Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை)
மீனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026
எழுத்தின் அளவு:
மீனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2025 - 2026

பதிவு செய்த நாள்

26 ஏப்
2025
11:04

பூரட்டாதி..நல்லது நடக்கும்
ஏப். 26, 2025 முதல் 1,2,3ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு, முன்னேற்றத்தில் தடை, தவறான நபர்களின் நட்பு, தொழிலில் நெருக்கடி, ஆரோக்கியத்தில் பாதிப்பு, எதிர்பாராத இடமாற்றம், உறவுகளுடன் சங்கடம்,  ஆடம்பர ஆசைகளை ஏற்படுத்துவார். 4ம் பாதத்தினருக்கு அதிகபட்சமான செலவினையும், அதற்காக கடன் வாங்கும் நிலையையும் ஏற்படுத்துவார். எந்த இடத்திலும் நிம்மதி இல்லாமல் போகும். சோதனையும் வேதனையும் அதிகரிக்கும். வசிக்கும் ஊரை விட்டு வெளியூர் செல்லும் நிலை சிலருக்கு ஏற்படும். தொழிலை சரியாக செய்ய முடியாத அளவிற்கு சங்கடம் உண்டாகும். பணியாளர்களுக்கு மதிப்பும், ஊதியமும் குறைந்து போகும். 

இந்த நேரத்தில் 1,2,3ம் பாதத்தினருக்கு கேதுவின் 7ம் இட சஞ்சாரத்தால் தவறான, தகுதிக் குறைவானவர்களின் நட்பு ஏற்படும். சுய கவுரவம், அந்தஸ்திற்கு பங்கம் உண்டாகும். குடும்பத்தில் கணவன், மனைவியிடையே சண்டை, பிரிவு ஏற்படும். உறவினர்களிடம் பகை உண்டாகும். அதனால் வெளியூர் செல்லும் நிலை சிலருக்கு ஏற்படும். 4 ம் பாதத்தினருக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது, இதுவரை இருந்த நெருக்கடி இல்லாமல் செய்வார். உடலில் ஏற்பட்ட பாதிப்பை விலக்குவார். நோய் குணமாகி உடல்நிலை சீராகும். தொழில் முன்னேற்றம் அடையும். பார்த்து வரும் வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிரி தொல்லை விலகும். எதிரிகள்  சரணடைவர். எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். இழுபறியாக வழக்குகள் சாதகமாகும்.

சனி சஞ்சாரம்
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி பகவான் கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் பூரட்டாதி 1,2,3ம் பாதத்தினருக்கு மார்ச் 6 வரை ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் மனதில் வீண் ஆசைகளை உண்டாக்குவார். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார். தொழிலில் நெருக்கடியை அதிகரிப்பார். நண்பர்களுடன் கருத்து வேறுபாட்டை அதிகரிப்பார். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்துவார். மார்ச் 6 முதல் பாதச்சனியாக சஞ்சரிப்பவர் வருவாயில் தடைகளை உண்டாக்குவார். தொழில், வேலையில் நிம்மதியற்ற நிலையை ஏற்படுத்துவார். உடலில் சங்கடத்தை அதிகரிப்பார். 4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை விரயச் செலவுகளை அதிகரிப்பார். முயற்சியில் தடையை ஏற்படுத்துவார். நோய்க்கு ஆளாக்குவார். மார்ச் 6 முதல் ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் ஆரோக்கியத்தில் குறைபாடு, தொழிலில் பாதிப்பு, வேலையில் பிரச்னை, வழக்குகளையும், கணவன் மனைவிக்குள் இடைவெளி, தவறானவர்களின் நட்பை உண்டாக்குவார்.

குரு சஞ்சாரம்
மே 11 வரை ரிஷபத்திலும், அதன் பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால் 1,2,3ம் பாதத்தினருக்கு மே 11 வரை 8,10,12 ம் இடங்களைப் பார்த்து,  தொழிலில் முன்னேற்றம், முயற்சிகளில் வெற்றி, உடல்நிலையில் தெளிவு,  செல்வாக்கில் உயர்வை உண்டாக்குவார். மே11 முதல் குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால், ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் உண்டான பாதிப்புகள் மறையும். செல்வாக்கு மீண்டும் வெளிப்படும். குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 4ம் பாதத்தினருக்கு மே11 வரை நட்பால் ஆதாயம், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, திருமண யோகம், புதிய இடம், வீடு, துணையை இழந்தவருக்கு மறுமணம் என்ற நிலை உண்டாகும். மே 11 முதல் உடல்நிலையில் முன்னேற்றம், தொழிலில் லாபம், வேலையில் உயர்வு, தகுதியான வேலை, வீடு, நிலம், வாகனம் வாங்குவது என்ற நிலை உண்டாகும்.

பொதுப்பலன்
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும் 5ம் இட சஞ்சாரமும், 4ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், 6ம் இட கேதுவின் சஞ்சாரமும், இருவருக்கும் 3,6,11 ம் இட செவ்வாய், 3,6,10,11 ம் இட சூரியனின் சஞ்சாரங்களும் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். யோகத்தை உண்டாக்கும். வருமானத்தை அதிகரிக்கும். செல்வாக்கை உயர்த்தும். தொழில், பணியல் ஏற்பட்ட தடைகளை இல்லாமல் செய்யும்.

தொழில்: 
தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், டிராவல்ஸ், ஆன்லைன் வர்த்தகம், விவசாயம் சார்ந்த பொருட்கள், ஜூவல்லரி,  ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில் முன்னேற்றம் பெறும். 

பணியாளர்கள்
வேலையில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். சிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாறுவீர்கள். எதிர்பார்த்த ஊதியம், சலுகைகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வில் ஏற்பட்ட தடை விலகும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.

பெண்கள்
குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்க வேண்டிய காலம் இது. உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். புதியவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்க வேண்டாம். எந்த விஷயத்தையும் கணவரிடம் சொல்லி விட்டு அவரது உதவியுடன் செய்வது நன்மை தரும். படிப்பு, வேலை, திருமணம், மறுமணம் என்ற கனவு நனவாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

கல்வி
வாழ்க்கையின் அடிப்படையும், அந்தஸ்திற்கு காரணமும் படிப்பு என்பதை உணர்வீர்கள். படிப்பின் மீது ஆர்வம் கூடும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை
உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். தொற்று, பரம்பரை நோய், விபத்து என சங்கடங்கள் தோன்றினாலும் அவற்றில் இருந்து குணமடைவீர்கள்.

குடும்பம்
தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சொத்து சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். வீடு, வாகனம், பொன், பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.

உத்திரட்டாதி..வெற்றி மீது வெற்றி

இதுவரை உங்கள் ராசிக்குள் சஞ்சரித்து போராட்டம், நெருக்கடியை ஏற்படுத்திய ராகு, ஏப்.26ல் 12 ம் இடமான விரய ஸ்தானத்திலும், 7 ம் இடத்தில் சஞ்சரித்து குடும்பத்தில் பிரச்னை,  சிலருக்கு அவமானங்களை உண்டாக்கிய கேது 6 ம் இடமான சத்ரு ஜெய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.

விரய ஸ்தானம் என்னும் 12ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால், சங்கடமான பலன்களை விட நன்மையான பலன்களே அதிகரிக்கும். உடல்நலம் முன்பை விட இப்போது சிறப்பாகும். நீங்கள் எதிர் நோக்கியுள்ள வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். இருந்தாலும் உங்கள் மனதில் திருப்தி என்பது இருக்காது. தொழிலில் சின்னச் சின்ன தடைகள் இருக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு உண்டாகும். முக்கிய பயணங்கள் உங்களுடைய அஜாக்கிரதையால் தடைபடும். உறவினரால் உதவி கிடைக்கும். வீண் பிரச்னை, அலைச்சல் போன்றவை அவ்வப்போது ஏற்பட்டு மனதை வாட்டும். கணவன், மனைவிக்குள் மனஸ்தாபம் உண்டாகலாம். இக்காலத்தில் பொறுமையுடன் இருப்பதும், சிந்தித்து செயல்படுவதும் வெற்றியை உண்டாக்கும்.

கேதுவின் 6ம் இட சஞ்சாரத்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தோன்றும். உடல்பாதிப்பு அகலும். மனதில் துணிச்சல் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் விரிவு செய்து லாபம் காண்பர். வங்கி வகையில் எதிர்பார்த்த உதவி வரும். தொழிலுக்காக எடுக்கின்ற முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், உயர்வு ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

சனி சஞ்சாரம்
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் உங்கள் நட்சத்திர நாதனான சனி கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் உங்கள் ராசிக்குள் ஜென்ம சனியாக சஞ்சரிப்பார். இதனால் 2026 மார்ச் 6 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பவர் பல வழியிலும் செலவுகளை அதிகரிப்பார். உங்கள் கைக்கு பணம் வரும் முன்பாகவே செலவு காத்துக் கொண்டிருக்கும். எடுக்கும் வேலைகளில் தடை, தாமதம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். வீண் அலைச்சல், மன உளைச்சல் ஏற்படும். மதிப்பிற்கும் கவுரவத்திற்கும் பங்கம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியின்மை, தீயவழியில் செல்லக் கூடிய நிலை உண்டாகும். மார்ச் 6 முதல் ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர், கணவன் மனைவிக்குள் பிரச்னை, உறவுகளால் சங்கடம், தவறான வழியில் செல்லும் நிலை,  அனைத்திலும் தடை, தாமதம் ஏற்படுத்துவார்.

குரு சஞ்சாரம்
மே 11 வரை ரிஷபத்திலும், அதன் பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச.21 ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால் மே11 வரை, 7, 9, 11 ம் இடங்களுக்கு குருவின் பார்வை உண்டாவதால், திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் பெறும். நட்புகளால் ஆதாயம் கூடும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகி ஒற்றுமை உண்டாகும். புதிய இடம், வீடு என்ற முயற்சிகள் வெற்றியாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். மே11 முதல் 8, 10, 12 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் எதிரி தொல்லை விலகும். செல்வாக்கு வெளிப்படும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.  தொழிலில் லாபம் உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்கும் வகையில் கையிருப்பு கரையும்.

பொதுப்பலன்
குருபகவானின் பார்வைகளும், 6ம் இட கேதுவின் சஞ்சாரமும், 3,6,11ம் இட செவ்வாய், 3,6,10,11 ம் இட சூரியனின் சஞ்சாரங்களும் உங்களைப் பாதுகாக்கும். இதுவரை இருந்த நெருக்கடிகள்  இல்லாமல் போகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். தொழில், வேலையில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

தொழில்  
தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு, போட்டிகள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதியும் உதவியும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பைனான்ஸ், ஜுவல்லரி, ஷேர் மார்க்கெட், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், இயந்திரத் தொழில், ஹார்டுவேர்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எக்ஸ்போர்ட், அச்சகம், ஆன்லைன் வர்த்தகம் லாபம் அடையும்.

பணியாளர்கள்
வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உடன் பணிபுரிபவர்களும் ஒத்துழைப்பாக இருப்பர். சிலருக்கு தற்போது பார்த்து வரும் வேலையை விட புதிய இடத்தில் மதிப்பிற்குரிய வேலை கிடைக்கும். எதிர்பார்த்த ஊதியம், சலுகைகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு வெளி நபர்களால் ஏற்பட்ட பிரச்னை விலகும். வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்த உயர்வு உண்டாகும்.

பெண்கள்
வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகள் மறையும். நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அறிந்து  செயல்படுவீர்கள். உடல் நிலை, மன நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும். குடும்ப முன்னேற்றத்தில் கவனம் செல்லும். பிள்ளைகளுக்காக அக்கறை எடுப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுக்குள் தெளிவு உண்டாகும். 

கல்வி
தவறான நண்பர்களை விட்டு விலகுவீர்கள். படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள். 

உடல்நிலை
ருண, ரோக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் தொற்று நோய் பரம்பரை நோய் என பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவத்தால் குணமாகும். உடல்நிலை சீராகும். 

குடும்பம்
இதுவரை இருந்த நெருக்கடி விலகும். தன் குடும்பம் தன் வாழ்க்கை என்ற எண்ணம் மேலோங்கும். அந்நியரால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வீடு, வாகனம், பொன், பொருள் என்ற கனவு நனவாகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

பரிகாரம்: அர்த்த நாரீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.

ரேவதி..உழைப்பால் உயர்வீர்கள்

ஏப். 26 முதல் ராகு 12ம் இடமான விரய ஸ்தானத்திலும், கேது 6ம் இடமான சத்ரு ஜெய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். இதனால் இதுவரை ராகு கேது வழங்கி வந்த பாதகமான பலன்களில் மாற்றம் ஏற்படும். இனி உங்கள் கை ஓங்கும். 12ம் இட ராகுவால், நல்ல சிந்தனை உண்டாகும். சென்ற வழி தவறு என்பதை உணர்ந்து நீங்களே மாற்றம் செய்வீர்கள். இனி நடப்பதெல்லாம் நன்மையாகும். நினைப்பது நடந்தேறும் என்றாலும் செலவு அதிகரிக்கும். கையில் பணம் வரும் போதே செலவு காத்துக் கொண்டிருக்கும். பிள்ளைகளின் கல்விச் செலவு, வீடு, வாகனம், நகைகள், நவீன பொருட்கள் என்று அவசிய செலவும் ஆடம்பர செலவும் அதிகரிக்கும். வேலையில் அலைச்சல் அதிகரிக்கும் அதன் காரணமாக சிலருக்கு உடல்நிலை பாதிக்கும்; மருத்துவச் செலவு ஏற்படும். இது விரய ராகுவின் காலம் என்பதால் கடனாக கொடுத்த பணம் திரும்பவும் வராமல் போகும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். திசா புத்தி சாதகமாக இருந்தால் உங்கள் நிலை உயரும்.

6ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்து வந்தோர் பலமிழப்பர். உங்களுடன் இருந்து கொண்டு முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். பிறரை நம்பி செயல்பட்ட நிலை மாறி இனி நீங்களே உங்கள் வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். உடல் பாதிப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உங்களுக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சனி சஞ்சாரம்
கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நாளில் சனி கும்பத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். 2026 மார்ச் 6ல் உங்கள் ராசிக்குள் ஜென்ம சனியாக சஞ்சரிப்பார். இதனால் 2026 மார்ச் 6 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பவரால் செலவு கட்டுக்கடங்காமல் போகும். சேமிக்க நினைத்தாலும் அவசர செலவால் கையிருப்பு கரையும். சிலருக்கு கையில் இருப்பதை விற்று நிலைமையை சரி செய்ய வேண்டியதாக இருக்கும். உடல்பாதிப்பு வந்து கொண்டே இருக்கும். எடுக்கும் வேலையில் தடை, தாமதம் ஏற்படும். வீண் அலைச்சல், மன உளைச்சல்  ஏற்படும். மார்ச் 6 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பவர், குடும்பத்தில் பிரச்னைகளை அதிகரிப்பார்.  கணவன், மனைவிக்குள் பிரச்னை உண்டாகும், உறவுகளும் எதிராக மாறுவர். தொழிலில் அக்கறை இல்லாமல் போகும். வேலையிலும் அலட்சியம் உண்டாகும் என்பதால் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.

குரு சஞ்சாரம்
மே 11 வரை ரிஷபத்திலும், அதன்பின் மிதுனத்திலும், அக்.8 முதல் கடகத்திற்கு அதிசாரமாகவும் செல்பவர், நவ.18 முதல் அங்கு வக்கிரமடைகிறார். அதே வக்கிர நிலையில் டிச. 21ல் மிதுனத்திற்கு வருபவர் 2026 மார்ச் 17ல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அங்கிருந்து மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நிலைகளால் மே 11 வரை, குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விருப்பங்கள் பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் பெறும். நட்புகளால் ஆதாயம் கூடும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். புதிய இடம், வீடு என்ற முயற்சிகள் வெற்றியாகும்.
மே 11 முதல் மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். அச்சத்தை உண்டாக்கி வந்த பிரச்னைகள் இல்லாமல் போகும். உடல்நிலை சீராகும். தொழிலில் லாபம் உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு, விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.

பொதுப்பலன்
குரு பகவானின் பார்வைகளும், கேதுவின் சஞ்சாரமும், 3,6,11ம் இட செவ்வாய், 3,6,10,11ம் இட சூரியனின் சஞ்சாரங்களும் உங்கள் முயற்சியை வெற்றியாக்கும். நினைப்பதை நடத்தித் தரும். செல்வம், செல்வாக்கை உயர்த்தும். மலை போல் வந்த சங்கடங்களை எல்லாம் பனி போல மறையச் செய்யும். உழைப்பிற்கேற்ற உயர்வும், முயற்சிக்கேற்ற முன்னேற்றமும் கிடைக்கும்.

தொழில்
புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றையும் திறம்பட செய்யும் சக்தி இருக்கும். எடுத்த வேலைகளை முடிக்கும் உறுதியும் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.  தொழிலை விரிவு செய்ய எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், ஜூவல்லரி, எக்ஸ்போர்ட், கல்விக்கூடம், நோட்டுப் புத்தகங்கள், ஆன்லைன் வர்த்தகம், பதிப்பகம், பப்ளிகேஷன்ஸ், தொலைக்காட்சி, யூடியூப் தொழில்கள் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள்
வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த உயர்வும், சலுகைகளும் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். அதனால் பார்த்துவரும் வேலையை விட்டுவிட்டு சிலர் வெளிநாட்டிற்கும் செல்வீர்கள். அரசு பணியாளர்களுக்கு  ஏற்பட்ட சங்கடம், சட்ட விவகாரங்கள் முடிவிற்கு வரும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். 

பெண்கள்
இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். உடல், மனநிலை சீராகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், படிப்பு, வேலை, திருமணம் என வாழ்க்கையின் அடிப்படைகள் நிறைவேறும். கணவருடன் இணக்கம் உண்டாகும். எதிரி தொல்லை விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். 

கல்வி: மனதில் தெளிவு ஏற்படும். வித்யாகாரகனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் கூடும். படிப்புதான் வாழ்வின் அடிப்படை என்பதை உணர்வீர்கள். பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். கல்லுாரி கனவு நனவாகும்.

உடல்நிலை
உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். நீண்ட நாளாக அனுபவித்து வந்த தொல்லைகள் மருத்துவத்தால் குணமாகும். உடல்நிலை சீராகும்.

குடும்பம்
குரு பார்வை,  புதனின் சஞ்சாரத்தால் குடும்பத்தின் மீது அக்கறையை அதிகரிக்கும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் நலனில் ஆர்வம் செலுத்துவீர்கள். வீடு, வாகனம், பொன், பொருள் என்ற கனவு நனவாகும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை) »
temple news
அசுவினி; நினைப்பது நடக்கும்.. உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ... மேலும்
 
temple news
கார்த்திகை: வியாபாரத்தில் முன்னேற்றம்..; உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகைவர்கள் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்ல காலம் வந்தாச்சு..; உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருவால் குறை தீரும்..! உங்கள் நட்சத்திர நாதனான குருவிற்கு, ராகுவும் கேதுவும் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்..கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar