பதிவு செய்த நாள்
11
ஜன
2025
04:01
தனுசு: மூலம்; நன்மைத் தீமைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதனால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றியுண்டாகும். அந்நியரால் லாபம் ஏற்படும். பண நெருக்கடி விலகும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. ஒவ்வொன்றிலும் தடை ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இந்த மாதத்தில் உங்களுடைய வேலைகளை நீங்களே செய்து கொள்வது நல்லது. பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் கனவு நனவாகும். நினைப்பது நடந்தேறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். அதன் வழியாக லாபம் உண்டாகும். உங்கள் புத்திசாலித்தனத்தின் காரணமாக நினைத்த வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். தாய்வழி உறவு உங்களுக்கு உதவியாக இருக்கும். அரசியல்வாதியின் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: ஜன. 14, பிப். 10, 11.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 16, 21, 25, 30. பிப். 3, 7, 12.
பரிகாரம்: விநாயகரை வழிபட நன்மை நடந்தேறும்.
பூராடம்: நினைத்ததை சாதிக்கும் சக்தி கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் எதிர்பார்த்த லாபத்தை வழங்குவார். உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். நேற்று இருந்த நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ஆயுள் காரகன் 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இதுவரை தடைபட்ட வேலை நடந்தேறும். வேலைக்காக முயற்சி செய்தவருக்கு நல்ல தகவல் வரும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நண்பர்கள் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பார்த்து வரும் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். ஒரு சிலர் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்காக கோயிலுக்கு சென்று வருவீர்கள். புதபகவானும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வேலை எதிர்பார்த்தபடி நடக்கும். மனச்சுமை குறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். மாணவர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 15. பிப். 11, 12.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 21, 24, 30. பிப். 3, 6.
பரிகாரம்: அஷ்டலட்சுமியை வழிபட வளம் உண்டாகும்.
உத்திராடம் 1ம் பாதம்: முன்னேற்றத்தை மட்டும் லட்சியமாக கொண்ட உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சூரியன் இந்த மாதம் முழுவதும் 2ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதனால், கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி இப்போது இல்லாமல் போகும். உங்கள் வார்த்தையில் தெளிவு இருக்கும். குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். நினைத்த வேலைகளை நடத்தி முடித்திடும் நிலையுண்டாகும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு வேண்டியதை அடைவீர்கள். சனி பகவான் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடிகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றுவார். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடைவீர்கள். என்னதான் முயற்சி செய்தாலும் எதுவும் நடக்கவில்லையே என்ற எண்ணம் விலகும். திட்டமிட்டபடி ஒவ்வொரு வேலையும் நடந்தேறி எதிர்பார்த்த வரவு ஏற்படும். சங்கடம், நெருக்கடி என்ற நிலை மாறும். ஒரு சிலர் கை வசம் உள்ள பணத்தை தங்க நகைகளில் முதலீடு செய்வீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். அரசுவழி வேலைகளில் சிறு தடை ஏற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்த்த லாபத்தை உங்களால் அடைய முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும். செல்வாக்கு அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வீர். தொழிலாளர் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: ஜன. 16. பிப். 12.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 19, 21, 28, 30. பிப். 1, 3, 10.
பரிகாரம்: அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்துவர நன்மை அதிகரிக்கும்.