பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
10:04
மிருகசீரிடம்: நல்ல காலம் வந்தாச்சு..; உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் பகைவர்கள் என்றாலும் கோச்சார சஞ்சாரத்தின போது அவர்கள் இருவரும் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்களாகிறார்கள். மிருகசீரிடம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு ஜீவன ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு சுக ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு முயற்சி ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.
இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். கலைத்தொழிலில் யோகத்தை வழங்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். 3,4ம் பாதத்தினருக்கு தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தந்தையிடமிருந்து பிரிந்து செல்லும் நிலையை உண்டாக்குவார். முயற்சிகள் இழுபறியாகும். எல்லாவற்றிலும் போராட்டம், உடல்பாதிப்பு, விபத்து என்று ஏற்படும்.
கேதுவால் மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் நிம்மதியின்மை, உடல் பாதிப்பு, வீடு, வாகனம், சொத்துக்களை விற்று கடனை அடைக்க வேண்டிய நிலை, தீயவர் நட்பால் தவறான பாதைக்கு சென்று சட்ட சிக்கல்களுக்கு ஆளாகும் சூழல், தாயாரின் உடல் பாதிப்பு, விபத்து என்ற நிலையையும், 3, 4 ம் பாதத்தினருக்கு எடுக்கும் முயற்சியில் வெற்றி, தொழிலில் ஆதாயம், ஆரோக்கியத்தில் முன்னேற்றம். குடும்பத்தில் மகிழ்ச்சி, புதிய வாகனம், சொத்து என்ற நிலையுடன் துணிச்சலாகவும் தைரியமாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் சூழல்களை உண்டாக்குவார்.
சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில், சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். அங்கிருந்து மார்ச் 6, 2026ல் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் மிருகசீரிடம் 1,2ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை வேலையில் பிரச்னைகள், வியாபாரத்தில் நெருக்கடி, உழைப்பிற்கேற்ற முன்னேற்றம் இல்லை என்ற கவலை, சிலருக்கு வேலைக்கு ஆபத்து, பொருளாதார நெருக்கடி ஏற்படும். மார்ச் 6 முதல் இந்நிலையில் மாற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி, தொழிலில் ஆதாயம், வியாபாரத்தில் முன்னேற்றம். வேலையில் எதிர்பார்த்த மாற்றம், பதவி உயர்வு, தடைபட்டிருந்த வேலைகள் மீண்டும் தொடக்கம். பணப்புழக்கம், அந்தஸ்து, செல்வாக்கு, குடும்பத்தில் நிம்மதி என்ற நிலை உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை அனைத்திலும் லாபம், வீடு, வாகனம், சொத்து சேரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழில் லாபம் தரும். எதிரி தொல்லையில் இருந்து விடுதலை, வழக்கில் வெற்றி, பெரிய மனிதர்களால் ஆதாயம், அந்தஸ்து, செல்வாக்கு என முன்னேற்றம் ஏற்படும். மார்ச் 6 முதல் எதிர்பாராத நெருக்கடி, வீண் பிரச்னை, வருவாயில் தடை, வேலையில் சிக்கல் என முன்பிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும்.
குரு சஞ்சாரம்: மே11 வரை ரிஷபத்திலும், அதன் பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால் 1,2 ம் பாதத்தினருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, வேலை வாய்ப்புகளையும், அதன்பின் ஆரோக்கியத்தில் மேன்மை, தொழிலில் முன்னேற்றம் என்ற நிலை உண்டாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வீண் செலவு, அலைச்சல் ஏற்பட்டாலும் குடும்பத்தில் நிம்மதி, புதிய வீடு வாகனம், வழக்கில் வெற்றியும் அதன்பின் திருமணம், குழந்தை பாக்கியம், பூர்வீக சொத்து, வீடு, வாசல் என்ற நிலை உண்டாகும்.
பொதுப்பலன்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 2026 மார்ச் 6 முதல் லாப சனியும் நன்மைகளை வழங்குவர். குடும்பம், உடல்நிலை, வேலை, தொழில் முன்னேற்றமடையும். 3, 4 ம் பாதத்தினருக்கு மூன்றாமிட கேதுவும், 2026 மார்ச் 6 வரை சனியும், குருபார்வையால் முயற்சிகள் வெற்றி பெறும். முன்னேற்றம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடியும். வசதி வாய்ப்பு பெருகும். குழந்தை பாக்கியம், உயர் கல்வி, திருமணம், வீடு, வாகனம் என எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தொழில்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 2026 முதல் லாப சனியும், 3, 4 ம் பாதத்தினருக்கு கேதுவின் சஞ்சாரமும், 2026 மார்ச் 6 வரை சனியும், குருவின் பார்வைகளும் முன்னேற்றத்தை வழங்க இருப்பதால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். குடிநீர், விவசாயம், பெட்ரோலியம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், ஜூவல்லரி, மருத்துவம், நோட்டு புத்தகம், காலண்டர் தயாரிப்பு போன்ற தொழில்கள் முன்னேற்றம் அடையும். அறுவை சிகிச்சை மருத்துவர்கள், ஆசிரியர்கள் கலைஞர்கள் படைப்பாளர்கள் ஆகியோர் லாபம் காண்பர். சிலருக்கு புதிய தொழில் உண்டாகும்.
பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட சிரமங்கள் முடிவிற்கு வரும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருக்கும் சிலர் நிரந்தரமாவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் நிர்வாகத்தின் சொல்படி நடப்பதால் முன்னேற்றம் உண்டாகும்.
பெண்கள்: இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், உயர்கல்வி, வேலை என எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கணவரின் ஆதரவால் அனைத்தையும் சமாளிப்பீர்கள்.
கல்வி: பொதுத்தேர்வு எழுதி இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொறியியல், அக்ரி துறைகளை எதிர்பார்த்தவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.
உடல்நிலை: மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு கேது 4ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ஒன்று போய் ஒன்று என்று ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும். சிலர் விபத்திலும் சிக்க நேரும் என்பதால் எச்சரிக்கை அவசியம். 3,4ம் பாதத்தினருக்கு தொடர்ந்து உபாதைகளை உண்டாக்கி வந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
குடும்பம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். சொத்து சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். கடந்த கால நெருக்கடிகள் இல்லாமல் போகும். புதிய வாகனம், வீடு, சொத்து, பொன் பொருள் சேரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட நன்மைகள் உண்டாகும்.
திருவாதிரை; நினைப்பது நடக்கும்
உங்கள் ராசிக்கு 10ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழிலில் முனேற்றத்தையும் செயல்களில் லாபத்தையும் வழங்கிய ராகு, ஏப்.26ல் பாக்கிய ஸ்தானத்திலும், சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது 3ம் இடமான சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.
பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உடல் நிலையில் இருந்த சங்கடம், சோர்வை நீக்குவார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். தொழிலில் முயற்சி, ஆர்வத்தை அதிகரிப்பார். சிறிய முயற்சி செய்தாலும் அதில் பெரிய வெற்றியை அளிப்பார். புதிய வாகனங்கள் வாங்க வைப்பார். சொத்து சம்பந்தமாக நன்மைளைத் தருவார். உங்களுக்கு மேலானவர்கள், மேலதிகாரிகளால் சங்கடம், நெருக்கடிகளை ஏற்படுத்துவார். தந்தையின் உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். திருத்தல யாத்திரை மேற்கொள்ள வைப்பார். இழந்த பொருட்களை மீட்க வழி காட்டுவார்.
கேதுவின் 3 ம் இட சஞ்சாரத்தால், நீங்கள் பட்ட துன்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர்களும் நோய் நீங்கி ஆரோக்கியமான நிலையை அடைவர். தொழிலில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த நேரத்தில் வரவிற்கு மீறிய செலவும் இருக்கும். பணத்தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க செலவை கட்டுப்படுத்துவது நல்லது. வருமானத்தை விட உபரி வருமானம் அதிகளவில் ஏற்படும். விவசாயத்தில் முன்னேற்றமும் கால்நடைகள் வளர்ச்சியும் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நவீன பொருட்களின் சேர்க்கை அதிகளவில் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சனி சஞ்சாரம்:
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில், சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். அங்கிருந்து மார்ச் 6, 2026 அன்று மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மார்ச் 6 வரை எடுத்த வேலைகள் வெற்றியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். அந்தஸ்து உயரும். வீடு, வாகனம், சொத்து என வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகள் சேரும். வியாபாரம் முன்னேற்றமடையும். தொழில் லாபம் தரும். தடைபட்ட வருமானம் வரும். எதிரிகள், போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லை விலகும். இழுபறியாக இருந்த வழக்குகளில் வெற்றி உண்டாகும். பெரிய மனிதர்களால் ஆதாயம் உண்டாகும். சமூகத்தில் முன்னேற்றம் ஏற்படும். மார்ச் 6 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் வேலையில் எதிர்பாராத நெருக்கடி, வீண் பிரச்னை, வருமானத்தில் தடை, குடும்பத்தில் சிக்கல்கள் என நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரம் மந்தமாகும். வேலைப்பளு அதிகரிக்கும்.
குரு சஞ்சாரம்:
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தியடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், தொடக்கத்தில் வீண் செலவுகள், அலைச்சல் ஏற்பட்டாலும் குடும்பத்தில் நிம்மதி, புதிய வீடு வாகனம், வழக்கில் வெற்றி, செல்வாக்கில் உயர்வு ஏற்படும். அதன் பின் திருமணம், குழந்தை பாக்கியம், பூர்வீக சொத்து, வீடு, வாசல் என எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பொதுப்பலன்: மூன்றாமிட கேதுவும், 2026 மார்ச் 6 வரை சனியும், குருபார்வைகளும் தொட்ட காரியங்கள் அனைத்திலும் லாபம் என்ற நிலையை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். குடும்பத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். படிப்பு, வேலை, திருமணம், சொத்து, சுகம் என அனைத்தும் சுபமாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தொழில்: தொழிலில் முயற்சி கூடும். ஆர்வம் அதிகரிக்கும். சிறிதாக தொடங்கப்பட்ட தொழிலும் இக்காலத்தில் பெரிதாக வளர்ச்சி அடையும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். எக்ஸ்போர்ட், பைனான்ஸ், ஷேர் மார்க்கெட், சின்னத்திரை, ஜூவல்லரி, விவசாயம் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பணியாளர்கள்: உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் மதிப்பு அதிகரிக்கும்.வேலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என வருந்தியவர்களுக்கு ஊதியம் உயரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். குடும்பத்தில் குழப்பம் விலகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமை அடைவர். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கணவருடன் இணக்கம் உண்டாகும். திருமணம், குழந்தை பாக்கியம், உயர்கல்வி, வேலை என எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
கல்வி: கல்வியில் அக்கறை கூடும். சிலருக்கு தடைபட்ட கல்வி தொடரும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: கேது சஞ்சாரத்துடன், சனி பகவானின் பார்வை 6 ம் இடத்திற்கு உண்டாவதால் நோய்கள், மருத்துவச்செலவு என்றிருந்த நிலை மாறும். இதுவரை இருந்த பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் மேம்படும்.
குடும்பம்: வீட்டில் இருந்த பிரச்னைகள் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு என குடும்பத்தில் மகிழ்ச்சி களை கட்டும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும்.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
புனர்பூசம்: குருவால் குறை தீரும்..! உங்கள் நட்சத்திர நாதனான குருவிற்கு, ராகுவும் கேதுவும் பகையானவர்கள் இல்லை என்றாலும், கோச்சார சஞ்சாரத்தின் போது அவர்கள் இருவரும் தாங்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்களாகிறார்கள். புனர்பூசம் 1, 2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்திலும், கேது மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். 4ம் பாதத்தினருக்கு ராகு அஷ்டம ஸ்தானத்திலும் கேது குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கப் போகின்றனர்.
இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு, தந்தையின் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவார். உங்கள் உடல் நிலையிலும் சங்கடங்களை அதிகரிப்பார். தொழிலில் தடை, நெருக்கடிகளை ஏற்படுத்துவார். மேலதிகாரிகளால் சங்கடம், நெருக்கடிகளை ஏற்படுத்துவார்.
இந்த நேரத்தில் கேது 3 ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு யோகமாகும். ராகுவால் ஒரு பக்கம் நெருக்கடி என்றால் கேதுவால் மறுபக்கம் ஆதாயம் உண்டாகும். இதுவரை ஏற்பட்ட துன்பம், வறுமை, நோய்களில் இருந்து விலகுவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வருமானத்தை விட உபரி வருமானம் அதிகளவில் ஏற்படும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும்.
4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ராகு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கப் போவதால் செயல்களில் போராட்டம், தாமதம் ஏற்படும். தொழிலில் பாதிப்பு, வேலையில் நெருக்கடி, வருமானத்தில் தடை, வாகன விபத்து, நோய் நொடி, குடும்பத்தில் போராட்டம் என்ற நிலை உண்டாகும். இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் கேது, குடும்பத்தில் குழப்பம், சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவார். கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடும், ஒரு சிலருக்கு பிரிவும் ஏற்படும். எதிர்பார்க்கும் வேலைகள் இழுபறியாகும். கடன் வாங்கிய பணத்தை அடைக்க முடியாத நிலை ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில், சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். அங்கிருந்து மார்ச் 6, 2026 அன்று மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் புனர்பூசம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை நினைப்பது நடந்தேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். அந்தஸ்து உயரும். வீடு, வாகனம், சொத்து என வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகள் சேரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழில் லாபம் தரும். தடைபட்ட வருமானம் வரும். மார்ச் 6 முதல் இந்நிலையில் மாற்றம் உண்டாகும். வேலையில் எதிர்பாராத நெருக்கடி, வீண் பிரச்னை, வருவாயில் தடை, குடும்பத்தில் சிக்கல் என நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரம் மந்தமாகும். வேலைப்பளு அதிகரிக்கும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை நெருக்கடியும், அவதியும், போராட்டமும், உடல்நலக்குறைவும், நிம்மதியற்ற நிலையும் இருக்கும். சிலருக்கு விபத்தும் ஏற்படும். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். மார்ச் 6 முதல் இந்நிலை மாறும். தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும், வழக்கு சாதகமாகும். வீடு, வாகனம், சொத்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உடல்நிலை சீராகும்.
குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ. 18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தியடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 11 வரை வீண் செலவுகள், அலைச்சல் ஏற்பட்டாலும் குடும்பத்தில் நிம்மதி, புதிய வீடு வாகனம், வழக்கில் வெற்றி, செல்வாக்கில் உயர்வு ஏற்படும். அதன்பின், திருமணம், குழந்தை பாக்கியம், பூர்வீக சொத்து, வீடு, வாசல் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை குடும்பத்தில் நிம்மதி இருக்கும். திருமணம், குழந்தை பாக்யம், உயர் கல்வி, வேலை என்ற அடிப்படைகள் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். அதன்பின் விரயச்செலவு அதிகரிக்கும். ஒரு சிலர் புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.
பொதுப்பலன்: புனர்பூசம் 1, 2, 3 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பாக்ய சனியும், மூன்றாமிட கேதுவும் குருபார்வைகளும் நன்மைகளை உண்டாக்கும். எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்பத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். படிப்பு, வேலை, திருமணம், சொத்து சுகம் என்ற தேவைகள் நிறைவேறும். தடைபட்ட பணிகள் நடந்தேறும். 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை குருவின் சஞ்சாரமும், அதன்பின் பார்வைகளும், 2026 மார்ச் 6 முதல் பாக்ய சனியும் ஆதாயத்தை ஏற்படுத்துவர். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். தொழில், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தொழில்: முயற்சியும் அக்கறையும் உங்களை உயர்த்தும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். ஏற்றுமதி, இறக்குமதி, டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், பைனான்ஸ், மருத்துவம், கல்வி, பேக்டரி, கம்பெனி, ஹார்ட்வேர்ஸ், மெஷினரி, குடிநீர், குளிர்பானம், நகை தொழில்களில் ஆதாயம் கூடும்.
பணியாளர்கள்: அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாறுதல் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு கூடும் என்றாலும் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். உடன் பணிபுரிவோரின் ஆதரவு உண்டாகும்.
பெண்கள்: உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நீண்டநாள் கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். கணவரின் ஆதரவால் எடுக்கும் முயற்சிகள் நிறைவேறும். திருமணம், குழந்தை பாக்கியம், உயர்கல்வி, வேலை என்ற கனவு நனவாகும்.
கல்வி: குருவின் பார்வைகளால் படிப்பில் அக்கறை கூடும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடப்பிரிவில், விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: உடல் பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவத்தால் குணமாகும். என்றாலும், உடல்நிலையில் எப்போதும் கவனமாக இருப்பது அவசியம். சிலர் விபத்தை சந்திக்க வாய்ப்பிருப்பதால் வாகனப் பயணத்தில் விழிப்புடன் செயல்படவும்.
குடும்பம்: திட்டமிட்டு செயல்படுவதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பொன், பொருள் சேரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.