பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
11:04
சித்திரை.. செயலில் கவனம்: உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், கோச்சார சஞ்சாரத்தின் போது அவர்கள் தாங்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்களாகிறார்கள். சித்திரை 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு, சத்ரு ஜெய ஸ்தானத்திலும், 3,4ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது, சித்திரை 1, 2 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானத்திலும், 3, 4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.
இதனால் 1, 2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுக்கு ராகு யோகப் பலன் வழங்குவார். இதுவரை இருந்த சங்கடம் எல்லாம் இக்காலத்தில் இல்லாமல் போகும். தொட்டதெல்லாம் வெற்றியாகும். குடும்பம், தொழில், வேலை அனைத்தும் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பும், தடையும், வழக்கும் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை சீராகும். 3,4ம் பாதத்தினருக்கு வாழ்க்கைத் துணையாலும், குழந்தைகளாலும் கவலை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் உண்டாகும். குழந்தைப் பிறப்பில் சங்கடம் ஏற்படும். வருமானம் குறையும். எதிரி தொல்லை அதிகரிக்கும். பல வகையிலும் நெருக்கடி தோன்றும்.
கேது, சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு வீண் குழப்பம், பயத்தை உண்டாக்குவார். பல வகையிலும் செலவை அதிகரிப்பார். உறவினர் வகையில் தொல்லையை ஏற்படுத்துவார். வீண் அலைச்சலை ஏற்படுத்துவார். திட்டமிட்ட வேலைகளில் மாற்றத்தை உண்டாக்குவார். உடல் பாதிப்பை ஏற்படுத்தி மருத்துவச் செலவை ஏற்படுத்துவார். 3, 4 ம் பாதத்தினருக்கு, லாப கேது, வருமானத்தை அதிகரிப்பார். தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சுபிட்சமான நிலை ஏற்படும். ஆடை, ஆபரணம் சேரும். விலகிச் சென்ற உறவினர்களும் சொந்தம் கொண்டாடுவர். எதிர்பாலினரால் ஆதாயம் உண்டாகும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். செல்வாக்கு உயரும்.
சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் 1, 2 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். எதிரி தொல்லை இல்லாமல் போகும். உடல்நிலை சீராகும். இழுபறி விவகாரம் முடிவிற்கு வரும். மார்ச் 6 முதல் இந்த நிலை மாறும். குடும்பத்தில் குழப்பம், பிரச்னைகள் தோன்றும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு மங்கும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி உண்டாகும். 3, 4ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை மன சஞ்சலம், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை, பிரிவு, பிள்ளைகளால் நெருக்கடி அவமானம், பூர்வீகச் சொத்தில் பிரச்னை, வழக்கு, தகுதியற்ற காதல் என போராட்டமாகவே இருக்கும். மார்ச் 6 முதல் இந்நிலை மாறும். மனமும் உடலும் தெளிவடையும். நெருக்கடியில் இருந்து மீள்வீர்கள். வியாபாரம், தொழில், குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். ஏளனமாகப் பார்த்தவரும் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலைமை மாறும். உயர்வு உண்டாகும்.
குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக். 8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், 1, 2 ம் பாதத்தினருக்கு மே 11 வரை நினைப்பது நடக்கும். முயற்சிகள் வெற்றியாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பட்டம், பதவி கிடைக்கும். சொந்த வீடு, சொத்து, வாகனம், திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். மே11 க்கு பிறகு பண வரவில் தடை உண்டாகும். பார்த்துவரும் வேலையில் பிரச்னைகள் தோன்றும். 3, 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை நெருக்கடி உண்டாகும். யோசிக்காமல் செயல்பட்டு பண இழப்பு, மரியாதை இழப்பு என சங்கடப்படுவீர்கள் என்றாலும் குடும்ப நலனைப் பாதுகாப்பீர்கள். மே11 க்கு பிறகு பாக்கிய குருவால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். சொத்து, சுகம், வீடு, வாசல், வண்டி, வாகனம் என்ற கனவுகள் நனவாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
பொதுப்பலன்: சித்திரை 1, 2 ம் பாதத்தினருக்கு ஒன்றரை ஆண்டுக்கு ராகுவும், மார்ச் 6 வரை சனியும், மே11 வரை குருவும், அதன்பின் அவருடைய பார்வைகளும் யோகத்தை வழங்கும். நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பம், தொழில், வேலையில் இருந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து சேரும். பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு உயரும். 3, 4 ம் பாதத்தினருக்கு ஒன்றரை ஆண்டுக்கு லாப கேதுவும், மார்ச் 6 முதல் சத்ரு ஜெய ஸ்தான சனியும், மே11க்கு பிறகு பாக்ய குருவும் சுபப் பலன்களை வழங்குவர். தடைபட்ட வேலைகள் எல்லாம் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். பணியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தொழில்: 1, 2 ம் பாதத்தினருக்கு 6ம் இட ராகு, 2026 மார்ச் 6 வரை சனி, மே 11 வரை பாக்ய குருவும், 3,4ம் பாதத்தினருக்கு லாப கேதுவும், மார்ச்6 முதல் 6ம் இட சனியும், மே11 முதல் பாக்ய குருவும் முன்னேற்றத்தை வழங்குவர். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஒப்பந்தப்பணி, நிதி நிறுவனம், குடிநீர், குளிர் பானம், ஏற்றுமதி இறக்குமதி, ஜவுளி, ஜூவல்லரி, பேன்சி ஸ்டோர், ஷேர் மார்க்கெட், டிரான்ஸ்போர்ட், விவசாயம், உணவு பொருட்கள், மளிகை, கல்வி, பப்ளிகேஷன்ஸ் துறைகளில் லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நிர்வாகத்தில் நல்ல பெயர் உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு விசாரணை முடிவு சாதகமாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உறவினர், நண்பர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவரின் ஆதரவால் மனதில் இருந்த குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்வோருக்கு வருவாய் அதிகரிக்கும்.
கல்வி: பொதுத் தேர்வு, போட்டித்தேர்வு முடிவுகள் சாதகமாகும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை: பரம்பரை நோய், தொற்று நோய் என சங்கடப்பட்ட நிலை மாறும். சனி, ராகு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பெரியதாக பயமுறுத்திய நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.
குடும்பம்: சமூகத்தில் உங்கள் நிலை உயரும். பொன், பொருள், சொத்து சேரும். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.
பரிகாரம்: கருமாரியம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.
சுவாதி: லாபம் அதிகரிக்கும்
உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரித்து உங்களைப் பாதுகாத்து வந்த ராகு ஏப்.26ல் பஞ்சம ஸ்தானத்திலும், விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த கேது 11ம் இடமான லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.
பஞ்சம ஸ்தானம் என்னும் 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உங்கள் மனதில் தெளிவான நிலையை உண்டாக்குவார். தொழில் எதுவாக இருந்தாலும் அதில் முயற்சி, ஆர்வத்தை அதிகரிப்பார். அதிக வேலை அலைச்சல் காரணமாக உடலில் சோர்வு இருந்து வந்தாலும், பணியாளர்களுக்கு மேலதிகாரி அல்லது முதலாளியால் நன்மை ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். தடைபட்ட முயற்சி கை கூடிவரும். போட்டி பந்தயங்களில் நல்ல பலன் ஏற்பட்டு லாபம் உண்டாகும். ஆனாலும் வீணான கவலை, அலைச்சல் இருந்து கொண்டே இருக்கும். வேலையின் காரணமாக வேலை தவறிய உணவு, உறக்கம் ஏற்படும். கணவன், மனைவி உறவில் மிகப் பெரிய ஒட்டுதல் இல்லாமல் போகும். திருமண வயதினருக்கு இக்காலத்தில் திருமணம் நடந்தாலும் குழந்தை பாக்கியத்தில் தடை இருக்கும். பிள்ளைகளால் சங்கடம், அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை நினைத்து மனதில் கேள்விகள் உண்டாகும். தகுதி குறைந்தவர்களால் இக்காலத்தில் அவமானப்பட நேரிடும். பூர்வீக சொத்துக்காக செலவு ஏற்படும். சிலருக்கு வழக்குகள் உண்டாகி அதில் வெற்றி அடையும் நிலை உண்டாகும்.
கேதுவின் 11 ம் இட சஞ்சாரத்தால் லாப பலன்கள் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உடல்நிலை சீராகும். மனதில் அசாத்தியமான துணிச்சல் உண்டாகும். குழப்பம் விலகி தெளிவு காண்பீர்கள். திட்டமிட்டு ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட்டு லாபம் அடைவீர்கள் விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பவும் வந்தடைவர். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகளவில் கிடைக்கும். இருப்பிடத்தில் மாற்றம் செய்து வசதியான இடத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்பு வரும். சொந்தமாக வாகனம் வாங்க வசதி ஏற்படும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான போக்கு இருந்து வரும். திருமண வயதினருக்கு திருமணம் நடைபெறும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி முயற்சியில் நன்மை தோன்றும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு தகுந்த வேலை அமையும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரியால் நன்மை அதிகரிக்கும். குறைந்த முயற்சியில் அதிக லாபம் உண்டாகும். திடீர் வரவின் காரணமாக இடம் வாங்குவது, வீடு கட்டுவது என முன்னேற்றம் உண்டாகும்.
சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மார்ச் 6 வரை மனதில் குழப்பம், உறவுகளால் சங்கடம், குடும்பத்தில் நெருக்கடி, பிள்ளைகளால் வேதனை, வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை, பிரிவு, பூர்வீக சொத்தில் வழக்கு, தகுதியற்ற காதல் என நிம்மதியற்ற நிலை இருக்கும். மார்ச் 6 முதல் சனி 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுத்த வேலைகள் வெற்றியாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் சுபிட்சநிலை உண்டாகும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வழக்குகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.
குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தியடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால் மே 11 வரை 8 ம் இட குருவால் யோசிக்காமல் செயல்பட்டு நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். பண இழப்பு, மரியாதை இழப்பு என உங்கள் நிலை இறங்கு முகமாகும். மே 11ல் பாக்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகும் குருவால் திடீர் செல்வாக்கு உண்டாகும். அனைத்திலும் வெற்றி என்ற நிலை ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். திருமண வயதினர் மணமேடை ஏறுவர்.
பொதுப்பலன்: யோகக்காரகன் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இக்காலத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது ஒன்றரை ஆண்டுக்கு யோகப் பலன் வழங்குவார். 2026 மார்ச் 6 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் நீங்கள் எடுக்கும் வேலைகளை முடித்துக் கொடுப்பார். முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். மே11 க்கு பிறகு பாக்ய குருவும் சுபப் பலன்களை வழங்கப் போவதால் அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம் என உங்கள் வாழ்க்கை வளமாகும். அனைத்திலும் உங்கள் கை ஓங்கும்.
தொழில்: தொழிலில் உண்டான தடைகள் விலகும். முடங்கி கிடந்த தொழிலும் வளர்ச்சி அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ், மின் கருவிகள், கம்ப்யூட்டர், கட்டுமான பொருள், வாகனம், ஆட்டோ மொபைல்ஸ், டூரிஸ்ட், டிராவல்ஸ், எக்ஸ்போர்ட், சினிமா, ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜென்சி, குடிநீர், நவீன சாதனங்கள், ஆயத்த ஆடை, பேன்சி தொழில்களில் வருமானம் உயரும்.
பணியாளர்கள்: உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லை என்ற நிலை மாறும். உங்கள் திறமைக்கும், தகுதிக்கும் மதிப்புண்டாகும். அரசு ஊழியர்களின் நிலை உயரும். பதவி உயர்விற்கு தடையாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உயர் கல்வி, வேலை, திருமணம் என்ற கனவுகள் இக்காலத்தில் நனவாகும். உறவினர்களுடன் பிரச்னை ஏற்பட்டாலும் கணவரின் ஆதரவால் அதை முறியடிப்பீர்கள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுயதொழில் செய்வோருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கல்வி: படிப்பில் கவனம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும். சிலர் மேற்கல்விக்காக வெளிநாட்டிற்கு செல்வர்.
உடல்நிலை: நீண்ட நாளாக அச்சுறுத்திய நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். மருத்துவச் செலவு குறையும். பரம்பரை நோய், தொற்று நோய் என சங்கடப்பட்ட நிலை மாறும். உடல்நிலை சீராகும்.
குடும்பம்: உங்கள் குடும்பம், உங்கள் வாழ்க்கை என்ற எண்ணம் உண்டாகும். இத்தனை நாட்களும் ஏனோ தானோ என்றிருந்தவர் கூட குடும்பத்தின் மீது அக்கறை கொள்வர். தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். அந்தஸ்து, செல்வாக்கு, வருமானம் உயரும்.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட நன்மைகள் உண்டாகும்.
விசாகம்.. முயற்சி வெற்றி பெறும்; ஏப். 26, 2025 முதல் 1, 2, 3 ம் பாதத்தினருக்கு 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, உறவினரால் சங்கடம், எதிர்பார்ப்பில் இழுபறி, எதிர்பாலினரால் வீண் பிரச்னை, பிள்ளைகளால் அவமானம், மனதில் குழப்பத்தை உண்டாக்குவார். 4 ம் பாதத்தினருக்கு தாயாரின் நிலையில் பாதிப்பு, தாய்வழி உறவுகளால் சங்கடம், குடும்பத்தில் நிம்மதியின்மை, ஆரோக்கியத்தில் பாதிப்பு, விபத்து, தவறான நட்பால் பொருள் இழப்பு, கடன் தொல்லை, பொருளை விற்று நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துவார்.
இந்த நேரத்தில் 1, 2, 3 ம் பாதத்தினருக்கு கேதுவின் 11 ம் இட சஞ்சாரம் நன்மைகளை உண்டாக்கும். எடுத்த வேலைகளை வெற்றியாக்கும். குடும்பம், தொழில், வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகளை இல்லாமல் செய்யும். செலவிற்கு மேல் செலவாகி கையிருப்பு கரைந்த நிலை மாறி வரவிற்கு மேல் வரவு வந்து சேமிப்பை உயர வைக்கும். இழந்த செல்வாக்கு, அந்தஸ்தை மீண்டும் அடைய வைக்கும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு மறையும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் நிலை உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது தொழிலில் தேக்கத்தை ஏற்படுத்துவார். வியாபாரத்தில் தடைகளை அதிகரிப்பார். வேலையில் பிரச்னையை உண்டாக்குவார். வெளி வட்டாரத்தில் செல்வாக்கோடு வாழ்ந்த நிலையை மாற்றுவார்.
சனி சஞ்சாரம்:
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை செயலில் தடை, தாமதம் ஏற்படும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். பிள்ளைகளால் வேதனையும், வாழ்க்கைத் துணையுடன் பிரச்னையும் ஏற்படும். மார்ச் 6 முதல் சனி 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்நிலை மாறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பம், தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வழக்குகள் வெற்றியாகும். 4 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை வேலைப்பளு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் பாதகத்தை ஏற்படுத்துவார். ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்குவார். மனதில் சலிப்பை ஏற்படுத்துவார். மார்ச் 6 முதல் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பிள்ளைகள் நிலையில் சங்கடத்தை உண்டாக்குவார். அதனால் மனம் குழப்பமடையும். செயலில் தடுமாற்றம் ஏற்படும்.
குரு சஞ்சாரம்:
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தியடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், 1, 2, 3 ம் பாதத்தினருக்கு மே 11 வரை எதிலும் முன்னேற்றம் காண முடியாத நிலை உண்டாகும். எதிரிகள் கை ஓங்கும். செல்வாக்கு குறையும். யோசிக்காமல் செயல்பட்டு நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மே 11 முதல் இந்நிலை மாறும். பாக்ய ஸ்தானத்திற்கு செல்லும் குருவால் செயல்கள் வெற்றியாகும். செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். அனைத்திலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். திருமண வயதினர் மாலை சூடுவர். 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை சப்தம குரு யோகப்பலன் வழங்குவார். வருமானம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நெருக்கடி விலகும். மே 11 முதல் 8 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் யோசிக்காமல் செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வருமானத்தில் தடையுண்டாகும். செலவு அதிகரிக்கும்.
பொதுப்பலன்:
விசாகம் 1, 2, 3 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தான கேதுவும், 2026 மார்ச் 6 முதல், 6 ம் இட சனியும், மே 11 க்கு பிறகு பாக்ய குருவும், முன்னேற்றத்தை உண்டாக்குவர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். அனைத்திலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு மே 11 வரை சப்தம குருவும் அதன்பின் அவருடைய பார்வைகளும் உயர்வுக்கு வழிவகுக்கும். வரவு அதிகரிக்கும். நெருக்கடி விலகும்.
தொழில்:
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பணியாளர் ஒத்துழைப்பு உண்டாகும். கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கெட், ஜூவல்லரி, கமிஷன் ஏஜன்சி, பில்டர்ஸ், ரியல் எஸ்டேட், விவசாயம், பிரிக்ஸ், குடிநீர், ஆயத்த ஆடை, ஒப்பந்தத் தொழில், பேன்சி, எக்ஸ்போர்ட் தொழில்களில் வருமானம் உயரும்.
பணியாளர்கள்:
வேலையில் அதிகபட்ச கவனம் தேவைப்படும். உடன் பணிபுரிபவர்களிடம் பேச்சில் கவனம் தேவை. 1, 2, 3 ம் பாதத்தினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். திறமைக்கும் தகுதிக்கும் மதிப்புண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். 4 ம் பாதத்தினர் இக்காலத்தில் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
பெண்கள் உலகைப் புரிந்து செயல்படக்கூடிய நிலை உண்டாகும். கல்வி, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். கணவருடன் இனக்கமான நிலை ஏற்படும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தொழில், வியாபாரத்தில் டாப்பாக வருவீர்கள்.
கல்வி:
தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். உயர்கல்விக்குரிய ஆலோசனைகளை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதால் சிறந்த கல்லுாரியை தேர்வு செய்ய முடியும்.
உடல்நிலை:
1, 2, 3 ம் பாதத்தினருக்கு இக்காலத்தில் பாதிப்பு தோன்றாது. பரம்பரை நோய், தொற்று நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும். உடல்நிலை சீராகும். 4 ம் பாதத்தினர் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம்.
குடும்பம்:
இக்காலம் உங்களுக்கு யோக காலமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். தம்பதிக்குள் புரிதல் உண்டாகும். வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி கனவை நனவாக்குவீர்கள்.
பரிகாரம்: திருக்கடையூர் அபிராமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.