Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : ராகு கேது பெயர்ச்சி ... மகரம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026 மகரம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை)
தனுசு : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026
எழுத்தின் அளவு:
தனுசு : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026

பதிவு செய்த நாள்

26 ஏப்
2025
11:04

மூலம்: நல்ல காலம் வந்தாச்சு

ஏப்.26 முதல் ராகு 3ம் இடமான  முயற்சி ஸ்தானத்திலும், கேது 9ம் இடமான பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். இதனால் இதுவரை ராகு, கேது வழங்கி வந்த சங்கடமான பலன்களில் மாற்றம் ஏற்படும். 3 ம் இட ராகுவால், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இதுவரை தடைபட்ட வேலைகள் நடந்தேறும். செய்யும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சிகள் லாபம் தரும். உடல் பாதிப்பு விலகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு ஏற்படும். வருமானம் உயரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

9ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், குல தெய்வ வழிபாடு, கோயில் வழிபாட்டில் மனம் ஈடுபடும். நன்றாக இருந்த தொழிலில் நெருக்கடி ஏற்படும். வருமானம் குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் திடீர் பாதிப்பு ஏற்படும். சிலர் தந்தையை விட்டு பிரியும் நிலை ஏற்படும். நோய் ஏற்பட்டு உங்களுக்கு தொல்லை கொடுக்கும். விபத்துகளும் அதனால் காயப்படும் நிலையும் வரலாம். செய்யும் வேலையில் நெருக்கடி உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். இக்காலத்தில் வாழ்க்கை என்பது போராட்டமாக இருக்கும்.

சனி சஞ்சாரம்
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் 2026  மார்ச் 6 வரை, 3ம் இட சனியால் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். செல்வாக்கும், அந்தஸ்தும் அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் தொழிலும் இக்காலத்தில் சிறப்படையும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். மற்றவர்களுக்கு பதவி உயர்வும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
2026 மார்ச் 6 முதல் 4ம் இட சனியால், எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். குடும்பத்தில் விரோதம், ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை, வசிக்கும் இடத்தை மாற்றம் செய்ய வேண்டிய சூழல், தாயாரின் உடல்நிலை பாதிப்பு. சிலருக்கு தாய், தாய்வழி உறவுகளுடன் விரோதம்,  வீடு சொத்து வாகனத்தால் தொல்லைகள், உறவினரிடம் பகை, தொழில், வேலையில்  சங்கடம், தொல்லைகள் ஏற்படும்.

குரு சஞ்சாரம் 
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் வக்கிரம் அடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால், மே 11 வரை ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் சில நெருக்கடி ஏற்பட்டாலும் அவருடைய பார்வைகளால் தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மே11 முதல் ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம். ஏற்படும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். வீடு, வாகனம் என கனவு நனவாகும்.

பொதுப்பலன் 
மூன்றாமிடத்தில் ராகு, சனி, மே11 முதல் ராசிக்கு குருபார்வை உண்டாவதால் இக்காலம்  முன்னேற்றமான காலமாகவே இருக்கும். 3,6,11ல் செவ்வாய், 3,6,10,11ல் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களும் யோகத்தை உண்டாக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலைகள், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

தொழில் 
தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். நஷ்டமும் கஷ்டமும் பட்ட நிலைகள் மாறும். நின்று போன தொழிலை மீண்டும் தொடங்குவீர்கள். சிலர் புதிய தொழில் ஆரம்பிப்பர். நிதிநிறுவனம், ஷேர் மார்க்கெட், எக்ஸ்போர்ட், ஜூவல்லரி, ஆன்லைன் வர்த்தகம், கம்ப்யூட்டம், ஐ.டி.துறை, கல்வி நிறுவனம், நோட்டுப் புத்தக தயாரிப்பு, பப்ளிகேஷன்ஸ் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள்
நீண்ட நாளாக இருந்த நெருக்கடியும் போராட்டமும் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த உயர்வு, சலுகைகள் கிடைக்கும். அரசுப்பணியாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். தடைபட்ட பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும்.

பெண்கள்
மே11 முதல் ராசிக்கு குருபார்வை உண்டாவதுடன், ராகு, சனி சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் நீண்டநாள் கனவு நனவாகும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்கள் நிலை உயரும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவரின் ஆதரவு உங்களை பலமாக்கும்.

கல்வி
படிப்பில் இருந்த தடைகள் விலகும்.  தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை
உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். தொற்று நோய்களால் ஏற்பட்ட சங்கடங்கள் மருத்துவத்தால் குணமாகும். நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.

குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். சேமிப்பு உயரும்.

பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட்டால் நன்மைகள் நடக்கும்.

பூராடம்.. நினைத்தது நிறைவேறும்: உங்கள் நட்சத்திர நாதனான சுக்கிரனுக்கு, ராகுவும் கேதுவும் நண்பர்கள் என்றாலும் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் போது அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை வழங்கிடக் கூடியவர்கள் ஆவர். சுக்கிரனுக்கு நட்பான ராகு, சனி பகவானுக்கும் நட்பானவர் என்பதுடன், அவர் ஏப். 26 முதல் சனி பகவானின் ஆட்சி வீடும், உங்கள் ராசிக்கு 3 ம் வீடுமான கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். ராகு கேதுவிற்கு பகை கிரகமும் உங்கள் ராசிக்கு 9 ம் இடமுமான சூரியனுடைய சிம்ம ராசிக்குள் கேது சஞ்சரிக்கப் போகிறார்.

இதனால் 3ம் இட ராகுவால் உடலில் இருந்த சங்கடங்கள் உங்களை விட்டு அகலும். சிறுசிறு பிரச்னைகள் தோன்றினாலும் அவை உங்களைப் பாதிக்காது. இதுவரை நீங்கள் இழந்த பொருட்கள், சொத்துகள் யாவும் இக்காலத்தில் மீண்டும் உங்களை வந்தடையும். சிறிய முயற்சிக்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் இப்போது கூடிவரும். உறவினர், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் வழியாக உங்கள் தேவைக்கும் அதிகமாகவே இக்காலத்தில் நன்மை உண்டாகும். நீங்கள் நினைத்திருந்த வேலைகளை இப்போது செய்து முடிப்பீர்கள். வீட்டில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாராட்டு உண்டாகும். தான தர்மங்களில் மனம் ஈடுபடும். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பர். நவீன பொருட்களின் சேர்க்கை ஏற்படும். அரசு வகையில் உதவி கிடைக்கும். பிற இனம், மதத்தவரால் நிறைய உதவிகளை அடைவீர்கள். எதிர்பாலினரால் அதிகளவில்  நன்மை காண்பீர்கள். வெளிநாட்டுப் பயணம், முயற்சிகள் வெற்றி அளிக்கும். குடும்பத்தில்  உள்ள வயது முதிர்ந்தோருக்கு இக்காலத்தில் பிரச்னை ஏற்படலாம். 

9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், தொழிலில் நிம்மதி அடைவீர்கள். ஊழியர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பொன், பொருள் வரவும் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். எதிர்பாராத வகையில் உறவினர்களிடம் இருந்து சிலருக்கு சொத்து, பணம் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணத்தால் நன்மை காண்பீர்கள். இக்காலத்தில் தந்தையின் உடல்நிலை பாதிப்பால் மருத்துவச் செலவு அதிகரிக்கும். முதலாளி அல்லது மேலதிகாரிகள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பர். பதவி உயர்வு, ஊதிய உயர்வு என தொழில் ரீதியாக நன்மை உண்டாகும். சிலருக்கு திருத்தல யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இயந்திரம், வாகன இயக்கத்தின் போது அதிக விழிப்புணர்வு தேவை. பூர்வீக சொத்தில் உள்ள பிரச்னை இழுபறியாக இருந்து வரும்.

சனி சஞ்சாரம்
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் 2026  மார்ச் 6 வரை, 3 ம் இட சனியால் பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அந்தஸ்து அதிகரிக்கும். எடுத்த முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். செய்து வரும் தொழிலும் இக்காலத்தில் சிறப்படையும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் விலகிச் செல்வர். 

2026 மார்ச் 6 முதல் 4ம் இடச் சனியால், வேலைப்பளு அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். சிலருக்கு முறைகேடான பழக்க வழக்கங்களால் நோய்கள் உண்டாகலாம். அடிக்கடி மருத்துவரை நாடும் நிலை ஏற்படும். சிலருக்கு சோதனைக்கு மேல் சோதனை வேதனைக்கு மேல் வேதனை உருவாகும். எந்த வழியில் செல்வது எப்படி வாழ்வது என்ற கேள்வி மனதில் உருவாகும். 

குரு சஞ்சாரம் 
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால் மே11 வரை உடலில் பாதிப்பு, எதிரி தொல்லை ஏற்பட்டாலும் அவரது பார்வைகள் உங்கள் நிலையை உயர்த்தும். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். மே11 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியையும், 11, 3 ம் இடங்களையும் பார்ப்பதால் இக்காலம் உங்களுக்கு யோக காலமாகும். நீண்டநாள் கனவு நனவாகும். நினைத்த வேலைகள் தடையின்றி நடக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும்.

பொதுப்பலன்
ராகு, சனி சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன், மே11 முதல் ராசிக்கு குருபார்வையும் உண்டாவதால்  இக்காலம் யோக காலமாகும். செல்வாக்கு உயரும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். 3,6,11ல் செவ்வாய், 3,6,10,11ல் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களில் மேலும் நன்மை அடைவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். தடைபட்ட வேலைகள், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். 

தொழில்: தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். 
ஆடை ஆபரணம், ரெடிமேட், அழகு சாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர், ஜூவல்லரி, வாகன விற்பனை, உதிரிபாக விற்பனை, ஸ்டேஷனரி, ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட், கம்ப்யூட்டர், சினிமா, தொலைக்காட்சி, பதிப்பகம், கல்வி நிறுவனங்கள் லாபமடையும்.

பணியாளர்கள் 
வேலை, வருமானம், முன்னேற்றம் என்ற சிந்தனை மேலோங்கும். வேலை பார்க்கும் இடத்தில் பொறுப்புடன் செயல்படுவீர்கள். நிர்வாகத்திடம் நற்பெயர் உண்டாகும். ஊதிய உயர்வும், சலுகையும் கிடைக்கும். பணியாளர்களின் முயற்சி வெற்றியாகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும்.

பெண்கள் 
தயங்கித் தயங்கி செயல்பட்ட நிலை மாறும். எந்த ஒன்றையும் செய்து முடிக்கும் நிலை உண்டாகும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சுய தொழில் புரிவோருக்கு லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். கணவருடன் இணக்கம் உண்டாகும். கன்னியருக்கு வரன் வரும்.

கல்வி: 
நட்பு வட்டம், குடும்ப சூழலால் படிப்பின் மீது கவனம் சிதறும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் போகும். விரும்பிய கல்லுாரி என்ற நிலையைத் தாண்டி கிடைத்த கல்லுாரியில் சேரும் நிலை உண்டாகும்.

உடல்நிலை 
சனி, ராகு நிலைகள் சாதகமாக இருப்பதால் உங்களை அச்சுறுத்திய நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். பரம்பரை நோய், தொற்று நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும்.

குடும்பம்
தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். வேலையின் காரணமாக பிரிந்தவர்கள் சேர்வர். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களின் செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். சேமிப்பு உயரும்.

பரிகாரம் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.

உத்திராடம்.. முயற்சி வேண்டும்: உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு, ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், அவர்கள் கோச்சார சஞ்சாரத்தின் போது சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவராகிறார்கள். உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு முயற்சி ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது, உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு பாக்ய ஸ்தானத்திலும் 2,3,4 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.

இதனால் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு முன்னேற்றத்திற்கு வழியமைப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் அளவிற்கு சூழ்நிலையை உண்டாக்குவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். அந்தஸ்து, செல்வாக்கை உயர்த்துவார். 2, 3, 4ம் பாதத்தினருக்கு  குடும்பத்தில் குழப்பம்,  சண்டை சச்சரவை அதிகரிப்பார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு, பிரிவினையை உண்டாக்குவார். எதிர்பார்ப்பில் தடை ஏற்படுத்துவார். வேலைகளில் பிரச்னையை உண்டாக்குவார். லாபத்தை மட்டுப்படுத்துவார். எதிலும் நிம்மதி என்பது இக்காலத்தில் இல்லாமல் போகும். மனம் குழப்பமடையும். குடும்பத்தில் கஷ்டம் அதிகரிக்கும். எந்த ஒன்றையும் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிலை உண்டாகும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சங்கடப்பட வேண்டியதாக இருக்கும். மனதில் ஏதேனும் குறைபாடு இருந்து கொண்டே இருக்கும்.

கேது சஞ்சார நிலையால், உத்திராடம் 1ம் பாதத்தினருக்கு முயற்சி அதிகரிக்கும். அதன் வழியே செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்கள் நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பொருளாதார நிலை சீராகும் என்றாலும் தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். 2, 3, 4ம் பாதத்தினருக்கு வேலைகளில் தடை, தாமதம் ஏற்படும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் போகும். பணியாளர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு நிம்மதி இல்லாமல் போகும். சிலருக்கு வேலை பறிபோகும். வருமானம் தடைபடும். வண்டி வாகனங்களால் விபத்து ஏற்படும். குடும்பத்திலும் போராட்டம் மிகுந்திருக்கும். நெருக்கடி நிலை உண்டாகும்.

சனி சஞ்சாரம்: கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால், உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை, 3ம் இடத்தில் சஞ்சரிக்கும்  சனியால் நினைத்த வேலைகள் நடந்தேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். அசாதாரண துணிச்சல் உண்டாகும். உடல், மன நிலை சீராகும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

2026 மார்ச் 6 முதல் 4ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால், உழைப்பு அதிகரிக்கும். வேலையில் பிரச்னை உருவாகும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். உங்கள் உடல்நிலையிலும் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை பாதச் சனியாக, குடும்பத்தில் நிம்மதியின்மை, பண வரவில் தடை, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, உடல்நிலையில் பின்னடைவு, உறவுகளுடன் பகையை ஏற்படுத்துவார். 2026 மார்ச் 6 முதல் இந்நிலை மாறும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உங்கள் வாழ்க்கை மாறும். ஏழரை ஆண்டு நெருக்கடியில் இருந்து விலகி முன்னேற்றப் பாதையில் நடை போடுவீர்கள்.  விருப்பம் பூர்த்தியாகும். செயல்கள் லாபமாகும். செல்வாக்கு உயரும்.

குரு சஞ்சாரம்
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார் என்பதால் 1ம் பாதத்தினருக்கு மே11 வரை எடுக்கும் வேலைகளில் இழுபறி,  நெருக்கடி, உடல் பாதிப்பு  ஏற்பட்டாலும், அவரது பார்வைகளால் தொழில் முன்னேற்றம் அடையும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காணாமல் போகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மே11 முதல் ஏழாமிடத்தில்  சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். 2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே11 வரை எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மே 11 முதல் 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் இந்நிலை மாறும். எதிர்ப்பு அதிகரிக்கும். உடல்நிலை பாதிக்கும் என்றாலும் தொழிலில் ஆதாயம் உயரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பணவரவு அதிகரிக்கும்.

பொதுப்பலன்
1ம் பாதத்தினருக்கு ராகு, சனி சஞ்சாரமும், மே 11 முதல் ராசிக்கு குருப்பார்வையும் யோகத்தை உண்டாக்கும் நிலையில், 2,3,4 ம் பாதத்தினருக்கு மே11 வரை குருவும், அதன்பின் அவரது பார்வைகளும், 2026 மார்ச்6 முதல் சனியும் நன்மையை  உண்டாக்குவார் என்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.

தொழில் : தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். எலக்ட்ரானிக்ஸ், பேக்டரி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்டேஷனரி, பதிப்பகம், பத்திரிகை, சினிமா, டிவி, கம்ப்யூட்டர் தொழில்கள், வாகன உற்பத்தி, விற்பனை, பில்டர்ஸ், எக்ஸ்போர்ட், விவசாயம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும்.

பணியாளர்கள் : இதுவரை இருந்த நெருக்கடி விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு வேலைக்கு செல்வர். அதனால்  வருமானம் உயரும். அரசு பணியாளர்களுக்கு உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் இல்லாமல் போகும். திருமண வயதினருக்கு இனிய இல்லறம் அமையும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த் நல்ல தகவல் வரும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். மனதில் சந்தோஷம் நிலைக்கும்.

கல்வி:படிப்பில் கவனக்குறைவு, அலட்சியம் சிலருக்கு ஏற்பட்டிருந்தாலும் பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்ணுடன் வெற்றி கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை: 1 ம் பாதத்தினருக்கு எந்த நோய் வந்தாலும் வந்த வழி தெரியாமல் பறந்தோடும். 2,3,4 ம் பாதத்தினர் இக்காலத்தில் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். சிலர் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படலாம். 

குடும்பம்: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை நீங்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் இணைவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பொன், பொருள் சேரும். புதிய வீடு, வாகனம் என கனவு நனவாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட்டால்  சங்கடம் அனைத்தும் விலகும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை) »
temple news
அசுவினி; நினைப்பது நடக்கும்.. உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ... மேலும்
 
temple news
கார்த்திகை: வியாபாரத்தில் முன்னேற்றம்..; உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகைவர்கள் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்ல காலம் வந்தாச்சு..; உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருவால் குறை தீரும்..! உங்கள் நட்சத்திர நாதனான குருவிற்கு, ராகுவும் கேதுவும் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்..கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar