பதிவு செய்த நாள்
11
ஜன
2025
04:01
மேஷம்: அசுவினி: எதிர்காலத்தை சரியாக தெரிந்து, அதன் வழியாக வெற்றி பெற்று வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதம். இதுவரை தடைபட்டிருந்த வேலை ஒவ்வொன்றாக நடைபெறும். உங்கள் நீண்டகால கனவு நனவாகும். உத்தியோகம் தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி, நெருக்கடி குறையும். செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும் குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான் முன்னேற்றமான பலன்களை வழங்குவார். முடங்கிக் கிடந்த தொழில்களை இயங்க வைப்பார். தொழிலில் லாபத்தை உண்டாக்குவார். வரவை அதிகரிப்பார். புதிய தொழில், வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்து வருகின்றவர்களுக்கு அதற்குரிய வழிகளை வழங்குவார். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலத்தை அதிகரிப்பார். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பும், பதவியும் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். தடைபட்டிருந்த சுப காரியம் நடக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். உறவுகள் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 23, 24.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 16, 18, 25, 27. பிப். 7, 9.
பரிகாரம்: செல்வ விநாயகரை வழிபட செல்வாக்கு உண்டாகும்.
பரணி : அதிர்ஷ்டம் நிறைந்த உங்களுக்கு பிறக்கும் தை மாதம் லாபமான மாதம். திட்டமிட்டிருந்த வேலைகளை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர்கள். உங்கள் வார்த்தைக்கு வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த தடை ஒவ்வொன்றாக விலகும். ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் நிலை மாறும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி, பிரச்னை விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சுக்கிரனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். ஒரு சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு விருப்பப் பட்ட வாகனம் வாங்குவீர். சனி லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். வருமானம் அதிகரிக்கும். தை பிறந்ததும் வழி பிறக்கும் என்பதுபோல் ஒரு சிலருக்கு புதிய தொழில் அமையும். வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடிபுகுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்.
சந்திராஷ்டமம்: ஜன. 24, 25.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 18, 27. பிப். 6, 9.
பரிகாரம்: துர்கைக்கு தீபமேற்றி வழிபட நன்மை உண்டாகும்.
கார்த்திகை 1 ம் பாதம்; எதிலும் முதலிடத்தில் இருக்கும் வாய்ப்பு பெற்ற உங்களுக்கு பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சூரியன் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னை, சங்கடம் அனைத்தும் ஒவ்வொன்றாக விலகும். நீங்கள் திட்டமிட்டிருந்த வேலை திட்டமிட்டபடி நடக்கும். அலுவலகப் பிரச்னை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம், உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வீட்டில் சுப செயல் நடக்கும். கேதுவால் உடல்நிலை முன்னேற்றம் அடையும். நோய்களால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராவீர்கள். லாப சனியால் எடுத்த வேலை லாபமாகும். வரவு அதிகரிக்கும். சுக்கிரனும், புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த இடத்தை வாங்க முடியும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். அன்பு அதிகரிக்கும். உறவினர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 26.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 18, 19, 27, 28. பிப். 1, 9, 10.
பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வணங்கி வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.