பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
03:04
உத்திராடம்.. சவாலே சமாளி: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசில் பிறந்தவர்களுக்கு குரு ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும் உள்ளனர்.
விசுவாவசு ஆண்டில் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும், நினைப்பதெல்லாம் நடந்தேறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் உயர்வு உண்டாகும். உடல்நிலை சீராகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை சுபிட்சமான நிலை இருக்கும். அதன்பின் உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் சிறு தடைகள் உண்டாகும். செல்வாக்கில் சரிவு ஏற்படும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். வரும் சவால்களை சமாளித்து முன்னேறுவீர்கள்.
சனி சஞ்சாரம்:
மார்ச் 6, 2026 வரை உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சகாய சனியாக முன்னேற்றத்தை வழங்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். வருவாயை அதிகரிப்பார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். உற்சாகமாக செயல்பட வைப்பார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் பிரச்னை, பண வரவில் தடை, முயற்சியில் இழுபறி, மனபயம், உடலில் சங்கடம். வேலையில் நெருக்கடி என பலன்கள் உண்டானாலும், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரமடைவதால் அவர் வழங்கும் பாதக பலன் மாறும்.
ராகு, கேது சஞ்சாரம்:
உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு மூன்றாமிடத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பெரியோர் ஆதரவும், இறையருளும் உண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். நெருக்கடி நீங்கும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு தன குடும்ப ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை அடைந்த நன்மைகள் மாறும். குடும்பத்தில் நெருக்கடி, வாழ்க்கையில் போராட்டம், மறைமுகத் தொல்லை, உடல்பாதிப்பு, வீண் பிரச்னைகள் என எதிர்மறை பலன்கள் உண்டாகும்.
குரு சஞ்சாரம்:
ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால்,
1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை வாழ்வில் நெருக்கடி, உடல்பாதிப்பை ஏற்படுத்தினாலும் அவரது பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில், உத்தியோகம், குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதன் பிறகு, ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்வில் அதிர்ஷ்டக்காற்று வீசும். எடுக்கும் முயற்சி லாபமாகும். பட்டம், பதவி, செல்வாக்கு கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என கனவுகள் நனவாகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை 5ல் சஞ்சரிக்கும் குரு யோகப் பலன்களை வழங்குவார். எல்லாவித பிரச்னைகளில் இருந்தும் பாதுகாப்பார். முன்னேற்றப் பாதையில் நடை போட வைப்பார். அதன்பின் 6ல் சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். எதிர்பாராத சங்கடம், பிரச்னைகள், எதிரி தொல்லை, உடல் பாதிப்பு ஏற்படும் என்றாலும் குருவின் பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் வியாபாரம், தொழில் வளர்ச்சி அடையும். சுபச்செலவு தோன்றும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும்.
சூரிய சஞ்சாரம்: உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 15 – ஜூன் 14, செப். 17 – நவ.16, 2026 பிப்.13 – மார்ச்14 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக்.18 – டிச.15, 2026 மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் அவருடைய சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்ப்பு இல்லாமல் செய்வார். உடல் சங்கடங்களை நீக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். புதிய தொழில் தொடங்க வழியமைப்பார். அரசு வழியில் ஆதாயம் அளிப்பார். வேலை தேடி வந்தவர்களை வேலையில் அமர வைப்பார். செல்வாக்கை அதிகரிப்பார்.
செவ்வாய் சஞ்சாரம்: உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, செப்.14 – அக்.27, 2026 பிப். 22 – ஏப்.1 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அக்.27 – டிச.12, 2026 ஏப்.1 – 13 காலங்களிலும் செவ்வாய் யோகப் பலன்கள் வழங்குவார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். வருவாயை அதிகரிப்பார். வசதி வாய்ப்பை உண்டாக்குவார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தருவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்.
பொதுப்பலன்:
விசுவாவசு 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றப்பாதை தெரியும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பணியில் உயர்வு ஏற்படும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே11 வரை குருவின் சஞ்சாரமும் அதன் பிறகு அவரது பார்வைகளும் நன்மை தரும். சங்கடங்களை நீக்கும். வியாபாரம், தொழில் சிறக்கும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னை விலகும்.
தொழில்:
தொழில் முன்னேற்றமடையும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். கான்ட்ராக்ட், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், கம்யூனிகேஷன், பில்டர்ஸ், எக்ஸ்போர்ட், ஸ்டேஷனரி, ஆன்லைன், விவசாயம் முன்னேற்றம் தரும்.
பணியாளர்கள்:
அரசு பணியாளர்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். மறைமுக எதிரிகளால் நெருக்கடி தோன்ற வாய்ப்புண்டு என்றாலும், எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்கள் நிர்வாகத்தின் சொல்படி செயல்படுவது அவசியம். சிலர் பார்த்துவரும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கும் செல்வீர்கள்.
பெண்கள்:
படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும். சிலருக்கு காதல் திருமணம் நடந்தேறும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். கணவரின் அன்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். பொன், பொருள் சேரும்.
கல்வி
தேர்வில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி இருப்பீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விருப்பப்பட்ட கல்லுாரியில், பாடப்பிரிவில் உயர் கல்வியில் சேர்வீர்கள்.
உடல்நிலை:
2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஷ்டமத்தில் கேது, மே 11 முதல் 6 ல் குரு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் பிரச்னை இருந்து கொண்டிருக்கும். மன அழுத்தம், பரம்பரை நோய், உறக்கமின்மை, பிரஷர், அல்சரால் அவதிப்படலாம். மருத்துவச்செலவு கூடும்.
குடும்பம்:
தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். அந்நியர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் வரலாம். வீண் விவாதங்களால் பிரச்னை ஏற்படலாம் என்றாலும் குருபார்வையால் சங்கடம் நீங்கும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் இருப்பீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொன், பொருள் சேரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள்.
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.
திருவோணம்: விடாமுயற்சி வேண்டும்.. மனக்காரகனும் தொழில் காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, விசுவாவசு ஆண்டு உழைப்பால் உயரக் கூடிய ஆண்டாக இருக்கும். இதுவரை நன்றாக சென்று கொண்டிருந்தவற்றில் திடீர் சறுக்கல், இடையூறு தோன்றும். தேவையற்றப் பிரச்னைகளில் சிக்கி வாய்ப்புண்டு. அந்தஸ்து என நீங்கள் ஈடுபடும் வேலைகளில் நேரம், பணம் விரயமாகலாம். இருந்தாலும் மே 11 வரை ஐந்தாமிட குருவால் சுபிட்சம் நிலவும். அதன்பின் செல்வாக்கில் சரிவு ஏற்படும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.
சனி சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதன் சனி என்றாலும், யாராக இருந்தாலும் அவர்களின் கர்ம வினைக்கேற்ற பலன்களை வழங்கக் கூடியவர் என்பதால் மார்ச் 6, 2026 வரை 2ல் சஞ்சரிக்கும் சனி குடும்பத்தில் பிரச்னைகளை உண்டாக்குவார். பணவரவில் தடைகளை ஏற்படுத்துவார். எடுத்த வேலைகளில் இழுபறி, மனதில் பயம், உடலில் சங்கடம், பணியில் நிம்மதியின்மையை ஏற்படுத்துவார். ஆனாலும் ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரம் அடைவதால் சங்கடம் குறையும்.
ராகு, கேது சஞ்சாரம்: இதுவரை முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகப்பலன்களை வழங்கிய ராகு, ஏப். 26 முதல் தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து பெருமைகளை வழங்கிய கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நிலை இனி மாறும். அந்நியரால் குடும்பத்திற்குள் பிரச்னைகள் தோன்றும். மனம் குழப்பமடையும். எதை எடுத்தாலும் பிரச்னை, சங்கடம் என வாழ்வே போராட்டமாகும். அஷ்டம ஸ்தானத்தை சனி பார்த்து வரும் நிலையில் கேதுவும் அங்கே சஞ்சரிப்பதால் மறைமுகத் தொல்லை தோன்றி சங்கடப்படுத்தும். சிலர் அவமானங்களை சந்திக்க நேரும். உடல் பாதிப்பு, விபத்து, வீண் பிரச்னை சிலருக்கு தோன்றும்.
குரு சஞ்சாரம்:
ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால் மே 11 வரை 5ல் சஞ்சரிக்கும் குரு முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். தொட்டதையெல்லாம் வெற்றியடைய வைப்பார். நினைப்பதை நடத்தி வைப்பார். அதன்பின் சத்ரு ஸ்தானமான 6ல் சஞ்சரிப்பதால் எதிரி தொல்லை, உடல் பிரச்னை, எதிர்பாராத சங்கடம், வம்பு வழக்கு ஏற்படும் என்றாலும், குருவின் பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வியாபாரம், தொழில் லாபமடையும். செலவு அதிகரிக்கும்.
சூரிய சஞ்சாரம்:
ஆத்ம காரகனான சூரியன் உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி என்றாலும், கோச்சார ரீதியாக 3, 6, 10, 11 ம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகம் தர வேண்டியவராகிறார். ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களில் அவரது சஞ்சார நிலைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். முயற்சிகளை வெற்றியாக்கும். எதிர்ப்பு இல்லாமல் செய்யும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். தொழிலை விரிவாக்கும். புதிய தொழில் தொடங்க வைக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் ஏற்படும்.
செவ்வாய் சஞ்சாரம்:
அக். 27 – டிச. 12, 2026 ஏப். 1 – 13 காலங்களில் செவ்வாயின் சஞ்சார நிலையால் செல்வாக்கு உயரும். துணிச்சல், தைரியம், வருவாய் அதிகரிக்கும். வசதி வாய்ப்பு பெருகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டு உங்களுக்கு நிறைய படிப்பினைகள் தரும். அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் நிலையில் சனியின் பார்வையும் அங்கு உண்டாவதால் உடல்நிலை அல்லது கவுரவ பாதிப்பு ஏற்படும். சிலரின் சதிவலையில் சிக்க நேரும் என்பதால் ஒழுக்கமும் நேர்மையும் மிக அவசியம். தொழில், வேலையில் அதிக எச்சரிக்கை தேவை.
தொழில்:
தொழில்காரகன் சனி 2ல் சஞ்சரித்தாலும், குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் தொழிலில் இருந்த தடைகளை விலக்கும். முன்னேற்றம் தரும். இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகம் உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஜினியரிங், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஆடை ஆபரணம், விவசாயம் ஆகிய துறையில் ஆதாயம் அதிகரிக்கும்.
பணியாளர்கள்: தனியார் நிறுவன பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பதும், சூழல் அறிந்து செயல்படுவதும் அவசியம். நிர்வாகம் உங்களை முழுமையாக கவனித்துக் கொண்டிருக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் சட்ட பிரச்னைக்கு ஆளாகலாம். மறைமுக எதிரிகளால் நெருக்கடி, அவமானம் ஏற்பட வாய்ப்புண்டு.
பெண்கள்:
மே 11 வரை படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவுகள் நனவாகும். அதன்பிறகு எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். அனைத்திலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றும். உறவினர் பகைவராக மாறுவர். உடல் பாதிப்பு, வேலையில் நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. உடன் இருப்போரை அனுசரிப்பது நல்லது.
கல்வி:
மே 11 வரை 5ல் சஞ்சரிக்கும் குரு உங்கள் உயர் கல்வி கனவை நனவாக்குவார். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை:
சுக ஸ்தானத்திற்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும் சனியின் பார்வை, அஷ்டம ஸ்தானத்தில் கேது, மே 11 முதல் குரு 6 ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத விபத்து, முழங்கால், மூட்டுகள், தொடைகளில் பாதிப்பு, கேஸ்டிக், அல்சர், இளைப்பு, மூச்சுக்கோளாறு, மன அழுத்தம், துாக்கமின்மை, ரகசிய நோய்கள், பரம்பரை நோய் என மருத்துவச் செலவு அதிகமாக வாய்ப்பு இருப்பதால் உடல்நலனில் அக்கறை தேவை.
குடும்பம்:
காலநிலையை உணர்ந்து இந்த ஆண்டில் செயல்பட வேண்டும். தம்பதியர் தங்களுக்குள் விட்டுக் கொடுப்பது நல்லது. குடும்பம், குழந்தைகள் என அக்கறையுடன் செயல்படுவது அவசியம். பிறரின் ஆலோசனையை ஏற்பதும் அந்நியரை வீட்டிற்குள் அனுமதிப்பதும் வீண் பிரச்னைக்கு வழிவகுக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
பரிகாரம்: இம்மையில் நன்மை தருவாரை வழிபட்டால் சங்கடம் அனைத்தும் விலகும்.
அவிட்டம்.. குறை தீர்ப்பார் குரு; தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1, 2 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கும், 3, 4ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசிநாதனாக உள்ளார் என்றாலும் கோச்சார கிரகங்களின் நிலைக்கேற்ப உங்களுக்கு பலன்கள் மாறுபடும்.
விசுவாவசு ஆண்டில் செயல்களில் சங்கடம், முயற்சிகளில் இழுபறி, வருமானத்தில் தடை, குடும்பத்தில் நிம்மதியின்மை, தம்பதிக்குள் கருத்து வேறுபாடு என எதிர்மறை பலன்கள் உண்டானாலும், குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் குறைகளை போக்கும். அனைத்திலும் நன்மை உண்டாகும்.
சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாதச்சனியாக, குடும்பத்தில் குழப்பம், ஆரோக்கியத்தில் பின்னடைவு, வருமானத்தில் தடைகளை ஏற்படுத்துவார். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாக வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலை, கூட்டுத் தொழிலில் தடை, தொழில், வேலையில் சோதனையை ஏற்படுத்துவார் என்றாலும், ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்ரம் அடைவதால் பாதிப்பு குறையும்.
ராகு, கேது சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் ராகு, தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், கேது அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் சங்கடம், வருமானத்தில் தடை, மனதில் குழப்பம், தேவையற்ற பிரச்னை தலையெடுக்கும், உடல் பாதிப்பு, கவுரவத்திற்கு இழுக்கு, மறைமுகத் தொல்லை, சிலருக்கு அவமானம் உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசிக்குள் ராகு, 7ல் கேது சஞ்சரிப்பதால் ஆசைகள் அதிகரிக்கும். மனம் புதியனவற்றின் மீது நாட்டம்கொள்ளும். சிலரை சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலை, வாழ்க்கைத்துணையின் உடல் பாதிப்பு ஏற்படலாம். நட்பில் விரிசல் உண்டாகும்.
குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் வக்ரம் கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு உயரும், கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த தொழில் என கனவுகள் நனவாகும். அதன்பின் தொழில் முன்னேற்றமடையும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வரவில் ஏற்பட்ட தடை விலகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் மறைமுகத் தொல்லை விலகும். செல்வாக்கு வெளிப்படும். தொழில், பணியில் ஆதாயம் அதிகரிக்கும். அதன்பின், குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் சனி, ராகுவால் உண்டான பாதிப்பு விலகும். பெரிய மனிதர்கள் சகவாசம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும், புதிய இடம், வீடு என விருப்பம் பூர்த்தியாகும்.
சூரிய சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – மே 14, ஜூலை 17 – ஆக. 16, நவ.17 – 2026 ஜன. 14 காலங்களிலும் அவருடைய சஞ்சார நிலை யோகத்தை உண்டாக்கும். தடைபட்ட வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். வம்பு, போட்டி, பிரச்னைகள் என்ற சங்கடங்களில் இருந்து விடுவிக்கும். தொழிலை லாபமாக்கும், புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.
செவ்வாய் சஞ்சாரம்: அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அக். 27 – டிச. 12, 2026 ஏப். 1 – 13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன் 8, டிச. 16 – 2026 ஜன.14 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செயல்களை லாபமாக்கும், துணிச்சல், தைரியம், வருமானம், வசதி வாயப்பை அதிகரிக்கும்.
பொதுப்பலன்: விசுவாவசு உங்களை யோசிக்க வைக்கும் ஆண்டாக இருக்கும். ஒரு பக்கம் சனி, ராகு, கேது பாதகம் உண்டாக்க மறுபக்கம் குரு பகவான் உங்களைப் பாதுகாக்கிறார். தக்க சமயத்தில் சூரியனும் செவ்வாயும் முன்னேற்றத்திற்கு வழியமைப்பர். திருமணம், குழந்தை, புதிய தொழில், வேலையில் முன்னேற்றம், வீடு, நிலம், வாகனம் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும் என்றாலும் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.
தொழில்: குரு பகவானின் பார்வை தொழில் காரகனுக்கு உண்டாவதால் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், நாட்டு மருந்து, இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், பங்குவர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் தொழில்கள் லாபமடையும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
பணியாளர்கள்: ஜீவன ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டானாலும் குரு பகவான் மே 11 வரை ஜீவன ஸ்தானத்தையும், அதன்பின் கும்ப சனியையும் பார்ப்பதால் எல்லா நெருக்கடிகளும் விலகும். பிரச்னை நீங்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலையில் இருந்த பயம் போகும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் இக்காலத்தில் வேலையில் கவனமாக இருப்பது நன்மையாகும்.
பெண்கள்: வருடம் முழுவதும் குரு சாதகமாக இருப்பதால் கல்வி, வேலை, திருமணம், மறுமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். பொன், பொருள் சேரும்.
கல்வி : குருபகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் நெருக்கடிகளுக்கு இடையிலும் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.
உடல்நிலை: சனி, ராகு, கேது சஞ்சார நிலைகள் சங்கடத்தை உண்டாக்கும் வகையில் இருப்பதால் விபத்து, தொற்று, பரம்பரை, ரகசிய நோய்கள் என ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் மருத்துவ செலவு ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை.
குடும்பம்: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகளை குரு தீர்த்து வைப்பார். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க நினைத்திருந்த கனவு நனவாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.
பரிகாரம்:அமிர்தகடேஸ்வரரை வழிபட அச்சம் நீங்கும். நன்மை நடக்கும்.