச்னை தீரும். உறவால் நன்மை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் முன்னேற்றம் தருவர். வாழ்க்கை, தொழில், வேலையில் மதிப்பு உயரும்.


தொழில்  : தொழிலில் தடை விலகும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபம் காண்பர். கடந்தகால அனுபவத்தைக் கொண்டு உற்பத்தி, விற்பனையில் ஆதாயம் காண்பீர்கள்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடங்களும் நெருக்கடியும் விலகும். திறமை வெளிப்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு வேறு இடத்திற்கு மாறுவர். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். மீண்டும் செல்வாக்கு உயரும்.
பெண்கள் : பத்தாமிட குருவால் பொல்லாங்கை சம்பாதிக்க நேரும். ஆனால் குருபார்வையால் நெருக்கடி விலகும். பிரிந்த கணவர் தேடி வருவார். வருவாய் அதிகரிக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
கல்வி : வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத் தேர்வு, போட்டித்தேர்வு முடிவு எதிர்பார்த்தபடி வரும். விரும்பும் கல்லுாரியில், விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்கள்.
உடல்நிலை : ஏழாமிடச் சனியால் நோய்கள் தோன்றினாலும் குருவின் பார்வையால் நோய்கள் மறையும். பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து, சிறுநீரக கோளாறுகள் மருத்துவத்திற்கு கட்டுப்படும்.
குடும்பம் : குருவின் பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதாரம் உயரும். பொன், பொருள், வாகனம், சொத்து சேரும். தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். தகுதியான இடத்தில் பிள்ளைகளைப் படிக்க வைப்பீர்கள். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்.


பரிகாரம்: ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட எதிர்பார்ப்பு நிறைவேறும்.


உத்திரம்: நினைத்தது நிறைவேறும்

சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1 ம் பாதத்தில் (சிம்மம்) பிறந்தவர்களுக்கு சூரியன் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (கன்னி) புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் குரு 10 ல் சஞ்சரித்து, உழைப்பிற்கேற்ற லாபம், முயற்சிக்கேற்ற வெற்றி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை வழங்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகம், திடீர் அதிர்ஷ்டம், வெற்றி, பதவி, யாத்திரை செல்லும் பாக்கியம் தருவார்.

பார்வைகளின் பலன்: 1ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள் 2,4,6 ம் இடங்களில் பதிவதால் குடும்பத்தில் நிம்மதி, எதிர்பார்த்த வரவு உண்டாகும். வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். உடல் பாதிப்புகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். தடைபட்ட செயல்கள் வெற்றியாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 1,3,5 ம் இடங்களின் மீது குருபார்வை படுவதால் செல்வாக்கு உயரும்.  விருப்பம் நிறைவேறும், பூர்வீகச் சொத்தில் பிரச்னை மறையும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு நல்ல வரன் வரும்.

சனி சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு சப்தம ஸ்தான சனியால் வீண் அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பொருளாதாரத் தடை, தம்பதியருக்குள் சச்சரவு, உடல்பாதிப்பு உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். சங்கடம் விலகும். வழக்கு விவகாரத்தில் வெற்றி உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு 2ல்  சஞ்சரிக்கும் கேதுவால் குடும்ப குழப்பம், நிம்மதியற்ற நிலை உண்டாகும். வரவு தடைபடும். 8ம் இட ராகுவால் செல்வாக்கு, அந்தஸ்திற்கு சோதனை உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம கேதுவால் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் இழுபறி உண்டாகும். 7 ம் இட ராகுவால் எதிர்பாலினரால் சங்கடம் தோன்றும். தம்பதியருக்குள் பிரச்னை ஏற்படும். கூட்டுத் தொழிலில் சங்கடம் தோன்றும்.
சூரிய சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு மே. 14 – ஜூலை 16, அக்.18 – நவ.15, 2025, ஜன.14 – மாரச்14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஆக.16, நவ.16 – டிச.15,  2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் முயற்சி வெற்றி பெறும். வேலையில் பதவி உயர்வு, விரும்பிய மாற்றம் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சியால் வருமானம் உயரும்.  

பொதுப்பலன்: 1 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும், 6 ம் இட சனியும்,  120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் 4 பாதத்தினருக்கும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவர். பொருளாதார வளர்ச்சி தோன்றும். பணம் பலவழியில் வரும். தொழில் வழியாக வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும்.

தொழில் : தொழிலில் தடை விலகும். லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர்.  வருமானத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். விற்பனை அதிகரிக்கும்.
பணியாளர்கள்: பணியாளர்களுக்கு இருந்த நெருக்கடி மாறும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட பதவி உயர்வு வரும். விரும்பிய இட மாற்றம் ஏற்படும்.
பெண்கள்: குருவின் சஞ்சார நிலை, பார்வைகளால் குழப்பம் மறையும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடலில் பாதிப்பு விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
கல்வி : பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விருப்பப்பட்ட கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: உடலில் இருந்த பாதிப்பு விலகும். சுவாசப் பிரச்னை, பி.பி, சுகர், நரம்பு என்று ஏதாவது ஒரு பாதிப்பால் சங்கடத்திற்கு ஆளான உங்களுக்கு இனி நிவாரணம் கிடைக்கும்.
குடும்பம்: ரிஷப குருவால் சங்கடம் தீரும். பணவரவு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.  பணவரவால் சொத்து, வாகனம் வாங்குவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சி நடக்கும்.

பரிகாரம்: தினமும் காலையில் குலதெய்வத்தை வழிபட குறைகள் நீங்கும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
உத்திரம்: நினைத்தது நிறைவேறும்சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1 ம் பாதத்தில் (சிம்மம்) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar