Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - ... துலாம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026 துலாம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை)
கன்னி : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026
எழுத்தின் அளவு:
கன்னி : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026

பதிவு செய்த நாள்

26 ஏப்
2025
11:04

உத்திரம்.. தடைகள் விலகும்: உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது இருவரும் பகைவர்கள் என்றாலும் அவர்கள் கோச்சார சஞ்சாரத்தின் போது சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவராகிறார்கள். உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு சப்தம ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சத்ரு ஜெய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது, உத்திரம் 1 ம் பாத த்தினருக்கு ஜென்ம ராசிக்குள்ளும், 2,3,4 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.

முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு நெருக்கடியை உண்டாக்குவார். குடும்பம், தொழில், வேலையில் பிரச்னைகளை ஏற்படுத்துவார். அந்நியரால் சங்கடத்தை அதிகரிப்பார். சுய ஒழுக்கத்தில் தடுமாற்றத்தை உருவாக்குவார். குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலையை வழங்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு, நற்பலன் அதிகரிக்கும். உடல் பாதிப்பு விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். விரோதிகள் விலகிச் செல்வர். முயற்சி யாவும் வெற்றியாகும்.

கேது, உத்திரம் 1ம் பாதத்தினருக்கு மனக்குழப்பம் தருவார். எடுக்கும் வேலைகளை இழுபறியாக்குவார். குடும்பம், தொழில், வேலையில் பிரச்னைகளை உருவாக்குவார். உடல் பாதிப்பையும், சோதனைகளையும் அதிகரிப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு பல வகையில் செலவு அதிகரிக்கும். தொழிலில் அக்கறை இல்லாமல் போகும். எந்த ஒன்றிலும் நிலையான முடிவிற்கு வர முடியாத அளவிற்கு சூழல் உருவாகும். பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். சிலர் ஊரை விட்டு வெளியூர் செல்லும் நிலை உருவாகும் என்றாலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து சூனிய நிலையை உண்டாக்கியவர் விரய ஸ்தானத்திற்கு செல்வது ஓரளவிற்கு நன்மை தரும். 

சனி சஞ்சாரம்:  கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் உத்திரம் 1ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் வரை 7ம் இடத்திலும், அதன்பின் 8ம் இடத்திலும் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் குழப்பம், தம்பதிக்குள் பிரச்னை, உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் இழுபறி நிலையை உண்டாக்குவார். அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவத்தில் குறைவை ஏற்படுத்துவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். உடல்நிலையில் இருந்த பாதிப்பை நீக்குவார். எதிர்ப்பு, போட்டி என்ற நிலையை மாற்றி செல்வாக்கை உயர்த்துவார். வழக்குகளை வெற்றியாக்குவார். அதன் பிறகு செயல்களில் தடை, தம்பதிக்குள் இடைவெளி, கூட்டுத்தொழிலில் பிரச்னை, நண்பர்களுடன் பகையை ஏற்படுத்துவார்.

குரு சஞ்சாரம்: மே11 வரை ரிஷபத்திலும், அதன் பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச்17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாவதால் 1ம் பாதத்தினருக்கு மே11 வரை வேலைகளில் நெருக்கடி, வருமானத்தில் தடை, குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். அதன்பின் லாப குருவால் வருமானம் உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே11 வரை நினைப்பது நடந்தேறும். எடுத்த முயற்சி வெற்றியாகும். சொந்த வீடு, சொத்து, வாகனம் என்ற கனவு நனவாகும். அதன்பின் எதிர்பாராத நெருக்கடி, தொழில், வேலையில் பிரச்னை,  சிலருக்கு வேலையை இழக்க வேண்டிய நிலையும் உண்டாகும்.

பொதுப்பலன்: 1ம் பாதத்தினருக்கு, சனி, ராகு கேதுவால் நெருக்கடி உண்டானாலும், குருவின் பார்வையாலும், லாப ஸ்தான சஞ்சாரத்தாலும், சூரியன் 3,6,10,11லும், செவ்வாய் 3,6,11லும் சஞ்சரிக்கும் காலங்களில் நினைத்த வேலைகள் நடந்தேறும். வாழ்வில் ஏற்பட்ட சங்கடம் விலகும். 2,3,4ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகுவும், 2026 மார்ச் 6 வரை சனியும், மே11 வரை குருவின் சஞ்சாரமும், அவருடைய பார்வைகளும் முன்னேற்றத்தை உண்டாக்கும். செல்வாக்கை உயர்த்தும். பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

தொழில்: உத்திரம் 1ம் பாதத்தினருக்கு மே11 முதல் லாப குருவும், 2,3,4ம் பாதத்தினருக்கு, 6ம் இட ராகு, 2026 மார்ச் 6 வரை சனி, மே 11 வரை பாக்ய குருவும், அதன் பிறகு அவருடைய பார்வைகளும் சாதகமாக இருப்பதால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும்.
பங்கு வர்த்தகம், டிரேடிங், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், டிரான்ஸ்போர்ட், வாகன விற்பனை, ஆடை ஆபரணம், பேன்சி ஸ்டோர், ஜூவல்லரி, அழகு சாதனம், சினிமா, தொலைக்காட்சி, யூடியூப், ஆன்லைன் வர்த்தகம், பதிப்பகம், கல்வி கூடங்கள் முன்னேற்றம் பெறும். 

பணியாளர்கள்: பெரிய அளவில் சங்கடம் அனுபவித்து வந்தவர்களுக்கு இக்காலத்தில் மாற்றம் உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வும், சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாறுதல் கிடைக்கும்.

பெண்கள்: இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். உடல்நிலையில் பாதிப்பு விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். கணவரின் ஆதரவால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.

கல்வி: படிப்பில் அக்கறை கூடும். பொதுத்தேர்விலும், போட்டித்தேர்வுகளிலும் வெற்றி உண்டாகும். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்றும் செல்வீர்கள்.

உடல்நிலை: 1 ம் பாதத்தினருக்கு சனி, ராகு கேது சஞ்சார நிலை பாதகமாக இருப்பதால் மருத்துவச் செலவு அதிகரிக்கும். பரம்பரைநோய், தொற்றுநோய், விபத்தினால் பாதிப்பு என மருத்துவ
மனைக்கு சென்று வருவீர்கள். 2,3,4 ம் பாதத்தினருக்கு இதுவரை சங்கடப்படுத்தி வந்த நோய் நொடிகள் விலகும். ஆரோக்கியம் சீராகும்.

குடும்பம்: இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வீடு, மனை, வாகனம் என்ற கனவு நனவாகும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன், மனைவிக்குள் உண்டான பிரச்னைகள் விலகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும்.

பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.

அஸ்தம்: யோகமான காலம்

உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து நிறைய நெருக்கடியை உண்டாக்கிய ராகு, ஏப். 26ல் 6ம் இடமான ருண, ரோக சத்ரு ஜெய ஸ்தானத்திலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வாழ்க்கையைப் போராட்டமாக்கி வந்த கேது 12ம் இடமான அயன சயன ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.

சத்ரு ஜெய ஸ்தானம் என்னும் 6ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கும் காலத்தை யோக காலம் என்றே சொல்ல வேண்டும். இதுவரை அனுபவித்த சங்கடங்கள் எல்லாம் இனி இல்லாமல் போகும். உடலில் ஏற்பட்ட நோய்கள் விலகும். உங்கள் வாழ்வில் எதிர்பார்த்த மாற்றத்தை  அடைவீர்கள்.  நினைத்துக்கூட பார்க்க முடியாத உயர்வு இப்போது உண்டாகும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இது லாபமான காலமாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு மேலதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். விவசாயம், கால்நடைகளால் பலன் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இந்த நேரத்தில் வரும். வங்கி மூலம் கடன் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைக்கு, தொழிலுக்கு, விவசாயத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் இக்காலத்தில் பூர்த்தி செய்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். இதுவரை உங்களுக்கு எதிரியாக இருந்தவர்கள் இனி உங்களை எதிர்க்க அச்சப்படுவார்கள்.

கடந்த ஒன்றரை ஆண்டாக உங்கள் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து கடுமையான நெருக்கடிக்கு  ஆளாக்கிய கேது பகவான் விரய ஸ்தானத்திற்கு செல்வது சங்கடத்திலும் ஒருவித நன்மை என்றே சொல்ல வேண்டும். 12ம் இடத்தில் கேது சஞ்சரிக்கும் போது தேவையற்ற மனக் குழப்பத்தை உண்டாக்குவார். சின்னச் சின்ன விஷயத்திற்கும் பெரிய அளவில் பயம் உண்டாகும். உறவினர் வகையில் தொல்லை, அதனால் கவலை ஏற்படும். வீண் அலைச்சல் அதிகரிக்கும். வசதி வாய்ப்பு இருந்தாலும் வேலைக்கு சாப்பிடவோ, துாங்கவோ முடியாத அளவிற்கு வேலைகள் இருக்கும். திட்டமிடுவது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். உடலில் ஏதாவது நோய் வந்து மனதை வேதனைப்படுத்தும். ஆனாலும் தொழில் மீது அக்கறையும் முயற்சியும் அதிகரிக்கும். எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற வேகம் மனதில் இருக்கும்.

சனி சஞ்சாரம்:  கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீனராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால், மார்ச் 6 வரை நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். எந்த ஒன்றிலும் உங்கள் கை ஓங்கும். உங்களை எதிர்த்தவர்கள் உங்களிடம் சரணடையும் நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். மனதில் உற்சாகம் உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். மார்ச் 6 முதல் சனி 7ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தம்பதிக்குள் தேவையற்ற பிரச்னைகள் தோன்றும். நன்றாக பழகிய நண்பர்களும் உங்களை விட்டு விலகுவர்.  அரசியல்வாதிகள் முயற்சி இழுபறியாகும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி உண்டாகும்.

குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்திலும், அதன் பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தியடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். மே 11 வரை பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்க்கும் குருவால் நீங்கள் நினைப்பது நடந்தேறும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். சொந்த வீடு, சொத்து, வாகனம் என்ற கனவு நனவாகும். மே 11 க்கு பிறகு தொழில், வேலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் நிம்மதியும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையும், ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் உண்டாகும்.

பொதுப்பலன்: ஜென்ம ராசியை விட்டு கேது விலகுவதும், 7ம் இடத்தில் இருந்து ராகு விலகுவதும் உங்களுக்கு  நன்மையாகும். 6ம் இட ராகுவும், 2026 மார்ச் 6 வரை சனியும், மே 11 வரை குருவின் சஞ்சாரமும், அவருடைய பார்வைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பம், தொழில், வேலையில் இருந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து சேரும். பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு உயரும்.

தொழில்: 6ம் இட ராகு, 2026 மார்ச் 6 வரை சனி, மே 11 வரை பாக்ய குருவும், அதன்பிறகு அவருடைய பார்வைகளும் சாதகமாக இருப்பதால் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். நிதிநிறுவனம், ஆன்லைன் வர்த்தகம், டிரேடிங், ஒப்பந்த பணி, டிரான்ஸ்போர்ட், வாகன விற்பனை, ஸ்பேர் பார்ட்ஸ், கல்வி, நோட்டு, புத்தகம் தயாரிப்பு, மினரல் வாட்டர், பப்ளிகேஷன்ஸ், விவசாயம், சின்னத்திரை, ரெடிமேட்ஸ் தொழில்கள் லாபமடையும்.

பணியாளர்கள்:  நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும். உங்கள் திறமைக்கேற்ற பொறுப்பும், சலுகைகளும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்திற்குள் அந்நியரால் ஏற்பட்ட குழப்பம் தீரும். நிம்மதியான நிலை உருவாகும். கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும். வீடு, வாகனம், பொன், பொருள் சேரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். இளம் பெண்கள் கல்வியில் தேர்ச்சி அடைவர். வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

கல்வி: இயல்பாகவே படிப்பில் அக்கறை உடைய உங்களுக்கு இக்காலத்தில் தேர்வு முடிவு சாதகமாகும். எதிர்பார்த்த கல்லுாரியில், விரும்பிய பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: ஆயுள் காரகனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன், ஜென்ம கேது இடம் மாறியிருப்பதால் உடலை வாட்டிய நோய்கள் இல்லாமல் போகும். ஆறாமிட ராகுவும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். நீண்டநாள் நோய்களும் மருத்துவத்தால் குணமாகும்.

குடும்பம்: குடும்பத்தில் நிலவிய பாதக நிலை விலகும். உலகையும் உறவுகளையும் புரிந்து கொண்டதால், தன் குடும்பம் தன் மக்கள் என்ற நிலைக்கு வருவீர்கள். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து சேர்ப்பதில் ஆர்வம் கூடும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.

சித்திரை.. செயலில் கவனம்: உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், கோச்சார சஞ்சாரத்தின் போது அவர்கள் தாங்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்களாகிறார்கள். சித்திரை 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு, சத்ரு ஜெய ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது, சித்திரை 1, 2 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானத்திலும், 3, 4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.

இதனால் 1, 2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுக்கு ராகு யோகப் பலன் வழங்குவார். இதுவரை இருந்த சங்கடம் எல்லாம் இக்காலத்தில் இல்லாமல் போகும். தொட்டதெல்லாம் வெற்றியாகும். குடும்பம், தொழில், வேலை அனைத்தும் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பும், தடையும், வழக்கும் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை சீராகும். 3,4ம் பாதத்தினருக்கு வாழ்க்கைத் துணையாலும், குழந்தைகளாலும் கவலை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் உண்டாகும். குழந்தைப் பிறப்பில் சங்கடம் ஏற்படும். வருமானம் குறையும். எதிரி தொல்லை அதிகரிக்கும். பல வகையிலும் நெருக்கடி தோன்றும்.

கேது, சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு வீண் குழப்பம், பயத்தை உண்டாக்குவார். பல வகையிலும் செலவை அதிகரிப்பார்.  உறவினர் வகையில் தொல்லையை ஏற்படுத்துவார். வீண் அலைச்சலை ஏற்படுத்துவார். திட்டமிட்ட வேலைகளில் மாற்றத்தை உண்டாக்குவார். உடல் பாதிப்பை ஏற்படுத்தி மருத்துவச் செலவை ஏற்படுத்துவார். 3, 4 ம் பாதத்தினருக்கு, லாப கேது, வருமானத்தை அதிகரிப்பார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சுபிட்சமான நிலை ஏற்படும். ஆடை, ஆபரணம் சேரும்.  விலகிச் சென்ற உறவினர்களும் சொந்தம் கொண்டாடுவர். எதிர்பாலினரால் ஆதாயம் உண்டாகும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். செல்வாக்கு உயரும்.

சனி சஞ்சாரம்:  கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் 1, 2 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். எதிரி தொல்லை இல்லாமல் போகும். உடல்நிலை சீராகும். இழுபறி விவகாரம் முடிவிற்கு வரும். மார்ச் 6 முதல் இந்த நிலை மாறும். குடும்பத்தில் குழப்பம், பிரச்னைகள் தோன்றும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு மங்கும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி உண்டாகும். 3, 4ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை மன சஞ்சலம், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை, பிரிவு, பிள்ளைகளால் நெருக்கடி அவமானம், பூர்வீகச் சொத்தில் பிரச்னை, வழக்கு, தகுதியற்ற காதல் என போராட்டமாகவே இருக்கும். மார்ச் 6 முதல் இந்நிலை மாறும். மனமும் உடலும் தெளிவடையும். நெருக்கடியில் இருந்து மீள்வீர்கள். வியாபாரம், தொழில், குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். ஏளனமாகப் பார்த்தவரும் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலைமை மாறும். உயர்வு உண்டாகும்.

குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக். 8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல்  வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், 1, 2 ம் பாதத்தினருக்கு மே 11 வரை நினைப்பது நடக்கும். முயற்சிகள் வெற்றியாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பட்டம், பதவி கிடைக்கும். சொந்த வீடு, சொத்து, வாகனம், திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். மே11 க்கு பிறகு பண வரவில் தடை உண்டாகும். பார்த்துவரும் வேலையில் பிரச்னைகள் தோன்றும். 3, 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை நெருக்கடி உண்டாகும். யோசிக்காமல் செயல்பட்டு பண இழப்பு, மரியாதை இழப்பு என சங்கடப்படுவீர்கள் என்றாலும் குடும்ப நலனைப் பாதுகாப்பீர்கள். மே11 க்கு பிறகு பாக்கிய குருவால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். சொத்து, சுகம், வீடு, வாசல், வண்டி, வாகனம் என்ற கனவுகள் நனவாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பொதுப்பலன்: சித்திரை 1, 2 ம் பாதத்தினருக்கு ஒன்றரை ஆண்டுக்கு ராகுவும், மார்ச் 6 வரை சனியும், மே11 வரை குருவும், அதன்பின் அவருடைய பார்வைகளும் யோகத்தை வழங்கும். நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பம், தொழில், வேலையில் இருந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து சேரும். பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு உயரும். 3, 4 ம் பாதத்தினருக்கு ஒன்றரை ஆண்டுக்கு லாப கேதுவும், மார்ச் 6 முதல் சத்ரு ஜெய ஸ்தான சனியும், மே11க்கு பிறகு பாக்ய குருவும் சுபப் பலன்களை வழங்குவர். தடைபட்ட வேலைகள் எல்லாம் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர்.  பணியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தொழில்: 1, 2 ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகு, 2026 மார்ச் 6 வரை சனி, மே 11 வரை பாக்ய குருவும், 3,4ம் பாதத்தினருக்கு லாப கேதுவும், மார்ச்6 முதல் 6ம் இட சனியும், மே11 முதல் பாக்ய குருவும் முன்னேற்றத்தை வழங்குவர். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஒப்பந்தப்பணி, நிதி நிறுவனம், குடிநீர், குளிர் பானம், ஏற்றுமதி இறக்குமதி, ஜவுளி, ஜூவல்லரி, பேன்சி ஸ்டோர், ஷேர் மார்க்கெட், டிரான்ஸ்போர்ட், விவசாயம், உணவு பொருட்கள், மளிகை, கல்வி, பப்ளிகேஷன்ஸ் துறைகளில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நிர்வாகத்தில் நல்ல பெயர் உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு விசாரணை முடிவு சாதகமாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உறவினர், நண்பர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவரின் ஆதரவால் மனதில் இருந்த குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்வோருக்கு வருவாய் அதிகரிக்கும்.

கல்வி: பொதுத் தேர்வு,  போட்டித்தேர்வு முடிவுகள் சாதகமாகும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய் என சங்கடப்பட்ட நிலை மாறும். சனி, ராகு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பெரியதாக பயமுறுத்திய நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

குடும்பம்: சமூகத்தில் உங்கள் நிலை உயரும். பொன், பொருள், சொத்து சேரும். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.

பரிகாரம்: கருமாரியம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை) »
temple news
அசுவினி; நினைப்பது நடக்கும்.. உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ... மேலும்
 
temple news
கார்த்திகை: வியாபாரத்தில் முன்னேற்றம்..; உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகைவர்கள் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்ல காலம் வந்தாச்சு..; உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருவால் குறை தீரும்..! உங்கள் நட்சத்திர நாதனான குருவிற்கு, ராகுவும் கேதுவும் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்..கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar