Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : மார்கழி ராசி பலன் தனுசு : மார்கழி ராசி பலன் தனுசு : மார்கழி ராசி பலன்
முதல் பக்கம் » மார்கழி ராசி பலன் (16.12.2025 முதல் 14.1.2025 வரை)
விருச்சிகம் : மார்கழி ராசி பலன்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : மார்கழி ராசி பலன்

பதிவு செய்த நாள்

15 டிச
2025
03:12

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்.. பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் தன குடும்பாதிபதி குரு வக்ரமடைந்து இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையை உண்டாக்கும். கொடுக்கல், வாங்கலில் நிதானமாக இருப்பது இந்த நேரத்தில் அவசியம். சுக ஸ்தானாதிபதி ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி ராசியை பார்ப்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்வதும், தாயாரின் உடல்நிலையில் கவனமாக இருப்பதும் அவசியம். உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் நிலையில், கர்ம காரகன் சனியின் பார்வையும் ஜீவன ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழிலில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலைகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். பணியாளர்கள் இந்த நேரத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். இந்த நேரத்தில் மாதம் முழுவதும் உங்கள் ஜீவனாதிபதி சூரியன் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்த நிலை வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உங்களுக்கு உண்டாகும். வேகமாகவும் துணிச்சலாகவும் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சில நேரங்களில் மனதில் குழப்பமும், செய்யும் வேலையில் தடை ஏற்பட்டாலும் அதையெல்லாம் தாண்டி நினைத்ததை சாதிப்பீர்கள். இந்த நேரத்தில் யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது என்ற தெளிவு உங்களுக்கு உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். புதிய வாகனம், சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். வம்பு வழக்குகள் என்ற நிலை முடிவிற்கு வரும். எதிர்ப்பு விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: ஜன. 2

அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 21, 27, 30. ஜன. 3, 9, 12

பரிகாரம் வீரபத்திரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். மனம் தெளிவு பெறும். 


அனுஷம்: பொறுமையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். சகாய, சுக ஸ்தானாதிபதி சனி சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் மனதில் இருந்த குழப்பம் விலகும். ஆரோக்யம் சீராகும். வாகன யோகம் உண்டாகும். சத்ரு ஜெய ஸ்தானம், ஜீவன ஸ்தானத்தையும் சனி பார்ப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணியிடத்தில், தொழிலில் ஏற்பட்ட தொந்தரவுகள், மறைமுகத் தொல்லை நீங்கும். எந்த நிலை வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். வம்பு, வழக்கு விவகாரம் சாதகமாகும்.  தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியதாக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியளிக்கும். நெருக்கடி விலகும் என்றாலும், ஜென்ம ராசியையும் சனி பார்ப்பதால் இந்த நேரத்தில் நேர்மையாக செயல்படுவது அவசியம். தவறான வழியில் செல்வோர் சங்கடம், பிரச்னை, நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் எடுப்பது நன்மை தரும். மாதம் முழுவதும் உங்கள் சப்தமாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். உங்கள் அறிவாற்றலால் நீங்கள் நினைத்ததை சாதிக்க முடியும். எதிர்பார்த்த பணம் வரும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதி முதல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: ஜன. 2, 3

அதிர்ஷ்ட நாள்: டிச. 17, 18, 26, 27. ஜன. 8, 9

பரிகாரம் நடராஜரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.


கேட்டை: செயல்களில் நிதானமும் சாதிப்பதில் உறுதியும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி முன்னேற்றமான மாதமாகும். உங்கள் லாபாதிபதி புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். டிச.25 முதல் புத ஆதித்ய யோகம் உண்டாவதால் பொருளாதார நெருக்கடி விலகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். வர வேண்டிய பணம் வரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். நிதி நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு குழப்பம் விலகும். ஷேர் மார்க்கெட்டில் ஆதாயம் கிடைக்கும். நீண்டநாள் முயற்சி சாதகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். நீண்ட நாள் கனவு நனவாகும். சப்தம காரகனான சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். மனதில் தெளிவும் முகத்தில் பொலிவும் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும் என்றாலும், ஜீவன ஸ்தானத்திற்கு சனியின் பார்வை உண்டாவதுடன் அங்கு கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில் மீதும், வேலையின் மீதும் கவனமாக இருப்பது அவசியம். பணியாளர்கள் இந்த நேரத்தில் வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்க வேண்டாம். பிறருடைய வற்புறுத்தலுக்காக உங்கள் வேலைகளில் மாற்றம் செய்ய வேண்டாம். அது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பேசும் வார்த்தையில் இந்த நேரத்தில் நிதானம் காப்பதுடன், குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். கொடுக்கல், வாங்கலிலும் கவனம் தேவை. யாரையும் நம்பி புதிய முயற்சியில் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். எதுவாக இருப்பினும் வாழ்க்கைத் துணையிடமும் குடும்பத்தினரிடமும் ஆலோசித்து முடிவிற்கு வருவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது உயர் கல்விக்கு வழிவகுக்கும்.

சந்திராஷ்டமம்: ஜன. 3, 4

அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5, 9, 14

பரிகாரம் லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

 
மேலும் மார்கழி ராசி பலன் (16.12.2025 முதல் 14.1.2025 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: உழைப்பையும், நேர்மையையும் முதலீடாக கொண்டு எடுத்த வேலையை முடிக்கும் உங்களுக்கு மார்கழி ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்..: நிதானமாக செயல்பட்டு வரும் உங்களுக்கு, மார்கழி திட்டமிட்டு செயல்பட ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்..: எடுத்த வேலைகளை வேகத்துடனும் விவேகத்துடனும் நடத்தி வெற்றி பெறும் ... மேலும்
 
temple news
கடகம் : புனர்பூசம் 4 ம் பாதம்..: தெளிவான சிந்தனையும், பிறருக்கு வழிகாட்டும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதையெல்லாம் சமாளித்து வெற்றி அடையக்கூடிய சக்தி கொண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar