Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன் மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன் மிதுனம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை)
ரிஷபம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2025
03:04

கார்த்திகை: சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு தைரியக்காரகனான செவ்வாய் ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

விசுவாவசு ஆண்டில் கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைப்பது நடந்தேறும். முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு தொழில் முன்னேற்றமடையும். வேலை வாய்ப்பு உண்டாகும். பட்டம் பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.

சனி சஞ்சாரம்:
கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை லாப சனியாகவும், 2, 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாகவும் சஞ்சரிப்பதால், தொழில் உத்தியோகத்தில் அழுத்தம் இருக்கும். வேலைப்பளுவால் சங்கடப்படுவீர்கள் என்றாலும் நியாயமாக உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ராகு, கேது சஞ்சாரம்: 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் லாப ஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் ஒரு பக்கம் ஆதாயமும் மறுபக்கம் பிள்ளைகளாலும் பூர்வீக சொத்துகளாலும் மனக்குழப்பம் அதிகரிக்கும். 2, 3, 4 ம் பாதத்தினருக்கு ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றமடையும். பணியில் உயர்வு உண்டாகும் என்றாலும் உழைப்பு அதிகரிக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை உண்டாகும்.

குரு சஞ்சாரம்: மே 11 மதியம் வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, அதன் பின் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி, நவ.18 முதல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 ல் மிதுனத்திற்கு வக்கிரமாகவே செல்பவர் மார்ச் 17, 2026 அன்று அங்கே வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் 1 ம் பாதத்தினருக்கு மே 11 வரையிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு அதன் பிறகும் யோகபலன்கள் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். குழந்தைப்பேறு கிடைக்கும். பொன் பொருள் சேரும். புதிய வீட்டில் குடியேறும் நிலை உண்டாகும். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும்.

சூரிய சஞ்சாரம்: 1 ம் பாதத்தினருக்கு 2025, ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக். 17, 2026, ஜன. 15 – மார்ச் 14 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 – ஆக. 16, அக். 18 – நவ. 16, 2026. பிப். 13 – ஏப். 13 காலங்களிலும் 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் பலத்தை அதிகரிப்பார். நினைத்ததை நடத்தி வைப்பார். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உணர்வீர்கள். எதிர்ப்பு, போட்டி, மறைமுகத்தொல்லை இல்லாமல் போகும். உடல் பாதிப்பு மறையும். வம்பு வழக்கு சாதகமாகும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிக நாள் நின்று பலன் தருபவர் ரத்தக்காரகனான செவ்வாய்தான். கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு  ஜூலை 30 – செப். 14, 2026 பிப். 22 – ஏப். 4 காலங்களில் 6, 11 ம் இடங்களிலும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு, 2025, ஏப். 14 – ஜூன் 8, செப். 16 – அக். 27, 2026, ஏப். 1 – ஏப். 13 காலங்களில் 3, 6, 11 ம் இடங்களிலும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நோய், வழக்கு, நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு உயரும். வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும்.

பொதுப்பலன்: வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழி வேலைகள் வெற்றியாகும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

தொழில்: செய்து வரும் தொழில் முன்னேற்றம் பெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு வழியில் அனுமதி கிடைக்கும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம் லாபம் தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பணியாளர்கள்: இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் திறமையை நிர்வாகம் மதிக்கும். ஊதிய உயர்வும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும் என்றாலும் பணியில் நேர்மையாகவும் உழைப்பில் உண்மையாகவும் இருப்பது  அவசியம்.

பெண்கள்: திறமைக்கும் தகுதிக்குமான மரியாதை கிடைக்கவில்லையே என்ற எண்ணம் மாறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

கல்வி: படிப்பில் அக்கறை கூடும். பொதுத்தேர்வில் நிறயை மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் கவனம் அதிகரிக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: உடல் பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும். பரம்பரை நோயில் இருந்து விடுதலை கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் அளவிற்கு உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

குடும்பம்: கடந்த கால நெருக்கடி விலகும். வரவை வைத்து பழைய கடனை அடைப்பீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

ரோகிணி: முன்னேற்றம் ஆரம்பம்.. ; அதிர்ஷ்டக்காரகனும் மனக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு பிறக்கும் விசுவாவசு ஆண்டில் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் சேர்வர். சொத்து சேரும். வேலை கிடைக்கும். பட்டம் பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். கலைஞர்களுக்கு  ஒப்பந்தம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி விலகும்.

சனி சஞ்சாரம்: 
மார்ச் 6, 2026 வரை ஜீவன ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிலிலும், பணியிலும் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் நேர்மைக்கு இக்காலம் சவாலாக இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். விரயம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் இடம், நகை வாங்குவது நல்லது. வாழ்க்கைத் துணையையும், நண்பர்களையும் அனுசரித்துச் செல்வது அவசியம். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்.

ராகு, கேது சஞ்சாரம்: ஏப். 26 முதல் ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றமடையும். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். பணியில் உயர்வு உண்டாகும். விரும்பிய வேலை அமையும். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடிவரும். ஓய்வின்றி உழைக்கும் நிலை உண்டாகும். தாய்வழி உறவினரால் வருத்தத்திற்கு ஆளாவீர்கள். உடலில் சிறு சிறு சங்கடம் உண்டாகும்.

குரு சஞ்சாரம்: மே 11 வரை உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிப்பவர், மே 11 முதல் தன, குடும்ப ஸ்தானமான மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 அன்று மிதுனத்திற்கு வக்கிரமாக செல்பவர்  மார்ச் 17, 2026ல் வக்ர நிவர்த்தியாகிறார். இதனால்  குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதினர் மணமாலை காண்பர். குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும்.  தகுதியான வேலை கிடைக்கும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு செல்வாக்கு உயரும். 

சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன் ஜூலை 17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026. பிப்.13 – ஏப்.13 காலங்களில் 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரித்து செல்வாக்கை உயர்த்துவார். துணிச்சலுடன் செயல்பட வைப்பார் நினைத்ததை நடத்தி வைப்பார். கடலில் மூழ்கியவர் நீச்சலடித்து கரைக்கு வந்தது போல் நிம்மதியை உண்டாக்குவார். உத்தியோகம், தொழிலில் ஏற்பட்ட போட்டி, மறைமுகத் தொல்லை இல்லாமல் போகும். உடல் பாதிப்பு மறையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் அனுமதிகள் கிடைக்கும்.

செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப்பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் ரத்தக் காரகனான செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில் 2025, ஏப். 14 – ஜூன் 8, செப். 16 – அக். 27, 2026, ஏப். 1 – ஏப். 13 காலங்களில் 3, 6, 11 ம் இடங்களில் செவ்வாய் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் தைரியமாக செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்டுவீர்கள். உங்கள் நிலை ஆச்சரியப்படத்தக்க வகையில் அமையும். செல்வாக்கு உயரும். பிரச்னை, நெருக்கடி, போராட்டம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பம், தொழில், பணி என்று அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் இருப்பர். 

பொதுப்பலன்: விசுவாவசு நன்மையான ஆண்டாக இருக்கும். கடந்தகால சங்கடம் விலகும். வருமானம் வரும். உடல்நிலை சீராகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசு வழி வேலைகள் வெற்றியாகும். திருமண வயதினருக்கு திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கும். புதிய சொத்து. புதிய தொழில் என உங்கள் கனவு நனவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

தொழில்: 
ஜீவன ஸ்தானம் பலமடைவதால் தொழிலில் தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்பவர்களுக்கு அரசு வழியில் அனுமதி கிடைக்கும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ்,  இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், கம்ப்யூட்டர், அழகு சாதனம், மின் சாதனம் தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி,  சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், விவசாயம் கை கொடுக்கும். லாபம் உயரும்.

பணியாளர்கள்:
அரசு பணியாளர்களுக்கு தடைபட்டுவந்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தனியார் துறை பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். திறமையை நிர்வாகம் அறிந்து ஊக்கப்படுத்தும். ஊதிய உயர்வு கிடைக்கும். 

பெண்கள்: 
உயர் கல்விக்கான முயற்சி வெற்றியாகும். தகுதியான வேலை கிடைக்கவில்லையே என்ற எண்ணம் மாறும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சுய தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். 

கல்வி 
பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வுகளின் முடிவும் சாதகமாகும்.  உயர் கல்விக்காக சிலர் வெளி மாநிலம், வெளிநாடு செல்வீர்கள்.

உடல்நிலை: 
சைனஸ், தொண்டை, கழுத்து, குரல்வளை, வலதுகண், சிறுமூளை, நுரையீரல் பாதிப்பு, அல்சர், ஒவ்வாமை என சிரமப்பட்டு வந்தவர்களுக்கு பாதிப்பு மறையும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள்.

குடும்பம்: 
இதுவரை இருந்த நெருக்கடி, சங்கடம், பிரச்னைகள் விலகும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் பெருமை காண்பீர்கள்.

பரிகாரம்: திங்களூர் கைலாசநாதரை வழிபட வளம் உண்டாகும். மனம் தெளிவடையும்.

மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..

சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் விசுவாவசு ஆண்டில் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். சொத்து சேரும். வேலை வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செலவு கட்டுப்படும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலை வாய்ப்பு, சொந்த தொழில் கனவு நனவாகும்.

சனி சஞ்சாரம்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை ஜீவன சனியாவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்கிய சனியாகவும் சஞ்சரிப்பதால் 1, 2 ம் பாதத்தினர் தொழில், பணியில் கவனமாக செயல்படுவது அவசியம். வேலைப்பளு அதிகரிக்கும் என்பதால் வேலை மீது சலிப்பு உண்டாகலாம். தனியார், ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவோர் வேறு வேலைக்கு முயற்சிப்பர். மருத்துவச் செலவும் அதிகரிக்கும் என்பதால் இடம், நகை என வாங்குவது நல்லது. 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொட்டது பொன்னாகும். நினைப்பது நடந்தேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். இடம், வாகனம் வாங்குவீர்கள். தொழிலின் மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தடைபட்ட வேலை நடந்தேறும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் வெற்றியாகும்

ராகு, கேது சஞ்சாரம்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு, ஜீவன ஸ்தானத்திலும், கேது, சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழிலில் அக்கறை உண்டாகும். பணியில் வேலைப்பளு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு  எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும் என்றாலும், உழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவினரால்  சங்கடம் உண்டாகும். உடலில் சிறு சிறு பாதிப்பு தோன்றும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். கடந்த கால நெருக்கடி விலகும்.  வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். வீடு, மனை வாங்குவீர்கள்.

குரு சஞ்சாரம்: 
மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21 அன்று மிதுனத்திற்கு வக்கிரமாக செல்பவர் மார்ச் 17, 2026ல் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு, வாகன கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என கனவுகள் நனவாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை செலவு அதிகரித்தாலும் அதன்பின் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்து  கைக்கு வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.  பொது வாழ்வில் செல்வாக்கு உயரும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள்.

சூரிய சஞ்சாரம: 
ஆத்ம காரகனான சூரிய பகவான் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 –ஆக.16, அக்.18 – நவ.16, 2026. பிப்.13 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஏப். 14 – மே15,  ஆக.17 –செப்.16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். முயற்சிகள் வெற்றியாகும். உடல் பாதிப்பு விலகும். எதிரிகள் உங்களைக் கண்டு அச்சமடையும் நிலை உண்டாகும். இழுபறி வழக்குகள் சாதகமாகும். அரசு வழியில் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னை மறையும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும்.

செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில் மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்கள் 2025, ஏப். 14 – ஜூன் 8, செப்.16 –அக்.27, 2026, ஏப்.1 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்கள், ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச.12 காலங்களிலும் தைரியமாகவும், துணிச்சலுடனும் செயல்படத் தொடங்குவீர்கள். நினைத்த வேலை நினைத்தபடி நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல் பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிரச்னை, வழக்குகள் இருந்த இடம் மறையும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். வரவு பல வகையிலும் அதிகரிக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும். 

பொதுபலன்: 
 முயற்சிகள் வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். பங்குச்சந்தை லாபம் தரும். வருமானம் பல வழிகளில் வரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழி வேலைகள் வெற்றியாகும். புதிய சொத்து. புதிய தொழில் என உங்கள் கனவுகள் நனவாகும்.

தொழில்: 
தொழில் முன்னேற்றமடையும். இடையில் ஏற்பட்ட தடை விலகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருத்துவம், கெமிக்கல், பெட்ரோல், உணவகம், நிதி நிறுவனம், இன்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம், விவசாயத்துறையில் லாபம் தரும். ஆசிரியர்கள், காவல்துறையினர், பேரிடர் மீட்புத் துறையினர் மேன்மை அடைவர்.

பணியாளர்கள்: 
அரசு பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பதவி உயரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். நெருக்கடி விலகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் நிலை உயரும். சிலருக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதுடன் ஊதியம் உயரும்.

பெண்கள்: 
அவமானம், பிரச்னை, வேலையில் போராட்டங்களை சந்தித்த நிலை மாறும். வேலையில் முன்னேற்றம், செல்வாக்கு ஏற்படும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள் சேரும். குடும்பத்தினர் ஆதரவு கூடும்.

கல்வி: பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வு முடிவுகளும் சாதகமாகும். உயர் கல்விக் கனவு நனவாகும்.

உடல் நிலை: 
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றவர்கள், பரம்பரை நோய், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெறுவர்.  சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.

குடும்பம்: 
எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கிரகப்பிரவேசம், திருமணம் என சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய சொத்து, பொன், பொருள் சேரும். சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். விலகிய உறவினர்கள் உங்களைத் தேடி வருவர்.

பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடம் விலகி நன்மை அதிகரிக்கும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை) »
temple news
அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..: சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மகம்: செயலில் கவனம்.. ஆத்மகாரகனும், ஞான மோட்சகாரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,விசுவாவசு ... மேலும்
 
temple news
உத்திரம்.. முன்னேற்றம் உண்டாகும்: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar