பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்.. எந்த ஒன்றிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சித்திரை மாதம் முன்னேற்றமான மாதமாகும். மே11 வரை குரு பகவான் 7ல் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் நெருக்கடிகள் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்ப நலன் கருதி எடுக்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவர். தொழில், வியாபாரத்தில், வேலையில், குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். ஏப்.30 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் சொத்து சேரும் வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடங்க முயற்சி வெற்றி பெறும். விவசாயிகளுக்கு இருந்த சங்கடங்கள் நீங்கும். வயதானவர்களுக்கு உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். லாப ஸ்தானம் பலமடைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மே1
அதிர்ஷ்ட நாள்: ஏப்.18,21,27,30, மே3,9,12
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.
அனுஷம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, சித்திரை யோகமான மாதமாகும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாகி ஆரோக்கியத்தில் பின்னடைவு, மனச்சோர்வை உண்டாக்கும் நிலையில் சப்தம குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் சங்கடம் அனைத்தும் விலகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி உங்களால் முடிக்க முடியும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் பல வழியிலும் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு உண்டான நெருக்கடி விலகும். ஏப்.26ல் புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு சுகஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் இதுநாள் வரை பிள்ளைகள் நிலையை எண்ணி அவதிப்பட்ட நிலை மாறும். ஆனால் அலைச்சல் அதிகரிக்கும். உழைப்பு கூடும், வாங்கிய கடன்களை அடைப்பதற்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஏப். 26 வரை லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதுடன் அங்கு குரு பார்வை உண்டாவதால் பணவரவு திருப்தி தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பொன், பொருள் சேரும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். சிறிய வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கேட்ட இடத்தில் இருந்து கடன் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மே1,2
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,18,26,27, மே8,9
பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு சாதித்து வரும் உங்களுக்கு சித்திரை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஏப்.30 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வாங்க நினைத்த சொத்தை வாங்குவீர்கள். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். ஏப்.26 முதல் புத்திர ஸ்தானத்தை விட்டு ராகு விலகுவதால் பிள்ளைகளுக்கு உண்டான நெருக்கடி நீங்கும். அவர்களுக்கு இருந்த சங்கடம் விலகும். மாதம் முழுவதும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படித்து அடுத்த கட்டத்திற்கு தயாராவர். வியாபாரம் முன்னேற்றமடையும். இம்மாதம் உங்களுக்கு ஒரு சுபிட்சமாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சிலர் உறவினர் வீட்டு திருமணத்தை முன்நின்று நடத்துவர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள், பிரச்னைகள், வழக்குகள் முடிவிற்கு வரும்.
சந்திராஷ்டமம்: மே2,3
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,18,23,27, மே 5,9,14
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.