Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை)
மீனம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்
எழுத்தின் அளவு:
மீனம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2025
03:04

பூரட்டாதி.. உழைப்பால் உயர்வீர்கள்: தன புத்திர காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1, 2, 3 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும், 4 ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருபகவானே ராசிநாதனாகவும் உள்ளனர்.
விசுவாவசு ஆண்டில் முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஏற்ற லாபம் உண்டாகும். சிலருக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவர். தொழில் முன்னேற்றம் பெறும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குருவின் பார்வையால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவு அதிகரிக்கும். வாழ்க்கை வளமாகும்.

சனி சஞ்சாரம்: 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை ஜென்ம சனியாக பாதிப்பை ஏற்படுத்துவார். எதிர்பாராத சங்கடங்களை உண்டாக்குவார். தம்பதிக்குள் இடைவெளியை தோற்றுவிப்பார். மனதில் குழப்பத்தையும், ஆரோக்கியத்தில் பின்னடைவையும் உண்டாக்குவார். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரயச் சனியாக செலவை அதிகரிப்பார். ஓய்வு உறக்கமின்றி செயல்பட வைப்பார். தவறானவர்களின் நட்பை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தந்தையின் உடல்நிலையில் சங்கடம் ஏற்படலாம். ஆனால் ஜூலை 23 – நவ.18 காலத்தில் வக்ரம் அடைவதால் கெடுபலன் குறையும்.

ராகு, கேது சஞ்சாரம்: பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.26 முதல் ஜென்ம ராசிக்குள்ளும், கேது சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும், தவறானவர்களின் தொடர்பால் வாழ்க்கையின் பாதை மாறும். ஆசையின் காரணமாக சிலர் குறுக்கு வழியில் சம்பாதிக்கவும் முயற்சிப்பர். சட்ட சிக்கல்களுக்கும் ஆளாவீர்கள். தம்பதிக்குள் பிரச்னை உண்டாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் ராகு, சத்ரு ஜெய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், நெருக்கடி விலகும். செலவு அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உடல் பாதிப்புகள் விலகும். வியாபாரம், தொழிலில் இருந்த போட்டியாளர்கள் பலமிழப்பர். 

குரு சஞ்சாரம்: ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால், 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை குருவின் பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் உடல்நிலை சீராகும், மறைமுகத்தொல்லை விலகும். செல்வாக்கு உயரும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். விரயச்செலவு கட்டுப்படும். அதன்பின் 7ல் சஞ்சரித்து ஜென்ம ராசியையும், 9, 11ம் இடங்களையும் பார்க்கும் குருவால் சங்கடங்கள் நீங்கும். புதிய இடம், வீடு வாங்குவீர்கள். வருமானம் பல வழியிலும் வரும். சனி, ராகுவால் உண்டான பாதிப்பு விலகும். நீண்டநாள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் அமையும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை 7, 9, 11 ம் இடங்களைக் குரு பார்ப்பதால் திருமணத்தடை விலகும். தம்பதி ஒற்றுமை உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய இடம், வீடு சொந்தமாகும். வரவு அதிகரிக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். அதன்பின் 8, 10, 12 ம் இடங்களுக்கு குரு பார்வை உண்டாவதால்  அச்சம் குழப்பம் விலகும், மறைமுகத் தொல்லை நீங்கும். உடல்நிலை சீராகும். தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் இருந்த பிரச்னை தீரும். விரயச்செலவு கட்டுப்படும்.

சூரிய சஞ்சாரம்: பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 – மே 14, ஜூலை 17 – ஆக. 16, நவ.17 – 2026 ஜன. 14 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 15 – ஜூன் 14, ஆக. 17– செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களிலும் சூரியனால் யோகம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடியும். , போட்டி, பிரச்னைகள் என்ற நிலை மாறும். செல்வாக்கை உயர்த்துவார். தொழில், பணியில்  முன்னேற்றம் தருவார். 

செவ்வாய் சஞ்சாரம்: பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 14 – ஜூன் 8, டிச. 16 – 2026 ஜன. 14 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 8 – ஜூலை 30, ஜன. 14 – 2026 பிப். 21 காலங்களிலும் செவ்வாயால் வாழ்வில் புதிய பாதை தெரியும். செல்வாக்கு உயரும். முயற்சிகள் வெற்றியாகும். 

பொதுப்பலன்:  உழைப்பாலும், முயற்சியாலும் முன்னேறும் ஆண்டாக இருக்கும். சனி, ராகு, கேது என பாப கிரகங்கள் பாதகத்தை ஏற்படுத்தினாலும், குருவின் பார்வைகள்  பாதுகாப்பு தரும். சூரியனும், தைரியக்காரகன் செவ்வாயும்  உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில், வேலை, உத்தியோகத்தில் முன்னேற்றம், வீடு, நிலம், வாகனம் என எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தொழில்: 
தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். இயந்திரத்தொழில், வாகன உற்பத்தி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், ஆட்டோமொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், கெமிக்கல், மருந்தகம், பெட்ரோலியம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபமடையும்.

பணியாளர்கள்: வேலையில் இருந்த நெருக்கடி முடிவிற்கு வரும். வேலையில் இருந்த பயம் போகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம். பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சிகளுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். இளம் பெண்களுக்கு கல்வி, வேலை, திருமணம் குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். 

கல்வி : படிப்பின் மீது ஆர்வம் கூடும். மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை: சனி, ராகு, கேது சஞ்சார நிலைகள் சாதகமாக இல்லாமல் இருப்பதால் மருத்துவச்செலவு அதிகரிக்கும். மூட்டுவலி, கால்வலி, இதயக்கோளாறு, தொற்றுநோய், விபத்து என பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து குணம் பெறுவீர்கள். 

குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பொன் பொருள் சேரும்.

பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை அதிகரிக்கும். 

உத்திரட்டாதி: நெருக்கடி நீங்கும்.. ஞானக்காரகனும், கர்ம காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு பிறக்கும் விசுவாவசு நெருக்கடி நீங்கும் ஆண்டாக இருக்கும். பெரிய சுமையை இறக்கி வைத்த நிம்மதி இருக்கும். ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் பெயர்ச்சியாவது உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை விரய சனியாக சஞ்சரிப்பவர் உங்கள் உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். பலவழியிலும் செலவை உண்டாக்குவார். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகளை ஏற்படுத்துவார். தந்தையின் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடத்தை உண்டாக்குவார். உங்கள் உடல்நிலையில் ஏற்பட்ட தொந்தரவுகளை இல்லாமல் செய்வார். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி வக்ரமடைவதால் அவரால் ஏற்படும் பாதிப்பு குறையும்.

ராகு, கேது சஞ்சாரம் : ஜென்ம ராசிக்குள் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையை ஒன்றரை வருடமாக போராட்டமாக்கி வந்த நிலையில் ஏப்.26 ல் நடக்கும் ராகு, கேது பெயர்ச்சியால் உங்கள் நிலை உயரும். நெருக்கடிகள் விலகும். இடம், வீடு, வாகனம் என பணம் கரையும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். பெரிய அளவில் அச்சத்தை உண்டாக்கிய நோய்களின் பாதிப்பு குறையும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிரி, போட்டியாளர்கள் பலமிழப்பர். 

குரு சஞ்சாரம் : ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11ல் மிதுனத்தில் சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் அங்கே வக்ர நிவர்த்தி அடைகிறார். கடகத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலனையே தருவார். இதனால் மே 11 வரை 3ல் சஞ்சரித்தாலும், 7, 9, 11 ம் இடங்களுக்கு குரு பார்வைகள் உண்டாவதால் திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். நண்பருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டு முயற்சி சாதகமாகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். அதன்பின் 8, 10, 12 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால் மனம் தெளிவாகும். செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.

சூரிய சஞ்சாரம் : மே 15 – ஜூன் 14, ஆக. 17– செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களில் சூரியன் தன் சஞ்சார நிலைகளால் செல்வாக்கை அதிகரிப்பார். செயல்களை லாபமாக்குவார். விருப்பத்தை நிறைவேற்றுவார். குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம் தருவார். தை உண்டாக்குவார். உடல்நிலையை சீராக்குவார். வழக்குகளை வெற்றியாக்குவார்.

செவ்வாய் சஞ்சாரம் ஜூன் 8 – ஜூலை 30, ஜன. 14 – 2026 பிப். 21 காலங்களில் செவ்வாயின் சஞ்சார நிலைகள் தடைகளை நீக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள்.

பொதுப்பலன் இதுவரை உங்களுக்கிருந்த பிரச்னைகளுக்கு முடிவு உண்டாகும். ஆறாமிட கேதுவால் ஆற்றல் அதிகரிக்கும். நீண்ட நாளாக தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். மற்றவர் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், தொழில், வேலையில் முன்னேற்றம், வீடு, நிலம், வாகனம் என்ற கனவுகள் நனவாகும்.

தொழில் : தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகள், போட்டிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகும். பைனான்ஸ், ஜீவல்லரி, ஷேர் மார்க்கெட், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இயந்திரத்தொழில், ஹார்ட்வேர்ஸ், வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்தி, விற்பனை, எக்ஸ்போர்ட், அச்சகம், ஆன்லைன் வர்த்தகம் லாபமடையும். விவசாயிகள் நிலை உயரும்.

பணியாளர்கள் வேலையில் இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். சாதக பலன் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு விலகும். நிர்வாகத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பு கிடைக்கும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலையில் சேருவீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு தடைபட்ட இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள் : விசுவாவசு ஆண்டு உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்கள் கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உடல்பாதிப்புகள் விலகும். கல்வி திருமணம், குழந்தை பாக்கியம், வேலை என்ற கனவு நனவாகும். கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும்.

கல்வி : பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு எழுதியவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை : ருண ரோக ஸ்தானத்திற்கு சனி, ராகுவின் பார்வை உண்டாவதுடன், கேதுவின் சஞ்சாரமும் இருப்பதால் தீராத நோய்களும் தீரும். இதுவரை இருந்த பாதிப்பு மருத்துவத்தால் குணமாகும்.

குடும்பம் : குடும்பத்தில் பிரச்னை, அந்நியரால் குழப்பம், தவறான நட்புகளால் சங்கடம் என்றிருந்த நிலையெல்லாம் மாறும். தம்பதிக்குள் கருத்துவேறுபாடு நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் மேற்கல்வி, திருமண முயற்சி வெற்றி பெறும்.  குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். இடம், வீடு, வாகனம் வாங்க நினைத்த முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேரும்.

பரிகாரம் : மாசாணி அம்மனை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.

ரேவதி.. அனைத்திலும் வெற்றி: வித்யாகாரகனும், ஞானக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு, பிறக்கும் விசுவாவசு ஆண்டு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எந்தவொரு முன்னேற்றமும் இல்லையே என ஏங்கிய நிலை மாறும். உடல்நிலை சீராகும். முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

சனி சஞ்சாரம்: மார்ச் 6, 2026 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, செலவுகளை அதிகரிப்பார். தேவையற்ற அலைச்சலை ஏற்படுத்துவார். குடும்பத்திற்குள் குழப்பம், வார்த்தைகளால் சங்கடத்தை உண்டாக்குவார். புதிய சொத்து வாங்க வைப்பார். ஒரு சிலரை விற்கவும் வைப்பார். வேண்டுதலை நிறைவேற்ற வைப்பார். தந்தையின் உடல்நிலையில் அச்சத்தை உண்டாக்குவார். ஜூலை 23 – நவ. 18 காலத்தில் சனி வக்ரம் அடைவதால் அவரால் ஏற்படும்  நெருக்கடி நீங்கும்.

ராகு, கேது சஞ்சாரம்:  கடந்த ஒன்றரை ஆண்டாக உங்களைப் பல்வேறு சங்கடங்களுக்கும், அவமானத்திற்கும் ஆளாக்கி வந்த ராகுவும் கேதுவும் ஏப்.26 முதல் உங்கள் வாழ்க்கைக்கு புதிய வழியைக் காட்டுவர். உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். உடல்நிலையில் உண்டான பாதிப்பை நீக்குவர். இழுபறியாக இருந்த விவகாரங்கள் முடிவிற்கு வரும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

குரு சஞ்சாரம்: மே 11 வரை 3ல் எதிர்மறையாக சஞ்சரித்தாலும் அவருடைய மூன்று பார்வைகளும் 7, 9, 11 ம் இடங்களுக்கு உண்டாவதால் வருமானம் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். கூட்டு முயற்சி, கூட்டுத்தொழில் முன்னேற்றமடையும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர். அதன்பின் 8, 10, 12 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் எதிரி தொல்லை நீங்கும். மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய முயற்சி வெற்றியாகும்.

சூரிய சஞ்சாரம்: மே 15 – ஜூன் 14, ஆக. 17– செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களில் சூரியன் தன் 3, 6, 10, 11 ம் இட சஞ்சார நிலைகளால் முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு வெற்றி பெற வைப்பார். செல்வாக்கு,  பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.

செவ்வாய் சஞ்சாரம்: ஜூன் 8 – ஜூலை 30, ஜன. 14 – 2026 பிப். 21 காலங்களில் செவ்வாயின் சஞ்சார நிலைகள் உங்கள் நிலையை உயர்த்தும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நீண்டநாள் கனவு நனவாகும். தடைபட்ட முயற்சிகள் நடந்தேறும். வருமானம் உயரும்.

பொதுப்பலன்: உங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள் விலகும். ஆறாமிட கேதுவும், குருப்பார்வைகளும், சூரியன், செவ்வாயால் உண்டாகும் யோகப்பலன்களும் உங்களை முன்னேற்றப் பாதையில் நடை போட வைக்கும். வம்பு வழக்கு, சொத்துப் பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும். உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

தொழில்: தொழில் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட்,  நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஜீவல்லரி, கல்வி கூடங்கள், நோட்டு புத்தங்கள், ஆன்லைன் வர்த்தகம், பதிப்பகம் முன்னேற்றமடையும்.

பணியாளர்கள்: தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் கோரிக்கை நிறைவேறும். ஊதியம் உயரும். புதிய பொறுப்பு கிடைக்கும். அரசாங்கத்தில் தற்காலிகமாக பணியாற்றுபவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வேலையில் இருப்பவர்களுக்கு வழக்கு சாதகமாகும். தடைபட்ட இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: நீங்கள் எதிர்பார்த்த நிலையை இந்த ஆண்டில் அடைவீர்கள். எல்லா வகையிலும் நன்மையான ஆண்டாக அமையும். குருபார்வை உங்கள் குறைகளைத் தீர்க்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் தீரும். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை என்ற கனவுகள் நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். கணவரை இழந்தவர், பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும்.

கல்வி; பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிரமம் இல்லாமல் எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர். 

உடல்நிலை: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பாதம், கால்விரல்கள், இடது கண், நிணநீர் மண்டலம், நரம்புக்கோளாறு, சுவாசப்பிரச்னை, தொற்றுநோய் என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும்.

குடும்பம்: குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். தம்பதி ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். வெளி வட்டாரத்திலும், உறவுகள் மத்தியிலும் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை) »
temple news
அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட ... மேலும்
 
temple news
கார்த்திகை: சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..: சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மகம்: செயலில் கவனம்.. ஆத்மகாரகனும், ஞான மோட்சகாரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,விசுவாவசு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar