பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
03:04
மூலம்.. அதிர்ஷ்ட காலம்; ஞானக்காரகனும், ஞான மோட்சக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, விசுவாவசு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். படிப்பு, வேலை, திருமணம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். செல்வாக்கு உயரும். மனக்குறை விலகும்.
சனி சஞ்சாரம்:
மார்ச் 6, 2026 வரை 3ம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சகாய சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், முன்னேற்றங்களை உண்டாக்குவார். அச்சமின்றி செயல்பட வைப்பார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவார். தொண்டர்களின் ஆதரவை அதிகரிப்பார். குறையொன்றும் இல்லை என சொல்ல வைப்பார். சங்கடம் ஏதுமில்லை என நினைக்க வைப்பார். தன்னம்பிக்கை, தைரியத்தை அதிகரிப்பார் என்றாலும், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் பலனில் மாற்றம் உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப்.26 முதல் ராகு, முயற்சி ஸ்தானத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி காணாமல் போகும். நினைத்தது நடந்தேறும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். பெரியோர் ஆதரவும், இறையருளும் கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற ஆதாயம் முன்னேற்றம் உண்டாகும்.
குரு சஞ்சாரம்:
உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் 7ல் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17 ல் அங்கே வக்ர நிவர்த்தியடைகிறார். குரு பகவான் வக்ரம் அடையும்போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக் கூடியவர் என்பதால் கடகத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலனையே தருவார். இதனால், மே 11 வரை 6ல் சஞ்சரிக்கும் குரு பகவான் எதிரி தொல்லை, நோய், குழப்பம் தந்தாலும் அவரது பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில் முன்னேற்றம் பெறும். பணியில் இருந்த பிரச்னை விலகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சுபச்செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அதன் பின் 7ல் சஞ்சரித்து உங்கள் ராசி, லாப, சகாய ஸ்தானத்தை பார்க்கும் குரு, பொன்னையும், பொருளையும், புகழையும் தருவார். பிறர் ஆச்சரியப்படும் வகையில் முன்னேற்றம் தருவார். திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு மறுமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, பணப்புழக்கம் என உங்கள் நிலையை உயர்த்துவார்.
சூரிய சஞ்சாரம்: பாக்கியாதிபதியான சூரியன் மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ. 16, 2026 பிப். 13 – மார்ச் 14 காலங்களில் நன்மைகளை அதிகரிப்பார். உடல் நிலையில் சங்கடத்தைப் போக்குவார். எதிரியை பலமிழக்க வைப்பார். போட்டியாளர்கள் நிலையை மாற்றுவார். வழக்கில் வெற்றி தருவார். தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்க வைப்பார். அரசு வழியில் ஆதாயம் தருவார். எதிர்பார்த்த வேலையில் அமர வைப்பார். பணவரவை அதிகரிப்பார். எடுக்கும் முயற்சியை வெற்றியாக்குவார்.
செவ்வாய் சஞ்சாரம்: செப். 14 – அக். 27, 2026 பிப். 22 – ஏப். 1 காலங்களில் வியாபாரம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். நீங்கள் எடுக்கும் வேலைகளை முடித்திடக் கூடிய அளவிற்கு சூழ்நிலையை உருவாக்குவார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார்.
பொதுப்பலன்:
உங்கள் வாழ்வில் விசுவாவசு யோகமான ஆண்டாகும். நீண்டநாள் கனவு நனவாகும். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். படிப்பு, வேலை, திருமணம், உத்தியோகம், சொத்து, சுகம் என அனைத்தும் அடைவீர்கள். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்கள் கனவு நனவாகும்.
தொழில்:
இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். மூடிய தொழிற்கூடங்கள் மீண்டும் திறக்கப்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பைனான்ஸ், நிதிநிறுவனம், ஷேர் மார்க்கெட், ஜூவல்லரி, எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், கம்ப்யூட்டர், ஐ.டி தொழில்கள் முன்னேற்றம் பெறும்.
பணியாளர்கள்: பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரின் கவலை தீரும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு நிறுவனத்தில் வேலையில் சேர்வீர்கள்.
பெண்கள்:
வாழ்வில் எல்லாவிதமான நன்மையையும் தரும் ஆண்டாக இருக்கும். உடல்நிலை, மனநிலை சீராகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், கணவரின் அன்பு, பொன் பொருள் அந்தஸ்து என எல்லாம் கிடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகி எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்து வருபவர்கள் முன்னேற்றம் அடைவர்.
கல்வி
மே 11 முதல் ராசிக்கு குருபார்வை உண்டாவதால் பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு முடிவுகள் சாதகமாகும். உயர்கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை:
இதுவரை இருந்த பாதிப்பு விலகும். இடுப்பு, தொடைப்பகுதிகளில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பரம்பரை நோய்கள், சுவாசப் பிரச்னைகள், இதய நோய்கள், தொற்று நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
குடும்பம்:
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து, வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் நிலையறிந்து செயல்படுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியம் அடைவர்.
பரிகாரம்: அபிராமி அம்மனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.
பூராடம்: நல்லநேரம் வந்தாச்சு.. அதிர்ஷ்டக் காரகனும், ஞானக் காரகனும், இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, விசுவாவசு மிக யோகமான ஆண்டாக இருக்கும். நெருக்கடிகள் விலகும். என்ன முயற்சி செய்தாலும் எதுவுமே நடக்கவில்லை என்ற நிலை மாறும். எதிர்பார்த்த முன்னேற்றம், செல்வாக்கு, அந்தஸ்து யாவும் கிடைக்கும். உங்களுக்கான நல்ல நேரம் வந்து விட்டதால் பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். கனவு நனவாகும்.
சனி சஞ்சாரம்:
சனி கொடுப்பதை எவர் தடுப்பார் என்ற வார்த்தைகள் மெய்யாவதை மார்ச் 6, 2026 வரை உணர்வீர்கள். துணிச்சலாகவும் தைரியமாகவும் செயல்படுவீர்கள். மூன்றாம் இட சகாய சனியால் தொட்டது துலங்கும். பட்டது துளிர்க்கும். வாழ்க்கை வளமாகும். முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். தொண்டர்களால் பலம் கூடும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களின் ஆதரவு பலம் தரும் என்றாலும், ஜூலை 23 – நவ. 18 காலத்தில் சனி வக்ரம் அடைவதால் பலன்கள் மந்தமாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: வலிமை கொண்ட கிரகங்களான கேதுவும் ராகுவும் எதிர்மறை பலன்களை வழங்கி வந்தாலும், ஏப்.26 முதல் ராகு, முயற்சி, சகாய ஸ்தானத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரித்து உங்கள் வாழ்வில் யோகப்பலன் வழங்க உள்ளனர். முயற்சித்தும் நடைபெறாத வேலைகள் இப்போது எளிதாக நடந்தேறும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். எதிலும் முதலிடம் வகிப்பீர்கள். உங்கள்மீது இப்போது நம்பிக்கை வரும். நினைத்தது நடந்தேறும். பெரியவர்கள் ஆதரவும், இறையருளும் உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும்.
குரு சஞ்சாரம்:
ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் 7ல் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். மே 11 வரை ரிஷப ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு நெருக்கடிக்கு உள்ளாக்குவார். உடல்பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். எதிரிபயம், மனக்குழப்பம் ஏற்பட்டாலும், அவரது பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில், வேலை, குடும்பத்தில் நெருக்கடிகள் விலகும். பணவரவால் தேவை பூர்த்தியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அதன் பிறகு, 7ல் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் நீங்கி மங்களம் உண்டாகும். அதிர்ஷ்டக்காற்று வீசும். உங்கள் முயற்சியெல்லாம் சாதகமாகும். பட்டம், பதவி, செல்வாக்கு சேரும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என கனவுகள் நனவாகும்.
சூரிய சஞ்சாரம்:
பாக்கியாதிபதியுமான சூரியன் மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ. 16, 2026 பிப். 13 – மார்ச் 14 காலங்களில் அவருடைய 6, 10, 11, 3 ம் இட சஞ்சாரத்தால் செல்வாக்கை உயர்த்துவார். எந்த ஒன்றையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு மறைமுகத் தொல்லை கொடுத்தவர்கள் பலமிழந்து பின்வாங்குவர். உடல் பாதிப்புகள் விலகும். வழக்கும், பிரச்னைகளும் முடிவிற்கு வரும். செய்துவரும் தொழில் லாபம் தரும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
செவ்வாய் சஞ்சாரம்: தைரிய, வீரிய காரகனான செவ்வாய், செப். 14 – அக். 27, 2026 பிப். 22 – ஏப்.1 காலங்களில் முன்னேற்றத்தை வழங்குவார். பணவரவில் தடைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். முயற்சிகள் வெற்றியாகும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
பொதுப்பலன்: விசுவாவசு எல்லா வகையிலும் முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் உயரும். வசதி வாய்ப்பு பெருகும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
தொழில்:
முதலீட்டிற்கு ஏற்ற லாபம் இல்லையே, எந்தவித முன்னேற்றமும் இல்லையே என வருந்திய நிலை மாறும்.தொழிலில் இருந்த தடைகள் விலகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அழகுசாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர், வாகன விற்பனை, உதிரிபாகங்கள், ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர் சாதனங்கள், ஆடை ஆபரணம், சினிமா, பதிப்பகம் தொழில்கள் முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள்: வேலையில் இருந்த சலிப்பு விலகும். உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
பெண்கள்:
நீண்டநாள் கனவு நனவாகும். நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். கன்னியருக்கு திருமணம் நடந்தேறும் குழந்தை பாக்கியம், கணவரின் அன்பு கிடைக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். பொன், பொருள் சேரும்.
கல்வி
பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு முடிவு சாதகமாகும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடத்தில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு எனச் செல்வீர்கள்.
உடல்நிலை:
கிரக நிலை சாதகமாக இருப்பதுடன், அஷ்டம ஸ்தானத்திற்கு பாப கிரகங்களின் பார்வை இல்லை என்பதால் உடல் பாதிப்பு இருந்தாலும் விலகும். பரம்பரை நோய்கள், தொற்று நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும்.
குடும்பம்:
தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்த உங்களுக்கு விசுவாசு விரும்பிய வாழ்வைத் தரும் ஆண்டாக இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையின் காரணமாக பிரிந்தவர் மீண்டும் சேர்வர். சொத்து, வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
பரிகாரம்: சோமாஸ்கந்தரை வழிபட வாழ்வில் நன்மைகள் பெருகும்.
உத்திராடம்.. சவாலே சமாளி: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசில் பிறந்தவர்களுக்கு குரு ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும் உள்ளனர்.
விசுவாவசு ஆண்டில் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும், நினைப்பதெல்லாம் நடந்தேறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் உயர்வு உண்டாகும். உடல்நிலை சீராகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை சுபிட்சமான நிலை இருக்கும். அதன்பின் உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் சிறு தடைகள் உண்டாகும். செல்வாக்கில் சரிவு ஏற்படும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். வரும் சவால்களை சமாளித்து முன்னேறுவீர்கள்.
சனி சஞ்சாரம்:
மார்ச் 6, 2026 வரை உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சகாய சனியாக முன்னேற்றத்தை வழங்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வருவாயை அதிகரிப்பார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். உற்சாகமாக செயல்பட வைப்பார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் பிரச்னை, பண வரவில் தடை, முயற்சியில் இழுபறி, மனபயம், உடலில் சங்கடம். வேலையில் நெருக்கடி என பலன்கள் உண்டானாலும், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் அவர் வழங்கும் பாதக பலன் மாறும்.
ராகு, கேது சஞ்சாரம்:
உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு மூன்றாமிடத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பெரியோர் ஆதரவும், இறையருளும் உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். நெருக்கடி நீங்கும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு தன குடும்ப ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை அடைந்த நன்மைகள் மாறும். குடும்பத்தில் நெருக்கடி, வாழ்க்கையில் போராட்டம், மறைமுகத் தொல்லை, உடல்பாதிப்பு, வீண் பிரச்னைகள் என எதிர்மறை பலன்கள் உண்டாகும்.
குரு சஞ்சாரம்:
ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால்,
1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை வாழ்வில் நெருக்கடி, உடல்பாதிப்பை ஏற்படுத்தினாலும் அவரது பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில், உத்தியோகம், குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதன் பிறகு, ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்வில் அதிர்ஷ்டக்காற்று வீசும். எடுக்கும் முயற்சி லாபமாகும். பட்டம், பதவி, செல்வாக்கு கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என கனவுகள் நனவாகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை 5ல் சஞ்சரிக்கும் குரு யோகப் பலன்களை வழங்குவார். எல்லாவித பிரச்னைகளில் இருந்தும் பாதுகாப்பார். முன்னேற்றப் பாதையில் நடை போட வைப்பார். அதன்பின் 6ல் சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். எதிர்பாராத சங்கடம், பிரச்னைகள், எதிரி தொல்லை, உடல் பாதிப்பு ஏற்படும் என்றாலும் குருவின் பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் வியாபாரம், தொழில் வளர்ச்சி அடையும். சுபச்செலவு தோன்றும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும்.
சூரிய சஞ்சாரம்: உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ.16, 2026 பிப்.13 – மார்ச்14 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக்.18 – டிச.15, 2026 மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் அவருடைய சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்ப்பு இல்லாமல் செய்வார். உடல் சங்கடங்களை நீக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். புதிய தொழில் தொடங்க வழியமைப்பார். அரசு வழியில் ஆதாயம் அளிப்பார். வேலை தேடி வந்தவர்களை வேலையில் அமர வைப்பார். செல்வாக்கை அதிகரிப்பார்.
செவ்வாய் சஞ்சாரம்: உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, செப்.14 – அக்.27, 2026 பிப். 22 – ஏப்.1 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அக்.27 – டிச.12, 2026 ஏப்.1 – 13 காலங்களிலும் செவ்வாய் யோகப் பலன்கள் வழங்குவார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். வருவாயை அதிகரிப்பார். வசதி வாய்ப்பை உண்டாக்குவார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தருவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்.
பொதுப்பலன்:
விசுவாவசு 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றப்பாதை தெரியும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பணியில் உயர்வு ஏற்படும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே11 வரை குருவின் சஞ்சாரமும் அதன் பிறகு அவரது பார்வைகளும் நன்மை தரும். சங்கடங்களை நீக்கும். வியாபாரம், தொழில் சிறக்கும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னை விலகும்.
தொழில்:
தொழில் முன்னேற்றமடையும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். கான்ட்ராக்ட், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கம்யூனிகேஷன், பில்டர்ஸ், எக்ஸ்போர்ட், ஸ்டேஷனரி, ஆன்லைன், விவசாயம் முன்னேற்றம் தரும்.
பணியாளர்கள்:
அரசு பணியாளர்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். மறைமுக எதிரிகளால் நெருக்கடி தோன்ற வாய்ப்புண்டு என்றாலும், எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்கள் நிர்வாகத்தின் சொல்படி செயல்படுவது அவசியம். சிலர் பார்த்துவரும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கும் செல்வீர்கள்.
பெண்கள்:
படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும். சிலருக்கு காதல் திருமணம் நடந்தேறும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். கணவரின் அன்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். பொன், பொருள் சேரும்.
கல்வி
தேர்வில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி இருப்பீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விருப்பப்பட்ட கல்லுாரியில், பாடப்பிரிவில் உயர் கல்வியில் சேர்வீர்கள்.
உடல்நிலை:
2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஷ்டமத்தில் கேது, மே 11 முதல் 6 ல் குரு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் பிரச்னை இருந்து கொண்டிருக்கும். மன அழுத்தம், பரம்பரை நோய், உறக்கமின்மை, பிரஷர், அல்சரால் அவதிப்படலாம். மருத்துவச்செலவு கூடும்.
குடும்பம்:
தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். அந்நியர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் வரலாம். வீண் விவாதங்களால் பிரச்னை ஏற்படலாம் என்றாலும் குருபார்வையால் சங்கடம் நீங்கும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் இருப்பீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொன், பொருள் சேரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள்.
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.