Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025 ரிஷபம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026 ரிஷபம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை)
மேஷம்: ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026
எழுத்தின் அளவு:
மேஷம்: ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026

பதிவு செய்த நாள்

26 ஏப்
2025
10:04

அசுவினி; நினைப்பது நடக்கும்.. உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சஞ்சரித்த ராகு, லாப ஸ்தானமான 11 ம் வீட்டிலும், இதுவரை சத்ரு ஜெய ஸ்தானமான 6 ம் வீட்டில் சஞ்சரித்த கேது 5 ம் வீடான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திலும் ஏப்.26, 2025 முதல் சஞ்சரிக்க உள்ளனர்.

லாப ஸ்தானமான 11 ம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நெருக்கடிகள் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கேதுவின் 5 ம் இட சஞ்சாரத்தால் தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். உறவுகளுடன் சண்டை சச்சரவு, பூர்வீக சொத்தில் பிரச்னைகள், பிள்ளைகளால் சங்கடம், வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் நிலை, வீண் அலைச்சல், முயற்சியில் இழுபறி ஏற்படும். புதிய நண்பர்களால் அவமானத்திற்கு ஆளாக நேரும்.

சனி சஞ்சாரம்: 
லாப ஸ்தானத்தில் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் மார்ச் 6, 2026 வரை சனி பகவானும் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மூடிக் கிடந்த நிறுவனங்கள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மார்ச் 6, 2026 முதல் விரய ஸ்தானமான 12 ம் வீட்டில் சஞ்சரிப்பவர் செலவுகளை அதிகரிப்பார். நிம்மதியாக துாங்க முடியாத அளவிற்கு வேலைகளை அதிகரிப்பார். வரவு ஒரு பக்கம் என்றால் மறு பக்கம் ஏதாவது  செலவு காத்துக் கொண்டிருக்கும்.

குரு சஞ்சாரம்: மே 11 வரை இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார். மே 11 முதல் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பவரால் திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்பு வரும். அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி, நவ.18 முதல் வக்கிரம் அடைவதால் வக்கிர குருவால் உங்கள் வாழ்க்கை வளமாகும். டிச. 21 முதல் வக்கிர கதியிலேயே மிதுனத்திற்கு செல்பவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தியாகி மே 26 வரை அங்கேயே சஞ்சரிப்பதால் முன்பு அவர் வழங்கிய பலன்களை தொடர்ந்து வழங்குவார். மே 26 முதல் கடகத்திற்கு பெயர்ச்சியாகும் குரு 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வியாபாரம் முன்னேற்றமடையும். விரயச்செலவு கட்டுப்படும்.

பொதுப்பலன்: கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்து, செவ்வாயின் சக்தி கொண்ட உங்களுக்கு லாப ராகு,  2026 மார்ச் 6 வரை சனி, குரு பகவானின் பார்வைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகம், தொழில், குடும்பத்தில் நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்க நினைத்த எண்ணம் பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.

தொழில்: இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னைகள் நீங்கும். தொழில் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், மருத்துவம், கெமிக்கல், மெடிக்கல் தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி நீங்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். நிர்வாகத்திடம் சலுகைகள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் நெருக்கடி விலகும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.  சிலருக்கு காதல் விவகாரத்தால் சங்கடம் ஏற்படும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். பிள்ளைகளால் சிலருக்கு சங்கடங்கள் ஏற்படும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

கல்வி: படிப்பில் ஆர்வம் இருந்தாலும் ஏதாவது தடையை சந்திக்க வேண்டியதாக இருக்கும். மனம் குழப்பமடையும். இந்த நேரத்தில் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது நன்மையாகும். உயர் கல்விக்குரிய முயற்சியில் கல்லுாரியை தேர்வு செய்வதில் கவனம் தேவை.

உடல்நிலை: 2026 மார்ச் 26 வரை ஜென்ம ராசிக்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும் சனியின் பார்வை இருப்பதால் உடல்நிலையில் ஏதேனும் சங்கடத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் என்பதால் மருத்துவச்செலவு நீடிக்கும்.

குடும்பம்: லாப ராகுவால் பணப்புழக்கம் உண்டாகும். விரும்பிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். குருபகவானின் பார்வையால் திருமணம், கிரகப்பிரவேசம் என சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

பரணி: பணப்புழக்கம் அதிகரிக்கும்
உங்கள் ராசிக்கு 12 ம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு, லாப ஸ்தானமான 11 ம் வீட்டிற்கும், 6 ம் வீடான சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது 5 ம் வீடான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திற்கும் ஏப்.26, 2025ல் பெயர்ச்சி ஆகின்றனர்.

லாப ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் ராகுவால் உடல், மன நிலையில் இருந்த சங்கடங்கள், தொல்லைகள் விலகும். புதிய தெம்பு வந்தது போல் இருக்கும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். அதற்கு சூழ்நிலைகளும் சாதகமாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை அமையும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாப ராகு வருவாயை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு தேவையான அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பெரியோரால் ஆதாயம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தும், கவுரவமும் உண்டாகும். தொட்டதெல்லாம் வெற்றி என வாழ்க்கை வளமாகும்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், உறவினரிடையே மனக்கசப்பு, சொத்து விவகாரத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சோதனை, குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் கோயில் வழிபாட்டை மருத்துவத்தையும் நாட வேண்டிய நிலை என ஒரு பக்கம் நெருக்கடி ஏற்பட்டாலும், அனைத்தையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். சிலருக்கு எதிர்பாலினரின் நட்பு, சந்தோஷம்  அதனால் சமூகத்தில் அவமானம், மரியாதை இழப்பு போன்றவையும் உண்டாகும். சிலர் கோயில் கோயிலாக சென்று வருவீர்கள். ஊர் விட்டு வேறு ஊருக்குச் சென்று வசிக்கும் நிலையும் சிலருக்கு ஏற்படும்.

சனி சஞ்சாரம்: 
லாப ஸ்தானத்திற்குள் ராகு சஞ்சரிக்கும் போது சனி பகவான் அங்கே ஆட்சியாக சஞ்சரிப்பதுடன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவையும் தம் ஏழாம் பார்வையால் மார்ச் 6, 2026 வரை பார்ப்பதால், தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும் என்றாலும் பிள்ளைகளால் சங்கடங்கள் தோன்றும். சொத்து விவகாரம் நீதிமன்ற வழக்கு வரை செல்லும். மார்ச் 6, 2026 முதல் விரய ஸ்தானமான 12 ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் பல வகையிலும் செலவு அதிகரிக்கும். இருப்பதை விற்று நிலைமையை சமாளிக்கும் நிலை சிலருக்கு ஏற்படும். வீண் அலைச்சல், முயற்சியில் தோல்வி, மருத்துவச் செலவு  ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். பணவரவில் தடைகள் உண்டாகும்.

குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் கனவுகளை நனவாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை நீக்குவார். நன்மைகளை அதிகரிப்பார். மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து 7, 9, 11 ம் இடங்களைப் பார்ப்பதால் நண்பர்களால் ஆதாயம் கூடும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். தெய்வ அனுகூலமும், பெரிய மனிதர் ஆதரவும் கிடைக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சிலருக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்பு வரும். அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி, நவ.18 முதல் வக்கிரமடைவதால்,  முன்பிருந்த ராசியின் பலன்களையே வக்கிர குரு வழங்குவார். டிச.21 முதல் வக்கிர கதியிலேயே மிதுனத்திற்கு செல்பவர் 2026 மார்ச் 17 முதல் வக்கிர நிவர்த்தியாகி, மே 26 வரை அங்கேயே சஞ்சரிப்பதால் முன்பு அவர் வழங்கிய பலன்களை தொடர்ந்து வழங்குவார். மே 26 முதல் கடகத்திற்கு பெயர்ச்சியாகும் குரு அங்கிருந்து 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் உடல்நிலை சீராகும். மறைந்திருந்த உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும்.  வீடு, வாகனம் என செலவு கூடும்

பொதுப்பலன்: சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்து செவ்வாயின் சக்தி கொண்ட உங்களுக்கு, லாப ஸ்தான ராகுவுடன், 2026 மார்ச் 6 வரை சனியும், தொடர்ந்து குரு பகவானின் பார்வைகளும் முன்னேற்றப் பாதையில் நடை போட வைக்கும். ஆதாயம் கூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நினைப்பதை நடத்தி முடிக்கும் அளவிற்கு சூழ்நிலைகள் சாதகமாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 

தொழில்: லாப ஸ்தான சனியுடன், ராகுவும் இணைவதால் தொழில் முன்னேற்றமடையும். வியாபாரிகள் வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். வாகனத்தொழில், ஸ்பேர் பார்ட்ஸ், ஸ்டேஷனரி, அழகு சாதனம், பேன்சி ஸ்டோர், ஹார்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ் தொழில்களில் லாபம் அதிகரிக்கும். ஆலோசகர்கள், கலைஞர்களின் நிலை உயரும்.


பணியாளர்கள்: உங்கள் திறமையை அறிந்து முதலாளி பாராட்டுவார். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஊதியம் உயரும். புதிய பொறுப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்:  வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். பிள்ளைகள் மீது அக்கறை உண்டாகும். படிப்பு, வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

கல்வி: ஐந்தாமிடத்தில் கேது சஞ்சரிப்பதால் உயர் கல்வியில் தடைகள் ஏற்படும் என்பதால் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நல்லது. கடும் முயற்சியால் உயர் கல்விக்குரிய கனவு நனவாகும். விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம் செல்வர். 

உடல்நிலை: 2026 மார்ச் 26 வரை ஆயுள் காரகன் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை  உடல் பாதிப்பை ஏற்படுத்தும். சிலர் விபத்தை சந்திக்க நேரும். மார்ச் 26 க்கு பிறகு மருத்துவ செலவு அதிகரிக்கும் என்பதால் இக்காலத்தில் எச்சரிக்கை அவசியம்.

குடும்பம்: 2026 மார்ச் 26 வரை குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். பொன் பொருள், சொத்து சேரும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும் என்றாலும் ஐந்தாமிட கேதுவால் உறவுகளால் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம் ஏற்படும். மார்ச் 26 முதல் குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால்  குடும்பத்தில் நெருக்கடி, எதிர்பாராத பிரச்னைகள், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும்.

பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும்.

கார்த்திகை: வியாபாரத்தில் முன்னேற்றம்..; உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகைவர்கள் என்றாலும் கோச்சார சஞ்சாரத்தின் போது சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவராகிறார்கள். கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு லாப ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.

இதனால் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு லாபங்களை வழங்கக் கூடியவராகவும், முன்னேற்றத்தை உண்டாக்கக் கூடியவராகவும் யோகப் பலன் வழங்க உள்ளார். 2,3,4ம் பாதத்தினருக்கு தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, பதவிக்கு ஆபத்து, வருமானத்தில் தடை, பொருளாதார நெருக்கடி என பலன் தருவார்.

கேது, கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு,  குடும்பத்தில் பிரச்னை, வாழ்க்கைத் துணையாலும் பிள்ளைகளாலும் கவலை, சிலருக்கு கருச்சிதைவு, பிள்ளைகளுக்கு தோஷம், எதிரிகளால் தொல்லை என்ற நிலையையும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு தாயாரின் உடல் பாதிப்பு, குடும்பத்தில் குழப்பம், உடல்நிலையில் கோளாறு, தவறான நட்பால் பொருளாதார இழப்பு, கவுரவத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன் வீடு, வாகனம், சொத்து போன்றவற்றை விற்று சமாளிக்க வேண்டிய நிலையையும் தருவார். சிலர் விபத்திலும் சிக்க நேரும்.

சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில், சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். மார்ச் 6, 2026ல் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை யோகப்பலன் வழங்குவார். வருமானத்தை அதிகரிப்பார், தொழிலை முன்னேற்றுவார், செல்வாக்கை அதிகரிப்பார். அதன் பிறகு விரயச் செலவுகளை உண்டாக்குவார், முயற்சியில் பின்னடைவு, எதிர்பாராத சங்கடத்தை ஏற்படுத்துவார், மருத்துவச் செலவை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, வருமானத்தில் தடை, சிலருக்கு வேலை இழப்பினையும் ஏற்படுத்துவார். மார்ச் 6 முதல் இந்நிலை மாறும். தடைபட்ட வேலை நடந்தேறும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும், நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும், குடும்பத்தில் நெருக்கடி விலகும்.

குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும்,  அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ. 18 முதல் அங்கு வக்கிரம் அடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மே26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். என்பதால் 1ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார், வருமானத்தை உயர்த்துவார், சொத்து சுகங்களை உண்டாக்குவார். திருமண வயதினரின் கனவை நனவாக்குவார். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமண வாழ்வை தருவார், பணப்புழக்கத்தை அதிகரிப்பார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொடக்கத்தில் அலைச்சலை அதிகரிப்பார், திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு என கனவை நனவாக்குவார் அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இல்லாமல் செய்வார். இழுபறி வழக்குகளில் வெற்றி அளிப்பார். செல்வாக்கை உயர்த்துவார், தொழிலில் முன்னேற்றத்தை, லாபத்தை உண்டாக்குவார். வேலை தேடி வந்தவர்களின் முயற்சியை வெற்றியாக்குவார்.

பொதுப்பலன்: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு  லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும்,  சனியும், குரு பகவானின் பார்வைகளும் லாபத்தை உண்டாக்குவர். வாழ்க்கை, குடும்பம், தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். செயல்களில் ஆதாயத்தையும், ஆடை ஆபரணச் சேர்க்கையையும் வழங்குவர். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி வைப்பர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் 2026 மார்ச் 6 முதல் லாப சனியால் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வைகளால் எடுத்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். புதிதாக சொத்து சேரும். பட்டம், பதவி கிடைக்கும். பணப்புழக்கம் உண்டாகும் என்றாலும் சிம்ம கேதுவால் சின்னச்சின்ன பிரச்சினைகளும் சோதனைகளும் உண்டாகும்.

தொழில்: கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு தொடர்ந்து ராகுவும், மார்ச் 6 வரை சனியும், 2, 3, 4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், மார்ச் 6 முதல் சனியும் யோக பலன்களை வழங்குவார். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும், புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நெருக்கடிகள் நீங்கும். ஏற்றுமதி இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், ஜூவல்லரி தொழில் முன்னேற்றமடையும். லாபம் தரும்.

பணியாளர்கள்: வேலையில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது. உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை, பொறுப்பு இல்லை என வருந்தியவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றமும் உயர்வும் கிடைக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். செல்வாக்கு உயரும். கணவரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் வந்தாலும் சரியாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணி இடத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்துணையை இழந்தவர், பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும்.

கல்வி: கார்த்திகை முதல் பாதத்தினருக்கு மே 11 க்கு பிறகும், 2,3,4 ம் பாத்த்தினருக்கு மே 11 வரையிலும் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் வெற்றி கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் நிலை உண்டாகும்.

உடல்நிலை: கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை ஆயுள் காரகனின் பார்வை ராசிக்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும்  உண்டாகிறது. 2,3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 முதல் ராசிக்கும் அஷ்டம ஸ்தானத்திற்கும் ஆயுள் காரகனின் பார்வை உண்டாகிறது என்பதால் இக்காலத்தில் உடல் நலிவு, பிணி, விபத்து மருத்துவச் செலவு ஏற்படும்.

குடும்பம்: குடும்பத்தில் நெருக்கடி விலகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய சொத்து சேரும். வாகனம், வீடு வகையில் கனவு நனவாகும். பொன், பொருள் சேரும், பிள்ளைகளுக்காக செலவு கூடும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் ஆலோசனையை மற்றவர் ஏற்று செயல்பட நன்மை அதிகரிக்கும்.

பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை) »
temple news
கார்த்திகை: வியாபாரத்தில் முன்னேற்றம்..; உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகைவர்கள் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்ல காலம் வந்தாச்சு..; உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருவால் குறை தீரும்..! உங்கள் நட்சத்திர நாதனான குருவிற்கு, ராகுவும் கேதுவும் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்..கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
உத்திரம்.. தடைகள் விலகும்: உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது இருவரும் பகைவர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar