பதிவு செய்த நாள்
11
ஜன
2025
04:01
துலாம்: சித்திரை 3, 4ம் பாதம்; எதிலும் வேகமாக செயல்பட்டு வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். உங்கள் வேலை இந்த மாதத்தில் எளிதாக நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றி அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உறவுகளிடம் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வியாபாரியின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழல் உண்டாகும். குடும்ப பிரச்னை விலகும். தை பிறந்தால் வழி பிறக்கும்.
புதிய பாதை தெரிய ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவருக்கு வாய்ப்பு உண்டாகும். பெரியோரின் துணையும், ஆசீர்வாதமும் முன்னேற வைக்கும். நெருக்கடி இல்லாத மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. உழைப்பாளர் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: பிப். 6.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 21, 24, 30. பிப். 3, 12.
பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வளம் உண்டாகும்.
சுவாதி: நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் நெருக்கடிகளை விலக ஆரம்பிப்பார். குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் ஏற்பட்ட அவமரியாதை மாறும். நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய முயற்சி வெற்றி அடையும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். குடும்ப பிரச்னை விலகும். ஒரு சிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை, நெருக்கடி முடிவிற்கு வரும். அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். அரசு வழி முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான நிலை உண்டாகும். விவசாயி விளைச்சல் மீது முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது சிறப்பு. எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சேமிப்பில் அக்கறை உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை, புதிய வாகனம் என்று மகிழ்ச்சியான நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும் என்றாலும் ஆசிரியர் ஆலோசனை மேலும் நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: பிப். 6, 7.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 22, 24, 31. பிப். 4.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட கஷ்டம் தீரும்.
விசாகம் 1,2,3ம் பாதம் : சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம். நீங்கள் நினைத்த வேலை இந்த மாதத்தில் நடக்கும். நட்சத்திராதிபதி அஷ்டம ஸ்தானத்தில் வக்ரம் அடைந்திருப்பதால் குழப்பம் விலகும்.ராகுவும், சுக்கிரனும் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவர்கள். குடும்பம், தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த வரவு இருக்கும். உறவினர்கள் உங்களைத் தேடிவந்து உதவிகள் பெற்றுச் செல்வர். சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும், செல்வாக்கும் உயரும். உங்களுக்கு சரியெனப்பட்டதை செய்து முடித்து வழிகாட்டியாக இருப்பீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வந்து எதிர்பார்த்த உயர்வு, மற்றும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு புதிய பொறுப்பு ஊதிய உயர்வு கிடைக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். கனவாக இருந்த இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். புதிய வாகனம் வாங்கும் கனவும் நனவாகும். பிள்ளைகள் வழியில் ஒரு சிலருக்கு செலவு ஏற்படும். அவர்களுடைய முன்னேற்றத்தை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வியாபாரத்தில் பிரச்னை இல்லாத நிலை உருவாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். கலைஞர்களுக்கு, வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம். தொழிலாளர் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: பிப். 7, 8.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 15, 21, 24, 30. பிப். 3, 6, 12.
பரிகாரம்: ஆதி திருவரங்கனை வழிபட அல்லல் நீங்கும்.