Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
மீனம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025
எழுத்தின் அளவு:
மீனம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025

பதிவு செய்த நாள்

22 ஏப்
2024
05:04

பூரட்டாதி: எச்சரிக்கை தேவை

குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தினருக்கு (கும்பம்) சனி ராசி நாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு (மீனம்) குரு ராசிநாதனாகவும் உள்ளார். இதுவரை 1,2,3 ம் பாதத்தினருக்கு 3ல் சஞ்சரித்த குரு மே1 முதல் 4ல் இருப்பதால் தடைபட்ட பணிகள் முடியும். புகழ் உண்டாகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றலாம். 4ம் பாதத்தினருக்கு மறைவு ஸ்தானமான 3ல் சஞ்சரிக்கிறார் குரு. சுபகிரகம் மறைவு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது நன்மை குறையும். எதிலும் எச்சரிக்கை தேவை.

பார்வைகளின் பலன்: 1,2,3ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் 8,10,12 ம் இடங்களுக்கு உண்டாவதால் அந்தஸ்து உயரும். உடல் பாதிப்பு நீங்கும். வேலைக்கான முயற்சி வெற்றி பெறும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். 4ம் பாதத்தினருக்கு 7,9,11 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரச்னை விலகும். லாபம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். தொழிலில் லாபம் கூடும்.

சனி சஞ்சாரம் : 1,2,3ம் பாதத்தினருக்கு ஜென்ம சனியால் மனதில் இனம் புரியாத குழப்பம், ஆரோக்கியத்தில் சங்கடம் தோன்றும். கூட்டுத்தொழிலில் குதர்க்கம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடையே இடைவெளி தோன்றும். 4 ம் பாதத்தினருக்கு விரயச் சனியால்  எதிர்பாராத செலவு தோன்றும். வாகனம் பழுதாகும். வருவாயில் தடை, தாமதம் உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 2ம் இட ராகுவால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். வருமானத்தில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். 8ம் இட கேதுவால் உடல் பாதிப்பு உண்டாகும். விபத்து, விரும்பாத இட மாற்றம் ஏற்படலாம். 4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவால் ஆசை அதிகரிக்கும். பணம் பறிபோகும். அவமானம் ஏற்படும். 7 மிட கேதுவால் வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் குறையும். கூட்டுத்தொழிலில் பிரச்னை உண்டாகும்.
சூரிய சஞ்சாரம் : 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 1 – மே13, ஜூலை 17 – ஆக.16, நவ.16 – 2025 ஜன. 13 காலங்களிலும், 4ம் பாதத்தினருக்கு மே14 – ஜூன் 14, ஆக.17 – செப்.16, டிச.16 – 2025 பிப். 12 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 இட சஞ்சாரத்தால் லாபம் அதிகரிக்கும். துணிச்சல் கூடும். முன்னேற்றம் ஏற்படும்.  வழக்குகள் சாதகமாகும். நோய் தீரும்.

பொதுப்பலன்   : குரு பார்வைகளாலும், சூரியனால் 120 நாட்களும், செவ்வாயால் 90 நாட்களும் பிரச்னைகள் குறையும். தடைபட்ட செயல் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். அந்தஸ்து, ஆரோக்கியம் கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும்.

தொழில்  : தொழிலில் தடைகள் விலகும். நஷ்டத்தில் இருந்த தொழில்களும் இக்காலத்தில் லாபம் காணும். உற்பத்தி அதிகரிக்கும். ஊழியர்கள் ஒத்துழைப்பர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பணியாளர்கள் : பணிபுரியும் இடத்தில் சங்கடம் விலகும். சம்பளம் கூடும். சலுகை கிடைக்கும். ஆனால் வேலைப்பளு கூடும். சகபணியாளர்கள், அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.  
பெண்கள்: குடும்பத்தினர் புரிந்து கொள்ளாமல் செயல்படுவர். வாழ்க்கைத் துணைக்கும், உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். வேலைப்பளு கூடும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் தடைபடும்.
கல்வி : தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் போகலாம். மேற்கல்வி பெற விடாமுயற்சி தேவை. படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.
உடல்நிலை: உடம்பில் ஏதேனும் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். அல்சர், அஜீரணம், கர்ப்பப்பை பிரச்சினை, விபத்து என அடிக்கடி மருத்துவ செலவை சந்திக்க நேரும்.
குடும்பம்  : தம்பதிக்குள் பிரச்னை தோன்றலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி தோன்றலாம். இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால் நிம்மதி கிடைக்கும்.

பரிகாரம்: கருமாரியம்மன், ஈஸ்வரரை தினமும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.


உத்திரட்டாதி: திருப்பம் உண்டாக்கும்

சனியை நட்சத்திராதிபதியாகவும், குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் நினைத்ததை அடையக்கூடியவராக இருப்பீர்கள். மே1 முதல் மறைவு ஸ்தானமான 3 ம் இடத்தில் குரு  சஞ்சரிப்பதால் எதிர்பார்க்காத திருப்பம், மாற்றம் உருவாகும். செல்வாக்கு, தன்னம்பிக்கை எல்லாம் தளர ஆரம்பிக்கும்.

பார்வைகளின் பலன்: குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசிக்கு 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி விலகும். லாபம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

சனி சஞ்சாரம் : சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடி, வீண் அலைச்சல், எதிரிகளால் இடையூறு, எதிர்பாராத செலவு தோன்றும். வரவேண்டிய வருவாயில் தடை, தாமதம் உண்டாகும். உடல்நிலையில் சங்கடம், உறவுகளிடம் பகை உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவால் ஆசை அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும்.  எதிர்பார்ப்பு கூடும். பணம் பறிபோகும். அவமானம் ஏற்படும். முயற்சி இழுபறியாகும். 7 ம் இட கேதுவால் வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை உண்டாகும். தீயவர்களின் சேர்க்கை உண்டாகும். கூட்டுத்தொழிலில் சங்கடம் தோன்றும்.
சூரிய சஞ்சாரம் : ராசிக்கு 3,6,10,11 இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் போது ஆதாயம் கூடும். யோக நிலை உண்டாகும். மே14 – ஜூன். 14, ஆக.17 – செப்.16, டிச.16 – 2025 பிப்.12 காலங்களில் செயல்களில் வெற்றி உண்டாகும். முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வழக்கில் வெற்றி சேரும். நோய் பாதிப்பு விலகும்.  

பொதுப்பலன்  : குரு பார்வையாலும், சூரியன் 120 நாட்களும், செவ்வாய் 90 நாட்களும் நன்மையளிப்பர். இதனால் பிரச்னை தீரும். தடைபட்ட முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் உயரும். ஆரோக்கியம் சீர்படும். நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். வருமானம் அதிகரிக்கும்.

தொழில்  : தொழிலை விரிவு செய்வீர்கள். பணியாளர்களும் ஒத்துழைப்பர். நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த தொழில்களும் இக்காலத்தில் லாபம் காணும். உற்பத்தி அதிகரிக்கும். வருமானம் உயரும்.
பணியாளர்கள் : பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். கடந்த கால பிரச்னைகள் மறையும்.  ஊதியம் உயரும். சலுகை கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு அதிகாரிகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் முடிவில் பாராட்டு கிடைக்கும்.
பெண்கள் : குரு பார்வைகளால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு மண வாழ்வு அமையும். பிரிந்த கணவருடன் மீண்டும் சேர்வீர்கள். பொன், பொருள் சேரும். புதிய நண்பரால் சங்கடத்திற்கு ஆளாகலாம். எதிர்பாலினரிடம் எச்சரிக்கை தேவை.
கல்வி : குருவின் பார்வை பாக்ய ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைப்பதுடன் விரும்பிய கல்லுாரியில் சேர்வீர்கள்.
உடல்நிலை  : உடல்நிலையில் கவனம் தேவை. ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பதும், நேரத்திற்கு உறங்குவதும் அவசியம். யோகா, தியானம், நடைபயிற்சி ஆரோக்கியத்தை சீர்படுத்தும்.
குடும்பம்  : குரு பார்வையால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமண முயற்சி நிறைவேறும். சொத்து சேரும். சேமிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

பரிகாரம் : குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்ய வாழ்வு சிறக்கும்.


ரேவதி: முயற்சிக்கேற்ப லாபம்

புதனை நட்சத்திராதிபதியாகவும், குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், சாதுரியமாக செயல்பட்டு சாதனை படைப்பவராக இருப்பீர்கள். இதுவரை 2ல் சஞ்சரித்த குரு மே 1 முதல்
3ல் சஞ்சரிப்பதால் சாதகமான பலன் பெற முடியாது. ஆனால் அஸ்தமனம், வக்கிர காலத்தில் நன்மை ஏற்படும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமும், லாபமும் ஏற்படும்.  

பார்வைகளின் பலன்: குருவின் சஞ்சாரம் சங்கடத்தை உண்டாக்கினாலும், ராசிக்கு 7,9,11 ம் இடங்களைப் பார்ப்பதால் சுபநிகழ்சி நடக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும்.  பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் ஏற்படும். பண வரவில் தடை விலகும். சிலருக்கு கடல் கடந்து செல்லும் நிலை ஏற்படும்.

சனி சஞ்சாரம் : சனி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் செலவு, அலைச்சல் அதிகரிக்கும். எளிதாக முடியும் வேலை கூட இழுபறியாகும். எதிரி தொல்லை ஏற்படும். வருமானத்தில் தடை, தாமதம் உண்டாகும். உடல் பாதிப்பு, உறவுகளிடம் பகை ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்: ஜென்ம ராகுவால் தடுமாற்றம் ஏற்படும். மனதில் ஆசை அதிகரிக்கும். சிலர்  கையிருப்பை புதியவர்களிடம் முதலீடு செய்து ஏமாற்றத்திற்கு ஆளாவர். முயற்சிகள் இழுபறியாகும். 7 ம் இட கேதுவால் கூட்டுத் தொழிலில் குதர்க்கம் உருவாகும். வாழ்க்கைத் துணையுடன்  பிரச்னை, நண்பர்களின் கருத்து வேறுபாடு உண்டாகும்.
சூரிய சஞ்சாரம்: சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது ஆதாயம் தருவார்.  யோகபலன் கிடைக்கும். மே14 – ஜூன்14, ஆக.17 –  செப்.16, டிச.16 – 2025 பிப். 12 காலங்களில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் காண்பீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நோய் பாதிப்பு விலகும். தொழில், வியாபாரம், பணியில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.

பொதுப்பலன்   : குரு பார்வைகளாலும், சூரியன் 120 நாட்களும், செவ்வாய் 90 நாட்களும் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். கவுரவம், அந்தஸ்து உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வருமானம் அதிகரிக்கும்.

தொழில்  : தொழில் விருத்தியாகும். உற்பத்தி இல்லாமல் முடங்கிய தொழில்கள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கும். உங்களின் முயற்சிக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பர். லாபம் உயரும்.
பணியாளர்கள் : வேலையில் இருந்த பிரச்னை தீரும். எதிர்பார்த்த ஊதியம், சலுகை கிடைக்கும். முதலாளியின் ஆதரவு அதிகரிக்கும். அரசு பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படும்.
பெண்கள் : எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். உடல்பாதிப்பு விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும்.
கல்வி : படிப்பில் திறமை வெளிப்படும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைப்பதுடன் விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக கடல் கடந்து செல்வர்.
உடல்நிலை: விரயச் சனியால் உடல்நலனில் கவனம் தேவை. வாகனப் பயணம், இயந்திரப் பணிகளில் விழிப்புடன் செயல்படுங்கள். சிலருக்கு நோய்களின் சங்கடம் அதிகரிக்கும். யோகா, தியானம், இயற்கை வைத்தியத்தால் உடல்நிலை சீராகும்.
குடும்பம்  : குரு பார்வைகளால் சுபிட்சம் ஏற்படும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து வாங்குவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். நெருக்கடி தீரும். பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமண முயற்சி நிறைவேறும். சேமிப்பு உயரும். குடும்பத்துடன் கோயில்களுக்கு செல்வீர்கள்.

பரிகாரம் : மீனாட்சியம்மனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar