பதிவு செய்த நாள்
11
ஜன
2025
04:01
சிம்மம்: மகம்; எதிலும் பின்விளைவுகள் பற்றி யோசித்து நிதானமாக செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதம். சனி, ராகு, கேது ஆகியோர் உங்களுக்கு தை மாதம் மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் உங்கள் ராசிநாதன் சூரியனால் ஆற்றல் அதிகரிக்கும். கண்களைக் கட்டி நடுக்காட்டில் விட்டது போல் தவித்துக்கொண்டிருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைக்குரிய தேவைகளை அடைய வைப்பார். உடல் நிலை, மன நிலையில் இருந்த சங்கடம், பிரச்னை எல்லாம் விலகும். தொழிலில் ஏற்பட்ட போட்டி இருந்த இடம் தெரியாமல் மறையும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்ட வேலை நடக்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். திறமை வெளிப்படும் மாதம் இது. புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய சொத்து சேரும். கலைஞர் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திலும், பண வரவிலும் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த வரவு வரும். அரசு வழியில் தடைபட்ட வேலை ஒவ்வொன்றாக நடைபெற ஆரம்பிக்கும். எல்லாவற்றிலும் நிதானமாக செயல்படுவதால் விருப்பம் பூர்த்தியாகும். உழைப்பாளர் நிலை உயரும். மாணவர் ஆசிரியர் ஆலோசனையை ஏற்பது நல்லது. விவசாயிகள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: பிப். 2.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 16, 19, 25, 28. பிப். 1, 7, 10.
பரிகாரம்: வல்லப கணபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
பூரம்: உங்கள் நிலையில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருந்து, சமூகத்தில் நற்பெயர் பெற்று வரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம். கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலக ஆரம்பிக்கும். மாதத்தின் முற்பகுதியில் சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தும். எதிர் பாலினரால் பிரச்னைகளுக்கு ஆளாக வேண்டியதாக இருக்கும். உங்களுக்கு அவப்பெயர் உண்டாகலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம். மாதத்தின் பிற்பகுதியில் நிலைமை மாறும். உங்களை நீங்களே புரிந்து கொள்வீர்கள். ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் எத்தனை சங்கடம் வந்தாலும் அவற்றிலிருந்து வெளியில் வர முடியும். நீங்கள் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்வீர்கள். குடும்பத்திலும், தொழிலிலும் நிம்மதி இருக்கும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகளும் விலகும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். உறவினர் ஆதரவாக இருப்பர். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். பிள்ளைகள் பற்றிய கவலை வேண்டாம். உடல் நிலையில் எப்பொழுதும் கவனமாக இருப்பது நல்லது. ராகுவால் உடலில் இனம் புரியாத பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை அப்படியே விட்டு விடாமல் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். மாணவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வம் கூடும். அரசியல்வாதிகள், உழைப்பாளர்கள் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: பிப். 3.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 19, 24, 28. பிப். 1, 6, 10.
பரிகாரம்: கருமாரி அம்மனை வழிபட கஷ்டம் விலகும்.
உத்திரம் 1ம் பாதம்: ஆத்ம பலம் கொண்ட உங்களுக்கு எந்த ஒன்றையும் சமாளித்திடும் சக்தி எப்பொழுதும் இருக்கும். பிறக்கும் தை மாதம் வாழ்வில் யோகமான மாதம். உங்கள் நட்சத்திர, ராசிநாதன் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கு இருந்த நெருக்கடி எல்லாம் இந்த மாதத்தில் இல்லாமல் போகும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் யோசித்து, யோசித்து செயல்பட்டு வந்த நிலையில் மாறும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக் கூடிய அளவிற்கு வாய்ப்பு உருவாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். சனி, ராகு, கேது என்று கிரகம் எதிர்மறையாக சஞ்சரித்தாலும் சூரியனின் சஞ்சாரம் எல்லா பாதிப்புகளையும் தடுத்து நிறுத்தி முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
புதபகவானும் மாதத்தின் முதல் வாரத்திலும் கடைசி வாரத்திலும் உங்களுக்கு யோகமான பலன்களை வழங்குவார். நேற்றைய கனவு நனவாகும். இடம், வீடு என்ற ஆசை பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வீட்டில் குடியேற முடியும். வீட்டில் சுப காரியம் நடக்கும். சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் சமூகத்தில் உங்கள் நிலை உயரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாலினரால் ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் முடிவிற்குவரும். வெளிநாடு செல்வதற்காக எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியதாக இருக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உழைப்பாளர்களும் மதிப்பும் மரியாதையும் கூடும். மாணவர்கள் படிப்பின் அவசியம் புரிந்து செயல்படுவர்.
சந்திராஷ்டமம்: பிப். 3.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 19, 28. பிப். 1, 10.
பரிகாரம்: நாள்தோறும் சூரிய பகவானை வழிபட வளம் உண்டாகும்.