Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025 கும்பம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025 கும்பம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
மகரம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025
எழுத்தின் அளவு:
மகரம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025

பதிவு செய்த நாள்

22 ஏப்
2024
05:04

உத்திராடம்: போட்டியில் வெற்றி

சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தினருக்கு (தனுசு) குரு ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (மகரம்) சனி ராசிநாதனாகவும் உள்ளனர். உத்திராடம் 1ம் பாதத்தினருக்கு மே 1 முதல் 6 ல் சஞ்சரிக்கும் குருவால் நற்பலன் தர முடியாது. எதிரி தொல்லை, உடல் சங்கடம் ஏற்படலாம். 2,3,4 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரித்து பூர்வ புண்ணிய பலன் வழங்குவார். பிரச்னை மறையும்.

பார்வைகளின் பலன்: 1ம் பாதத்தினருக்கு குரு 6ல் சஞ்சரித்தாலும் அவரது 5,7,9ம் பார்வைகளால் முன்னேற்றத்தை தருவார். பணவரவு கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசி, 9,11ம் இடங்களை குரு பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும்.

சனி சஞ்சாரம் : 1ம் பாதத்தினருக்கு 3ல் சஞ்சரிக்கும் சனியால் முயற்சி வெற்றியாகும். நினைப்பது நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் குழப்பம் தோன்றும். ராசிக்கு குருபார்வை உண்டாவதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தினருக்கு 4ம் இட ராகுவால் குடும்பத்தில் நெருக்கடி தோன்றும். உடல்நிலையும் ஒருநேரம் மறுநேரம் இருக்காது. 10ம் இட கேதுவால் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 3ம் இட ராகுவால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். 9ம் இட கேதுவால் தெய்வ அருள் உண்டாகும்.
சூரிய சஞ்சாரம் : 1ம் பாதத்தினருக்கு மே. 14 – ஜூன் 14, செப். 17 – நவ.15, 2025, பிப்.13 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, அக்.18 – டிச.15, 2025, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் நெருக்கடி தீரும். தொழில், வேலையில் உயர்வு உண்டாகும். வழக்கில் சாதக நிலை உண்டாகும்.

பொதுப்பலன்  : 1ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும் 3ம் இட சனியும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 5 ம் இட குருவின் சஞ்சாரமும் பார்வைகளும், 3 ம் இட ராகுவும், நான்கு பாதத்தினருக்கும் சூரியன் 120 நாட்களும் செவ்வாய் 90 நாட்களும் உங்கள் வாழ்வில் வளத்தை ஏற்படுத்தும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
தொழில்  : சனியும், குருவும் சாதகமாக இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த செயல்கள் வெற்றியடையும்.
பணியாளர்கள் : நெருக்கடி விலகும். தற்காலிக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். அரசு பணியாளர்களுக்கு பாதிப்பு விலகும். விரும்பிய இடமாற்றம், எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும்.
பெண்கள்: விருப்பம் நிறைவேறும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். உடல் பாதிப்பு நீங்கும். செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவர்.
கல்வி : படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வு, போட்டிகளில் மாணவர்கள் வெற்றி கிடைக்கும்.  மேற்படிப்பிற்கான முயற்சி பலிதமாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை : உடல் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பரம்பரை நோய், தொற்றுநோய் போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள். யோகா, தியானம், நடைபயிற்சி நன்மையளிக்கும்.
குடும்பம்  : குடும்ப பிரச்னை விலகும். வெளிநபரால் வந்த குழப்பம் முடிவிற்கு வரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பு உயரும். சொத்து சேரும். சிலருக்கு புதிய வீடு அமையும். சுபநிகழ்ச்சி நடக்கும்.

பரிகாரம் : சிவன், விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் மறையும்.


திருவோணம்: செல்வாக்கு உயரும்

சந்திரனை நட்சத்திராதிபதியாகவும், சனியை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள். நினைத்ததை சாதிப்பதில் சாமர்த்தியசாலிகள். இதுவரை ராசிக்கு  4ல் சஞ்சரித்து சங்கடத்தை உண்டாக்கிய குரு பகவான் மே 1 முதல் 5ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். ஐந்தில் குரு சஞ்சரிக்க அனைத்தும் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். 12 ஆண்டுகளுக்குப் பின் வாழ்வில் யோகத்தை தரப் போகிறார்.

பார்வைகளின் பலன்: 5ல் சஞ்சரித்து வளம் தரும் குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசி, 9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் உடல்நிலை சீராகும். உற்சாகம் அதிகரிக்கும். உயர் பதவியும் பொறுப்பும் ஏற்படும். எதிரிகள் பணிவர். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். தடைபட்ட வருமானம் வரத் தொடங்கும். முடங்கிய முயற்சிகள் இனி நடக்கும். நம்ப முடியாத அளவிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

சனி சஞ்சாரம் : ஏழரைச் சனியால் வருமானத்தில் நெருக்கடி ஏற்படும், குடும்பத்தில் குழப்பம் தோன்றும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். ஆனால் சனியின் பார்வை லாப ஸ்தானத்திற்கு உண்டாவதால் வருமானம் அதிகரிக்கும். ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் சனியின் கெடுபலன் குறையும்.
ராகு, கேது சஞ்சாரம்: 3ம் இட ராகுவால் தொய்வான பணிகள் நிறைவேறும். முயற்சி யாவும் வெற்றியாகும். வியாபாரம், தொழில் லாபம் கூடும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். 9 ம் இட கேதுவால் தெய்வபலம் கூடும்.  பெரியோரின் ஆசி கிடைக்கும். சிலர் கோயில் திருப்பணிகளை முன்னின்று நடத்துவர்.
சூரிய சஞ்சாரம் : ஜூன் 15 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2025, மார்ச் 15 – ஏப். 13 காலங்களில் சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பார். இக்காலத்தில் அந்தஸ்து உயரும். சட்டச் சிக்கல் மறையும். நெருக்கடி விலகும். உடல்நிலை மேம்படும். வியாபாரம், தொழிலில் உயர்வை ஏற்படுத்துவார். வேலை தேடுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவார். புதிய தொழில் தொடங்கும்  முயற்சி வெற்றி பெறும். அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவார்.

பொதுப்பலன்  : குருவின் பார்வைகள், 3ம் இட ராகு, 120 நாட்கள் சூரியன், 90 நாட்கள் செவ்வாய் உங்கள் வாழ்வை வளமாக்குவர். அதிர்ஷ்டக் காற்று உங்களை நோக்கி வீசும். வியாபாரத்தில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி என்று அனைத்திலும் உங்கள் நிலை உயரும்.  சொத்து சேரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். நோய் பாதிப்பு நீங்கும்.

தொழில்  : தொழிலில் தடை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வாடகை, லீஸ் இடங்களில் தொழில் செய்பவர்களுக்கு அந்த இடத்தை சொந்தமாக வாங்கும் நிலையுண்டாகும். பணியாளர்கள் ஆதரவு அதிகரிக்கும். இழுபறியான செயல்கள் நிறைவேறும்.
பணியாளர்கள்: ஐந்தாமிட குரு அதிர்ஷ்டம் அளிப்பார். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு ஏற்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு கடந்த கால பிரச்னை முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும்.
பெண்கள்: அஷ்ட லட்சுமியின் ஆசி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு ஏற்படும். சிலர் வீடு கட்டி குடியேறுவர்.
கல்வி : ஐந்தாமிட குருவால் மேற்கல்வி எண்ணம் நிறைவேறும். மேற்படிப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: உங்கள் ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் குறையும். வைத்தியச் செலவு கட்டுப்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
குடும்பம்  : குடும்ப வாழ்க்கை சிறக்கும். விருப்பம் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். குலதெய்வ அருள் சேரும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும்.

பரிகாரம் : லட்சுமி நாராயணரை தினமும் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.


அவிட்டம்: தொழிலில் முன்னேற்றம்

செவ்வாயை நட்சத்திராதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும் 1,2ம் பாதத்தினருக்கும் (மகரம்) 3,4 ம் பாதத்தினருக்கும் சனியே ராசி நாதனாக உள்ளார். குரு மே1 முதல் 1,2 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரித்து அதிர்ஷ்ட வாய்ப்பை அள்ளித் தருவார். பொன், பொருள், புகழை வழங்குவார். 3,4 ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரித்து அமைதியின்மை, உடல் சோர்வை ஏற்படுத்துவார்.

பார்வைகளின் பலன்: 1,2 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள், ஜென்ம ராசிக்கும், 9,11 ம் இடங்களுக்கும் உண்டாவதால் தொட்டதெல்லாம் பொன்னாகும்.3,4ம் பாதத்தினருக்கு 8,10,12ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் உடல்பாதிப்பு குறையும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும்.

சனி சஞ்சாரம் : 1,2 ம் பாதத்தினருக்கு 2ம் இடச் சனியால் தடைகள் குறுக்கிடும். வருமானம் எதிர்பார்த்தது போல இருக்காது. குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். 3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் உடல் சங்கடம் தோன்றும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2ம் பாதத்தினருக்கு 3ம் இட ராகுவால் முயற்சி வெற்றியாகும். முடியாமல் நின்ற வேலைகள் நிறைவேறும்.  9ம் இட கேதுவால் பெரியோர் ஆசி கிடைக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு 2ம் இட ராகுவால் வருமானத்தில் நெருக்கடி, குடும்பத்தில் சங்கடம் உருவாகும். 8ம் இட கேதுவால் உடல் பாதிப்பு, வேலைப்பளு உண்டாகும்.
சூரிய சஞ்சாரம் : 1,2 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 - ஜூலை 16, அக்.18 - டிச.15, 2025, மார்ச் 15 - ஏப்.13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 - மே13, ஜூலை 17 - ஆக.16, நவ.16 - 2025 ஜன. 13 காலங்களிலும் சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். இதனால் நெருக்கடி விலகும்.  முயற்சி வெற்றி பெறும். நோய் தீரும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம், தொழில்,  உயர்வு அடையும்.

பொதுப்பலன்  : 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரத்துடன் அவரது  பார்வைகளும், 3ம் இட ராகுவும், 3,4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், நான்கு பாதத்தினருக்கும் சூரியன் 120 நாட்களும் செவ்வாய் 90 நாட்களும் வாழ்வில் முன்னேற்றம் தருவர். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

தொழில்  : தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.  இழுபறியாக இருந்த செயல்கள் நிறைவேறும்.
பணியாளர்கள் : பணியிடத்தில் நெருக்கடி விலகும். சலுகைகள் கிடைக்கும். அரசு பணியாளர்களின் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும்.
பெண்கள்: குடும்பத்தில் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். புதிய பொறுப்பு உண்டாகும்.
கல்வி : படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வு முடிவுகள் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றும். மேற்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை  : மருத்துவச் செலவு கட்டுப்படும். யோகா, தியானம், நடைபயிற்சி என உடல்நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
குடும்பம்  : குடும்பத்தில் குழப்பம் தீரும். தம்பதியர்  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துவீர்கள். பொன் பொருள் சேரும். சேமிப்பால் சொத்து சேரும்.

பரிகாரம் : கருடன், முருகப்பெருமானை வழிபட நன்மை அதிகரிக்கும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar