பதிவு செய்த நாள்
11
ஜன
2025
04:01
கன்னி: உத்திரம் 2, 3, 4ம் பாதம்; முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். மனக்குழப்பம் விலக ஆரம்பிக்கும். தொழிலில் புதிய பாதை தெரியும். இதுவரை இருந்த நெருக்கடியில் இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி, வழக்கு விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முன்னேற்றத்தை நோக்கியதாகவே இருக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். அதனால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் எதிர்மறையாக இருப்பதால் எதிர்பாலினர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், அவர்களுடைய ஆலோசனைகளை ஏற்பதும் பெரும் சங்கடங்களில் இருந்து பாதுகாக்கும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் வேலையில் மட்டும் கவனமாக இருப்பது அவசியம். பிறருக்கு ஜாமீன் போடுவது, சிபாரிசு செய்வது என்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம். அது உங்களுக்கே எதிர்மறையாக மாறும். ஒரு சிலர் உடன் பணிபுரிபவரால் அவமானத்திற்கு ஆளாகவும் நேரும். விலகி நின்று பழகுவது நல்லது. சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு மனதில் சலனங்களை ஏற்படுத்தலாம், தவறானவர்கள் பின்னால் உங்களைப் போக வைக்கலாம். அதனால், குடும்ப வாழ்க்கையில் பிரச்னை உருவாகும். என்பதை மனதில் கொண்டு செயல்படுவது அவசியம். சனிபகவான் உங்களைப் பாதுகாப்பார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்குவார். வழக்கு விவகாரம், போட்டிகள், பிரச்னைகளில் உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவார். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். உழைப்பாளர்கள் நிலை முன்னேற்றமடையும்.
சந்திராஷ்டமம்: பிப். 4.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 19, 23, 28. பிப். 1, 5, 10.
பரிகாரம்: வராகியை வழிபட சங்கடம் விலகும்.
அஸ்தம்: தெளிந்த சிந்தனையுடன், திட்டமிட்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். சனி பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், சனி கொடுக்க எவர் தடுக்க முடியும் என்பதை உணர்வீர்கள். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் மறையும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி, எதிர்ப்பு விலகும். விவகாரம் சாதகமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் இருப்பவரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தடைபட்ட வேலை நடக்கும். புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகளை நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நேற்றைய கனவு நனவாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாதம் முழுவதும் குரு பகவான் வக்ரமடைந்திருப்பதால் ஜென்ம கேதுவின் சஞ்சாரம் குழப்பங்களை ஏற்படுத்தும். நன்மை எது? தீமை எது? என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சிந்தனை மழுங்கும். ஒவ்வொன்றிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. 7 ம் இட ராகு ஆசைகளை அதிகரிக்கலாம். அதற்கெல்லாம் இடம் கொடுத்தால் அது உங்களுக்கு எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகளை ஏற்பது அவசியம். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். யாரை எப்படி பயன்படுத்துவது? எந்த இடத்தில் வைப்பது? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக பிறரை நம்பி எந்த ஒரு வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். உங்களால் முடிந்தவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உழைப்பாளர்களுக்கு முயற்சிக்கேற்ற லாபம் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரைகளை ஏற்பது நல்லது.
சந்திராஷ்டமம்: பிப். 4, 5.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 20, 23, 29. பிப். 2, 11.
பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.
சித்திரை 1, 2ம் பாதம்: சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளும் திறமை படைத்த உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம். நட்சத்திரநாதன் செவ்வாய் வக்ரம் அடைந்திருந்தாலும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி உங்களை உயர்த்துவார். செல்வாக்கை உண்டாக்குவார். நேற்றுவரை அனுபவித்து வந்த சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். போட்டியாளர்களால் அடைந்து வந்த சங்கடம் இல்லாமல் போகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தை விருத்தி செய்வீர். வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். குடும்பத்திலும் நிம்மதியான நிலை ஏற்படும். புதிய வாகனம், சொத்து வாங்கும் கனவு நனவாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். பிள்ளைகள் நலனிலும் பூர்வீக சொத்து விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பது அவசியம். மாதம் முழுவதும் சுக்கிரனின் சஞ்சாரமும், மாதத்தின் இடைப்பகுதியில் புதனின் சஞ்சாரமும் உங்களுக்கு எதிர்மறையாக இருப்பதால் செல்வாக்கு, அந்தஸ்திற்கு நெருக்கடி ஏற்படலாம். அவப்பெயரும் உண்டாகலாம். மற்றவர்கள் விமர்சனம் செய்யும் உருவாகும். இந்த நிலைகளை உணர்ந்து செயல்படுகின்றபோது நன்மை அதிகரிக்கும். குடும்பம், கௌரவம், பிள்ளை, அவர்களின் நலன், எதிர்காலம் என்பதை யெல்லாம் யோசித்து செயல்படுவது மிக அவசியம். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதுபோல் கும்ப சனியால் நல்ல வழி உங்களுக்குத் தெரியும். ஒரு சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்திலும் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 5, 6.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 14, 18, 23, 27. பிப். 9.
பரிகாரம்: செந்தூர் வேலனை வழிபட நன்மை நடந்தேறும்.