Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன் தனுசு : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன் தனுசு : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை)
விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2025
03:04

விசாகம்: விடாமுயற்சியால் வெற்றி .. தன, ஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1, 2, 3 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் விசுவாவசு ஆண்டு 1, 2, 3 ம் பாதத்தினருக்கு முன்னேற்றமான ஆண்டாகும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். நினைத்தது நடந்தேறும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். வேலையில் நெருக்கடி ஏற்படும். வியாபாரத்தில் தடை, போராட்டம் இருக்கும். விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். 

சனி சஞ்சாரம்:  
மார்ச் 6, 2026 வரை விசாகம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 5 ல் சஞ்சரிக்கும் சனி குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார். தம்பதி ஒற்றுமை குறையும். பிள்ளைகளால் மன உளைச்சல் வரலாம்.  பூர்வீக சொத்தில் பிரச்னையை ஏற்படலாம்.  4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தொழில், வேலையில் பிரச்னை, போராட்டங்களை உண்டாக்குவார். உடல்நிலையில் சங்கடங்களை அதிகரிப்பார். வருமானத்தில் தடைகளை உண்டாக்குவார்.  ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்கிரமடைவதால் மேலே சொன்ன பாதிப்பு குறையும். 

ராகு, கேது சஞ்சாரம்: விருச்சிகம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2025 ஏப்.26 முதல் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், கேது லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு சுக ஸ்தானத்திலும், கேது ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். மனம் பேதலிக்கும். தவறான நபர்களின் நட்பால் கவுரவக்குறைவு ஏற்படும். வியாபாரம் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். வெளிநாட்டு விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.

குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தியடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவரது பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதியும், மனதில் சந்தோஷமும் இருக்கும். அதன் பிறகு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் ராசியையும், 3, 5 ம் இடங்களையும் பார்ப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு யோகப் பலன்களை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். கடன் தொல்லைகளில் இருந்து விடுதலையை உண்டாக்குவார். வருமானம் அதிகரிக்கும். அதன்பிறகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து செயல்களில் சங்கடம், மனக்குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அவருடைய பார்வைகள் 12, 2,  4 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தேவையான பணம் வரும். விரயச் செலவு கட்டுப்படும். சந்தோஷம் கூடும்.

சூரிய சஞ்சாரம: விருச்சிகம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜூலை 17 – செப். 16, டிச. 16 – 2026 ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஏப். 14 – மே 14, ஆக. 17 – அக். 17, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்களிலும் சூரியனின் சஞ்சார நிலைகளால் நெருக்கடி விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் மறையும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழி வேலைகளில் ஆதாயம் உண்டாகும்.

செவ்வாய் சஞ்சாரம்: விசாகம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 8 – ஜூலை 30, டிச. 6 – 2026 ஜன. 14, ஏப். 1 – ஏப். 13 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஜூலை 30 – செப். 9, 2026 ஜன. 14 – பிப். 22 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டியாளர்கள் உங்கள் பாதையிலிருந்து விலகுவர்.

பொதுப்பலன்: 
உங்கள் உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும்.

தொழில்: 
தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கட்,  ஜூவல்லரி, கமிஷன் ஏஜன்சி, பில்டர்ஸ், ரியல் எஸ்டேட், விவசாய உற்பத்தி பொருட்கள், ஏற்றுமதி, இறக்குமதி, கன்சல்டன்சி தொழில்கள் முன்னேற்றம் பெறும். 

பணியாளர்கள்: வேலையில் நெருக்கடி, பணிச்சுமை வரலாம் என்றாலும் பணிபுரியும் இடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். தனியார் நிறுவன ஊழியர்கள் முதலாளியின் மதிப்பிற்கு ஆளாவர். அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உயர்வும் மாற்றமும் கிடைக்கும்.

பெண்கள்: 
நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்.  குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவும், கணவரின் அன்பும் கிடைக்கும். பார்த்து வரும் வேலையில் முன்னேற்றம், தொழிலில் ஆதாயம் உண்டாகும். தனித்திறமை வெளிப்படும்.

கல்வி  
மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும், தவறானவர்களின் நட்பில் இருந்து விடுபடுவதும் நன்மையளிக்கும்.  தேர்வில்  எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உங்கள் கனவுகள் நனவாகும்.

உடல்நிலை: 
1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை நோய், தொற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனியின் பார்வை ராசிக்கு ஏற்படுவதால் உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். மருத்துவச் செலவு கூடும்.

குடும்பம்: 
தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். புதிய வாகனம், பொன் பொருள் வாங்குவீர்கள். எதிர்கால நலனை மனதில் வைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் அனைத்தும் மறையும். 

அனுஷம்: எச்சரிக்கை அவசியம் ...  தைரியகாரகனும், கர்மக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, பிறக்கும் விசுவாவசு சிந்தித்து செயல்பட வேண்டிய ஆண்டாகும். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம். வியாபாரம், தொழில், குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். உழைப்பு அதிகரிக்கும். யோசிக்காமல் ஈடுபடும் வேலைகளில் நஷ்டமும், பிரச்னைகளும் தோன்றும்.

சனி சஞ்சாரம்:  
மார்ச் 6, 2026 வரை நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், உடல் பாதிப்பை ஏற்படுத்துவார். வீடு, சொத்து, வாகன வகையில் நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார். வேலை, தொழிலில் பிரச்னைகளையும் போராட்டங்களையும் ஏற்படுத்துவார். தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்றாலும்  ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் மேலே சொன்ன பாதிப்புகள் குறையும். 

ராகு, கேது சஞ்சாரம்:  2025 ஏப்.26 முதல் ராகு உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திலும், கேது ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், வியாபாரம், தொழில், வேலையில் சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். வேலையின் காரணமாக அலைச்சல் கூடும். உழைப்பு அதிகரிக்கும்.  சிலருக்கு தவறான நபர்களின் நட்பால் கவுரவக் குறைவு உண்டாகும். சொத்து, வாகனம் போன்றவற்றை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். வெளிநாட்டு விவகாரங்களில் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். தாய்வழி உறவுகளுடன் இணக்கம் குறையும்.

குரு சஞ்சாரம்: 
ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21 அன்று மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ரநிவர்த்தி அடைகிறார். குரு பகவான் கடகத்தில் வக்ரமாக இருக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால் மே11 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு முன்னேற்றம் தருவார்.  செல்வாக்கை உயர்த்துவார். திருமண வயதினருக்கு திருமண யோகத்தை அளிப்பார். கடன் தொல்லை மறையும். அதன் பிறகு அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்று உங்கள் செயல்களில் சங்கடம், மனக்குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அவரது பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். பணவரவை அதிகரிப்பார். விரயச் செலவுகளை கட்டுப்படுத்துவார். 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுவிப்பார்.

சூரிய சஞ்சாரம்: ஏப். 14 – மே 14, ஆக. 17 – அக். 17, 2026 ஜன. 15 – பிப். 12 காலங்களில் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் சஞ்சார நிலைகள் சாதகத்தை உண்டாக்கும். உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்யும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எதிர்ப்பு இல்லாமல் போகும். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும் வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.

செவ்வாய் சஞ்சாரம்: ஜூலை 30 – செப். 9, 2026 ஜன.14 – பிப்.22 காலங்களில் உங்கள் ராசியாதிபதியான செவ்வாயின் சஞ்சார நிலைகள் உங்களை உயர்த்தும். போராட்டம், பிரச்னைகள், நெருக்கடி என்ற நிலையை மாற்றும். எடுத்த வேலைகளை நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர்கள். வம்பு, வழக்குகள் சாதகமாகும். அனைத்திலும் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டு நிறைய படிப்பினைகளை கற்றுக்கொள்ளும் ஆண்டாக இருக்கும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும்.  திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பிரச்னைகளை சந்தித்தாலும் அவற்றிலிருந்து வெளியில் வர முடியும். 

தொழில்: தொழில்காரகனின் பார்வை உங்கள் ஜீவன ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழில் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மார்க்கட்டிங், உணவகம், மருந்தகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், கமிஷன் ஏஜன்சி, இயந்திரத் தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கெட், ஆன்லைன், விவசாய உற்பத்தி பொருட்கள், தொழில்கள் முன்னேற்றமடையும்.

பணியாளர்கள்: வேலையில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். தனியார் நிறுவனத்தில்  பணிபுரிபவர்களில் சிலர் வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசு பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பதுடன் நேர்மையாகவும் இருப்பது அவசியம்.  இல்லையெனில் மெமோ, இடமாற்றம், பதவி இறக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். 

பெண்கள்: 
சுக ஸ்தானத்தில் பாபர்கள் சஞ்சரிப்பதால் புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையாகும். பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இறங்க வேண்டாம். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். திருமணம் முடிந்தவர்கள் கணவரின் ஆலோசனையை ஏற்பதால் பிரச்னைகள் குறையும். 

கல்வி 
மே 11 வரை ராசிக்கு குருபார்வை இருப்பதால் பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவீர்கள். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: 
சனியின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உடல் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். இடுப்பில் பாதிப்பு, சிறுநீரக கோளாறு, ஆசனவாயில் பிரச்னை, நீண்டநாள், அந்தரங்க நோய்கள் என ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்படும். மருத்துவச்செலவு கூடும்.

குடும்பம்: 
உங்கள் குடும்ப நலனில் அக்கறை கூடும். உறவுகளால் உண்டான படிப்பினை உங்களை மாற்றும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலர் புதுவீட்டில் குடியேறுவர். புதிய வாகனம், பொன், பொருள் வாங்குவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: மூகாம்பிகையை வழிபட்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

கேட்டை: உழைப்பு அதிகரிக்கும்.. வித்யா காரகனும், தைரிய காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு விசுவாவசு கவனமாக செயல்பட வேண்டிய ஆண்டு. ஒரு பக்கம் நெருக்கடி, மறுபக்கம் அதை சமாளிக்கும் சக்தி என நன்மையும் சங்கடமும் நிறைந்த ஆண்டாக இருக்கும். வேலை, தொழில், வியாபாரத்தில் அக்கறை அவசியம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும், சொத்து, வாகனம் சேரவும் வாய்ப்புண்டு. பண விவகாரத்தில் நிதானம் வேண்டும். உங்களின் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

சனி சஞ்சாரம்:  
மார்ச் 6, 2026 வரை நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான் தொழில் ஸ்தானத்தையும், ராசியையும் பார்ப்பதால் வேலையில் நெருக்கடி, தொழிலில் பிரச்னை, உடல்பாதிப்பு என ஏற்படுத்துவார். வீடு, சொத்து, வாகன விஷயத்தில் நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார்  தாயார் உடல்நிலையில் பாதகத்தை ஏற்படுத்துவார் என்றாலும், மே 11 வரை குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதாலும், மே 11ல் இருந்து 4ம் இடத்தைப் பார்ப்பதாலும் சனியால் ஏற்படும் பாதிப்பு உங்களை எதுவும் செய்யாது என்பதுடன், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் அவர் வழங்கும் பாதகப் பலன் மாறும்.

ராகு, கேது சஞ்சாரம்:  2025 ஏப்.26 முதல் ராகு, சுக ஸ்தானத்திலும், கேது ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், வியாபாரம், தொழில், வேலையில் நெருக்கடி தோன்றும். வேலையின் காரணமாக அலைச்சல், ஓய்வில்லா நிலை ஏற்படும். சிலருக்கு தவறானவர்களின் நட்பும் அவர்களால் தடுமாற்றம் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். சிலர் அவப்பெயருக்கு ஆளாவீர்கள் என்றாலும், மே 11 முதல் குருபார்வை ராகுவிற்கும் அந்த வீட்டில் ஆட்சியாக உள்ள சனிக்கும் உண்டாவதால் பாதகம் நீங்கி நன்மை உண்டாகும். உங்கள் அறிவுக்கண் திறக்கும்.  தொழில், வேலையில் அக்கறை ஏற்படும்

குரு சஞ்சாரம்: 
ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 ல் கடகத்தில் வக்ரமாகி, டிச 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தியடைகிறார். குருபகவான் வக்ரமடையும்போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக் கூடியவர் என்பதால் கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், மே 11 வரை 7ல் சஞ்சரித்து உங்கள் ராசியையும், லாப, சகாய ஸ்தானத்தையும் பார்க்கும் குரு, முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்.  திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு மறுமணம், குழந்தை பாக்கியம், சொத்து, சுகம், செல்வாக்கு, அந்தஸ்துக்கு வழியமைப்பார். அதன்பிறகு அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றாலும் குருவின் பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் சுபச்செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும். வரவு அதிகரிக்கும். 4 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் வழங்கிவரும் பாதகப் பலன்களை மாற்றுவார்.  நிம்மதி, சந்தோஷத்தை அதிகரிப்பார்.

சூரிய சஞ்சாரம்: தொழில் பாவகனான சூரியன் ஏப்.14 – மே14, ஆக.17 – அக். 17, 2026 ஜன.15 – பிப்.12 காலங்களில் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்பவர்களுக்கு அரசு வழியில் வேண்டிய அனுமதி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பண வரவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும்.

செவ்வாய் சஞ்சாரம்: உங்கள் ராசி நாதனான செவ்வாய் ஜூலை 30 – செப்.9, 2026 ஜன.14 – பிப். 22 காலங்களில் உங்களுக்குள்ள சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போராட்டம், பிரச்னை, நெருக்கடி இல்லாமல் செய்வார்.  எடுக்கும் வேலைகளை முடித்திடக்கூடிய அளவிற்கு சூழ்நிலைகளை உருவாக்குவார். வம்பு வழக்குகள் தொல்லைகளில் இருந்து விடுவிப்பார். உடல்பாதிப்பை அகற்றுவார்.

பொதுப்பலன்: 
முயற்சிக்கேற்ற பலன், ஆதாயத்தை அடையும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். சனி, ராகு, கேதுவால் நெருக்கடிக்கு ஆளாக்கினாலும் குருபகவான் பாதுகாப்பு தருவார். சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகள், உழைப்பாளர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் செயல்களில் நிதானம் வேண்டும்.

தொழில்: தொழில்காரகனின் பார்வை உங்களுடைய தொழில் ஸ்தானத்தில் பதிவதுடன் அங்கே கேதுவும் சஞ்சரிப்பதால் தொழிலில் அக்கறை உண்டாகும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபமடையும். பைனான்ஸ்,  புத்தக தயாரிப்பு, விற்பனை,  ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கட், கம்ப்யூட்டர், டெக்னாலஜி, கெமிக்கல், மருந்தகம், உணவகம், விவசாய உற்பத்தி பொருட்கள்  தொழில்கள் லாபம்தரும்.

பணியாளர்கள்: உழைப்பு, திறமைக்குரிய முன்னேற்றம் உண்டாகும். வேலையில் தவறு செய்பவர்களுக்கும், அக்கறையுடன் செயல்படாதவர்களுக்கும் நெருக்கடி ஏற்படும். சிலர் வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசு பணியாளர்கள் அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றினால் பிரச்னையில் இருந்து தப்பலாம். இல்லையெனில் மெமோ, இடமாற்றம், பதவி இறக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். 

பெண்கள்: 
எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி கனவு நனவாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கன்னியருக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவரின் அன்பும், ஆதரவும் கூடும். சுயதொழில் செய்பவர்களுக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும்.

கல்வி 
பொதுத் தேர்வுகளிலும், போட்டித் தேர்வுகளிலும் வெற்றி உண்டாகும். உயர் கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை: 
4 ம் இட சனியின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உடல் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். ராகு 4ல் சஞ்சரிப்பதால் நோயின் வீரியம் கூடும். குருவின் சஞ்சாரம், பார்வைகளும் அவற்றில் இருந்து உங்களை விடுவிக்கும். செலவுகள் வழியே வந்த நோயும் இருந்த நோயும் குணமாகும்.

குடும்பம்: 
குடும்ப நலனில் அக்கறை கூடும். தம்பதி ஒற்றுமை உண்டாகும். தன் பிள்ளை, தன் குடும்பம் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். இடம், வாகனம், பொன் பொருள் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை பல மடங்கு அதிகரிக்கும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை) »
temple news
அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட ... மேலும்
 
temple news
கார்த்திகை: சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..: சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மகம்: செயலில் கவனம்.. ஆத்மகாரகனும், ஞான மோட்சகாரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,விசுவாவசு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar